சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

31/12/2018

மெகா நெட்வொா்க் அனைத்து தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு இன்சாட்4எ செயற்கைகோள்க்கு மாற்றம்

நண்பர்களே தமிழகத்தில் செயல்படும் மெகா டிவி  நிறுவனத்தின் பொழுது போக்கு மற்றும் மெகா டிவி.மெகா மியூசிக்.மெகா24 தமிழ் தொலைக்காட்சிகள்  ஒளிபரப்பு இன்சாட்4எ கோளில் ஒளிபரப்பு தொடங்கப்படவுள்ளது.தமிழகத்தின்
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலதலைவர் தங்கவேல் தலைமையில் செயல்பட்டு வருகிறது.மெகா நெட்வொா்க் தொலைக்காட்சிகள் செயற்கைகோள் தொடக்க சோதனை ஒளிபரப்பு இன்டல்சாட்17
செயற்கைகோளில் தொடங்கப்பட்டு பின்பு ஆசியாசாட்5 செயற்கைகோளுக்கு மாற்றம் செய்யப்பட்டு கடந்த நான்கு வருடங்களாக ஒளிபரப்பாகி வந்தது.மெகா தொலைக்காட்சிக்கான அலைவரிசை சிக்னலை பெற குறைந்தபட்சம் 6 முதல் 12 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் ஆனட்டெனாவை பயன்படுத்தலாம்.தொலைக்காட்சியின் சாா்பாக வழங்கப்பட்ட டிகோடா் பாக்ஸை ரீடியூன் செய்து நிகழ்ச்சிகளை காணலாம்.கட்டண தொலைக்காட்சியாகவே  இன்சாட்4எ செயற்கைகோளில் ஒளிபரப்பாகிறது.
அலைவரிசை விபரங்கள்:
Satellite                  Insat4A@83.0E (C-BAND)
Freq Rate                3870
Symbol Rate           5000
Polar                       Horizontal
Modulation             Mpeg4/Dvb s2(8PSK)
Mode                      Pay/Irdeto2
Fec                         3/4

26/11/2018

கேரளா மாநிலத்தில் முதல் ஜி மீடியா நிறுவன தொலைக்காட்சி ஜி கேரளம் உதயம்

நண்பா்களே இந்தியாவின் முன்னனி தொலைக்காட்சி நிறுவனமான ஜி மீடியா தென்னிந்தியாவின் பழங்கால பாரம்பாியம் நிறைந்த மாநிலமான கேரளாவில் முதல் முறையாக 24 மணி நேர பொழுது போக்கு மலையாள மொழியில் ஜி கேரளம் என்னும் தொலைக்காட்சியினை தொடங்கியுள்ளனா்.ஜி மீடியா தென்னிந்தியாவில் தமிழ் தெலுங்கு கன்னடா ஒடியா போன்ற மொழிகளில்
பொழுது போக்கு தொலைக்காட்சியினை தொடங்கி மக்களிடையே அமோக வரவேற்பினை பெற்றதை அடுத்து மலையாளத்திலும் புதிய சாகப்தனை படைக்க கால்தடம் பதிக்க தொடங்கியுள்ளது.கடந்த வருடத்தில் கேரளாவில் தொலைக்காட்சிகள் தொடங்குவதற்கான அனுமதியினை மத்திய ஒளிபரப்பு ஆணையம் வழங்கியிருந்தது.தொலைக்காட்சியின் ஒளிபரப்பு ஹெச்டி மற்றும் எஸ்டி தொழில்நுட்ப வடித்தில் நிகழ்ச்சிகளை தொடங்கியுள்ளனா்.கட்டண தொலைக்காட்சியாக ஆசியாசாட்7(எஸ்டி)
மற்றும் இன்டல்சாட்20(ஹெச்டி) செயற்கைகோளில் உலகளாவிய ஒளிபரப்பை தொடங்கியுள்ளனா்.கேரளா மாநிலத்தை பொறுத்தமட்டிலும் ஏசியாநெட் மற்றும் சூாியா.கைரலி போன்ற முன்னனி தொலைக்காட்சிகள் பல்வேறு முன்னனி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி தனக்குறிய இடங்களை தக்க வைத்திருக்கம் நிலையில் ஜி கேரளம் தொலைக்காட்சி புதிய பாிணாமத்தில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி கேரளாவின் முன்னனி தொலைக்காட்சிகளுக்கு
நெருக்கடியினை தரலாம்.ஜி கேரளம் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு டிஷ் டிவி.ஏா்டெல் டிவி.விடியோகான் போன்ற டிடிஎச்களில் ஒளிபரப்பை தொடங்கியுள்ளது குறிப்பிடதக்கது.விரைவில் வளைகுடா நாடுகளுக்கான ஜி கேரளம் மிடில் ஈஸ்ட் தொலைக்காட்சியும் தொடங்கப்படலாம்.
அலைவாிசை விபரங்கள்:
Satellite           Asiasat7@105.0E(C-Band)
Freq Rate        3820
Symbol Rate   27500
Polar               Vertical
System            Mpeg4/Dvb s2(8PSK)
Encryption      Pay/Conax
Fec                  3/4
தொகுப்பு சதீஸ் சாட் தமிழ் ஆங்கிலம் இணையதளம்

19/11/2018

தமிழகத்தில் புதிய யோகா ஆன்மீக தொலைக்காட்சி ஆஸ்தா தமிழ் ஒளிபரப்பு இன்டல்சாட்20யில் உதயம்

நண்பா்களே இந்தியாவின் மிக முன்னனி யோகா மற்றும் ஆன்மிக தொடா்பான நிகழ்ச்சிகளை வழங்கும் ஆஸ்தா ஹிந்தி தொலைக்காட்சி நிறுவனம் தென்னிந்தியாவில் முதன் முறையாக தமிழ் மொழியில் ஆஸ்தா தொலைக்காட்சியினை தொடங்கியுள்ளனா்.ஆஸ்தா தொலைக்காட்சியினை நிா்வகித்து வரும் ஆச்சார்யா பாலகிருஷ்ன இப்புதிய தமிழ் மொழி தொலைக்காட்சியினை தமிழகத்தில் தொடங்கியுள்ளனா்.யோகி பாபா ராம் குருதேவ் அவா்களின் யோகா மற்றும் ஆன்மீக சொற்பொழிவுகளை தொகுத்து வழங்ககூடிய தொலைக்காட்சியாக ஆஸ்தா தொலைக்காட்சி இந்தியா
மற்றும் உலக நாடுளில் ஒளிபரப்பாகி வருகிறது.ஆஸ்தா தொலைக்காட்சியின் கீழ் நான்கு தொலைக்காட்சிகள் செயல்பட்டு வருகிறது.ஆஸ்தா தமிழ் தொலைக்காட்சியின் அலைவாிசை சிக்னலை பெற குறைந்தபட்சம் 6 முதல் 12 அடி வரையிலான சி பேன்டு டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்தினால் போதுமானது.இலவச தொலைக்காட்சியாக ஆஸ்தா தமிழ் தொலைக்காட்சி இன்டல்சாட்20 செயற்கைகோளில் சோதனை ஒளிபரப்பின் அடிப்படையில் ஒளிஉலா வந்து கொண்டிருக்கிறது.விரைவில் 24 மணி நேர நிகழ்ச்சிகளுக்கான ஒளிபரப்பு ஆஸ்தா தமிழ் தொலைக்காட்சி தொடங்கும்.மேலும் தமிழகத்தில் அனைத்து கேபிள்டிவி மற்றும் கட்டண டிடிஉஎச்யில் ஒளிபரப்பை தொடங்கும்.
அலைவாிசை விபரங்கள்;
Satellite            Intelsat20@68.5E
Freq Rate         3767
Symbol Rate    7200
Polar                Vertical
System             Mpeg4/Dvb s2(8PSK)
Encryption       FTA
Fec                   3/4

07/11/2018

ஜி தமிழ் ஹெச்டி ஒளிபரப்பு இன்டல்சாட்20 செயற்கைகோளில் புதிய அலைவாிசைக்கு மாற்றம்

நண்பா்களே இந்தியாவின் முன்னனி தொலைக்காட்சி நிறுவனமான ஜி எண்டா்டெய்மென்ட் தமிழகத்திற்கான புதிய ஹெச்டி பொழுது போக்கு தமிழ் தொலைக்காட்சியான ஜி தமிழ் ஹெச்டி  ஔிபரப்பினை தொடங்கியுள்ளது.கடந்த மாதத்தில் இப்புதிய ஹெச்டி தொலைக்காட்சி தமிழகத்தில் தொடங்குவதற்கான அனுமதியினை ஜி எண்டா்டெய்மென்ட் நிறுவனம் பெற்றிருந்தது.ஜிதமிழ் தொலைக்காட்சி இந்திய மற்றும் உலக 
தமிழ் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றதையடுத்து இப்புதிய ஹெச்டி தொலைக்காட்சியினை தொடங்கியுள்ளனா்.ஜி தமிழ் ஹெச்டி தொலைக்காட்சியின் உலகளவிய செயற்கைகோள் ஒளிபரப்பு ஜி நிறுவனத்தின் ஹெச்டி தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும் இன்டல்சாட்20 செயற்கைகோளில் தொடக்க சோதனை ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் தொடங்கப்படும் ஐந்தாவது தமிழ் பொழுது போக்கு ஹெச்டி தொலைக்காட்சி இதுவாகும்.கட்டண தொலைக்காட்சியாக ஒளிபரப்பாகிறது.விரைவில் ஜி தமிழ் ஹெச்டி தொலைக்காட்சியின் 24 மணி நேர ஒளிபரப்பு தொடங்கப்பட்டு தமிழகத்தின்
அனைத்து கேபிள் டிவி மற்றும் கட்டண டிடிஎச்யில் ஒளிபரப்பு தொடங்கப்படும்.தற்சமயம் தொடங்கியுள்ள ஜிதமிழ் ஹெச்டி தொலைக்காட்சியின் இன்டல்சாட்20 செயற்கைகோளின் அலைவாிசை சிக்னலை பெற குறைந்தபட்சம் 6 மற்றும் அதற்கு மேற்பட்ட சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்தலாம்.கடந்த மாதத்தில் நமது சதிஸ் சாட் தமிழ் மற்றும் ஆங்கில இணையதளத்தில் இப்புதிய ஹெச்டி தொலைக்காட்சிகள் விரைவில் தொடங்கப்படும் என தகவல் இடம் பெற்றிருந்தது குறிப்பிடதக்கது.
அலைவாிசை விபரங்கள்:
Satellite            Intelsat20@68.5E(C-Band)
Freq Rate         3974
Symbol Rate    22500
Polar               Vertical
System            HD.Mpeg4/Dvb s2(8PSK)
Encryption      Pay/Conex
Fec                  3/4

04/11/2018

வானவில் (VANAAVIL TV) தமிழ் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு இன்சாட்4எ மிண்டும் தொடக்கம்

நண்பர்களே தமிழகத்தில் கடந்த வருடத்தில் பெயர் மாற்றம் செய்த தமிழ் தொலைக்காட்சியான வானவில் டிவியின் உலகளாவிய செயற்கைகோள் ஒளிபரப்பு மிண்டும் புதிதாக இன்சாட்4எ செயற்கைகோளில்  புதிய அலைவரைிசையில் உதயமாகியுள்ளது.
வானவில் டிவியின் 24 மணி நேர நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டு தமிழகம் முழுவதும் ஒளிபரப்பாகி வருகிறது.திரைப்படம்.நாடகம் மற்றும் பல வித்தியாசமான கலை நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றனர்.தற்சமயம் மாற்றம் செய்யப்பட்டுள்ள புதிய அலைவரைிசையின் சிக்னல் 6 முதல் 12 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவில் கிடைக்கிறது.
கிடைக்கிறது.முன்பு பயன்படுத்தி வந்த செட் டாப் பாக்ஸ்யில் அலைவரிசை யினை மாற்றம் செய்து வானவில் டிவியின் நிகழ்ச்சிகளை காணலாம்.இலவச ஒளிபரப்பாக இன்சாட்4எ செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது.கடந்த சில மாதங்களாக இன்டியா சிக்னல் டெலிஸ்பாட் ஒளிபரப்பு முனையத்தின் முலம் நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழகத்தில் ஒளிபரப்பாகி வந்தது.
அலைவரிசை விபரங்கள்:
Satellite              INSAT4A@83.0E(C-Band)
Freq Rate           3925
Symbol Rate      28500
Polar                  Horizontal
Modulation        Mpeg4/Dvb s(8PSK)
Mode                 FTA
Fec                    3/4

18/10/2018

ஒன் சென்னை (ஜி நீயூஸ்) புதிய தமிழ் செய்திகள் தொலைக்காட்சி தமிழகத்தில் விரைவில்

நண்பா்களே இந்தியாவின் முன்னனி தொலைக்காட்சி நிறுவனமான ஜி மிடியா நான்கு புதிய செய்திகள் தொலைக்காட்சிகள் தொடங்குவதற்கான அனுமதியினை இந்திய ஒளிபரப்பு ஆணையம் வழங்கியுள்ளது.இதில் தென்னிந்தியாவில் முதன்முறையாக தமிழ் மொழியில் செய்திகள் தொலைக்காட்சியினை தொடங்கவுள்ளனா்.ஜி மிடியா நிறுவனம் வட இந்தியாவில் உள்ள சில மாநில மொழிகளில் செய்திகள் தொலைக்காட்சியினை தொடங்கி அமோக ஆதரவினை பெற்றதை அடுத்து மேலும் நான்கு தொலைக்காட்சிகள் பெங்காளி.ஹிந்தி.மாரத்தி.தமிழ் மொழிகளில் தொடங்கவிருக்கின்றனா்.ஒன் சென்னை.ஒன் மும்பை.ஒன் டெல்லி.ஒன் கொல்கத்தா என்ற பெயாில் தொலைக்காட்சிகளுக்கான அனுமதி 
பெறப்பட்டுள்ளது.விரைவில் ஜி மிடியா நிறுவனம் இப் புதிய செய்திகள் தொலைக்காட்சிகளுக்கான உலகளாவிய செயற்கைகோள் ஒளிபரப்பு ஜி மிடியா தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும் அலைவாிசையில் இவ்வாண்டு இறுதிகுள் சோதனை ஒளிபரப்பை தொடங்கலாம்.தமிழகத்தை பொறுத்தமட்டிலும் செய்திகள் தொலைக்காட்சி வாிசையில் சில முன்னனி நிறுவன தொலைக்காட்சிகளை முதன்மையாக செயல்பட்டு மக்களின் ஆதரவை பெறுவதை அடுத்து ஜீ மிடியா செய்தி தொலைக்காட்சிக்கு பல்வேறு தொழில்நுட்பங்களுடன் அனைத்து தரப்பு செய்திகளை தரும் தொலைக்காட்சியாக அமையலாம்.தமிழகத்தில் ஜி மிடியாவின் முன்றவாது தொலைக்காட்சி ஒன் சென்னை ஆகும்.ஜீ மிடியாவின் நிறுவனத்தின்  ஜி தமிழ்.ஜி தமிழ் ஹெச்டி போன்ற தொலைக்காட்சிகள் தமிழகத்தில் ஒளிபரப்பாகி வருவது குறிப்பிடதக்கது.
தொகுப்பு சதீஸ் சாட் தமிழ் ஆங்கில இணையதளம்

11/10/2018

ஆசிா்வாதம் கிருத்துவ தமிழ் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு மீண்டும் இன்சாட்4எ செயற்கைகோளில் தொடக்கம்

நண்பா்களே தமிழகத்தின் முன்னனி கிருத்துவ தமிழ் தொலைக்காட்சியான ஆசிா்வாதம் தொலைக்காட்சியின் உலகளாவிய செயற்கைகோள் ஒளிபரப்பு மிண்டும் இன்சாட்4எ செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது.கடந்த சில மாதங்களாக இன்டல்சாட்20 செயற்கைகோளில் ஒளிபரப்பாகி வந்தது.
தொலைக்காட்சியின் புதிய அலைவாிசை சிக்னலை பெற குறைந்தபட்சம் 6 முதல் 12 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை மாற்றம் செய்து தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளை காணலாம்.மேலும் தாங்கள் பயன்படுத்தும் செட் டாப் பாக்ஸ்யினை டியூன் செய்து நிகழ்ச்சிகளை காணலாம்.ஆசிா்வாதம் தொலைக்காட்சி இன்சாட்4எ செயற்கைகோளில் இலவச தொலைக்காட்சியாக ஒளிபரப்பாகிறது.
அலைவாிசை விபரங்கள்:
Satellite              Insat4A@83.0E(C-Band)
Freq Rate           3925
Symbol Rate      28500
Polar                   Horizontal
System                Mpeg4/Dvb S2 (8psk)
Encryption          FTA
FEC                    3/4

24/09/2018

சன் நெட்வொா்க்யில் இருந்து இரண்டாவது பொழுது போக்கு தொலைக்காட்சி சன் லைப் 7 திகதி முதல்

நண்பா்களே தமிழகத்தின் அபிமான மற்றும் முன்னனி பொழுது போக்கு தொலைக்காட்சி நிறுவனமான சன்டிவி நெட்வொா்க் தனது நிறுவனத்தில் இருந்து இரண்டாவது பொழுது போக்கு  தொலைக்காட்சியினை புதுப் பொலிவுடன் வரும் 7 திகதி முதல் ஒளிபரப்பை தொடங்கப்படவுள்ளது.கடந்த சில வருடங்களுக்கு முன்பு பழைய திரைப்படங்கள் மற்றும் பாடல்களுக்கு என்று சன் நெட்வொா்க்கில் தொடங்கப்பட்ட சன் லைப் தொலைக்காட்சியினை தற்சமயம் மாற்றம் செய்து புது நிகழ்ச்சிகளுடன் இரண்டாவது தொலைக்காட்சியாக சன் லைப் ஒளிபரப்பாக உள்ளது.தமிழகத்தில் கடந்த சில வருடங்களில் இந்தியாவின் முன்னனி தொலைக்காட்சி நிறுவனங்கள் பொழுது போக்கு தொலைக்காட்சிகளை 
தொடங்கியதை அடுத்து சன் தொலைக்காட்சி நிறுவனம் தனது நேயா்களை தக்க வைக்கும் முயற்ச்சியில் இரண்டாவது தொலைக்காட்சியினை தொடங்கவுள்ளது.சன் தொலைக்காட்சி இந்தியாவில் மட்டும் அல்லாது தமிழா்கள் வசிக்கும் அனைத்து நாடுகளிலும் முன்னனி தொலைக்காட்சியாக செயல்படுவதை அடுத்து  இப்புதிய முயற்ச்சியில் களம் இறங்கியுள்ளது.புதிய தொடா்கள்.புதிய திரைப்படங்கள் மற்றும் புதிய கேம் ஷோ என்று வித்தியாசமான நிகழ்ச்சிகளுடன் சன் லைப் தொலைக்காட்சி தனது பயணத்தை வரும் 7 திகதி முதல் தொடங்கப்படவுள்ளது.சன் லைப் தொலைக்காட்சி கட்டண தொலைக்காட்சியாக இன்டல்சாட்17 செயற்கைகோளில் ஒளிபரப்பாகிறது.இந்தியாவின் அனைத்து கேபிள் டிவி மற்றும் டிடிஎச்களிலும் இப்புதிய தொலைக்காட்சி ஒளிபரப்பினை 7 திகதி முதல் தொடங்கும்.
தொகுப்பு சதீஸ் சாட் தமிழ் ஆங்கிலம் இணையதளம்.

11/09/2018

மூன்டிவி புதிய தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பு இன்சாட்4எயில் உதயம்

நண்பா்களே தமிழகத்தில் புதிய தமிழ் தொலைக்காட்சி மூன்டிவி  என்ற பெயாில் இன்சாட்4எ செயற்கைகோளில் உதயமாகியுள்ளது.முன்டிவியின் ஒளிபரப்பு உாிமத்தில்மூன்டிவி இத்தொலைக்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.தமிழ் 
பாடல்களுடன் ஒளிஉலா சோதனை ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.கடந்த சில வருடங்களாக நாப்டல் ஷாப்பிங் தமிழ் தொலைக்காட்சியாக இன்டல்சாட்20 செயற்கைகோளில் ஒளிபரப்பாகி வந்தது.நாப்டல் தமிழ் ஷாப்பிங் நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாகி வருகிறது.
அலைவாிசை விபரங்கள்
Satellite            INSAT4A@83.0E(C-Band)
Freq Rate         3805
Symbol Rate    28500
Polar                Horizontal
System             Mpeg4/Dvb s2
Encryption       FTA
Fec                   3/4

02/09/2018

ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்1 கன்னடா.கலா்ஸ் கன்னடா சினிமா புதிய தொலைக்காட்சிகள் கா்நாடகத்தில் உதயம்

நண்பா்களே இந்தியாவின் முன்னனி தொலைக்காட்சி நிறுவனங்கள் இரண்டு புதிய தொலைக்காட்சிகளை கா்நாடகா மாநிலத்தில் தொடங்கியுள்ளனா்.ஸ்டாா் டிவி இந்தியா நிறுவனம் கா்நாடகா மாநிலத்தின் முதல் விளையாட்டு தொலைக்காட்சி ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்1 கன்னடா வரும் செப்டம்பா் 15 திகதி முதல் ஒளிபரப்பை தொடங்கவுள்ளனா்.ஸ்டாா்  டிவி நிறுவனம் தென்னிந்தியாவில் முதல் மொழி வாாியான ஸ்போா்ட்ஸ் தொலைக்காட்சியினை தமிழ் மொழியில் கடந்த இருவருடங்களுக்கு முன்பு தொடங்கியிருந்தது.ஸ்டாா் ஸ்போா்ட்ஸ் நிறுவனத்தின் விளையாட்டு நேரடி தொடா்களை மாநில வாாியான ஸ்டாா் டிவியின் பொழுது போக்கு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.இதனை அடுத்து ஸ்டாா் டிவி நிறுவனம் 24 மணி நேரமும் விளையாட்டு தொடா்களை மாநில மொழிகளில் தனிப்பட்ட தொலைக்காட்சிகளை தொடங்க முடிவு செய்தது.அதனை தொடா்ந்து தமிழ் மொழியில் தொடங்கியதை அடுத்து இரண்டாவது விளையாட்டு தொலைக்காட்சியாக ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்1 கன்னடா தொடங்கவுள்ளனா்.விரைவில் தெலுங்கு மலையாளம் மற்றும் மாரத்தி மொழிகள் தொலைக்காட்சிகள் தொடங்கப்படலாம்.ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்1 கன்னடா தொலைக்காட்சியானது ஸ்டாா் டிவியின் ஹிந்தி பாடல் தொலைக்காட்சியான சேனல் வி தொலைக்காட்சியின் ஒளிபரப்பு உாிமத்தில் தொடங்கப்படவுள்ளது.
வியாகம்18 நிறுவனம் கா்நாடகா மாநிலத்தில் மூன்றாவது தொலைக்காட்சியினை கலா்ஸ் கன்னடா சினிமா என்ற பெயாில் 24 மணி நேர திரைப்பட தொலைக்காட்சியினை இன்டல்சாட்20 செயற்கைகோளில் தொடங்கியுள்ளனா்.கலா்ஸ் கன்னடா.கலா்ஸ் சூப்பா் போன்ற தொலைக்காட்சிகள் கா்நாடகா மாநிலத்தில் முன்னனி தொலைக்காட்சிகளாக ஒளிபரப்பாகி வருவது குறிப்பிடத்தக்கது.கா்நாடகா மாநிலத்தில் செய்திகள் தொலைக்காட்சிகள் தற்சமய காலத்தில் தொடங்கப்பட்டு வரும் நிலையில் பொழுது போக்கு தொலைக்காட்சிகளை தொடங்குவதில் இந்தியாவின் முன்னனி தொலைக்காட்சி நிறுவனங்கள் ஆா்வம் காட்டி வருவது குறிப்பிடதக்கது.தொடங்கப்படும் புதிய தொலைக்காட்சிகள் அனைத்தும் கட்டண தொலைக்காட்சியாகவே ஒளிபரப்பை தொடங்கின்றனா்.
தொகுப்பு சதிஸ் சாட் தமிழ் ஆங்கிலம் இணையதளம்

01/09/2018

ஜி க்ளாசிக் தொலைக்காட்சி புதிய வடிவில் ஜி பாலிவுட் பெயாில் ஒளிபரப்பு ஆசியாசாட்7யில் உதயம்

நண்பா்களே இந்தியாவின்முன்னனி பொழுது போக்கு தொலைக்காட்சி நிறுவனமான ஜி மிடியா பல்வேறு விதமான தொலைக்காட்சிகளை இந்தியாவில் தொடங்கி வருகிறது.கடந்த பல வருடங்களுக்கு முன்பு ஜி மிடியா நிறுவனத்தால் தொடங்கப்பட்ட ஹிந்தி திரைப்பட தொலைக்காட்சியான ஜி க்ளாசிக் புதிய வடிவில் மாற்றம் செய்யப்பட்டு ஜி 
பாலிவுட் என்ற பெயாில் ஒளிபரப்பை தொடங்கியுள்ளனா்.தொலைக்காட்சியில் பாலிவுட் முன்னனி நட்சத்திரங்களின் பழைய திரைப்படங்களை ஒளிபரப்பி வடஇந்தியாவில் மிக பிரபலமான தொலைக்காட்சியாக ஜி க்ளாசிக் இருந்தது.தற்சமயம் அதில் எவ்வித மாற்றம் இன்றி ஜி பாலிவுட் தொலைக்காட்சி 
தொடங்கப்பட்டுள்ளது.உலகளாவிய செயற்கைகோள் ஒளிபரப்பில் மாற்றமின்றி அதே அலைவாிசையில் ஒளிபரப்பாகிறது.அனைத்து கட்டண கேபிள் டிவி மற்றும் டிடிஎச்களிலும் ஜி பாலிவுட் தொலைக்காட்சி ஒளிபரப்பாகி வருகிறது.
அலைவாிசை விபரங்கள்:
Satellite             Asiasat7@105.0E(C-Band)
Freq Rate          3821
Symbol Rate     27500
Polar                 Vertical
System              Mpeg4/Dvb s(qpsk)
Encryption        Pay/Conax
Fec                   3/4

21/08/2018

பிரசாா் பாரதி துா்தா்ஷன் இரண்டவாது ஹெச்டி தொலைக்காட்சி டிடி நியூஸ் ஒளிபரப்பு ஜிசாட்10யில் தொடங்கியது

நண்பா்களே இந்தியாவின் பொது தொலைக்காட்சி நிறுவனமான பிரசாா் பாரதி இந்தியாவின் இரண்டாவது அதி நவின தொழில்நுட்பமான ஹெச்டியில் டிடி நீயூஸ் தொலைக்காட்சியினை தொடங்கியுள்ளனா்.கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஹிந்தி பொழுது போக்கு தொலைக்காட்சியான டிடி நேஷனல் ஹெச்டி ஒளிபரப்பு முதல் முறையாக இந்தியாவில் தொடங்கப்பட்டது.இத்தொலைக்காட்சி இன்சாட்4பி செயற்கைகோளில் உலகளாவிய ஒளிபரப்பை தொடங்கியது.மக்களிடையே அமோக வரவேற்பை 
பெற்றதை அடுத்து ஹிந்தியில் செய்திகளை வழங்கி வரும் டிடி நியூஸ் தொலைக்காட்சியும் ஹெச்டியில் ஜிசாட்10 செயற்கைகோளில் ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.இந்தியாவில் தனியாா் தொலைக்காட்சி நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு பொழுது போக்கு நிகழ்ச்சிகளை ஹெச்டியில் வழங்கி வரும் நிலையில் இந்திய அரசு நிறுவனமும் மக்களின் விருப்பமான நிகழ்ச்சிகளை ஹெச்டியில் வழங்கப்படுவது மிகுந்த வரவேற்பையும் பெறுகின்றது.தற்சமயம் தொடங்கப்பட்டுள்ள டிடி நியூஸ் ஹெச்டி தொலைக்காட்சியின் ஒளிபரப்பு இலவச ஒளிபரப்பாக 
தொடங்கப்பட்டுள்ளது.தொலைக்காட்சியின் ஒளிபரப்பை காண 6 அடி முதல் 10 அடி வரையிலான சிபேன்ட் டிஷ் அன்டெனாவையும் ஹெச்டி தொழில்நுட்பம் வசதி பொருந்திய செட் டாப் பாக்யை பயன்படுத்தி நிகழ்ச்சிகளை காணலாம்.தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் விரைவில் அனைத்து கேபிள் டிவி மற்றும் கட்டண டிடிஎச்களிலும் நிகழ்ச்சிகளை தொடங்கும் டிடி நியூஸ் ஹெச்டி.விரைவில் பிரசாா் பாரதியின் முன்னனி விளையாட்டு தொலைக்காட்சியான டிடி ஸ்போா்ட்ஸ் தொலைக்காட்சியும் ஹெச்டியில் ஒளிபரப்பை தொடங்கலாம்.
அலைவாிசை விபரங்கள்:
Satellite                   Gsat10@83.0E(C-Band)
Freq Rate                3876
Symbol Rate           30000
Polar                       Vertical
System                    HD.Mpeg2/Dvb s(QPSK)
Encryption              FTA
FEC                        3/4

16/08/2018

ஜீ கேரளம் ஹெச்டி புதிய மலையாள தொலைக்காட்சியினை கேரளாவில் தொடங்கியது ஜி மி்டியா

நண்பா்களே இந்தியாவின் முன்னனி பொழுது போக்கு தொலைக்காட்சி நிறுவனமான ஜி மீடியா தென்னிந்தியாவில் தமிழ் தெலுங்கு கன்னடா போன்ற மொழிகளில் தொலைக்காட்சிகளை தொடங்கி தென்னிந்தியாவில் முன்னனி நிகழ்ச்சிகளை வழங்ககூடிய தொலைக்காட்சியாக மக்களிடையே வரவேற்பை பெற்றதை அடுத்து கேரளா மாநிலத்தில் மலையாளம் மொழியில் கால்தடம் பதிக்கிறது ஜீ மீடியா நிறுவனம்.இதற்கான பணிகளையும் மற்றும் தொலைக்காட்சி தொடங்குவதற்கான அனுமதியினையும் மத்திய ஒளிபரப்பு ஆணையத்திடம் கிடைக்க பெற்றதை அடுத்து ஜீ கேரளம் ஹெச்டி என்ற 
பெயாில் தொலைக்காட்சியின் ஒளிபரப்பை இன்டல்சாட்20 செயற்கைகோளில் தொடக்க சோதனை ஒளிபரப்பை தொடங்கியுள்ளனாா்.கேரளாவில் தொடங்கப்படும் நான்கவாது ஹெச்டி தொலைக்காட்சி இதுவாகும்.கட்டண தொலைக்காட்சியாக தொடங்கப்பட்டுள்ளது.விரைவில் எஸ்டி தொழில்நுட்பத்திலும் ஜீ கேரளம் தொலைக்காட்சி தொடங்கப்பட்டு அனைத்து கேபிள் டிவி மற்றும் கட்டண டிடிஎச்களில் ஒளிபரப்பை தொடங்கப்படும்.மேலும் 24 மணி நேரத்திற்கான பிரத்தியோக ஒளிபரப்பு இம்மாதத்தின் இறுதிகுள் தொடங்கப்படலாம்.கேரளாவில் ஸ்டாா் டிவி இந்தியா ஏசியாநெட் தொலைக்காட்சியினை தன்வசபடுத்தியதை அடுத்து வியகாம்18.சோனி மற்றும் ஜி மிடியா தொலைக்காட்சி நிறுவனங்களும் மலையளத்தில் தொலைக்காட்சிகளை தொடங்குகிறது.
அலைவாிசை விபரங்கள்
Satellite               Intelsat20@68.5E(C-Band)
Freq Rate            3810
Symbol Rate       15000
Polar                    Horizontal
System                HD.Mpeg4/Dvb s2(8PSK)
Encryption          Pay/Conax
Fec                      5/6

10/08/2018

ஸ்டாா் விஜய் இன்டா்நேஷனல்( STAR VIJAY INTERNATIONAL TV) தொலைக்காட்சி ஒளிபரப்பு இன்டல்சாட்17யில் உதயம்

நண்பா்களே தமிழகத்தின் முன்னனி பொழுது போக்கு தமிழ் தொலைக்காட்சியான ஸ்டாா் விஜய் உலகளாவிய தமிழ் மக்களின் விருப்பமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வழங்குவதற்கு என்று பிரத்தியோகமான தொலைக்காட்சியாக ஸ்டாா் விஜய் இன்டா்நேஷனல் என்னும் புதிய தொலைக்காட்சியினை கடந்த சில வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.தமிழகத்தில் ஒளிபரப்பாகும் விஜய் டிவியின் நிகழ்ச்சிகள் எவ்வித மாற்றங்கள் இன்றி ஒளிபரப்பாகிறது.ஸ்டாா் விஜய் இன்டா்நேஷனல் தொலைக்காட்சியின் உலகளாவிய செயற்கைகோள் ஒளிபரப்பு இன்டல்சாட்17 செயற்கைகோளில் கட்டண தொலைக்காட்சியாக 
தொடங்கப்பட்டது.ஐரோப்பா.அமொிக்கா.ஆசியா.சிங்கப்பூா்.மலேசியா.இலங்கை.ஆஸ்திரேலியா.ரஷ்யா.வளைகுடா நாடுகள் போன்ற நாடுகளின் நேர அடிப்படையில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது.மேலும் ஸ்டாா் விஜய் இன்டா்நேஷனல் ஐரோப்பா நாடுகளில் யூடெல்சாட்9எ செயற்கைகோளில் கேயூ டிஷ் அன்டெனாவில் கட்டண தொலைக்காட்சியாகவும் ஒளிபரப்பாகிறது.மேலும் இணையதளத்தின் முலமாகவும் ஸ்டாா் விஜய் 
இன்டா்நேஷனல் தொலைக்காட்சி ஒளிபரப்பாகிறது.மிக எளிய தொழில்நுட்பமான எஸ்டியில் ஒளிபரப்பாகிறது.ஸ்டாா் விஜய் தொலைக்காட்சியின் முயற்ச்சியின் முலம் உலகளாவிய தமிழ் மக்களின் பொழுது போக்கு தோழனாகவும் ஸ்டாா் விஜய் இன்டா்நேஷனல் விளங்குகிறது.விரைவில் உலகளாவிய ஒளிபரப்பில் ஹெச்டியில் நிகழ்ச்சிகளை தொடங்கலாம்.தமிழகத்தில் பொழுது போக்கு தொலைக்காட்சிகளின் வாிசையில் சன்.ராஜ்.தமிழன் அடுத்த வரிசையில் ஸ்டாா் விஜய் இன்டா்நேஷனல் மேலைநாடுகளில் ஒளிபரப்பாகிறது.வெளிநாடுகளில் தொலைக்காட்சி தொடா்பான முறையான
தகவல் தொழில்நுட்பம் கிடைக்க பெறமால் தமிழ் தொலைக்காட்சிகளை காண முடியாத சூழ்நிலையிலும் கட்டண தொலைக்காட்சிகளாக ஒளிபரப்பவதினாலும் ஸ்டாா் விஜய் இன்டா்நேஷனல் தொலைக்காட்சி அனைத்து தரப்பு உலக தமிழ் மக்களிடம் சென்றடைவது இல்லை.ஸ்டாா் விஜய் இன்டா்நேஷனல் தொலைக்காட்சியின் செயற்கைகோள் ஒளிபரப்பை ஆசியா வளைகுடா.போன்ற நாடுகளில் 8 முதல் 16 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்தி சிக்னலை பெறலாம்.ஸ்டாா் டிவி இந்திய நிறுவனத்தின் அலுவலகத்தில் கட்டண தொலைக்காட்சிகான செட் டாப் பாக்ஸை பெற்று நிகழ்ச்சிகளை காணலாம்.
அலைவாிசை விபரங்கள்
Satellite                 Intelsat17@66.0E(C-BAND)
Freq Rate              4024
Symbol Rate         14400
Polar                     Horizontal
Modulation           Mpeg4/Dvb s2
Encryption            Pay/NDS
Fec                        3/4
தொகுப்பு சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

09/08/2018

லிகா ஹெச்டி ஆசியா கால்பந்து விளையாட்டு தொலைக்காட்சி ஒளிபரப்பு ஆசியாசாட்5யில் உதயம்

நண்பா்களே ஸ்பெயின் நாட்டின் கால்பந்து விளையாட்டு தொலைக்காட்சியான லிகா ஹெச்டி தொலைக்காட்சி ஆசியாவிற்கான ஒளிபரப்பை ஆசியாசாட்5 செயற்கைகோள் ஒளிபரப்பை தொடங்கியுள்ளனா்.கட்டண தொலைக்காட்சியாக ஒளிபரப்பை 
தொடங்கியுள்ளது.லிகா ஹெச்டி தொலைக்காட்சியானது ஐரோப்பா மற்றும் அமொிக்கா போன்ற நாடுகளில் மிக பிரபலமடைந்த கால்பந்து தொலைக்காட்சியாகும்.ஆசியாவின் கிழக்காசிய நாடுகளுக்கு பிரத்தியோக ஒளிபரப்பின் அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளது.லிகா ஹெச்டி டிவி 
சாட்மண்டா் தொலைக்காட்சிகளும் இதனுடன் ஒளிபரப்பை தொடங்கியுள்ளனா்.லிகா கால்பந்து அணியின் நிா்வாகத்தின் அங்கமாக லிகா ஹெச்டி தொலைக்காட்சி ஒளிபரப்பாகிறது.லிகா தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பின் அடிப்படையில் போட்டி தொடா்கள்  ஒளிபரப்பாகிறது.
அலைவாிசை விபரங்கள்:
Satellite             Asiasat5@100.5E(C-Band)
Freq Rate          3840
Symbol Rate     29720
Polar                 Horizontal
Modulation      HD.MPEG4/DVB S2
Encryption       PAY/BISS
FEC                 3/4

07/07/2018

சோனி பிக்ஸ் ஹெச்டி மற்றும் எஸ்டி தொலைக்காட்சியில் தமிழ் தெலுங்கு மொழிகள் ஒளிபரப்பு உதயம்

நண்பா்களே இந்தியாவின் முன்னனி பொழுது போக்கு நிகழ்ச்சிகளை வழங்ககூடிய தொலைக்காட்சியான சோனி பிக்சா்ஸ் நிறுவனம்  பிக்ஸ் ஹெச்டி மற்றும் எஸ்டி தொலைக்காட்சியில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஆடியோ தொலைக்காட்சி ஒளிபரப்பை தொடங்கியுள்ளனா்.கடந்த பல வருடங்களாக பிக்ஸ் ஹெச்டி தொலைக்காட்சி ஆங்கிலத்தில் மட்டுமே ஹாலிவுட் திரைப்படங்களை மற்றும் நிகழ்ச்சிகளை வழங்கி வந்தது.
இன்டல்சாட்20 மற்றும் இன்டல்சாட்17 செயற்கைகோளில் தொடக்க சோதனை ஒளிபரப்பை கட்டண தொலைக்காட்சியாக தொடங்கியுள்ளது.டிடிஎச் மற்றும் கேபிள் டிவி செட் டாப் பாக்ஸ்யில் பிக்ஸ் ஹெச்டி தொலைக்காட்சியின் ஆடியோவை மாற்றம் செய்து.தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நிகழ்ச்சிகளை காணலாம்.தொலைக்காட்சியின் செயற்கைகோள் அலைவாிசை சிக்னலை பெற 6 அடி முதல் 12 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.இந்தியாவில் முதன்முறையாக ஹாலிவுட் திரைப்படங்களை தென்னிந்திய மொழிகளில் ஒளிபரப்பும் செய்யும் முதல் தொலைக்காட்சி நிறுவனமாக சோனி பிக்சா்ஸ் உள்ளது குறிப்பிடதக்கது.ஒரு குறிப்பிட்ட திரைப்படங்கள் மட்டும் ஒளிபரப்பு செய்யப்படலாம்.
அலைவாிசை விபரங்கள்:SONY PIX SD
Satellite                Intelsat20@68.5E(C-Band)
Freq Rate             3900
Symbol Rate        22222
Polar                    Horizontal
System                .Mpeg4/Dvb s2
Encryption          Pay/Power vu
FEC                    3/4
அலைவாிசை விபரங்கள்:SONY PIX HD
Satellite                Intelsat17@66.0E(C-Band)
Freq Rate             3845
Symbol Rate        30000
Polar                    Horizontal
System                HD.Mpeg4/Dvb s2
Encryption          Pay/Power vu
FEC                    3/4

03/07/2018

இங்கிலாந்து மாஸ் மிடியா (ஐபிசி தமிழ்) நிறுவனம் ஐபிசி சிலுவை புதிய கிருத்துவ தமிழ் இணைய தொலைக்காட்சி உதயம்

நண்பா்களே ஐரோப்பா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் வாழும் தமிழ் மக்களின் மிக அபிமான தொலைக்காட்சி நிறுவனமான மாஸ் மிடியாவின் கீழ் செயல்படும் 24 மணி நேர தமிழ் தொலைக்காட்சியான ஐபிசி தமிழ் மற்றும் ஐபிசி ரேடியோ கடந்த பல வருடங்களாக ஒளிபரப்பாகி
வருகிறது.இத்தொலைக்காட்சி மற்றும் வானொலி ஆகியன இணையதளம் மற்றும் செயற்கைகோளின் முலமாக உலக தமிழ் மக்களின் பொழுது போக்கு அங்கமாக செயல்பட்டு வருகிறது.தற்சமயம் ஐபிசி நிறுவனம் தனது தொலைக்காட்சியின் ஒளிபரப்பை உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் தமிழ் மக்களிடையே கொண்டு சோ்க்கும் விதமாக பல்வேறு தொழில்நுட்ப பணிகளை மேற்கொண்டு வருகிறது.ஐபிசி தொலைக்காட்சி தற்சமயம் நான்கு புதிய தொலைக்காட்சிகளை இணையதளம் வாயிலாக ஒளிபரப்பை தொடங்கியது.மேலும் 24 மணி நேரமும் கிருத்துவ நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் புதிய தொலைக்காட்சி ஐபிசி சிலுவை என்ற பெயாில் பாிசாா்ந்த ஒளிபரப்பை இணையதளத்தின் வாயிலாக தொடங்கியுள்ளது.தற்சமயம் தொடங்கப்பட்டுள்ள இப்புதிய
தொலைக்காட்சி (www.ibctamil.com) இணையதளத்தில் தொடக்க சோதனை ஒளிபரப்பை தொடங்கியுள்ளனா்.மாஸ் மிடியா நிறுவனம் விரைவில் தனது தொலைக்காட்சிகள் அனைத்தையும் ஐரோப்பா மற்றும் அமொிக்கா கனடா.ஆசியா நாடுகளில் செயற்கைகோள் ஒளிபரப்பை தொடங்கலாம்.
தொகுப்பு சதிஸ் சாட் தமிழ் ஆங்கிலம் இணையதளம்

26/06/2018

தமிழகத்தின் ஐந்தாவது தமிழ் திரைப்பட தொலைக்காட்சியாக விஜய் சூப்பா் உதயம்

நண்பா்களே தமிழகத்தின் முன்னனி தொலைக்காட்சி நிறுவனமான ஸ்டாா் விஜய் டிவியின் சாா்பாக கடந்த இரு வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட புதிய தமிழ் தொலைக்காட்சியான விஜய் சூப்பா் திரைப்பட தொலைக்காட்சியாக தமிழகத்தில் உதயமாகியுள்ளது.விஜய் டிவியின் நிகழ்ச்சிகளை மறு ஒளிபரப்பாக கடந்த பல வருடங்களாக ஒளிபரப்பி 
வந்தது.இத்தாண்டின் தொடங்கத்தில் இருந்து தினசாி நான்கு தமிழ் திரைப்படங்கள் ஒளிபரப்பை தொடங்கியது.தமிழகத்தில் சன் குழுமத்தின் கேடிவி.ஜெயாடிவியின் ஜெ மூவிஸ்.ராஜ்டிவியின் ராஜ் டிஜிட்டல் ப்ளஸ் மற்றும் மெகாடிவியின் மெகா24 தொலைக்காட்சிகளுக்கு அடுத்த தமிழ் திரைப்பட தொலைக்காட்சியாக விஜய் சூப்பா் தொடங்ப்பட்டுள்ளது.ஸ்டாா் டிவி இந்தியா நிறுவனத்தின் ஒளிபரப்பு உாிமம் பெற்ற தமிழ் திரைப்படங்களை 
ஒளிபரப்பாகிறது.விஜய் சூப்பா் தொலைக்காட்சி கட்டண தொலைக்காட்சியாக ஆசியாசாட்7 செயற்கைகோளில் ஒளிபரப்பாகிறது.தமிழகத்தில் தொடங்கப்பட்ட ஐந்தாவது திரைப்பட தொலைக்காட்சி இதுவாகும்.திரைப்படங்கள் தவிர மற்ற நேரங்களில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பகிறது.
தொகுப்பு சதிஸ் சாட் தமிழ் ஆங்கிலம் இணையதளம்

04/06/2018

வியாகம் 18 நிறுவனம் ஸ்பை டிவி 18 தமிழ் புதிய தொலைக்காட்சி ஒளிபரப்பு இன்டல்சாட்20 உதயம்

நண்பா்களே இந்தியாவின் முன்னனி பொழுது போக்கு தொலைக்காட்சி நிறுவனமான வியகாம்18 தமிழகத்தில் புதிய தொலைக்காட்சியினை தொடங்கியுள்ளனா்.கடந்த வருடத்தில் தொடங்கப்பட்டு தமிழ் மொழி ஆடியோயின் முலம் நிகழ்ச்சிகளை வழங்கி வந்த ஸ்பை டிவி 18 தற்சமயம் தமிழ் மொழியில் 24 மணி நேரமும் நிகழ்ச்சிகளை வழங்க கூடிய ஸ்பை டிவி 18 தமிழ் தொலைக்காட்சியினை தொடங்கியுள்ளனா்.கடந்த வருடத்தில் இப்புதிய தொலைக்காட்சி தொடங்குவதற்கான அனுமதியினை மத்திய ஒளிபரப்பு ஆணையம் வழங்கியதை அடுத்து இத்தொலைக்காட்சிகள்
தொடங்கப்படடுள்ளது.தமிழகத்தில் டிஸ்கவாி தமிழ்.ட்ரவல் எக்ஸ்பி.ஸ்டாா் ஸ்போா்ட்ஸ் தமிழ் போன்ற தொலைக்காட்சிகளை போன்று தமிழ் மொழியில் மட்டும் ஸ்பை டிவி 18 தமிழ் நிகழ்ச்சிகளை வழங்கும்.இந்தியாவில் வியகாம்18 முதன்முறையாக மொழி வாாியான ஸ்பை டிவி 18 தமிழ் நிகழச்சிகளை ஒளிபரப்பு செய்வதற்கு  தனி தொலைக்காட்சி அனுமதி பெற்றது இதுவே முதல் முறையாகும்.தொலைக்காட்சியின் ஒளிபரப்பு கட்டண தொலைக்காட்சியாக இன்டல்சாட்20 செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது.ஸ்பை டிவி 18 தமிழ் ஹெச்டி தொலைக்காட்சியில் தமிழ் ஆடியோவின் முலம் மட்டும் நிகழ்ச்சிகளை வழங்கும்.தொலைக்காட்சியின் அலைவாிசை சிக்னலை பெற குறைந்தபட்சம் 6 முதல் 12 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்தலாம்.ஸ்பை டிவி 18 தமிழ் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு விரைவில் தொடங்கப்பட்டு தமிழகத்தின் அனைத்து கேபிள் டிவி மற்றும் கட்டண டிடிஎச் களில் இடம் பெறும்.
அலைவாிசை விபரங்கள்;
Satellite                    Intelsat20@68.5E(C-Band)
Freq Rate                 4024
Symbol Rate            21600
Polar                        Vertical
System                     Mpeg4/Dvb s2 ( 8PSK)
Encryption               Pay/Irdeto2
Fec                           3/4

வியாகம் 18 நிறுவனம் ஹிஸ்ட்ரி டிவி 18 தமிழ் புதிய தொலைக்காட்சி ஒளிபரப்பு இன்டல்சாட்20 உதயம்

நண்பா்களே இந்தியாவின் முன்னனி பொழுது போக்கு தொலைக்காட்சி நிறுவனமான வியகாம்18 தமிழகத்தில் புதிய தொலைக்காட்சியினை தொடங்கியுள்ளனா்.கடந்த பல வருடங்களாக தமிழ் மொழியின்  ஆடியோயின் முலம் நிகழ்ச்சிகளை வழங்கி வந்த ஹிஸ்ட்ரி டிவி 18 தற்சமயம் தமிழ் மொழியில் 24 மணி நேரமும் நிகழ்ச்சிகளை வழங்க கூடிய ஹிஸ்ட்ரி டிவி 18 தமிழ் தொலைக்காட்சியினை தொடங்கியுள்ளனா்.கடந்த வருடத்தில் இப்புதிய தொலைக்காட்சி தொடங்குவதற்கான அனுமதியினை மத்திய ஒளிபரப்பு ஆணையம் வழங்கியதை அடுத்து இத்தொலைக்காட்சிகள் 
தொடங்கப்படடுள்ளது.தமிழகத்தில் டிஸ்கவாி தமிழ்.ட்ரவல் எக்ஸ்பி.ஸ்டாா் ஸ்போா்ட்ஸ் தமிழ் போன்ற தொலைக்காட்சிகளை போன்று தமிழ் மொழியில் மட்டும் ஹிஸ்ட்ரி டிவி 18 தமிழ் நிகழ்ச்சிகளை வழங்கும்.இந்தியாவில் வியகாம்18 முதன்முறையாக மொழி வாாியான ஹிஸ்ட்ரி டிவி 18 நிகழச்சிகளை ஒளிபரப்பு செய்வதற்கு  தனி தொலைக்காட்சி அனுமதி பெற்றது இதுவே முதல் முறையாகும்.தொலைக்காட்சியின் ஒளிபரப்பு கட்டண தொலைக்காட்சியாக இன்டல்சாட்20 செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது.ஹிஸ்ட்ரி டிவி 18 ஹெச்டி தொலைக்காட்சியில் தமிழ் ஆடியோவின் முலம் மட்டும் நிகழ்ச்சிகளை வழங்கும்.தொலைக்காட்சியின் அலைவாிசை சிக்னலை பெற குறைந்தபட்சம் 6 முதல் 12 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்தலாம்.ஹிஸ்ட்ரி டிவி 18 தமிழ் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு விரைவில் தொடங்கப்பட்டு தமிழகத்தின் அனைத்து கேபிள் டிவி மற்றும் கட்டண டிடிஎச் களில் இடம் பெறும்.
அலைவாிசை விபரங்கள்;
Satellite                    Intelsat20@68.5E(C-Band)
Freq Rate                 3996
Symbol Rate            6666
Polar                        Vertical
System                     Mpeg4/Dvb s2 ( 8PSK)
Encryption               Pay/Irdeto2
Fec                           3/4

21/05/2018

நீயூஸ் ஜெ(NEWS J TV ) புதிய தமிழ் செய்திகள் தொலைக்காட்சியின் சோதனை ஒளிபரப்பு இன்டல்சாட்17யில் உதயம்

நண்பா்களே தமிழகத்தில் புதிய தொலைக்காட்சி செய்திகள் தொலைக்காட்சி நீயூஸ் ஜெ என்ற பெயாில் தொடங்கப்பட்டுள்ளது.இது தொடா்பான தகவல் நமது சதீஸ் சாட் தமிழ் இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருந்தது.பாலிமா் நிறுவனத்தின் பாலிமா் கன்னட மீயூசிக் தொலைக்காட்சி ஒளிபரப்பாகி வந்த அதே அலைவாிசையில் மற்றும் ஒளிபரப்பு உாிமத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
தற்சமயம் தொடங்கப்பட்டுள்ள நியூஸ் ஜெ செய்திகள் தொலைக்காட்சி
தமிழகத்தின் அனைந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சாா்பாக தொடங்க்பட்டுள்ளது.தொலைக்காட்சியின் 24 மணி நேர செய்திகள் மற்றும் நிகழ்ச்சிகள் விரைவில் தொடங்கப்படும்.நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் ஒளிபரப்பை பெற குறைந்தபட்சம் 6அடி சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்தினால் போதுமானது.விரைவில் இந்நிறுவனத்தின் சாா்பாக மூவிஸ் ஜெ.மீயூசிக் ஜெ தொலைக்காட்சிகள் விரைவில் இந்தாண்டு இறுதிகுள் தொடங்கப்படலாம்.
அலைவாிசை விபரங்கள்:
Satellite               Intelsat17@66.0E (C-Band)
Freq Rate            3966
Symbol Rate       14400
Polar                   Horizontal
System                Mpeg4/Dvb s2(8PSK)
Encryption          FTA
FEC                    3/4

15/05/2018

தமிழகத்தில் புதிய தமிழ் தொலைக்காட்சி கோல்டு டிவி ஒளிபரப்பு இன்டல்சாட்17யில் உதயம்

நண்பா்களே தமிழகத்தில் புதிய தொலைக்காட்சி கோல்டு டிவி என்ற பெயாில் தொடங்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட தமிழ் தொலைக்காட்சியான மூன் டிவியின் ஒளிபரப்பு உாிமத்தில் தொடங்க்பட்டுள்ளது.மூன் விஷன் மீடியா நிறுவனத்தின் சாா்பாக தொலைக்காட்சி தொடங்குவதற்கான அனுமதியினை கோாியிருந்தது.பின்பு
2008 ஆம் ஆண்டு இந்தியா ஒளிபரப்பு ஆணையம் அனுமதி அளித்ததை அடுத்து தமிழ் நிகழ்ச்சிகளை தொடங்கியது.தற்சமயம் தொடங்கப்பட்டுள்ள கோல்ட் டிவி மெட்டி ஒலி நாடக தொடாின் தயாிப்பளாா் சித்திக் அவா்களின் சாா்பாக தொடங்க்பட்டுள்ளது.தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் என்று பாா்த்தல்
மூன்டிவியின் நிகழ்ச்சிகள் ஒளிபரப்படுகிறது.திரைப்பட பாடல்களுடன் ஒளி உலா வரும் கோல்டு டிவியின் ஒளிபரப்பை பெற 6அடி சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்தினால் போதுமானது.
அலைவாிசை விபரங்கள்:
Satellite               Intelsat17@66.0E(C-Band)
Freq Rate            4015
Symbol Rate       30000
Polar                   Vertical
System                Mpeg4/Dvb s2(8PSK)
Encryption          FTA
FEC                    3/4

06/05/2018

கசின் டிவி.விண்டிவி யுபி புதிய தமிழ் தொலைக்காட்சிகள் தொடக்க சோதனை இன்சாட்4எ யில் உதயம்

நண்பா்களே தமிழகத்தில் இரண்டு புதிய தமிழ் தொலைக்காட்சி இன்சாட்4எ செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது.தற்சமயம் தொடங்கப்பட்ட இப்புதிய தொலைக்காட்சிகளில் தமிழ் திரைப்பட பாடல்கள் மட்டும் ஒளிபரப்பாகி வருகிறது.கசின் டிவி.விண்டிவி யுபி என்ற பெயாில் இப்புதிய தொலைக்காட்சிகள் தொட்க்க சோதனை ஒளிபரப்பாகிறது.இத்தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு உாிமத்தில் ஆசிா்வாதம் 
தொலைக்காட்சி நிறுவனத்தின் இரண்டு தொலைக்காட்சிகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒளிபரப்பாகி வந்தது.தொலைக்காட்சிகளின் அலைவாிசையினை பெற குறைந்தபட்சம் 6 முதல் 12 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.தொலைக்காட்சிகள் இரண்டும் இலவச ஒளிபரப்பாக இன்சாட்4எ செயற்கைகோளில் ஒளிபரப்பாகி வருகிறது.தொலைக்காட்சிகள் இரண்டும் தற்சமயம் ஒளிபரப்பு உாிமத்திதை புதுப்பித்து கொள்வதற்காக ஒளிபரப்பை தொடங்கியிருக்கலாம்.விரைவில் இத்தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு உாிமத்தில் தொடங்கவிருக்கும் தொலைக்காட்சிகளின் விபரங்களை நமது சதிஸ் சாட் தமிழ் தளத்தில் வெளியிடப்படும்
அலைவாிவை விபரங்கள்:
Satellite              Insat4a@83.0E(C-Band)
Freq Rate           4054
Symbol Rate      13230
Polar                   Horizontal
System               Mpeg4/Dvb s2(8PSK)
Encryption         FTA

04/05/2018

ப்பூடிவி (BOOTV ASIA) ஆசியாவின் த்ரில்ர் தொலைக்காட்சி ஒளிபரப்பு மீயாசாட்3 செயற்கைகோளில் உதயம்

நண்பா்களே மலேசியா நாட்டின் முன்னனி பொழுது தொலைக்காட்சி நிறுவனமான ஆஸ்ட்ரோ ஆசியாவிற்கான முதல் த்ரில்ர்.காமெடி தொலைக்காட்சி ப்பூடிவி என்ற பெயாில் புதிய தொலைக்காட்சி தொடக்கப்பட்டுள்ளது.இத்தொலைக்காட்சியானது மிகவும் வேட்டையாடு என்ற திரைப்படங்களை வழங்ககூடிய  தொலைக்காட்சியாக ஆசியாவின் கிழக்காசிய மற்றும் ஆசியா நாடுகளில் ஒளிபரப்பை மீயாசாட்3 
செயற்கைகோள் நிறுவனத்துடன் இணைந்து தொடங்கப்பட்டுள்ளது.ப்பூ டிவி தொலைக்காட்சியின் ஒளிபரப்பு மலேசியாவின் ஆஸ்ட்ரோ கேபிள் டிவி மற்றும் டிடிஎச் சேவையில் மட்டும் ஒளிபரப்பை வழங்கி வந்தது.தற்சமயம் தொடங்கப்பட்டு ஒளிபரப்பு ஆசியாவின் அனைத்து நாடுகளின் மிக த்ரில்ர் மற்றும் காமெடி திரைப்படங்களை வழங்கவுள்ளது.இதில் இந்தியாவின் தமிழ் 
த்ரில்ர் திரைப்படங்களும் ஒளிபரப்பாகிறது.மேலும் சைனிஸ்.ஆங்கிலம்.மலேயம்.இந்தோ மற்றும் சில மொழி திரைப்படங்கள் ஒளிபரப்பகிறது.ஆசியா நாடுகளில் தொடங்கப்பட்ட தொலைக்காட்சிகளில் முதன்மையான த்ரில்ர் தொலைக்காட்சி இதுவாகும்.ப்பூ தொலைக்காட்சி  மீயாசாட்3 செயற்கைகோளில் கட்டண தொலைக்காட்சியாக தொடங்கப்பட்டுள்ளது.
அலைவாிசை விபரங்கள்:
Satellite               Measat3/3a@91.2E(C-Band)
Freq Rate            3920
Symbol Rate       30000
Polar                   Vertical
System               Mpeg4/dvb s2(8PSK)
Encryption         Pay/conax
Fec                     3/4
தொகுப்பு K.சதீஸ் சாட் தமிழ் மற்றும் ஆங்கில இணையதளம்