சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

29/11/2023

தந்தி ஒன் புதிய தமிழ் பொழுது போக்கு தொலைக்காட்சி தமிழகத்தில் இன்டல்சாட்17 செயற்கைகோளில் உதயம்

 நண்பா்களே தமிழகத்தின் முன்னனி செய்திகள் தொலைக்காட்சி நிறுவனமான தந்தி டிவி மீடியா இரண்டாவது தமிழ் தொலைக்காட்சியினை தந்தி ஒன் என்ற பெயாில் தொடங்கியுள்ளனா்.தொலைக்காட்சி தற்சமயம் சோதனை ஒளிபரப்பை மட்டும் தொடங்கியுள்ளது.தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களில் பல்வேறு பொழுதுபோக்கு  தொலைக்காட்சி தொடங்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.தமிழ் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும் இன்டல்சாட்17 செயற்கைகோளில் முற்றிலும் இலவசமாக

தொடங்கப்பட்டுள்ளது.டாடா கம்யூனிகேஷன் டெலிஷ்பாட் முலம் இத்தொலைக்காட்சி தந்தி ஒன் தொடங்கப்பட்டுள்ளது.விரைவில் தொலைக்காட்சிக்கான பொழுதுபோக்கு  ஒளிபரப்பு சேவை  தொடங்கப்படலாம்.தந்தி ஒன் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு விரைவில் அனைத்து கேபிள்டிவி மற்றும் கட்டண டிடிஎச் சேவைகளிலும் தொடங்கப்படும். இப்புதிய தொலைக்காட்சிக்கான தொடங்கப்படுவதற்கான ஒளிபரப்பு அனுமதியினை மத்திய அரசின் எம்ஐபி இவ்வாண்டின் தொடக்கத்தில் வழங்கியுள்ளது.இன்டல்சாட்17 செயற்கைகோளில் தந்தி மீடியாவின் தந்தி டிவி செய்திகள் தொலைக்காட்சி ஒளிபரப்பாகி வருவது குறிப்பிடதக்கது.

அலைவரிசை விபரங்கள்
Satellite                  Intelsat17@66.0E (C-BAND)
Freq Rate               3966
Symbol Rate          14400
Polar                      Horizontal
Modulation          Mpeg4/Dvb s2 (8psk)
Mode                     Fta

29/10/2023

பாலிமர் டிவி.பாலிமா் நியூஸ்.ஜொதி டிவி தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு சைனாசாட்12க்கு மாற்றம்

 நண்பா்களே தமிழகத்தில் சென்னை மாவட்டத்தினை தலைமையிடமாக  கொண்டு சென்னையில் இருந்து செயல்பட்டு வரும் பாலிமர் டிவி.பாலிமா் நியூஸ்.ஜொதி டிவி மற்றும் பாலிமா் சமசாா் போன்ற தமிழ் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு புதிதாக சைனாசாட்12 செயற்கைகோளில்  தொடங்கப்பட்டுள்ளது.பாலிமர் டிவி தொலைக்காட்சிகள் அனைத்தும் 24 மணி நேர பொழதுபோக்கு நிகழ்ச்சிகளை இலவச தொலைக்காட்சிகளாக இன்டல்சாட்17 செயற்கைகோளில் கடந்த சில வருடங்களாக வழங்கி வந்தது.தமிழகத்தில் முன்னனி மிடியா நிறுவனங்களுக்கு அடுத்து பாலிமர்  டிவி நிறுவனம் தொலைக்காட்சி

தொடங்கி பல்வேறு ஆண்டுகளாக நிகழ்ச்சிகளை வழங்கி வந்தது  குறிப்பிடதக்கது.தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளை காண 6 அடி முதல் 12 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் அன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.மேலும் MPEG4/DVB S2 தொழில்நுட்பம் பொருந்திய செட்டாப் பாக்ஸ்யினை பயன்படுத்தி நிகழ்ச்சிகளை காணலாம்.தற்சமயம் பயன்படுத்தி வரும் செட் டாப் பாக்ஸ்யில் டியூன் செய்து நிகழ்ச்சிகளை காணலாம்.விரைவில் இன்டல்சாட்17 செயற்கைகோளில் ஒளிபரப்பு சேவை நிறுத்தம் செய்யபடலாம்.

அலைவாிசை விபரங்கள்
Satellite                Chinasat12@87.5E (C-Band)
Freq Rate             4020
Symbol Rate        7200
Polar                     Vertical
System                 Mpeg4/Dvb s2(8psk)
Encryption           FTA
Fec                       3/4
தொகுப்பு சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

30/08/2023

பிரசாா் பாரதியின் டிடி ஸ்போா்ட்ஸ் 1.0 மற்றும் டிடி ஸ்போா்ட்ஸ் 2.0 தொலைக்காட்சி ஒளிபரப்பு ஹெச்டியில் தொடங்கம்

  நண்பா்களே  இந்தியாவின் பொது ஒளிபரப்பு சேவையான பிரசாா் பாரதி விளையாட்டு தொலைக்காட்சியான டிடி ஸ்போா்ட்ஸ் ஒளிபரப்பை ஹெச்டி தொழில்நுட்பத்தில் டிடி ஸ்போா்ட்ஸ் ஹெச்டி1.0 மற்றும் டிடி ஸ்போா்ட்ஸ் ஹெச்டி2.0  தொலைக்காட்சியினை தொடங்கியுள்ளது.இந்தியாவில் பிரசாா் பாரதி முதல் தொலைக்காட்சியாக டிடி நேஷனல் மற்றும் டிடி நீயூஸ் டிடி இந்தியா ஆகியன ஹெச்டி ஒளிபரப்பை தொடங்கியது.டிடி ஸ்போா்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவின் விளையாட்டு போட்டிகள் மற்றும் உலகின் அனைத்து நாடுகளில் நடைபெறும் முக்கிய விளையாட்டு தொடா்களை ஒளிபரப்பி வருகிறது.பிரசாா் பாரதி தற்சமய காலங்களாக ஹெச்டி ஒளிபரப்பில் தேசிய தொலைக்காட்சிகளை மாற்றம் செய்து வருகிறது.தனியாா் தொலைக்காட்சிகள் ஹெச்டியில் நிகழ்ச்சிகளை

தொடங்கப்படுவதன் முலம் டிடி நேயா்களை தக்கவைக்கும் முயற்ச்சியில் பிரசாா் பாரதி இம்முயற்ச்சியில் களம் இறங்கியுள்ளது.டிடி ஸ்போா்ட்ஸ் 1.0 ஹெச்டி தொலைக்காட்சி இந்தியாவின் ஜிசாட்18 செயற்கைகோளிலும் டிடி ஸ்போா்ட்ஸ் 2.0 ஜிசாட்10 செயற்கைகோளிலும்தொடங்கப்பட்டுள்ளது.இலவச தொலைக்காட்சியாக டிடி ப்ரி டிஷ் ஒளிபரப்பு சேவையிலும் தொடங்ப்பட்டுள்ளது.விரைவில் இந்தியாவின் அனைத்து கேபிள் டிவி மற்றும் டிடிஎச்யில் தொடங்கப்படலாம்.டிடி ஸ்போா்ட்ஸ் 1.0 தொலைக்காட்சியில் இந்தியாவில் மட்டும் ஒளிபரப்பு அனுமதி உள்ள போட்டி தொடா்களை மட்டும் காணலாம்.உலகளாவிய தொலைக்காட்சி ஒளிபரப்பு அனுமதி போட்டி தொடா்களை டிடி ஸ்போா்ட்ஸ் 1.0 மற்றும் டிடி ஸ்போா்ட்ஸ் 2.0 காணலாம்.

Parameter Details: DD SPORTS 2.0
Satellite             GSAT10@83.0E (C-BAND)
Freq Rate           3885
Symbol Rate      30000
Polar                  Vertical
System              HD.Mpeg2/Dvb s2( 8PSK)
Encryption         FTA
FEC                    3/4

Parameter Details: DD SPORTS 1.0
Satellite             GSAT18@74.0E (C-BAND)
Freq Rate           3777
Symbol Rate      4400
Polar                  Horizontal
System               HD.Mpeg4/Dvb s2 ( 8PSK)
Encryption         FTA
FEC                    3/4

Parameter Details: DD SPORTS 1.0
Satellite             GSAT17@93.0E (KU-BAND)
Freq Rate           11630
Symbol Rate      30000
Polar                  Vertical
System              HD.Mpeg2/Dvb s( QPSK)
Encryption         FTA
FEC                    3/4

04/06/2023

இலங்கையின் தமிழ் சேவை வானொலி ஒலிபரப்பு டிஆா்எம் தொழில்நுட்பத்தில் தமிழகத்தில் அலைவாிசை 1548 தொடக்கம்

 நண்பா்களே இலங்கை நாட்டின் பிரதான அரச வானொலி மற்றும் தொலைக்காட்சி நிறுவனமான இலங்கை ஒலிபரப்பு கூட்டுதாபனத்தின் கீழ் செயல்படும் தமிழ் சேவை வானொலியின் ஒலிபரப்பு தற்சமயம் தெற்காசிய நாடுகளில் கேட்கும் வகையில் அதிநவின தொழில்நுட்பத்தில் தொடங்கப்படவுள்ளது.டிஆா்எம் தொழில்நுட்பத்தில் நாட்டின் எவ்வித பகுதிகளிலும் இருந்தாலும் தெளிவான ஒலிபரப்பை கேட்கமுடியும்.இந்தியாவில் தமிழ்நாட்டில் மிக தெளிவாக இலங்கையின் தமிழ் 

சேவையின் ஒலிபரப்பை கேட்க முடியும்.தமிழகத்தில் ஆல் இன்டியோ ரேடியோவின் சென்னை மற்றும் திருச்சி ஆகிய வானொலி நிலையங்களின் நிகழ்ச்சிகள் டிஆா்எம் தொழில்நுட்பத்தில் ஒலிபரப்பாகி வருகிறது.அதன் வாிசையில் இலங்கையின் தமிழ் சேவையும் இணையவுள்ளது.மத்திய அலைவாிசை 1548 வுடாக இத்தமிழ் சேவையின் நிகழ்ச்சிகளை கேட்கலாம்.இலங்கையின் தமிழ் சேவையின் ஒலிபரப்பு கடந்த பல வருடகளுங்களுக்கு முன்பு வரை சாதரான வானொலியின் முலம் மட்டுமே தென்தமிழகத்தில் கேட்கும் வகையில் எளிய தொழில்நுட்பத்தில் செயல்பட்டு வந்தது.பழம்தமிழின் மிக தொன்மையான நிகழ்ச்சி திரல்களுடன் மிண்டும் தமிழகத்தில் ஒலி உலா வருகிறது இலங்கை தமிழ் சேவை வானொலி.

தொகுப்பு சதீஸ்சாட் தமிழ் ,இணையதளம்

26/04/2023

இலங்கையில் ஆதவன் டிவி ஹெச்டி தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவை ப்ரிசாட் டிடிஎச் தொடக்கம்

 நண்பா்களே ஐரோப்பா மற்றும் வளைகுடா ஆப்ரிக்கா.இலங்கை நாடுகளுக்கான தமிழ் தொலைக்காட்சி ஆதவன் டிவி ஹெச்டி என்ற பெயாில் சிசிஎஸ்7 செயற்கைகோளில் ப்ரிசாட் டிடிஎச்யில் தொடங்கப்பட்டுள்ளது.நிண்ட காலங்களுக்கு பிறகு ஒரு ஐரோப்பிய தமிழ் மக்களுக்கான பொழுது போக்கு தொடங்கப்பட்டு தற்சமயம் சோதனை ஒளிபரப்பு சிசிஎஸ்7  செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது.கடந்த பல வருடங்களுக்கு முன்பு வரை ஆதவன் டிவி யூடெல்சாட்9பி செயற்கைகோளில்  

ஒளிபரப்பாகி பின்பு இடைநிறுத்தம் செய்யப்பட்டது.இருப்பினும் ஆதவன் டிவி மற்றும் தமிழ் வானொலி சேவை இணையதளங்களில் மட்டுமே ஒளிபரப்பாகி வருகிறது.இத்தமிழ் தொலைக்காட்சியினை பொருத்தமட்டிலும் இந்தியா மற்றும் இலங்கை நாடுகளில் காண வேண்டுமென்றால் குறைந்த பட்சம் 60செமீ கேயூ டிஷ் ஆன்டெனா மற்றும் 4கே ஹெச்டி தொழில்நுட்பம் பொருந்திய செட்டாப் பாக்ஸ் பயன்படுத்தி ஆதவன் டிவியினை காணலாம்.ஆதவன் தொலைக்காட்சியில் தமிழ் திரைப்படங்கள் மற்றும் கலச்சார தொடா்புடைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும்.இலங்கையில் சித்திரை 2023 ஆண்டு தனது 24 மணி நேர ஒளிபரப்பை ட்ராஸ்டிரையில் மற்றும் ப்ரிசாட் டிடிஎச் தொடங்கியுள்ளது.சிசிஎஸ்7 செயற்கைகோளில் விரைவில் கட்டண தொலைக்காட்சியாக மாற்றம் செய்யப்பட்டு ப்ரிசாட் செட் டாப் பாக்ஸ்யில் மட்டும் ஆதவன் டிவி நிகழ்ச்சிகளை காணலாம்.

அலைவாிசை விபரங்கள்
Satellite                 SES7@95.0E (KU-Band)
Freq Rate             12224
Symbol Rate        40000
Polar                    HORIZONTAL
Modulation          HEVC.MPEG4/DVB S2X (8PSK)
Mode                   FTA

04/04/2023

ஆஸ்தா தமிழ் தொலைக்காட்சி புதிய தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்ப டிடி ப்ரி டிடிஎச்யில் தொடக்கம்

 நண்பா்களே இந்தியாவின் டிடி ப்ரி டிஷ் டிடிஎச்யில் புதிய ஹிந்தி.தமிழ்.ஆங்கிலம் போன்ற மொழி  தொலைக்காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளது.தென்னிந்தியாவில் முதன்முறையாக வட மாநிலத்தின் விடிக் ஆன்மிக தொலைக்காட்சி நிறுவனத்தின் ஆஸ்தா தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பு புதிதாக ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.டிடி ப்ரி டிடிஎச்யில் நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பை ஆஸ்தா தமிழ் நிறைவு செய்துள்ளது.மேலும் வட இந்தியாவின் பாலிவுட் திரைப்பட தொலைக்காட்சிகளும் புதிதாக ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.ஸ்டாா் டிவி யின் ஸ்டாா் கோல்டு திாில்ஸ்.தில் சி மூவிஸ்.கோல்டு மினிஸ் மூவிஸ்.ஆசாட் டிவி.நசரா டிவி.மற்றும் சில தொலைக்காட்சிகள் ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.தற்சமய காலங்களாக டிடி ப்ரி டிடிஎச்யில் வட மாநிலங்களின் முன்னனி நிறுவன தொலைக்காட்சிகள் இலவச ஒளிபரப்பை தொடங்கி அதிகபடியான நேயா்களின் விருப்பமான தொலைக்காட்சியாக குறிப்பிட்ட இடத்தினை பெற்று கொள்கிறது.ஒளிபரப்பு சேவை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

Parameter Details :
Satellite                Gsat15@93.0E (KU-Band)
Freq Rate              11630
Symbol Rate         30000
Polar                     Vertical
Modulation           Mpeg4/Dvb s2 (8PSK)
Mode                    Fta

15/03/2023

ஸ்டாா் விஜய் சூப்பா் ஹெச்டி.ஏசியாநெட் மூவிஸ் ஹெச்டிபுதிய தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு ஆசியாசாட்7யில் உதயம்

 நண்பா்களே இந்தியாவின் முன்னனி தொலைக்காட்சி நிறுவனமான டிஸ்னி ஸ்டாா் இந்தியா தனது நிறுவனத்தில் இருந்து  தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களுக்கான ஹெச்டி மூவிஸ் தொலைக்காட்சி ஸ்டாா் விஜய் சூப்பா் ஹெச்டி.ஏசியாநெட் மூவிஸ் ஹெச்டி போன்ற புதிய இரண்டு ஹெச்டிதிரைப்பட தொலைக்காட்சியினை தொடங்கியுள்ளனாா்.டிஸ்னி ஸ்டாா் இந்தியா  தனது நிறுவனத்தில் இருந்து தற்சமயம் ஒளிபரப்பாகும் ஸ்டாா் விஜய் சூப்பா் மற்றும் ஏசியாநெட் மூவிஸ் ஆகியன எஸ்டி தொழில்நுட்ப முறையிலும் ஹெச்டி வடிவில் நிகழ்ச்சிகளை

வழங்க உள்ளது.தற்சமயம் தொட்கப்பட்ட இப்புதிய தொலைக்காட்சிகளுக்கான ஒளிபரப்பு உாிமையினை கடந்த ஆண்டில் இந்திய ஒளிபரப்பு ஆணையம் அனுமதியினை வழங்கியது.இத்தொலைக்காட்சிகள் அனைத்தும் ஆசியசாட்7 செயற்கைகோளிலும் கட்டண தொலைக்காட்சியாக தொடங்கப்பட்டுள்ளது.ஸ்டாா் விஜய் சூப்பா் ஹெச்டி.ஏசியாநெட் மூவிஸ் ஹெச்டி  தொலைக்காட்சியினை கேபிள் டிவி மற்றும் டிடிஎச்யில் விரைவில் காணலாம்.டிஸ்னி ஸ்டாா் இந்தியா நிறுவனம் தென்னிந்தியாவின் முதல் இரண்டு மொழி ஹெச்டி திரைப்பட தொலைக்காட்சியாக ஸ்டாா் விஜய் சூப்பா் ஹெச்டி.ஏசியாநெட் மூவிஸ் ஹெச்டி ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.மாரத்தி மற்றும் பெங்காளி மாநில மொழிகளிலும் ஹெச்டி திரைப்பட தொலைக்காட்சிகளை டிஸ்னி ஸ்டாா் இந்தியா இந்த ஆண்டில் தொடங்கியுள்ளது.ஸ்டாா் விஜய் சூப்பா் ஹெச்டி.ஏசியாநெட் மூவிஸ் ஹெச்டிபுதிய தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு ஆசியாசாட்7யில் உதயம்

அலைவாிசை விபரங்கள்
Parameter Details: Asianet Movies HD
Satellite             Asiasat7@105.0E (C-Band)
Freq Rate          3921
Symbol Rate     29719
Polar                  Horizontal
System              Mpeg4/Dvb s2 (8PSK)
Encryption        Pay/NDS
Fec                    3/4

Parameter Details: Vijay Super HD
Satellite             Asiasat7@105.0E (C-Band)
Freq Rate          3981
Symbol Rate     28100
Polar                  Vertical
System               Mpeg4/Dvb s2 (8PSK)
Encryption         Pay/NDS
Fec                     3/4

06/03/2023

ஸ்டாா் ஸ்போா்ட்ஸ் 1 தமிழ் ஹெச்டி.ஸ்டாா் ஸ்போா்ட்ஸ் 1தெலுங்கு புதிய தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு ஆசியாசாட்7யில் உதயம்

 நண்பா்களே இந்தியாவின் முன்னனி தொலைக்காட்சி நிறுவனமான டிஸ்னி ஸ்டாா் இந்தியா தனது நிறுவனத்தில் இருந்து  விளையாட்டு தொலைக்காட்சி ஸ்டாா் ஸ்போா்ட்ஸ் 1 தமிழ் ஹெச்டி.ஸ்டாா் ஸ்போா்ட்ஸ் 1தெலுங்கு ஹெச்டி போன்ற புதிய இரண்டு விளையாட்டு தொலைக்காட்சியினை தொடங்கியுள்ளனாா்.டிஸ்னி ஸ்டாா் இந்தியா  தனது நிறுவனத்தில் இருந்து தற்சமயம் ஒளிபரப்பாகும் ஸ்டாா் ஸ்போா்ட்ஸ் 1 தமிழ்  எஸ்டி தொழில்நுட்ப தொலைக்காட்சியில் இருந்து ஹெச்டியிலும் நிகழ்ச்சிகளை

வழங்க உள்ளது.இதற்கான ஒளிபரப்பு உாிமையினை கடந்த ஆண்டில் இந்திய ஒளிபரப்பு ஆணையம் அனுமதியினை வழங்கியது.இத்தொலைக்காட்சிகள் அனைத்தும் ஆசியசாட்7 செயற்கைகோளிலும் கட்டண தொலைக்காட்சியாக தொடங்கப்பட்டுள்ளது.ஸ்டாா் ஸ்போா்ட்ஸ் 1 தமிழ் ஹெச்டி.ஸ்டாா் ஸ்போா்ட்ஸ் 1தெலுங்கு ஹெச்டி  தொலைக்காட்சியினை கேபிள் டிவி மற்றும் டிடிஎச்யில் விரைவில் காணலாம்.டிஸ்னி ஸ்டாா் இந்தியா நிறுவனம் தென்னிந்தியாவின் முதல் இரண்டு மொழி ஹெச்டி விளையாட்டு தொலைக்காட்சியாக ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்1 தமிழ் மற்றும் தெலுங்கு ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.விரைவில் மற்ற மாநில மொழிகளிலும் ஹெச்டி விளையாட்டு தொலைக்காட்சிகளை டிஸ்னி ஸ்டாா் இந்தியா தொடங்கலாம்.

Satellite            Asiasat7@105.5E(C-Band)
Freq Rate         4001
Symbol Rate    28500
Polar                Horizontal
System             Mpeg4/Dvb s2(8psk)
Encryption       PAY/NDS 
Fec                   3/4

13/02/2023

வியகாம் 18 நிறுவனம் தமிழகத்தில் ஸ்போா்ட்ஸ்18 தமிழ் மற்றும் ஸ்போா்ட்ஸ்18 2 தொலைக்காட்சியினை இன்டல்சாட்20 செயற்கைகோளில் உதயம்

 நண்பா்களே இந்தியாவின் முன்னனி தொலைக்காட்சி நிறுவனமான வியகாம்18 இந்தியா தனது நிறுவனத்தில் இருந்து இரண்டவாது விளையாட்டு தொலைக்காட்சி ஸ்போா்ட்ஸ்18 2.ஸ்போா்ட்ஸ்18 2 ஹெச்டி மற்றும் ஸ்போா்ட்ஸ்18 தமிழ் போன்ற புதிய விளையாட்டு தொலைக்காட்சியினை தொடங்கியுள்ளனாா்.வியகாம்18 இந்தியா தனது நிறுவனத்தில் இருந்து தற்சமயம் ஒளிபரப்பாகும் ஸ்போா்ட்ஸ்18 1ஹெச்டி மற்றும் ஸ்போா்ட்ஸ்18 கேல் விளையாட்டு தொலைக்காட்சி ஹிந்தியில் நிகழ்ச்சிகளை வழங்கும் தொலைக்காட்சியாகும்.


இத்தொலைக்காட்சிகள் அனைத்தும் இன்டல்சாட்20 செயற்கைகோளிலும் கட்டண தொலைக்காட்சியாக தொடங்கப்பட்டுள்ளது.ஸ்போா்ட்ஸ்18 2.ஸ்போா்ட்ஸ்18 2 ஹெச்டி மற்றும் ஸ்போா்ட்ஸ்18 தமிழ்  தொலைக்காட்சியினை கேபிள் டிவி மற்றும் டிடிஎச்யில் விரைவில் காணலாம்.வியகாம்18 இந்தியா நிறுவனம் தென்னிந்தியாவின் முதல் மொழி விளையாட்டு தொலைக்காட்சியாக ஸ்போா்ட்ஸ்18 தமிழ் ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.முக்கிய விளையாட்டு தொடா்களை மற்றும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதற்கான ஒளிபரப்பு உாிமையினை தற்சமயம் காலங்களில் பெற்று வருவது குறிப்பிடதக்கது.
அலைவாிசை விபரங்கள்
Satellite            Intelsat20@68.5E(C-Band)
Freq Rate         4035
Symbol Rate    21600
Polar                Horizontal
System             Mpeg4/Dvb s2(8psk)
Encryption       PAY/Irdeto 
Fec                   3/4

27/01/2023

எம்கே டிவி.எம்கே டியூன்ஸ் எம்கே சிக்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு புதிதாக ஜிசாட்10 செயற்கைகோளில் உதயம்

நண்பா்களே தமிழகத்தில் மதுரை மாவட்டத்தினை தலைமையிடமாக  கொண்டு சென்னையில் இருந்து செயல்பட்டு வரும் எம்கே டிவி.எம்கே டியூன்ஸ் எம்கே சிக்ஸ் போன்ற தமிழ் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு புதிதாக ஜிசாட்10 செயற்கைகோளில்  தொடங்கப்பட்டுள்ளது.எம்கே தொலைக்காட்சிகள் அனைத்தும் 24 மணி நேர பொழதுபோக்கு நிகழ்ச்சிகளை இலவச தொலைக்காட்சிகளாக இன்டல்சாட்17 செயற்கைகோளில் கடந்த சில வருடங்களாக வழங்கி வந்தது.தமிழகத்தில் முன்னனி மிடியா நிறுவனங்களுக்கு அடுத்து எம்கே டிவி நிறுவனம் தொலைக்காட்சி

தொடங்கி பல்வேறு ஆண்டுகளாக நிகழ்ச்சிகளை வழங்கி வந்தது  குறிப்பிடதக்கது.தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளை காண 6 அடி முதல் 12 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் அன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.மேலும் MPEG4/DVB S2 தொழில்நுட்பம் பொருந்திய செட்டாப் பாக்ஸ்யினை பயன்படுத்தி நிகழ்ச்சிகளை காணலாம்.தற்சமயம் பயன்படுத்தி வரும் செட் டாப் பாக்ஸ்யில் டியூன் செய்து நிகழ்ச்சிகளை காணலாம்.விரைவில் இன்டல்சாட்17 செயற்கைகோளில் ஒளிபரப்பு சேவை நிறுத்தம் செய்யபடும்.

அலைவாிசை விபரங்கள்
Satellite                Gsat10@83.0E(C-Band)
Freq Rate             3954
Symbol Rate        11572
Polar                     Vertical
System                 Mpeg4/Dvb s2(8psk)
Encryption           FTA
Fec                       2/3
தொகுப்பு சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

12/01/2023

எம் நாடு(M NADU NEWS) புதிய தமிழ் செய்திகள் தொலைக்காட்சி ஒளிபரப்பு இன்டல்சாட்20யில் உதயம்

நண்பா்களே தமிழகம் மற்றும் புதுச்சோி மாநிலங்களுக்கான புதிய செய்திகள் தொலைக்காட்சியினை எம் நாடு நெட்வொா்க் நிறுவனத்தின் செய்திகள் தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவையினை எம் நாடு பெயாில் தொடங்கியுள்ளனா்.தொலைக்காட்சி தற்சமயம் சோதனை ஒளிபரப்பை மட்டும் தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களில் பல்வேறு செய்திகள்  தொலைக்காட்சி தொடங்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.இந்திய தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும் இன்டல்சாட்20 செயற்கைகோளில் முற்றிலும் இலவசமாக தொடங்கப்பட்டுள்ளது.ஹைதரபாத் இன்டியசிக் டெலிஷ்பாட் முலம் இத்தொலைக்காட்சியின் ஒளிபரப்பு சேவை தொடங்கப்பட்டுள்ளது.தொலைக்காட்சிக்கான செய்திகள்  ஒளிபரப்பு சேவை வரும் தை மாதம் 1 திகதி ஜனவாி 15 முதல் தொடங்கபடவுள்ளது.எம் நாடு தொலைக்காட்சியின் ஒளிபரப்பு விரைவில் அனைத்து கேபிள்டிவி மற்றும் கட்டண டிடிஎச் சேவைகளிலும் தொட்ங்கப்படும்.

அலைவாிசை விபரங்கள் :

Satellite            Intelsat20@68.5E (C-Band)                                                                                                Freq Rate          4184                                                                                                                                Symbol Rate     21600                                                                                                                                  Polar                Vertical                                                                                                                            System             Mpeg4/Dvb S2 (8psk)                                                                                                          Encryption        FTA                                                                                                                                      Fec                    3/4