சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

29/06/2015

சிங்கப்பூர் நாட்டின் வசந்தம் சென்ட்ரல் டிவி (VASANTHAM CENTRAL TV) தமிழ் தொலைக்காட்சி

நண்பர்களே சிங்கப்பூர் நாட்டின் தமிழ் மொழி தொலைக்காட்சியாக வசந்தம் சென்ட்ரல் டிவி ஒளிபரப்பாகிறது.சிங்கப்பூர் அரசு இந்திய மக்களின் பொழுதுபோக்கு தொடர்பான நிகழ்ச்சிகளை வழங்கக்கூடிய தமிழ் தொலைக்காட்சியை அந்நாட்டின் அரசு தொலைக்காட்சி நிறுவனமான மீடியா கார்ப் முலம் தொடங்கப்பட்டது.தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் என்று 
பார்த்தால் இந்தியாவின் ஹிந்தி மற்றும் தென்னிந்திய தமிழ்.தெலுங்கு.மலையாளம்.கன்னட மொழிகளிலும்.மலேசிய நாட்டின் தமிழ் மொழிகளிலும் திரைப்படங்கள்.நாடக தொடர்கள்.மேடை நிகழ்ச்சிகள் வசந்தம் சென்ட்ரல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.தொலைக்காட்சியின் ஒளிபரப்பு சிங்கப்பூர் நாட்டின் ஸ்டார்காப்.வண்ணத்திரை.மீயோ ஐபிடிவி.சிங்டெல் போன்ற கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்பும்
நிறுவனங்களின் முலம் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.மீடியாகார்ப் நிறுவனத்தின் ஆங்கில செய்திகள்  தொலைக்காட்சி சேனல் நியூஸ் ஆசியா மட்டும் உலகளாவிய செயற்கைகோள் ஒளிபரப்பை ஆசியாசாட்7 செயற்கைகோளில் வழங்குகிறது. மீடியாகார்ப் நிறுவனத்தின் முலம் தமிழ் மொழியில் 24 மணி நேர வானொலி நிகழ்ச்சிகளை ஒலி பன்பலை முலம் சிங்கப்பூர் நாட்டில் வழங்கி வருவதும் குறிப்பிடதக்கது.படங்கள் தொகுப்பு ஸ்ரீதர் சிங்கப்பூர்

23/06/2015

பிக் டீல் டிவி(BIG DEAL TV TAMIL)புதிய தமிழ் ஷாப்பிங் தொலைக்காட்சி தமிழத்தில் இன்டல்சாட்20யில் தொடக்கம்

நண்பர்களே இந்தியாவில் தொலைக்காட்சியின் வழியாக அனைத்து விதமான பொருட்களை ஷாப்பிங் செய்யும் புதிய தொலைக்காட்சிகள் தற்சமயம் காலமாக அனைத்து மொழிகளிலும் தொடங்கப்பட்டு வருகிறது.கடந்த வருடத்தில் பாலிவுட் நடிகர் அக்சயகுமார் மற்றும் சில்பா ஷெட்டி அவர்களின் கூட்டுமுயற்ச்சியில் தொலைக்காட்சியின் நிர்வாக பொறுப்பளார் ராஜ் குன்ரா 
தலைமையில் புதிய ஹிந்தி ஷாப்பிங் தொலைக்காட்சி பெஸ்ட் டீல் டிவி ஒளிபரப்பு இந்தியாவில் தொடங்கப்பட்டது.இதே போன்று தென்ந்தியாவில் தமிழகத்தில் முதன்முறையாக நடிகர் சியான் விக்ரம் முலம் 24 மணிநேர தமிழ் ஷாப்பிங் தொலைக்காட்சி பிக் டீல் டிவி என்ற பெயரில் செயற்கைகோள் ஒளிபரப்பை தொடங்கியுள்ளனர்.இத்தொலைக்காட்சியின் விளம்பர துதராக முன்னனி தமிழ் நடிகர் சியான் விக்ரம் பொறுப்பேற்றுள்ளார்.தமிழகத்தில் தொடங்கப்பட்ட முன்றவாது தமிழ்
ஷாப்பிங் தொலைக்காட்சி இதுவாகும்.தொலைக்காட்சியின் செயற்கைக்கோள் ஒளிபரப்பு இந்தியாவின் பேட்பேட்டிக் மீயூசி்க் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு உரிமத்தில் தொடங்கப்பட்டுள்ளது.தொலைக்காட்சியை காண 6 முதல் 8.10.12 அளவுள்ள சி பேனட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்தி காணலாம்.MPEG4/DVB S2 செட் டாப் பாகஸயை பயன்படுத்தி காணலாம்.விரைவில் பிக் டீல் டிவியின் ஒளிபரப்பு டிடிஎச்களிலும் தொடங்கப்படலாம்.
அலைவரிசை விபரங்கள்:
Satellite                 Intelsat20@68.5E(C-BAND)
Freq Rate              4180
Symbol Rate          21600 
Polar                     Vertical
Modulation            Mpeg4/Dvb s2
Mode                    FTA

18/06/2015

திருகுரான் ஹையத் தொலைக்காட்சிகள் இந்திய மொழிகளில் ஆசியாசாட்5யில் தொடக்கம்

நண்பர்களே இஸ்லாம் மக்களின் புனித தலமான மெக்கா மற்றும் மெதினா தலங்களில் இருந்து இஸ்லாம் மதத்தின் உண்ணதமான கருத்துகளை தங்களின் வீடுகளில் இருந்து அறிந்து கொள்வதற்கான ஒரு புதிய தொடங்கமாக செயற்கைகோள் தொலைக்காட்சிகள் ஆசியா நாடுகளுக்கு தொடங்கப்பட்டுள்ளது.சவுதி அரேபியா நாட்டின் புனித தலத்தின் சார்பாக 
நேரடி தொழுகை நிகழ்ச்சிகளை வழங்ககூடிய தொலைக்காட்சிகள் அரேபிய மொழியில் தொடங்கப்பட்டு ஒளிபரப்பாகி வந்தது.தற்சமயம் திருகுரான் ஹையத் என்னும் பெயரில் புதிய இஸ்லாம் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு ஆசியாசாட்5 செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது.இப்புதிய தொலைக்காட்சிகள் ஆசியா நாடுகளான இந்தியா.மலேசியா.இலங்கை.பாங்களாதேஷ்.பாமிஸ்தான்.மாலத்தீவு.பிலிப்
பைன்ஸ்.தாய்லாந்து.கொரியா.இந்தோனிஷியா போன்ற நாடுகளின் மொழிகளிலும் தொடங்கப்பட்டுள்ளது.முதன் முறையாக இந்தியாவின் ஹிந்தி.தமிழ்.தெலுங்கு.மலையாளம்.பெங்காலி.உருது போன்ற மொழிகளிலும் தொலைக்காட்சிகள் தொடங்கப்பட்டுள்ளது.தற்சமயம் தொலைக்காட்சிக்ள அனைத்தும் தொடக்க சோதனை ஒளிபரப்பை மட்டும் தொடங்கியுள்ளது.விரைவில் நிகழ்ச்சிகள் தொடங்கப்படலாம்.மிக எளிய தொழில் நுட்பமான செட்டாப் பாக்ஸயில் கிடைக்கிறது.6 முதல் 12 அடி அளவுள்ள சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படு்த்தி கானலாம்.இலவச தொலைக்காட்சிகளாக ஆசியாசாட்5யில் தொடங்கப்பட்டுள்ளது.
அலைவரிசை விபரங்கள்
 Satellite                   Asiasat5@100.5E(C-BAND)
Freq Rate                3760
Symbol Rate            27500
Polar                        Horizontal
Modulation               Mpeg2/dvb s1
Mode                       FTA

06/06/2015

ஓம் டிவி இந்து ஆன்மீக தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பு யூடெல்சாட்70பி உதயம்

 நண்பர்களே இலங்கை நாட்டின் பிரதான தமிழ் மொழி இந்து ஆன்மீக தொலைக்காட்சியான ஓம் ரீவி ஆசியா மற்றும் வளைகுடா நாடுகளுக்கான பரிசார்ந்த செயற்கைகோள் ஒளிபரப்பை யூடெல்சாட்70பி செயற்கைகோள் யுடாக தொடங்கியுள்ளனர்.ஒம் ரீவி இலங்கை நாட்டின் வடமாகான ASK CABLE MEDIA குழுமத்தின் அங்க தமிழ் தொலைக்காட்சியாகும்.கடந்த பல
வருடங்களுக்கு முன்பு இத்தொலைக்காட்சி புரோட்டோ ஸ்டார் செயற்கைகோள் யுடாக செய்ற்கைகோள் ஒளிபரப்பை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஓம் ரீவியின் பக்தி நிகழ்ச்சிகள் யாழ்பானம் மற்றும் வடமாகாண மாவட்டங்களில் நடைபெறும் கோவில் நிகழ்ச்சிகளை நேரடி 
ஒளிபரப்பும் செய்கின்றனர்.தொலைக்காட்சியின் ஒளிபரப்பில் மாற்றம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளன.தற்சமயம் ஒளிபரப்பாகும் ஒம் ரீவியின் ஒளிபரப்பு டான் தொலைக்காட்சிகளின் பாரிசார்ந்த ஒளிபரப்பு இடம்பெற்றவையாகும். 
அலைவரிசை விபரங்கள்:
Satellite                  Eutelsat70B@70.5E(KU-BAND)
Freq Rate              11292
Symbol Rate          45000
Polar                     Horizontal
Modulation            Mpeg4/dvb s2
Mode                    Fta   

02/06/2015

பிபிசி தமிழ் தொலைக்காட்சி(BBC TAMIL UK) செய்திகள் தமிழகத்தில் தந்தி டிவியில் ஒளிபரப்பு தொடக்கம்

நண்பர்களே இங்கிலாந்து நாட்டின் பொது ஒளிபரப்பு தொலைக்காட்சி சேவை நிறுவனமான பிபிசி செய்தி பிரிவு தன்னுடைய குழுமத்தில் இருந்து பல்வேறு நாடுகளுக்குகான தொலைக்காட்சி செய்திகள் ஒளிபரப்பு சேவையை தொடங்கியுள்ளது.அந்த வரிசையில் இந்தியா மற்றும் இலங்கை வளைகுடா  
நாடுகளில் வசிக்கும் தமிழ் மக்கள் தொடர்பான செய்திகளை பிபிசி தமிழ் தொலைக்காட்சி முலம் இங்கிலாந்து மற்றும் இலங்கை நர்டுகளில் மட்டும் இச்செய்திகள் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்தது.தமிழகத்தின் முன்னனி செய்தி நாளிதழ் தினதந்தி நிறுவனத்தில் இருந்து தொடங்கப்பட்ட தமிழ் செய்திகள் தொலைக்காட்சியான தந்தி டிவி முதன்முறையாக இங்கிலாந்து நாட்டின் பிபிசி தமிழ் தொலைக்காட்சியின் செய்திகள் நிகழ்ச்சியை தமிழகத்தில் ஒளிபரப்பு செய்கிறது.இதற்கான ஒப்பந்த பரிவர்த்தனை இருநிறுவனங்கள் 
சார்பாக கடந்த வருடத்தில் நிறைவடைந்தது.பிபிசி தமிழ் செய்திகள் ஒளிபரப்பை தினந்தோறும் இரவு 7.30 மணி தொடக்கம் காணலாம்.பிபிசி நிறுவனத்தின் சார்பாக ஆசியா நர்டுகளுக்கான செயற்கைகோள் தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடங்கப்பட்டு அவற்றில் இதன் செய்திகள் ஒளிபரப்பு இடம் பெறுகிறது.ஆசியாசாட்5@100.5E செயற்கைகோளில் பிபிசி நிறுவனத்தின் அலைவரிசை ஒளிபரப்பு செயல்படுவது குறிப்பிடதக்கது.