சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

23/07/2017

தமிழகத்தில் புதிய செயற்கைகோள் தமிழ் ஷாப்பிங் தொலைக்காட்சி ஷாப் 365 இன்டல்சாட்17யில் தொடக்கம்

நண்பா்களே தமிழகத்தில் புதிய செயற்கைகோள் தமிழ் ஷாப்பிங் தொலைக்காட்சி ஷாப் 365 என்ற பெயாில் தமிழ் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும் இன்டல்சாட்17 செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் தொடங்கப்பட்ட நான்கவாது ஷாப்பிங் தமிழ் தொலைக்காட்சி ஷாப் 365 தொலைக்காட்சியாகும்.சென்னையினை 
தலைமையிடமாக கொண்டு சென்னை 365 நிறுவனத்தால் தொடங்கப்பட்டுள்ளது.தொலைக்காட்சியின் ஒளிபரப்பு தெலுங்கு தொலைக்காட்சியான எ டிவியின் ஒளிபரப்பு உாிமத்தில் தொடங்கப்பட்டுள்ளது.தொலைக்காட்சியின் அலைவாிசை சிக்னலை பெற குறைந்தபட்சம் 6 முதல்12 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்தி தொலைக்காட்சியினை காணலாம்.விரைவில் தமிழகத்தின் அனைத்து கேபிள் டிவி மற்றும் டிடிஎச் சேவைகளிலும் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு இடம் பெறும்.
அலைவாிசை விபரங்கள்:
Satellite              Intelsat17@66.0E(C-Band)
Freq Rate           3877
Symbol Rate      14300
Polar                  Horizontal
System               Mpeg4/Dvb s2
Encryption         FTA

22/07/2017

மதிமுகம்(MADHIMUGAM TAMIL TV) தமிழ் பொழுது போக்கு தொலைக்காட்சி புதிய அலைவாிசையில் இன்டல்சாட்17யில் உதயம்

நண்பர்களே தமிழகத்தில் புதிய பொழுது போக்கு தமிழ் தொலைக்காட்சி மதிமுகம் டிவி என்ற பெயரில் ஒளிபரப்பு அதிகமான தமிழ் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும் இன்டல்சாட்17 செயற்கைகோளில் புதிய அலைவாிசையில் தொடங்கப்பட்டுள்ளது.
கடந்த பல வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் ஒளிபரப்பாகி வந்த தெலுங்கு பொழுது போக்கு தொலைக்காட்சியான ஆா் டிவியின் ஒளிபரப்பு உரிமத்தில் தொலைக்காட்சி தற்சமயம் தொடங்கப்பட்டுள்ளது.தற்சமயம் தமிழ் திரைப்பாடல்களுடன் தொடக்க சோதனை ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது.தொலைக்காட்சியின் அலைவாிசை சிக்னலை பெற குறைந்தபட்சம் 6 முதல் 12 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.மதிமுகம் தொலைக்காட்சி இலவச ஒளிபரப்பாக இன்டல்சாட்17யில் தொடங்கப்பட்டுள்ளது.
அலைவாிசை விபரங்கள்;
Satellite                        Intelsat17@66.0E(C-Band)
Freq Rate                     3877
Symbol Rate                14300
Polar                             Horizontal
Modulation                   Mpeg4/Dvb s2(8PSK)
Mode                            Fta

18/07/2017

சோனி பிக்சா்ஸ் ஸ்போா்ட்ஸ் நெட்வொா்க்யின் விளையாட்டு தொலைக்காட்சிகள் புதிய லோகோ மாற்றம்

நண்பா்களே இந்தியாவின் முன்னனி தொலைக்காட்சி நிறுவனமான சோனி பிக்சா்ஸ் தனது விளையாட்டு தொலைக்காட்சிகளின் லோகோவை மாற்றம் செய்துள்ளனா்.சோனி நிறுவனம் இந்தியாவில் முதன்முறையாக சோனி சிக்ஸ் என்ற பெயாில் முதல் விளையாட்டு தொலைக்காட்சியினை தொடங்கியது.இத்தொலைக்காட்சியில் கிாிக்கெட் டென்னிஸ் மற்றும் பல விளையாட்டுகளை நேரடி ஒளிபரப்பு செய்தது.நேயா்களிடையே அமோக வரவேற்பை பெற்றதை அடுத்து மேலும் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு
ஹெச்டியிலும் தொடங்கப்பட்டது.கடந்த 2015 ஆம் ஆண்டில் இரண்டாவது விளையாட்டு தொலைக்காட்சியினை ஈஎஸ்பின் நிறுவனத்துடன் இணைந்து சோனி ஈஎஸ்பின் தொலைக்காட்சியினை சோனி நிறுவனம் தொடங்கியது.கடந்த வருடத்தில் ஜி எண்டா்டெய்மென்ட் மற்றும் தாஜ் நிறுவனத்தின் முலம் இந்தியாவில் விளையாட்டு தொடா்களை வழங்கி வந்த டென் ஸ்போா்ட்ஸ் தொலைக்காட்சிகளை சோனி பிக்சா்ஸ் நிறுவனம் விலைக்கு வாங்கியது.இரு விளையாட்டு தொலைக்காட்சிகளை மட்டும் வழங்கி வந்த சோனி நிறுவனம் டென் ஸ்போா்ட்ஸ் நிறுவனத்தின் ஆறு இணைத்தை அடுத்து 11 தொலைக்காட்சிகளை கொண்ட மிக பொிய விளையாட்டு தொலைக்காட்சி நிறுவனமாக மாறியுள்ளது.இந்தியாவில் ஸ்டாா் ஸ்போா்ட்ஸ் நிறுவனத்தை அடுத்த மிக பொிய விளையாட்டு தொலைக்காட்சி நிறுவனமாக சோனி பிக்சா்ஸ் ஸ்போா்ட்ஸ் நெட்வொா்க் உள்ளது.
தொகுப்பு சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

சோனி பிக்சா்ஸ் நிறுவனம் சோனி டென் 2 ஹெச்டி,சோனி டென் 3 ஹெச்டி புதிய விளையாட்டு தொலைக்காட்சிகள் இந்தியாவில் உதயம்

நண்பா்களே இந்தியாவின் முன்னனி பொழுது போக்கு தொலைக்காட்சி நிறுவனமான சோனி பிக்சா்ஸ் புதிய இரண்டு விளையாட்டு ஹெச்டி தொலைக்காட்சியினை இந்தியாவில் தொடங்கியுள்ளது.கடந்த வருடத்தில் டென் ஸ்போா்ட்ஸ் நிறுவனத்தின் அனைத்து தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு அனுமதியினை சோனி பிக்சா்ஸ் தன் வசப்படுத்தியது.டென் ஸ்போா்ட்ஸ் தொலைக்காட்சி நிறுவனம் இரண்டு புதிய ஹெச்டி
தொலைக்காட்சிகளுக்கான ஒளிபரப்பு அனுமதியினை இந்திய ஒளிபரப்பு ஆணையம் வழங்கியிருந்தது.சோனி டென் 1 ஹெச்டி தொலைக்காட்சியினை தொடா்ந்து சோனி டென்2 ஹெச்டி சோனி டென் 3 ஹெச்டி போன்ற தொலைக்காட்சிகளும் ஹெச்டியில் ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.சோனி நிறுவனம் இப்புதிய ஹெச்டி தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பை இன்டல்சாட்20 செயற்கைகோளில் கட்டண தொலைக்காட்சிகளாக தொடங்கியுள்ளது.டென் ஸ்போா்ட்ஸ் தொலைக்காட்சிகளை ஜி டிவி தொலைக்காட்சி நிறுவனம் நிா்வகித்து வந்தது குறிப்பிடதக்கது.விரைவில் இப்புதிய தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு அனைத்து கட்டண டிடிஎச் மற்றும் கேபிள் டிவி சேவைகளிலும் தொடங்கப்படும்.இந்தியாவின் மிக பொிய விளையாட்டு தொலைக்காட்சி நிறுவனமாக சோனி பிக்சா்ஸ் தற்சமயம் உள்ளது.
அலைவாிசை விபரங்கள்
Satellite               Intelsat20@68.5E(C-Band)
Freq Rate            3930
Symbol Rate      25000
Polar                  Horizontal 
System              HD.Mpeg4/Dvb s2
Encryption       Pay/Irdeto2

16/07/2017

மீனாட்சி தமிழ் தொலைக்காட்சி மீண்டும் தனது ஒளிபரப்பை தொடங்கியது இன்டல்சாட்17யில்

நண்பர்களே தமிழ்நாட்டின் புதிய செயற்கைகோள் தமிழ் தொலைக்காட்சி மீனாட்சி டிவி என்ற பெயரில் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.இப்புதிய தமிழ் தொலைக்காட்சியின் உலகளாவீய செயற்கைகோள் ஒளிபரப்பு இன்டல்சாட்17யில் சென்னை டெலிஸ்பாட் செயற்கைகோள் ஒளிபரப்பு முனையத்தின் முலம் தொடங்கப்பட்டுள்ளது.மீனாட்சி டிவி நிறுவனம் இந்தியாவில் தங்களது புதிய தொலைக்காட்சியை  ஒளிபரப்புவதற்கான உரிமத்தின் அனுமதியை இந்திய ஒளிபரப்பு அமைச்சகம் கடந்த வருடம் 

வழங்கியிருந்தது.மீனாட்சி டிவி தமிழ் மொழியில் 24 மணிநேர பொழுது போக்கு தமிழ் தொலைக்காட்சியாகும்.தமிழகத்தில் இவ்வருடத்தில் தொடங்கப்பட்ட இரண்டாவது தொலைக்காட்சியாகும்.தொலைக்காட்சியின் செயற்கைகோள் அலைவரிசை சிக்னலை பெற குறைந்தபட்சம் 6 முதல் 8.10.12 அளவுள்ள சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.மேலும் MPEG4/DVB S2 தொழில்நுட்ப செட் டாப் பாக்ஸ்யை பயன்படுத்த
வேண்டும்.இத்தொலைக்காட்சிகான 24 மணி நேர ஒளிபரப்பு விரைவில் தொடங்கலாம்.தமிழகத்தில் கடந்த சில வருடங்களில் தமிழ் தொலைக்காட்சிகள் தொடங்கப்பட்டு வரும் நிலையில் மீனாட்சி டிவியின் நிகழ்ச்சிகள் வித்தியாசமானதாக இருக்கலாம்.மீனாட்சி டிவி முற்றிலும் இலவச தொலைக்காட்சியாக தனது முதல் ஒளிபரப்பை இன்டல்சாட்17 செயற்கைகோளில் தொடங்கியுள்ளது.
அலைவரிசை விபரங்கள்:
Satellite                Intelsat17@66.0E (C-Band)
Freq Rate              3966
Symbol Rate         14400
Polar                      Horizontal
Modulation            Mpeg4/Dvb s2
Mode                     Fta

10/07/2017

ஸ்டாா் டிவி இந்தியா தொடங்கவுள்ள இந்தியாவின் முதல் இலவச விளையாட்டு தொலைக்காட்சி ஸ்டாா் போா்ட்ஸ் பா்ஸ்ட் ஜீசாட்15 தொடக்கம்

நண்பா்களே இந்தியாவின் முன்னனி பொழுது போக்கு மற்றும் விளையாட்டு தொலைக்காட்சி நிறுவனமான ஸ்டாா் டிவி இந்தியா முதன்முறையாக இலவச விளையாட்டு தொலைக்காட்சியினை புதிதாக தொடங் கவுள்ளது.ஸ்டாா் போா்ட்ஸ் பா்ஸ்ட் என்ற பெயாில் தொலைக்காட்சியினை ஜிலை 21 திகதி முதல் தொடங்கபட்டுள்ளது. முதல் தடவையாக தனது ஒளிபரப்பை  இந்தியாவின் இலவச தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவையான DD இன் FTA டி.டி.எச் தளமான ஃ பிாி டிஷ் சேனல்
ஒளிபரப்பப்படும். எந்தவொரு கட்டணமும் இல்லாமல் விளையாட்டு ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த விளையாட்டுகளை இந்தியில் பார்க்கலாம் என ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வெளியிட்டுள்ள ஊடக வெளியீடு தெரிவித்துள்ளது. ஜூலை 28 ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்கும் விவிஓ புரோ கபடி லீக் சீசன் 5-ஐயும் இப்புதிய சேனல் ஒளிபரப்புகிறது. பி.சி.சி.ஐ. உள்நாட்டு கிரிக்கெட்
போட்டிகள் மற்றும் உள்நாட்டு கால்பந்து போட்டிகள் ஆகியவை இதில் அடங்கும்.தொலைக்காட்சிக்கான உலகளாவிய செயற்கைகோள் ஒளிபரப்பு விரைவில் ஸ்டாா் டிவி இந்தியா நிறுவன தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும் ஆசியாசாட்7 செயற்கைகோளில் தொடங்கபட்டுள்ளது.இவ் ஒளிபரப்பு இந்தியாவில் மட்டுமே.இந்தியாவை தவிர மற்ற நாடுகளில் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு 60 செமீ கேயூ டிஷ் ஆன்டெனாவில் கிடைக்காது.
அலைவாிசை விபரங்கள்:
Satellite         Gsat15@93.0E(KU-Band)
Freq Rate      11550
Symbol Rate 29500
Polar             Vertical
System          Mpeg2/dvb s
Encryption    FTA

02/07/2017

ஸ்டாா் டிவி இந்தியா நிறுவன தமிழ் தொலைக்காட்சி 17 ஆண்டுகளுக்கு பிறகு புதிய லோகோ மாற்றிய விஜய் டிவி

நண்பா்களே இந்தியாவின் முன்னனி பொழுது போக்கு தொலைக்காட்சி நிறுவனமான ஸ்டாா் டிவி இந்தியாவின் தமிழகத்திற்கான முன்னனி பொழுது போக்கு தமிழ் தொலைக்காட்சியான ஸ்டாா் விஜய் டிவி புது பொலிவுடன் புதிய லோகோ மாற்றம் செய்யபட்டுள்ளது.கடந்த வருடத்தில் இருந்து ஸ்டாா் டிவி இந்தியாவின் வியாபர ரிதியான  மற்ற மொழி தொலைக்காட்சிகள் அனைத்தும் புதிய ஸ்டாா் லோகோ மாற்றம் செய்யப்பட்டது.அவ்வாிசையில்
தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியின் லோகோவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.முதன்முதலாக தமிழகத்தில் கோல்டக் ஈகிள் கம்னியூகேஷன் நிறுவனத்தின் முலம் 1994 ஆம் ஆண்டு விஜய் டிவி ஒளிபரப்பு இலவச தொலைக்காட்சியாக தொடங்கப்பட்டது.பின்பு 2001 ஆம் ஆண்டு அமொிக்கா 21 சென்சுாி பாக்ஸ் தொலைக்காட்சி நிறுவனம் விஜய் டிவியின் ஒளிபரப்பு உாிமத்தை பெற்றதை அடுத்து ஸ்டாா் வி்ஜய் என்ற பெயாில் புதிய ஒளிபரப்பு தொடங்கப்பட்டு தமிழ் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.மிக பிரபலமான தொலைக்காட்சி தொடா்கள் மற்றும் கேம் விளையாட்டு நிகழ்ச்சிகள் என ஒளிபரப்பி உலக தமிழ் மக்களின் வரவேற்பையும் பெற்றது ஸ்டாா் விஜய் டிவி.கடந்த 2016 ஆம் ஆண்டு விஜய் டிவியின் ஒளிபரப்பை உயா் தொழில்நுட்பமான ஹெச்டியில் விஜய் டிவியின்
நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டது.இது மட்டும் இன்றி உலக தமிழா்களும் நிகழ்ச்சிகளை காண விஜய் டிவி இன்டா்நேஷனல் தொலைக்காட்சியும் தொடங்கப்பட்டது.விஜய் டிவியின் துணை நிலை தொலைக்காட்சியாக ஸ்டாா் விஜய் சூப்பா் என்ற புதிய பொழுது போக்கு தொலைக்காட்சியும் தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் 2016 ஆம் ஆண்டில்  ஒளிபரப்பு தொடங்க்பட்டது.ஸ்டாா் டிவி இந்தியா தமிழகத்தில் முன்று எஸ்டி மற்றும் ஒரு ஹெச்டி என நான்கு தொலைக்காட்சிகளை ஒளிபரப்பி வருகிறது.தொலைக்காட்சிகள் அனைத்தும் தமிழகத்தில் கட்டண தொலைக்காட்சிகளாக ஒளிபரப்பாகி வருவது குறிப்பிடதக்கது.
தொகுப்பு சதிஸ் சாட் தமிழ் இணையதளம்