சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

29/05/2015

ஆசியா செயற்கைகோள் தொலைக்காட்சியில் அல்ட்ரா ஹெச்டி தொழில்நுட்பம் அறிமுகம்.

நண்பர்களே உலகின் எலக்ட்ரானிக் துறையில் பல்வேறு விதமான புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருவதை நாம் அன்றாடம் காணக்கூடியதாக உள்ளது.அந்த வரிசையில் செயற்கைகோள் தொலைக்காட்சி தொழில்நுட்பத்தில் புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.கடந்த சில வருடங்களுக்கு முன்பு உலக தொலைக்காட்சி துறையில் புதிய அதிநவின உயர் தொழில்நுட்பமான ஹெச்டி அறிமுகம் செய்யப்பட்டு தொலைக்காட்சிகளின் நிகழ்ச்சிகள் உயர்தர வீடியோ வடிவில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.இப்புதிய தொழில்நுட்பம் அமெரிக்கா ஆசியா மற்றும் வளைகுடா நாடுகளின் செயற்கைகோள் தொலைக்காட்சி துறையில் படிபடியாக மாற்றம் செய்யப்பட்டு வந்தது.இருப்பினும் இத்தொழில்நுட்பத்தை அனைத்து தரப்பு தொலைக்காட்சி நிறுவனங்களும் மாற்றம் செய்யப்படவில்லை.ஒரு சில முன்னனி தொலைக்காட்சிகளே இப்புதிய தொழில்நுட்பத்தில் தொலைக்காட்சிகளை தொடங்கியுள்ளன.

அந்த வரிசையில் தற்சமயம் அறிமுகம்படுத்தபட்ட புதிய தொழில்நுட்பமான  4கே அல்ட்ரா ஹெச்டி வடிவத்தில் புதிய தொலைக்காட்சிகள் ஆசியாவின் செயற்கைகோள் அப்லிங் ஒளிபரப்பு முனைய நிறுவனங்கள் தொடங்கப்படவுள்ளன.இப்புதிய தொழிலிநுட்பம் தற்சமயம் உள்ள ஹெச்டி தொழில்நுட்பத்தை விட நான்கு மடங்கு துல்லியமான வீடியோவை பார்க்ககூடிய அமைப்பை கொண்டது.அமெரிக்கா மற்றும் வளர்ந்த நாடுகளில் 4கே அல்ட்ரா ஹெச்டி தொலைக்காட்சிகள் தொடங்கப்பட்டு ஒளிபரப்பை 
வழங்கி வருகிறது.கடந்த வருடத்தில் மலேசிய நாட்டின் மீயாசாட் செயற்கைகோளில் அல்ட்ரா ஹெச்டி தொழில்நுட்பத்தில் புதிய சோதனை தொலைக்காட்சி தொடங்கப்பட்டது.அதே போன்று ஆசியா நாடுகளின் முன்னனி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்யும் செயற்கைகோள் நிறுவனமான ஆசியாசாட் கம்யூனிகேஷன் இப்புதிய தொழில்நுட்பத்தில் தொலைக்காட்சிகளுக்கான சோதனை ஒளிபரப்பை ஆசியாசாட்4 செயற்கைகோளில் தொடங்கியுள்ளனர்.தொலைக்காட்சியின் ஒளிபரப்பை பெற 4கே அல்ட்ரா ஹெச்டி வசதி பொருந்திய செட்டாப் பாக்ஸை பயன்படுத்த வேண்டும்.இப்புதிய செட்டாப் பாக்ஸ் ஆசியா நாடுகளின் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.இந்தியாவில் வீடியோகான் டிடிஎச் நிறுவனம் இப்புதிய தொழில்நுட்பத்தை கடந்த வருடத்தில் அறிமுகம் செய்தது குறிப்பிடதக்கது.  
அலைவரிசை விபரங்கள்
Satellite                    Asaisat4@122.0(C-Band)
Freq Rate                4130
Symbol Rate            29717
Polar                        Horizontal
Modulation               UHD/Mpeg2/DVB S1
Mode                       Fta

24/05/2015

பிரசார் பாரதியின்(DD KISAN TV AGRI)புதிய வேளாண்மை தொலைக்காட்சி கிஸ்ஷான் டிவி இன்சாட்4பி யில் உதயம்

நண்பர்களே இந்தியா நாட்டின் வேளாண்மை துறையில் புதிய தொழில்நுட்பங்களை ஏற்படுத்தவும் வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையிலும் அன்றாட வேளாண்மை தொடர்பான தகவல்களை கிராமப்புற விவசாயிகள் தெரிந்து கொள்ளக்கூடிய வகையில் இந்தியா அரசின் கீழ் செயல்படும பிரசார் பாரதி பொது ஒளிபரப்பு நிறுவனத்தின் சார்பாக புதிய  
வேளாண்மை தொலைக்காட்சியை கிஸ்ஷான் டிவி என்ற பெயரில் தொடங்கியுள்ளனர்.இத்தொலைக்காட்சிக்கான தொடக்க சோதனை ஒளிபரப்பு இன்சாட்3சி செயற்கைகோளிலும்.இந்திய அரசின் இலவச தொலைக்காட்சி சேவையான டிடிபிரி டிஷ் டிடிஎச்யிலும் ஒளிபரப்பை தொடங்கியுள்ளனர்.பிரசார் பாரதி நிறுவனத்தில் கடந்த சில வருடங்களுக்கு 
முன்பு கிஸ்ஷான் தொலைக்காட்சி தொடங்கப்பட்டு பகுதி நேர நிகழ்ச்சிகளை மட்டும் வழங்கி வந்தது.தற்சமயம் இத்தொலைக்காட்சி முழுநேர தொலைக்காட்சியாக விரைவில் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் தொடங்கப்படவுள்ளது.துர்தர்ஷன் நிறுவனத்தில் பொழுதுபோக்கு.செய்திகள்.விளையாட்டு.காரச்சார போன்ற பிரிவுகளில் தொலைக்காட்சிகளை தொடங்கியுள்ளனர்.மிக எளிய தொழில்நுட்பமான MPEG2/DVB S1 செட்டாப் பாக்ஸயில் காணலாம்.தொலைக்காட்சிகளின் 
அலைவரிசை சிக்னலை பெற 6 முதல் 12 அளவு வரையிலான சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்தலாம்.டிடிபிரி டிஷயில் தொலைக்காட்சியை காண 60செமீ டிஷ் போதுமானது.தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் ஹிந்தி மொழியில் ஒளிபரப்பாகிறது.
அலைவரிசை விபரங்கள்:
Satellite               Insat4B@93.0E(KU-BAND)
Freq Rate            10990
Symbol Rate        28500
Polar                    Vertical
Modulation           Mpeg2/dvb s1
Mode                   Fta   

22/05/2015

சேனல் ஐ / நேத்ரா லங்கா தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பு டிஷ்டிவி லங்கா தொடக்கம்

நண்பர்களே இலங்கை நாட்டில் தொடங்கவிருக்கும் புதிய டிடிஎச் சேவையான   டிஷ்டிவி லங்கா தற்சமயம் இலங்கை நாட்டின் தமிழ் மற்றும் சிங்களா மொழி தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பை சீஸ்7 செயற்கைகோளில்
தொடங்கியுள்ளனர்.அந்த வரிசையில் இலங்கை நாட்டின் அரசு தொலைக்காட்சியான ரூபாவாஹினி மற்றும் நேத்ரா தமிழ் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பை தொடங்கியுள்ளனர்.கடந்த சில மாதங்களாக இப்புதிய டிடிஎச் சேவைக்கான தொழில்நுட்பபணிகள் 
நடைபெற்று வருகிறது.தொலைக்காட்சிகள் மிக எளிய தொழில்நுட்பமான MPEG2/DVB S1 வடிவத்தில் தொடங்கப்பட்டுள்ளது.தற்காலிக இலவச தொலைக்காட்சிகளாக தொடங்கப்பட்டுள்ள இதன் ஒளிபரப்பு எவ்வித நேரங்களிலும் இடைநிறுத்தம் செய்யப்படலாம்.இலங்கை நாட்டின் முன்னனி தொலைக்காட்சிகள் டிஷ்டிவி லங்காவில் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
அலைவரிசை விபரங்கள்;
Satellite                 SES7@95.0E(KU-BAND)
Freq Rate              12172
Symbol Rate          40700
Polar                      Horizontal
Modulation             Mpeg2/dvb s1
Mode                     Fta

18/05/2015

கலைஞர் டிவி,கலைஞர் முரசு, சிரிப்பொலி,மக்கள் தொலைக்காட்சி இலவச தொலைக்காட்சிகளாக டிஷ்டிவியில் தொடக்கம்

நண்பர்களே இந்தியாவின் முன்னனி டிடிஎச் சேவையான டிஷ்டிவி டிடிஎச்யில் தமிழ் தொலைக்காட்சிகளான கலைஞர் டிவி,மக்கள் தொலைக்காட்சி கலைஞர் சிரி்பபொலி, மற்றும் கலைஞர் முரசு போன்ற தொலைக்காட்சிகள் இலவச தொலைக்காட்சிகளாக அந்நிறுவனத்தின் தொலைக்காட்சிகள் 
ஒளிபரப்பாகும் செயற்கைகோளான சீஸ்7@95.0Eயில் ஒளிபரப்பை தொடங்கியுள்ளன.இத்தொலைக்காட்சிகள் தொடங்கப்பட்டுள்ள அலைவரிசையில் கேப்டன்டிவி மற்றும் ஸ்ரீ சங்கரா போன்ற தொலைக்காட்சிகளும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.தற்சமயம் இலவச தொலைக்காட்சிகளாக ஒளிபரப்பை தொடங்கினாலும் எவ்வித நேரங்களிலும் கட்டண தொலைக்காட்சிகளாக மாற்றப்படலாம்.இச்சேவை தற்காலிக இலவச ஒளிபரப்பே.தொலைக்காட்சிகளை காண மிக எளிய தொழில்நுட்ப செட்டாப் பாக்ஸ் MPEG2/DVB S1  போதுமானது.
அலைவரிசை விபரங்கள்:
Satellite                  SES7@95.0E( Ku-band)
Freq Rate               12112
Symbol Rate           40700
Polar                       Horizontal
Modulation              Mpeg2/Dvb s1
Mode                      Fta 

14/05/2015

பிறை டிவி(PIRAI TV)இஸ்லாமிய தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பு யூடெல்சாட்70B@70.5E தொடக்கம்


நண்பர்களே ஸ்ரீ லங்கா நாட்டின் ASK மிடியா குழுமத்தின் சார்பாக தொடங்கப்பட்ட தமிழ் இஸ்லாமிய தொலைக்காட்சியான பிறை டிவியின் முதல் செயற்கைகோள் ஒளிபரப்பு ஸ்ரீ லங்கா.இந்தியா மற்றும் மத்தியஆசியா நாடுகளுக்கான ஒளிபரப்பை யூடெல் சாட்70பி@70.5E செயற்கைகோளில் தொலைக்காட்சியின் தொடக்க சோதனை ஒளிபரப்பை தொடங்கியுள்ளனர்.தொலைக்காட்சியின் 
நிகழ்ச்சிகள் என்று பார்த்தால் இஸ்லாமிய மதம் தொடர்பான நிகழ்ச்சிகளை தமிழ் மொழியில் தமிழ் மக்களுக்கு வழங்கும் விதமாக தொடங்கப்பட்டுள்ளது.இத்தொலைக்காட்சி ASK கேபிள் ஒளிபரப்பின் முலம் நிகழ்ச்சிகளை யாழ்பானத்தில் மட்டும் வழங்கி வந்தது.இலங்கையில் தொடங்கப்பட்ட முதல் தமிழ் இஸ்லாமிய தொலைக்காட்சி
இதுவாகும்.இந்நிறுவனத்தின் பொழுதுபோக்கு தமிழ் தொலைக்காட்சிகளான டான் தமிழ் ஒளி மற்றும் டான் மீயூசிக் இதே செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.தொலைக்காட்சியை காண குறைந்தபட்சம் 60செமீ முதல் 120 செமீ அளவுள்ள கேயூ டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.MPEG4/DVB S2 தொழில்நுட்ப பொருந்திய செட் டாப் பாகஸ்யை பயன்படுத்த வேண்டும். 
அலைவரிசை விபரங்கள்:
Satellite                Eutalsat70B@70.5e(Ku-band)
Freq Rate            11292
Symbol Rate        44997
Polar                    Horizontal
Modulation           Mpeg4/dvb s2
Mode                   Fta

11/05/2015

டான் டிவி மற்றும் டான் மீயூசிக் தமிழ் தொலைக்காட்சி லோகோ மாற்றம்

நண்பர்களே இலங்கை நாட்டின் யாழ் பகுதியில் இருந்து ஒளிபரப்பாகும் ASK மீடியா குழுமத்தின் தமிழ் பொழுதுபோக்கு மற்றும் மியூசிக் தொலைக்காட்சியான டான் டிவி மற்றும் டான் மியூசிக் தொலைக்காட்சிகள் புதிய வடிவில் புதிய லோகோவுடன் தொடங்கப்பட்டுள்ளது.இக்குழுமத்தில் செயல்படும் மற்ற டான் செய்திகள் மற்றும் டான் ஸ்போர்ட்ஸ் 
தொலைக்காட்சிகளும் புதிய லோகோ மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இக்குழுமத்தின் டான் டிவி மற்றும் டான் மியூசிக் செரன்டிப் டிவி  தொலைக்காட்சிகளின் செயற்கைகோள் ஒளிபரப்பு கடந்த 2014 வருடத்தில் யூடெல்சாட்70 செயற்கைகோளில் தொடங்கப்பட்டு ஒளிபரப்பாகி வந்தது.நிகழ்ச்சிகளில் எவ்வித மாற்றம்யின்றி தொலைக்காட்சி ஒளிபரப்பாகிறது.இத்தொலைக்காட்சிகள் ஆசியா மற்றும் வளைகுடா மற்றும் ஐரோப்பா நாடுகளில் குறைந்தபட்சம் 120செமீ அளவுள்ள கேயூ டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்தி காணலாம்.
அலைவரிசை விபரங்கள்;
Satellite                 Eutelsat70B@70.5E( Ku-band)
Freq Rate               11292
Symbol Rate           45000
Polar                       Horizontal
Modulation              Mpeg4/ Dvb S2
Mode                      Fta

09/05/2015

ஸ்பிளாஸ் டிவி(SPLASH TV TAMIL) புதிய தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பு இன்டல்சாட்20யில் தொடக்கம்


நண்பர்களே தமிழ் நாட்டில் கடந்த வருடத்தில் தொடங்கப்பட்ட புதிய தமிழ் தொலைக்காட்சியான ப்ளாஸ் டிவி தனது செயற்கைகோள் ஒளிபரப்பை மீண்டும் இன்டல்சாட்20யில் தொடங்கியுள்ளது.இத்தொலைக்காட்சியின் தொடக்கத்தில் சோதனை ஒளிபரப்பு தொடங்கப்பட்டு பின்பு இடைநிறுத்தம் 
செய்யப்பட்டது.தற்சமயம் தமிழ் திரைப்பாடல்களுடன் ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.விரைவில் 24 மணி நேரத்திற்கான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு தொடங்கப்படலாம்.தொலைக்காட்சியின் உலகளாவிய செயற்கைகோள் ஒளிபரப்பு இந்தியாவின் என்எஸ்டிபிஎல் ஒளிபரப்பு முனையத்தின் முலம் தொடங்கப்பட்டுள்ளது.தொலைக்காட்சியை காண குறைந்தபட்சம் 6முதல் 8.10.12 அளவுள்ள சி பேண்ட் டிஷ் ஆண்டெனாவை பயனபடுத்த வேண்டும்.மேலும் MPEG4/DVB S2 தொழில் நுட்ப செட் டாப் பாக்ஸ் பயன்படுத்தி காணலாம்.இலவச தொலைக்காட்சியாக தனது ஒளிபரப்பை தொடங்கியுள்ளது ப்ளாஸ் டிவி தமிழ் தொலைக்காட்சி. 
அலைவரிசையின் விபரங்கள்
Satellite                  Intelsat20@68.5E(c-band)
Freq Rate              3795
Symol Rate           7200
Polar                    VERTICAL
Modulation           MPEG4/DVB S2
Mode                   FTA

02/05/2015

டிஸ்னி எக்ஸ்டி ஹெச்டி தமிழ்(DISNEY XD HD) கிழக்காசிய நாடுகளுக்கான ஒளிபரப்பு அப்ஸ்டார்7யில் தொடக்கம்

நண்பர்களே அமெரிக்கா நாட்டின் மிக பிரபலமான வால்ட் டிஷ்னி நிறுவனத்தின் கார்டூன் தொலைக்காட்சிகளான டிஷ்னி எக்டி தொலைக்காட்சிகளின் அதி நவின தொழில்நுட்ப ஹேச்டி ஒளிபரப்பு 
கிழக்காசிய ஆசியாகளுக்கு புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.இந்நிறுவனத்தில் இருந்து மலேசியா.இந்தோனிசியா.சிங்கப்பூர்.இந்தியா.சைனா போன்ற நாடுகளுக்கும் ஒளிபரப்பை தொடக்கப்பட்டுள்ளது.இவற்றில் தமிழ் மற்றும் மலேயா.இந்தோ.ஆங்கிலம் மொழிகளில் தொலைக்காட்சிகளின் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது.டிஷ்னி நிறுவனத்தில் ஒளிபரப்பாகும் ஆசியா 
நாடுகளுக்கான செயற்கைகோள் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு அப்ஸ்டார் 7 யில் செயல்படுகிறது.இலவச தொலைக்காட்சிகளாக ஒளிபரப்பாகும் இதன் ஒளிபரப்பு எவ்வித நேரங்களில் இடைநிறுத்தம் செய்யப்படலாம்.தொலைக்காட்சிகளின் ஆடியோ டொல்பி சிஸ்டம் மற்றும் சாதரான வடிவிலும் வழங்கப்படுகிறது.தொலைக்காட்சிகளை காண ஹெச்டி தொழில் நுட்ப பொருந்திய செட் டாப் பாக்ஸ்யில் காணலாம்.
அலைவரிசை விபரங்கள்:
Satellite               Apstar7@76.0E(C-BAND)
Freq Rate            3881
Symbol Rate        30000
Polar                    Horizontal
Modulation           HD.Mpeg2/DVB S1
Mode                   Fta