சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

27/02/2015

ஆரா டிவி தொலைக்காட்சியின் ஒளிபரப்பு அலைவரிசை மாற்றம்

நண்பர்களே தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் இருந்து தொடங்கப்பட்ட தமிழ்  தொலைக்காட்சியான ஆராடிவியின் செயற்கைகோள் ஒளிபரப்பு புதிய அலைவரிசையில் தொடங்கப்பட்டுள்ளது.ஒரிசா மாநிலத்தின் மஞ்சரி 
டிவியின் செயற்கைகோள் ஒளிபரப்பு உரிமத்தில் தொடங்கப்பட்ட ஆரா டிவியின் ஒளிபரப்பு ஆசியாசாட்5 செயற்கைகோளில் ஒளிபரப்பாகிறது.கடந்த சில மாதங்களாக 3920 என்னும் அலைவரிசையில் ஒளிபரப்பாகி வந்தது குறிப்பிடதக்கது.
அலைவரிசை விபரங்கள்;
Satellite                   Asiasat5@100.5E
Freq Rate               3816
Symbol Rate           3625
Polar                       Horizontal
Modulation              Mpeg4/Dvb s2
Mode                      Fta

18/02/2015

வர்ணம் டிவி லங்கா தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பு டயலாக் டிடிஎச்யில் தொடக்கம்

நண்பர்களே இலங்கை நாட்டின் முன்னனி பொழுதுபோக்கு மற்றும் திரைப்பட தமிழ் தொலைக்காட்சியான வர்ணம் டிவியின் செயற்கைகோள் ஒளிபரப்பு முதன்முறையாக அந்நாட்டின் டயலாக் நிறுவனத்தின் டிடிஎச்யில் புதிதாக
தொடங்கியுள்ளனர்.கடந்த பல வருடங்களாக இலங்கையின் ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் ஒளிபரப்பை வர்ணம் டிவி வழங்கி வந்தது.டயலாக் டிடிஎச்யின் இலங்கை தமிழ் தொலைக்காட்சிகளின் வரிசையில் இது நான்காம்    
தொலைக்காட்சியாகும்.கட்டண தொலைக்காட்சியாக இன்டல்சாட்12 செயற்கைகோளில் ஒளிபரப்பாகிறது.மேலும் வர்ணம் டிவியி்ன் சிங்கள மொழி தொலைக்காட்சியான சியாத டிவியும் ஒளிபரப்பை தொடங்கியுள்ளன.
அலைவரிவை விபரங்கள்:
Satellite                      Intelsat12@45.0E
Freq Rate                   11591
Symbol Rate               28690
Polar                           Vertical
Modulation                  Mpeg2/Dvb s
Mode                          Pay

14/02/2015

ஸ்டார் விஜய் தமிழ் தொலைக்காட்சியில் உலககோப்பை கிரிக்கெட் 2015 நேரடி ஒளிபரப்பு

நண்பர்களே பாக்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தமிழ் பொழுதுபோக்கு தொலைக்காட்சியான ஸ்டார் விஜய்யில் முதன்முறையாக உலககோப்பை கிரிக்கெட் 2015 போட்டி தொடர்களை நேரடி ஒளிபரப்பு செய்கிறது.தமிழகத்தின் 
தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறையாக உலககோப்பை போட்டி தொடர்களை நேரடி ஒளிபரப்பு செய்யும் முதல் தமிழ் தொலைக்காட்சி விஜய்டிவியாகும்.தமிழகத்தின் மிக முன்னனி பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளில் ஒன்றாக விளங்குவதும் குறிப்பிடதக்கது.இருப்பினும் உலககோப்பை இருபோட்டிதொடர்களாக அமையப்பெற்றுள்ளதால் இப்புதிய முயற்ச்சியில் பாக்ஸ் நிறுவனம் இறங்கியுள்ளது.இதன் முலம் தொலைக்காட்சி பார்வையாளார்களின் விகித்தை அதிகரிகரிப்பதற்கான 
வாய்ப்புகளும் உள்ளன.சில முன்னனி போட்டி தொடர்களை தமிழ் வருணையிலும் வழங்கவுள்ளது.இதே போன்று பாக்ஸ் நிறுவனத்தின் மற்ற மாநில மொழி தொலைக்காட்சிகளிலும் போட்டி தொடர்கள் ஒளிபரப்பாவது குறிப்பிடதக்கது.கட்டண தொலைக்காட்சிகளாக தொடர்களை ஒளிபரப்புவது  குறிப்பிடதக்கது.ஸ்டார் விஜய் இன்டர்நேஷனல் தொலைக்காட்சியில் உலககோப்பை போட்டி தொடர்களை ஒளிபரப்பு செய்யப்படவில்லை.

11/02/2015

சத்தியம் செய்திகள் தொலைக்காட்சி புதிய ஒளிபரப்பு எபிஎஸ் 2 தொடக்கம்

நண்பர்களே தமிழகத்தின் முன்னனி தமிழ் செய்திகள் தொலைக்காட்சியான சத்தியம் டிவியின் ஒளிபரப்பு தற்சமயம் புதிய டிடிஎச் சேவையில் இலவச ஒளிபரப்பாக தொடங்கப்பட்டுள்ளது.எபிஎஸ் 2 செயற்கைகோளில் தொடங்கப்பட்ட இப்புதிய ஒளிபரப்பு சேவையில் கலைஞர் தொலைக்காட்சி மற்றும் வேந்தர் டிவி தொலைக்காட்சிகள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.சத்தியம் தொலைக்காட்சி MPEG4/DVB S செட்டபாக்ஸ்யில் காணலாம்.கேயூ பேண்ட் டிஷ் ஆன்டெனா முலம் அலைவரிசை சிக்னலை பெறலாம்.
அலைவரிசை விபரங்கள்
Satellite               ABS2@75.0E(ku-band)
Freq Rate            11736
Symbol Rate        44000
Polar                   Vertical
Modulation          Mpeg4/dvb s
Mode                  Fta

05/02/2015

நாப்டால் டிவி புதிய ஷாப்பிங் தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பு இன்டல்சாட்20@68.5 யில் தொடக்கம்

நண்பர்களே இந்தியாவின் மிக பெரிய ஷாப்பிங் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனமான நாப்டால் தமிழகத்தில் தங்களின் வியபாரத்தை மக்களிடையே மேம்படுத்தும் வகையில் அந்நிறுவனத்தின் சார்பாக 24 மணிநேர தமிழ் ஷாப்பிங் தொலைக்காட்சி நாப்டால் டிவி தமிழ் என்ற பெயரில் தொடங்கியுள்ளனர்.தொலைக்காட்சியின் தொடக்க சோதனை 
ஒளிபரப்பு இன்டல்சாட்20 செயற்கைகோளில் தொடங்கியுள்ளனர்.இந்நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வட மாநிலத்திற்கான 24மணி நேர நாப்டால் டிவி ஹிந்தியில் தொடங்கியிருந்தது குறிப்பிடதக்கது.தெலுங்கு மொழி தொலைக்காட்சியான எம் ஜி கே யின் ஒளிபரப்பு உரிமத்தில் ஒளிபரப்பை தொடங்கியுள்ளனர்.இதொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்தில் கடந்த சில வருடங்களாக ஆசிர்வாதம் தொலைக்காட்சியின் தெலுங்கு மொழி கிருஷ்டியன் தொலைக்காடசி ஒளிபரப்பாகி வந்தது.
அலைவரிசை விபரங்கள்:
Satellite                     Intelsat20@68.5E
Freq Rate                  3790
Symbol Rate              7200
Polar                          Horizontal
Modulation                 Mpeg4/dvb s2
Mode                         Fta

03/02/2015

ஆப்கான்1எ@48.0E செயற்கைகோள் தொலைக்காட்சிகளின் அலைவரிசைகள் திண்டுக்கலில் பிடிக்கப்பட்டுள்ளது.

நண்பர்களே ஆப்கான் நாட்டின் தகவல் தொலைதொடர்பு மற்றும் தொலைக்காட்சிகளின் பயன்பாட்டிற்காக கடந்த வருடத்தில் விண்ணில் செலுத்தப்பட்ட ஆப்கான்1எ@48.0E செயற்கைகோளின் அலைவரிசைகளை முதன்முறையாக தென்தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் பிடிக்கப்பட்டுள்ளது.இச்செயற்கைகோளின் அலைவரிசைகளின் சிக்னல் மிக குறைந்த அளவுகளில் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் 
கிடைக்கிறது.மேலும் அலைவரிசைகளை பெற குறைந்தபட்சம் 4 அடி முதல் அல்லது அதற்கு மேற்பட்ட அளவுகளுடைய கேயூ டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.இச்செயற்கைகோளில் ஒளிபரப்பாகும் இலவச தொலைக்காட்சிகளின் மொத்த எண்ணிக்கை 23 ஆகும்.இவற்றில் ஆப்கான் நாட்டின் அரசு மற்றும் தனியார் தொலைக்காட்சிகளும் ஒளிபரப்பை வழங்குகிறது.தொலைக்காட்சிகளை காண MPEG2/DVB S1 தொழில்நுட்பம் கொண்ட செட் டாப் பாக்ஸ்யை பயன்படுத்தலாம்.இவற்றில் இரு அலைவரிசைகள் (11235.11291) மட்டும் ஒளிபரப்பாகிறது என்பது குறிப்பிடதக்கது.தமிழகத்தின் மேற்கு மற்றும் வட மாவட்டங்களில் அதிக அளவு சி்க்னல் கிடைக்கிறது.4அடி(ஆப்செட்) டிஷ் ஆன்டெனாகளில்
உங்கள் பார்வைக்கு நமது சதீஸ்சாட் தமிழ் தளத்தின் சார்பாக சில உதவி பாடங்கள்:
அலைவரிசை விபரங்கள்
Satellite            Afgansat1A@48.0E
Freq Rate         11235,11291
Symbol Rate     27500
Polar                Vertical
Modulation       Mpeg2/Dvb s1
Mode               Fta