சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

29/01/2016

புதிய தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பு இன்டல்சாட்17யில் பாடல்களுடன் தொடக்கம்

நண்பர்களே தமிழகத்தில் புதிய தமிழ் தொலைக்காட்சி ஆரஞ்சு டிவி என்ற பெயரில் இன்டல்சாட்17யில் உதயமாகியுள்ளது.தொலைக்காட்சியின் தற்சமய தொடக்க சோதனை ஒளிபரப்பு தமிழ் திரைப்பாடல்களுடன் ஒளி 
உலா வருகிறது.ஆரஞ்சு டிவி பெங்காளி மொழி தொலைக்காட்சியின் செயற்கைகோள் ஒளிபரப்பு உரிமத்தில் தொடக்கப்பட்டுள்ளது.கடந்த சில லருடங்களாக இத்தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்தில் தெலுங்கு மொழி தொலைக்காட்சி ஒளிபரப்பாகி வந்தது.விரையில் தொலைக்காட்சிக்கான 
தமிழ் பெயருடன்  24 மணி ஒளிபரப்பு தொடக்கலாம்.தொலைக்காட்சிய்ன அலைவரிசை சிக்னலை பெற குறைந்தபட்சம் 8 முதல் 16 அடி சிபேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.MPEG4/DVB S2 தொழில்நுட்பம் பொருந்திய செட் டாப் பாக்யை பயன்படுத்தி இப்புதிய தமிழ் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளை காணலாம்.
அலைவரிசை விபரங்கள்
Satellite            Intelsat17@66.0E(C-Band)
Freq Rate         3877
Symbol Rate    14300
Polar                Horizontal
Modulation      Mpeg4/Dvb s2
Mode               Fta  

23/01/2016

டிடி பிரி டிஷ் டிடிஎச் தொலைக்காட்சிகள் இன்சாட்4பி செயற்கைகோளில் இருந்து ஜிசாட்15க்கு பிப்ரவரி 1 முதல் மாற்றம்

நண்பர்களே இந்தியாவின் அனைத்து தரப்பு மக்களும் மாதந்திர கட்டண இன்றி இந்திய மொழிவாரியான தொலைக்காட்சிகளை இலவசமாக காண இந்திய அரசின் பிரசார் பாரதி தொடங்கிய டிடி பிரி டிஷ் டிடிஎச் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு தற்சமயம் ஒளிபரப்பாகி வந்த இன்சாட்4பி செயற்கைகோளில் இருந்து கடந்த வருடத்தில் விண்ணில் ஏவப்பட்ட புதிய செயற்கைகோளான ஜிசாட்15க்கு வரும் பிப்ரவரி 1 திகதி முதல் ஒளிபரப்பு மாற்றம் 
செய்யப்படவுள்ளது.2003 ஆண்டில் தொடங்கிய டிடிபிரி டிஷ் டிடிஎச்யில் மொத்தம் 60 மேற்பட்ட அரசு மற்றும் தனியார் தொலைக்காட்சிகளும் ஒளிபரப்பை வழங்கி வருகிறது.கடந்த சில வருடங்களாக பயன்படுத்தி வந்த செட் டாப் பாக்ஸ்யில் ரீடியூன் செய்து தொலைக்காட்சிகளை காணலாம்.இனி வரக்கூடிய காலங்களில் மேலும் புதிய தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு இப்புதிய செயற்கைகோளில் தொடங்கலாம்.
புதிய அலைவரிசைகளின் விபரங்கள்:
Satellite               GSAT15@93.0E(KU-Band)
Freq Rate            11090,11170,11470,11510,11550
Symbol Rate       29500
Polar                   Vertical
Modulation         Mpeg2/Dvb s
Mode                  FTA

17/01/2016

எம்எஸ்எம் நிறுவனத்தின் புதிய விளையாட்டு தொலைக்காட்சி சோனி ஈஎஸ்பிஎன்(SONY ESPN HD) ஹெச்டி ஒளிபரப்பு இன்டல்சாட்17 மற்றும் இன்டல்சாட்20யில் தொடக்கம்

நண்பர்களே இந்தியாவின் முன்னனி பொழுதுபோக்கு தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனமான எம்எஸ்எம் புதிய விளையாட்டு தொலைக்காட்சி ஒன்றை சோனி ஈஎஸ்பிஎன் என்ற பெயரில் தொடங்கியுள்ளது.இத்தொலைக்காட்சிகள் அதிநவின தொழில்நுட்ப வடிவமான ஹெச்டி மற்றும் எஸ்டி வடிவங்களில் தொடங்கப்படுகிறது.சோனி ஈஎஸ்பிஎன் தொலைக்காட்சிக்கான செயற்கைகோள் சோதனை ஒளிபரப்பு  அந்நிறுவனத்தின் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும் இன்டல்சாட்20 மற்றும் இன்டல்சாட்17யில் தொடங்கப்பட்டுள்ளது.சோனி கிக்ஸ் விளையாட்டு தொலைக்காட்சியின் பெயர் மாற்றம் செய்யப்பட்டு இத்தொலைக்காட்சி தொடங்கப்படுகிறது.இந்தியாவில் முன்னனி விளையாட்டு தொலைக்காட்சிகளாக கடந்த பல வருடங்களாக வலம் வந்த ஈஎஸ்பிஎன் 
தொலைக்காட்சி சோனி நிறுவனத்துடன் இணைந்து விளையாட்டு போட்டிகளை இந்தியாவில் ஒளிபரப்ப உள்ளது.சோனி சிக்ஸ் தொலைக்காட்சி எம்எஸ்எம் நிறுவனத்தின் முதல் விளையாட்டு தொலைக்காட்சியாகும்.கிரிக்கெட்.புட்பால்.மற்றும் பல விளையாட்டு தொடர்களை நேரடி ஒளிபரப்பு  சோனி ஈஎஸ்பிஎன் செய்ய உள்ளது.ஸ்டார் நிறுவன தொலைக்காட்சியுடன் இணைந்து ஈஎஸ்பிஎன் டிவி விளையாட்டு தொடர்களை பல வருடங்களாக இந்தியாவில் ஒளிபரப்பி வந்தது குறிப்பிடதக்கது.கட்டண தொலைக்காட்சியாக சோனி ஈஎஸ்பிஎன் எஸ்டி இன்டல்சாட்20யிலும் மற்றும் சோனி ஈஎஸ்பிஎன் ஹெச்டி இன்டல்சாட்17யிலும்தொடங்கப்பட்டுள்ளது.
அலைவரிசை விபரங்கள்:
CH                  SONY ESPN HD                                         
Satellite           Intelsat17@66.0E(C-BAND)                       
Freq Rate        3845                                                               
Symbol Rate   30000                                                             
Polar                Horizontal                                                    
Modulation      HD.Mpeg4/Dvb s2                                      
Mode               Pay                                  

CH                  SONY ESPN SD                                        
Satellite           Intelsat20@68..5E(C-BAND)                       
Freq Rate        3900                                                               
Symbol Rate   22222                                                             
Polar                Horizontal                                                    
Modulation      .Mpeg4/Dvb s2                                      
Mode               Pay                                        

15/01/2016

நேட் ஜியோ வைல்ட்.வார்னர் பிரதர்ஸ்.பாக்ஸ் தாய்.ஸ்டாா் வோல்ட் தொலைக்காட்சிகள் இலவச ஒளிபரப்பு தாய்காம்6யில்

நண்பர்களே தாய்லாந்து நாட்டின் முன்னனி டிடிஎச் ஒளிபரப்பு சேவை நிறுவனங்களான GMM மற்றும் CTH கட்டணதொலைக்காட்சிகள் இலவச ஒளிபரப்பாக தாய்லாந்து நாட்டின் செயற்கைகோளான தாய்காம்6யில்
ஒளிபரப்பாகிறது.அந்நாட்டின் CTH நிறுவன தொலைக்காட்களின் ஒளிபரப்பு உரிமத்தை GMM நிறுவனம் இணைந்து மேற்கொள்வதால் இலவச ஒளிபரப்பாக சில முன்னனி தொலைக்காட்சிகள் தொடங்கப்பட்டுள்ளது.தொலைக்காட்சிகளின் அலைவரிசை சிக்னலை பெற
குறைந்தபட்சம் 4 முதல் 6 அடி கேயூ டிஷ் ஆன்டெனாவை பயனபடுத்த வேண்டும்.இலவச ஒளிபரப்பு தற்காலிகத்தின் அடிப்படையில் தொடங்க்கப்பட்டுள்ளது.எவ்வித நாட்களிலும் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு கட்டண தொலைக்காட்சிகளாக மாற்றபடலாம்.
அலைவரிசை விபரங்கள்:
Satellite            THAICOM6@78.5E(KU-Band)
Freq Rate          12605
Symbol Rate     30000
Polar                  Horizontal
Modulation        Mpeg4/Dvb s2
Mode                 Fta

02/01/2016

ஷாலினி ப்ளஸ்(SHALINI PLUS TV) புதிய பெயருடன் இன்சாட்4எ செயற்கைகோளுக்கு ஒளிபரப்பு மாற்றம்

நண்பர்களே தமிழகத்தின் பொழுதுபோக்கு அங்கம் வகிக்கும் ஷாலினி தொலைக்காட்சி புதிய பெயராக ஷாலினி ப்ளஸ் ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இப்புதிய தொலைக்காட்சியின் உலகளாவிய செயற்கைகோள் ஒளிபரப்பு இன்டல்சாட்20@68.5 செயற்கைகோளில் இருந்து புதிய செயற்கைகோளான இன்சாட்4எ க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.ஷாலினி 
டிவியின் தற்சமய ஒளிபரப்பு  எம் கே நீயூஸ் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு உரிமத்தில் இப்புதிய ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது.கடந்த சில வருடங்களாக நொய்டாவின் என்எஸ்டிபிஎல் டெலிபாட் நிறுவனத்தின் முலம் இன்டல்சாட்20 தமிழகத்தில் ஒளிபரப்பாகி வந்தது.தற்சமயம் கேரளாவின் ஈசால் சியாம் டெலிஸ்பாட் நிறுவனத்தின் முலம் தொடங்க்ப்பட்டுள்ளது.இப்புதிய அலைவரிசையின் சிக்னல் 6 முதல் 12 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் ஆன்டெனா மற்றும் MPEG4/DVB S2 தொழில்நுட்ப செட் டாப் பாக்ஸ்  முலம் காணலாம். 
அலைவரிசை விபரங்கள்:
Satellite                 Insat4A@83.0E(C-Band)
Freq Rate              3805
Symbol Rate         28500
Polar                     Horizontal
Modulation           Mpeg4/Dvb s2
Mode                    Fta