சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

26/11/2018

கேரளா மாநிலத்தில் முதல் ஜி மீடியா நிறுவன தொலைக்காட்சி ஜி கேரளம் உதயம்

நண்பா்களே இந்தியாவின் முன்னனி தொலைக்காட்சி நிறுவனமான ஜி மீடியா தென்னிந்தியாவின் பழங்கால பாரம்பாியம் நிறைந்த மாநிலமான கேரளாவில் முதல் முறையாக 24 மணி நேர பொழுது போக்கு மலையாள மொழியில் ஜி கேரளம் என்னும் தொலைக்காட்சியினை தொடங்கியுள்ளனா்.ஜி மீடியா தென்னிந்தியாவில் தமிழ் தெலுங்கு கன்னடா ஒடியா போன்ற மொழிகளில்
பொழுது போக்கு தொலைக்காட்சியினை தொடங்கி மக்களிடையே அமோக வரவேற்பினை பெற்றதை அடுத்து மலையாளத்திலும் புதிய சாகப்தனை படைக்க கால்தடம் பதிக்க தொடங்கியுள்ளது.கடந்த வருடத்தில் கேரளாவில் தொலைக்காட்சிகள் தொடங்குவதற்கான அனுமதியினை மத்திய ஒளிபரப்பு ஆணையம் வழங்கியிருந்தது.தொலைக்காட்சியின் ஒளிபரப்பு ஹெச்டி மற்றும் எஸ்டி தொழில்நுட்ப வடித்தில் நிகழ்ச்சிகளை தொடங்கியுள்ளனா்.கட்டண தொலைக்காட்சியாக ஆசியாசாட்7(எஸ்டி)
மற்றும் இன்டல்சாட்20(ஹெச்டி) செயற்கைகோளில் உலகளாவிய ஒளிபரப்பை தொடங்கியுள்ளனா்.கேரளா மாநிலத்தை பொறுத்தமட்டிலும் ஏசியாநெட் மற்றும் சூாியா.கைரலி போன்ற முன்னனி தொலைக்காட்சிகள் பல்வேறு முன்னனி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி தனக்குறிய இடங்களை தக்க வைத்திருக்கம் நிலையில் ஜி கேரளம் தொலைக்காட்சி புதிய பாிணாமத்தில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி கேரளாவின் முன்னனி தொலைக்காட்சிகளுக்கு
நெருக்கடியினை தரலாம்.ஜி கேரளம் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு டிஷ் டிவி.ஏா்டெல் டிவி.விடியோகான் போன்ற டிடிஎச்களில் ஒளிபரப்பை தொடங்கியுள்ளது குறிப்பிடதக்கது.விரைவில் வளைகுடா நாடுகளுக்கான ஜி கேரளம் மிடில் ஈஸ்ட் தொலைக்காட்சியும் தொடங்கப்படலாம்.
அலைவாிசை விபரங்கள்:
Satellite           Asiasat7@105.0E(C-Band)
Freq Rate        3820
Symbol Rate   27500
Polar               Vertical
System            Mpeg4/Dvb s2(8PSK)
Encryption      Pay/Conax
Fec                  3/4
தொகுப்பு சதீஸ் சாட் தமிழ் ஆங்கிலம் இணையதளம்

19/11/2018

தமிழகத்தில் புதிய யோகா ஆன்மீக தொலைக்காட்சி ஆஸ்தா தமிழ் ஒளிபரப்பு இன்டல்சாட்20யில் உதயம்

நண்பா்களே இந்தியாவின் மிக முன்னனி யோகா மற்றும் ஆன்மிக தொடா்பான நிகழ்ச்சிகளை வழங்கும் ஆஸ்தா ஹிந்தி தொலைக்காட்சி நிறுவனம் தென்னிந்தியாவில் முதன் முறையாக தமிழ் மொழியில் ஆஸ்தா தொலைக்காட்சியினை தொடங்கியுள்ளனா்.ஆஸ்தா தொலைக்காட்சியினை நிா்வகித்து வரும் ஆச்சார்யா பாலகிருஷ்ன இப்புதிய தமிழ் மொழி தொலைக்காட்சியினை தமிழகத்தில் தொடங்கியுள்ளனா்.யோகி பாபா ராம் குருதேவ் அவா்களின் யோகா மற்றும் ஆன்மீக சொற்பொழிவுகளை தொகுத்து வழங்ககூடிய தொலைக்காட்சியாக ஆஸ்தா தொலைக்காட்சி இந்தியா
மற்றும் உலக நாடுளில் ஒளிபரப்பாகி வருகிறது.ஆஸ்தா தொலைக்காட்சியின் கீழ் நான்கு தொலைக்காட்சிகள் செயல்பட்டு வருகிறது.ஆஸ்தா தமிழ் தொலைக்காட்சியின் அலைவாிசை சிக்னலை பெற குறைந்தபட்சம் 6 முதல் 12 அடி வரையிலான சி பேன்டு டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்தினால் போதுமானது.இலவச தொலைக்காட்சியாக ஆஸ்தா தமிழ் தொலைக்காட்சி இன்டல்சாட்20 செயற்கைகோளில் சோதனை ஒளிபரப்பின் அடிப்படையில் ஒளிஉலா வந்து கொண்டிருக்கிறது.விரைவில் 24 மணி நேர நிகழ்ச்சிகளுக்கான ஒளிபரப்பு ஆஸ்தா தமிழ் தொலைக்காட்சி தொடங்கும்.மேலும் தமிழகத்தில் அனைத்து கேபிள்டிவி மற்றும் கட்டண டிடிஉஎச்யில் ஒளிபரப்பை தொடங்கும்.
அலைவாிசை விபரங்கள்;
Satellite            Intelsat20@68.5E
Freq Rate         3767
Symbol Rate    7200
Polar                Vertical
System             Mpeg4/Dvb s2(8PSK)
Encryption       FTA
Fec                   3/4

07/11/2018

ஜி தமிழ் ஹெச்டி ஒளிபரப்பு இன்டல்சாட்20 செயற்கைகோளில் புதிய அலைவாிசைக்கு மாற்றம்

நண்பா்களே இந்தியாவின் முன்னனி தொலைக்காட்சி நிறுவனமான ஜி எண்டா்டெய்மென்ட் தமிழகத்திற்கான புதிய ஹெச்டி பொழுது போக்கு தமிழ் தொலைக்காட்சியான ஜி தமிழ் ஹெச்டி  ஔிபரப்பினை தொடங்கியுள்ளது.கடந்த மாதத்தில் இப்புதிய ஹெச்டி தொலைக்காட்சி தமிழகத்தில் தொடங்குவதற்கான அனுமதியினை ஜி எண்டா்டெய்மென்ட் நிறுவனம் பெற்றிருந்தது.ஜிதமிழ் தொலைக்காட்சி இந்திய மற்றும் உலக 
தமிழ் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றதையடுத்து இப்புதிய ஹெச்டி தொலைக்காட்சியினை தொடங்கியுள்ளனா்.ஜி தமிழ் ஹெச்டி தொலைக்காட்சியின் உலகளவிய செயற்கைகோள் ஒளிபரப்பு ஜி நிறுவனத்தின் ஹெச்டி தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும் இன்டல்சாட்20 செயற்கைகோளில் தொடக்க சோதனை ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் தொடங்கப்படும் ஐந்தாவது தமிழ் பொழுது போக்கு ஹெச்டி தொலைக்காட்சி இதுவாகும்.கட்டண தொலைக்காட்சியாக ஒளிபரப்பாகிறது.விரைவில் ஜி தமிழ் ஹெச்டி தொலைக்காட்சியின் 24 மணி நேர ஒளிபரப்பு தொடங்கப்பட்டு தமிழகத்தின்
அனைத்து கேபிள் டிவி மற்றும் கட்டண டிடிஎச்யில் ஒளிபரப்பு தொடங்கப்படும்.தற்சமயம் தொடங்கியுள்ள ஜிதமிழ் ஹெச்டி தொலைக்காட்சியின் இன்டல்சாட்20 செயற்கைகோளின் அலைவாிசை சிக்னலை பெற குறைந்தபட்சம் 6 மற்றும் அதற்கு மேற்பட்ட சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்தலாம்.கடந்த மாதத்தில் நமது சதிஸ் சாட் தமிழ் மற்றும் ஆங்கில இணையதளத்தில் இப்புதிய ஹெச்டி தொலைக்காட்சிகள் விரைவில் தொடங்கப்படும் என தகவல் இடம் பெற்றிருந்தது குறிப்பிடதக்கது.
அலைவாிசை விபரங்கள்:
Satellite            Intelsat20@68.5E(C-Band)
Freq Rate         3974
Symbol Rate    22500
Polar               Vertical
System            HD.Mpeg4/Dvb s2(8PSK)
Encryption      Pay/Conex
Fec                  3/4

04/11/2018

வானவில் (VANAAVIL TV) தமிழ் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு இன்சாட்4எ மிண்டும் தொடக்கம்

நண்பர்களே தமிழகத்தில் கடந்த வருடத்தில் பெயர் மாற்றம் செய்த தமிழ் தொலைக்காட்சியான வானவில் டிவியின் உலகளாவிய செயற்கைகோள் ஒளிபரப்பு மிண்டும் புதிதாக இன்சாட்4எ செயற்கைகோளில்  புதிய அலைவரைிசையில் உதயமாகியுள்ளது.
வானவில் டிவியின் 24 மணி நேர நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டு தமிழகம் முழுவதும் ஒளிபரப்பாகி வருகிறது.திரைப்படம்.நாடகம் மற்றும் பல வித்தியாசமான கலை நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றனர்.தற்சமயம் மாற்றம் செய்யப்பட்டுள்ள புதிய அலைவரைிசையின் சிக்னல் 6 முதல் 12 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவில் கிடைக்கிறது.
கிடைக்கிறது.முன்பு பயன்படுத்தி வந்த செட் டாப் பாக்ஸ்யில் அலைவரிசை யினை மாற்றம் செய்து வானவில் டிவியின் நிகழ்ச்சிகளை காணலாம்.இலவச ஒளிபரப்பாக இன்சாட்4எ செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது.கடந்த சில மாதங்களாக இன்டியா சிக்னல் டெலிஸ்பாட் ஒளிபரப்பு முனையத்தின் முலம் நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழகத்தில் ஒளிபரப்பாகி வந்தது.
அலைவரிசை விபரங்கள்:
Satellite              INSAT4A@83.0E(C-Band)
Freq Rate           3925
Symbol Rate      28500
Polar                  Horizontal
Modulation        Mpeg4/Dvb s(8PSK)
Mode                 FTA
Fec                    3/4