சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

18/05/2014

சைனா சிசி டிவி 10 தொலைக்காட்சியில் நேஷனல் ஜியோ கோல்ட் நிகழ்ச்சிகள்

நண்பர்களே சீனா நாட்டின் அரசு குழுமத் தொலைக்காட்சியான சிசி டிவி 10 டிவியில் நேஷனல் ஜியோ கோல்ட் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் மற்றும்
அறிவியல் சார்ந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றனர்.இத்தொலைக்காட்சியை பற்றி சொன்னால் முற்றிலும் இலவச தொலைக்காட்சியாக சீனா நாட்டு செயற்கைகோளான சைனாசாட்6எயில்@115.0E ஒளிபரப்பாகிறது.சீனா நாட்டின்
கலச்சார பாரம்பாியம் மற்றும் சைனா பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பாகிறது.மிக எளிதான செட்டாப் பாக்ஸ் MPEG2யில் இத்தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளை பார்க்கலாம்.ஆனால் தொலைக்காட்சியின் ஆடியோ மட்டும் சீனா மொழியில் கிடைக்கிறது.
அலைவரிசை விபரங்கள்:
Freq Rate             3840
Symol Rate           27500
Polar                    Horizontal
Modulation           Mpeg2/dvb s
Mode                   Fta

17/05/2014

சேனல் யுஎப்எக்ஸ்(CHANNEL UFX)மியூசிக் தொலைக்காட்சி இன்டல்சாட்17யில் மீண்டும் ஒளிபரப்பை தொடங்கியது

நண்பர்களே தமிழ் மற்றும் தெலுங்கு மலையாளம் கன்னடா மொழி பாடல்களை ஒளிபரப்பும் மியூசிக் தொலைக்காட்சியான சேனல் யுஎப்எக்ஸ் மீண்டு்ம் இன்டல்சாட்17யில் பழைய அலைவரிசையான(4015) ஒளிபரப்பை
தொடங்கியுள்ளது.இத்தொலைக்காட்சி கடந்த சில முன்பு மாதங்களுக்கு இடைநிறுத்தம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடதக்க செய்தியாகும்.
அலைவரிசை விபரங்கள்:
Freq Rate       4015
Symol Rate     30000
Polar               Vertical
Modulation      Mpeg4/dvb s2
Mode              Fta

11/05/2014

கேபிசி நியூஸ் (KBC TV) சோதனை ஒளிபரப்பு இன்சாட்4எ@83.0Eயில் தொடக்கம்

நண்பர்களே கேபிசி நியூஸ் பஞ்சாபி புதிய தொலைக்காட்சி இந்தியாவின் இன்சாட்4எ  செயற்கைகோளில் ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.இத்தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் என்று பார்த்தால்
 பஞ்சாபி பாடல்கள் ஒளிபரப்பாகிறது மேலும் பஞ்சாப் மாநிலத்தின் நிகழ்வுகளை அவவ்பொழுது செய்தி தொடர்களாக கேபிசி நியூஸ் தொலைக்காட்சி ஒளிபரப்புகிறது. கேபிசி நியூஸ் மிக எளிதான MPEG4/DVB S தொழில் நுட்பத்தில் இலவசமாக  ஒளிபரப்பாகிறது.
அலைவரிசை விபரங்கள்:
Freq Rate            3868
Symol Rate          3000
Polar                   Horizontal
Modulation         Mpeg4/dvb s2
Mode                 Fta

05/05/2014

சக்தி டிவி(SHAKTHI TV) தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பு டிஷ்டிவி லங்காவில் தொடக்கம்

நண்பர்களே மகி்ழ்ச்சியான செய்தி இலங்கை தமிழ் மக்களின் மிக அபிமான தமிழ் தொலைக்காட்சியான சக்தி டிவி தனது ஒளிபரப்பை லங்காவில் தற்சமயம் புதிதாக தொடங்கப்பட்ட டிடிஎச் சேவையான டிஷ்டிவி லங்காவில்
பாிசார்ந்த ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.தற்சமயம் இலவச ஒளிபரப்பாக ஒளிபரப்பாகும் சக்தி டிவி எவ்வித நேரத்திலும் இலவச ஒளிபரப்பு நிறுத்தப்படலாம்.சக்தி டிவி தொடங்கப்பட்டிருப்பது SES7@95.0E செயற்கைகோளாகும்.
கடந்த வருடத்தில் இலங்கையின் டயலாக் டிடிஎச் சேவையில் சக்தி டிவி பரிசார்ந்த ஒளிபரப்பை தொடங்கியது குறிப்பிடதக்க விடையமாகும்.சக்தி டிவி மஹாராஜா தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனத்தின் அங்க தொலைக்காட்சியாகும்.
அலைவரிசை விபரங்கள்:
Freq Rate                12170
Symol Rate             40700
Polar                       Horizontal
Modulation              Mpeg2/dvb s
Mode                      Fta 

03/05/2014

ஜி நுங்(ZEE NUNG TV)புதிய பாலிவுட் தொலைக்காட்சியை தாய்லாந்தில் தொடங்கியது ஜி மிடியா

நண்பர்களே இந்தியாவின் மிக பெரிய தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனமான ஜி மிடியா எண்டர்டெய்மென்ட் தற்சமயம் கிழக்காசிய நாடுகளில் தங்களின் தொலைக்காட்சி ஒளிபரப்பை விரிவுபடுத்தியுள்ளனர்.

02/05/2014

சோனி மேக்ஸ் 2(SONY MAX 2)புதிய திரைப்பட தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடக்கம் இன்டல்சாட்20@68.5Eயில்

நண்பர்களே வடஇந்தியாவின் மிக முன்னனி பொழுது போக்கு தொலைக்காட்சிகளை ஒளிபரப்பும் நிறுவனமான சோனி குழுமத்தில் இருந்து மேலும் ஒரு புதிய திரைப்பட தொலைக்காட்சி சோனி மேக்ஸ்2 என்ற பெயரில் உதயமாகியுள்ளது.
இப்புதிய தொலைக்காட்சியின் சோதனை ஒளிபரப்பு சோனி தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும் அலைவரிசையில் கட்டண தொலைக்காட்சியாக தொடங்கப்பட்டுள்ளது.சோனி நிறுவனத்தில் மூவிஸ் தொலைக்காட்சியாக சோனி மேக்ஸ் ஒளிபரப்பாகி வந்தது.தற்சமயம் புதிதாக தொடங்கப்பட்டுள்ள சோனி மேக்ஸ் 2 தொலைக்காட்சியில் பழைய புதிய ஹிந்தி திரைப்படங்கள் மிக வித்தியாசமாக ஒளிபரப்பாகவுள்ளது.
சோனி மேக்ஸ் தொலைக்காட்சியில் ஐபில் தொடர் ஒளிபரப்பாகும் பொழுது திரைப்பட ஒளிபரப்பு இடைநிருத்தம் எற்படுவதன் காரணமாக இப்புதிய தொலைக்காட்சியை தொடங்கியிருக்கலாம்.
அலைவரிசை விபரங்கள்:
Satellite             Is20@68.5E
Freq Rate         3901
Symol Rate       13400
Polar                 Horizontal
Modulation       Mpeg4/dvb s
Mode               pay

01/05/2014

சினி திரை(CINI THIRAI TV)லங்கா தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பு டயலாக் டிடிஎச்யில் தொடக்கம்

நண்பர்களே மகிழ்ச்சியான செய்தி இலங்கையின் பிரதான தொலைக்காட்சிகளை ஒளிபரப்பு டிடிஎச் சேவையான டயலாக் டிடிஎச்யில் புதிய தமிழ் திரைப்பட தொலைக்காட்சி சினி திரை என்ற பெயரில் பரிசார்ந்த ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.
இருப்பினும் டயலாக் டிடிஎச்யில் கட்டண தொலைக்காட்சியாக உலா வரும் இதன் நிகழ்ச்சிகள் என்று பார்த்தால் தமிழ்த்திரைப்படங்கள் மற்றும் பாடல்கள் மட்டுமே.TEST 4(சினி திரை) என்ற தொலைக்காட்சி வரிசையில் இடம் பெற்றுள்ளது.சினி திரை டிவி டயலாக் டிடிஎச்யில் தொடங்கப்படு்ம் நான்கவாது லங்கா தமிழ் தொலைக்காட்சியாகும்.இதன் ஒளிபரப்பை Intelsat12 செயற்கைகோளில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடதக்க செய்தியாகும்.