சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

18/10/2018

ஒன் சென்னை (ஜி நீயூஸ்) புதிய தமிழ் செய்திகள் தொலைக்காட்சி தமிழகத்தில் விரைவில்

நண்பா்களே இந்தியாவின் முன்னனி தொலைக்காட்சி நிறுவனமான ஜி மிடியா நான்கு புதிய செய்திகள் தொலைக்காட்சிகள் தொடங்குவதற்கான அனுமதியினை இந்திய ஒளிபரப்பு ஆணையம் வழங்கியுள்ளது.இதில் தென்னிந்தியாவில் முதன்முறையாக தமிழ் மொழியில் செய்திகள் தொலைக்காட்சியினை தொடங்கவுள்ளனா்.ஜி மிடியா நிறுவனம் வட இந்தியாவில் உள்ள சில மாநில மொழிகளில் செய்திகள் தொலைக்காட்சியினை தொடங்கி அமோக ஆதரவினை பெற்றதை அடுத்து மேலும் நான்கு தொலைக்காட்சிகள் பெங்காளி.ஹிந்தி.மாரத்தி.தமிழ் மொழிகளில் தொடங்கவிருக்கின்றனா்.ஒன் சென்னை.ஒன் மும்பை.ஒன் டெல்லி.ஒன் கொல்கத்தா என்ற பெயாில் தொலைக்காட்சிகளுக்கான அனுமதி 
பெறப்பட்டுள்ளது.விரைவில் ஜி மிடியா நிறுவனம் இப் புதிய செய்திகள் தொலைக்காட்சிகளுக்கான உலகளாவிய செயற்கைகோள் ஒளிபரப்பு ஜி மிடியா தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும் அலைவாிசையில் இவ்வாண்டு இறுதிகுள் சோதனை ஒளிபரப்பை தொடங்கலாம்.தமிழகத்தை பொறுத்தமட்டிலும் செய்திகள் தொலைக்காட்சி வாிசையில் சில முன்னனி நிறுவன தொலைக்காட்சிகளை முதன்மையாக செயல்பட்டு மக்களின் ஆதரவை பெறுவதை அடுத்து ஜீ மிடியா செய்தி தொலைக்காட்சிக்கு பல்வேறு தொழில்நுட்பங்களுடன் அனைத்து தரப்பு செய்திகளை தரும் தொலைக்காட்சியாக அமையலாம்.தமிழகத்தில் ஜி மிடியாவின் முன்றவாது தொலைக்காட்சி ஒன் சென்னை ஆகும்.ஜீ மிடியாவின் நிறுவனத்தின்  ஜி தமிழ்.ஜி தமிழ் ஹெச்டி போன்ற தொலைக்காட்சிகள் தமிழகத்தில் ஒளிபரப்பாகி வருவது குறிப்பிடதக்கது.
தொகுப்பு சதீஸ் சாட் தமிழ் ஆங்கில இணையதளம்

2 comments:

  1. Bro new tv channel panranga...Ithu unmaya bro..?

    பள்ளி கல்வி துறைக்கு தனி, 'டிவி' சேனல் - பொங்கல் திருநாளில், சேனல் ஒளிபரப்பு துவக்கம்!


    எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், தமிழகத்தில், பள்ளி கல்வி துறைக்கு, தனி, 'டிவி' சேனல் துவங்கப்பட உள்ளது.

    தமிழக பள்ளி கல்வி அமைச்சராக, செங்கோட்டையன் பதவியேற்ற பின், இத்துறையில், அடுக்கடுக்கான மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, பள்ளி கல்வித் துறைக்கு என, பிரத்யேகமாக, 'டிவி' சேனல் துவங்கப்பட உள்ளது.

    இதற்கான பணிகளை மேற்கொள்ள, பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன், மாநில கல்வி யியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் அறிவொளி, ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்குனர் சுடலைகண்ணன் மற்றும் இணை இயக்குனர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுஉள்ளது.தொழில்நுட்ப பணி மற்றும் தொலைக்காட்சிக்கான முன்தயாரிப்பு காட்சிகளை பதிவு செய்யவும், தனியாக குழு அமைக்கப்பட்டுள்ளது. கேமரா, தொழில்நுட்ப கருவிகள் வாங்கும் பணிகளும் துவங்கியுள்ளன. படப்படிப்பு மற்றும் தொழில்நுட்ப தளங்களை, சென்னை, அண்ணா நுாலகத்தில் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    மேலும், காட்சி பதிவுக்காக, 'ட்ரோன்' என்ற, ஆளில்லா விமானம் வாங்கவும், உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜனவரியில், பொங்கல் திருநாளில், சேனல் ஒளிபரப்பை துவங்க, பள்ளி கல்வி துறை திட்டமிட்டுள்ளது.

    ReplyDelete