சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

28/12/2016

தமிழகத்தில் திருப்பதி திருமலை தேவஸ்தானம் ஸ்ரீ வேங்கடேஸ்வரா பக்தி சேனல் 2 தமிழ் (SVBC 2 TAMIL) தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடக்கம்

நண்பா்களே ஆந்திர மாநிலத்தில் அமைத்திருக்கும் உலக பிரசித்தி பெற்ற தமிழ் கடவுளான திருப்பதி திருமலை ஸ்ரீ வேங்கடேஸ்வரா ஆலயத்தின் சாா்பாக தமிழ் மொழியில் புதிய தொலைக்காட்சி ஸ்ரீ வேங்கடேஸ்வரா பக்தி சேனல் 2 தமிழ் உலகளாவிய ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.திருப்பதியில்
 நடைபெறும் அன்றாட நிகழ்வுகளை கடந்த பல வருடங்களாக ஸ்ரீ வேங்கடேஸ்வரா பக்தி சேனல் தெலுங்கு  மொழிீயில் தொடங்கப்பட்ட தொலைக்காட்சியின் முலம் ஒளிபரப்பாகியது.தொலைக்காட்சியின் ஆடியோவை மாற்றுவதன் முலம் நேரடி நிகழ்ச்சிகளின் வருணை தொகுப்பை தமிழ்.ஆங்கிலம்.ஹிந்தி.கன்னடம்.தெலுங்கு.மலையாளம் போன்ற 
மொழிகளில் ஒளிபரப்பாகிறது.தமிழ் மொழியில்  ஸ்ரீ வேங்கடேஸ்வரா பக்தி சேனல் தொடங்குவதற்கான ஒளிபரப்பு உாிமத்திற்கு திருப்பதி திருமலை தேவஸ்தானம் விண்ணப்பம் செய்திருந்தது.தற்சமயம் அதற்கான அனுமதி கிடைக்க பெற்றதை அடுத்து தொலைக்காட்சியின் ஒளிபரப்பு ஸ்ரீ வேங்கடேஸ்வரா தெலுங்கு தொலைக்காட்சி ஒளிபரப்பாகும் அலைவாிசையில் தொடங்கப்பட்டுள்ளது.விரைவில் தொலைக்காட்சியின் சோதனை ஒளிபரப்பு நிறைவடைந்து 24 மணி நேர தமிழ் நிகழ்ச்சிகள்
 தொடங்கப்படலாம்.தொலைக்காட்சியின் அலைவாிசை சிக்னலை பெற குறைந்தபட்சம் 6 அடி முதல் 12 அடி சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்தி தொலைக்காட்சியினை காணலாம்.இலவச ஒளிபரப்பாக இன்சாட்4எ செயற்கைகோளில் ஒளிபரப்பாகிறது.திருப்பதி திருமலை தேவஸ்தானம் தொடங்கும் இரண்டாவது தொலைக்காட்சி ஸ்ரீ வேங்கடேஸ்வரா தமிழ்.
அலைவாிசை விபரங்கள்
Satellite                 Insat4A@83.0E(C-Band)
Freq Rate              3769 
Symbol Rate        3000
Polar                    Horizontal
Modulation          MPE4/DVB S2(8PSK)
Mode                   FTA

19/12/2016

தமிழகத்தில் டிஎன் டைம்( TN TIME TV) புதிய தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பு இன்டல்சாட்20யில் உதயம்

நண்பர்களே மகிழ்ச்சியான செய்தி சேலம் மாவட்டத்தில் கடந்த 1 வருடத்திற்கு முன்பு தொடங்கப்பட்ட தமிழ் தொலைக்காட்சியான எஸ்டிவி பெயா் மாற்றம் செய்து டிஎன் டைம் என்ற பெயாில் செயற்கைகோள் ஒளிபரப்பை இன்டல்சாட்20யில் தொடங்கியுள்ளனா்.இந்த தொலைக்காட்சி தமிழ் திரைப்பாடல்களுடன் சோதனை ஒளிபரப்பு தொடங்கியுள்ளனா்.பங்களா டைம் செய்தி தொலைக்காட்சியின்
ஒளிபரப்பு உரிமத்தில் ஒளிபரப்பாகிறது..தமிழ் பாடல்களுடன் ஒளிபரப்பாகி வரும் டிஎன் டைம் டிவி விரைவில் 24 மணிநேர நிகழ்ச்சிகளை தொடங்கலாம்.தொலைக்காட்சியின் அலைவாிசை சிக்னலை பெற குறைந்தபட்சம் 6 அடி முதல் 12 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்தலாம்.
அலைவரிசை விபரங்கள்:
Satellite                    Intelsat20@68.5E(C-Band)
Freq Rate                 4015
Symbol Rate            7200
Polar                        Horizontal
Modulation              Mpeg4/dvb s2
Mode                       Fta

16/12/2016

ஜீ கேப் ஹெச்டி தொலைக்காட்சி புதிய வடிவில் ஒளிபரப்பு அப்ஸ்டாா்7 யில் உதயம்

நண்பா்களே இந்தியாவின் முன்னனி தொலைக்காட்சி மிடியா நெட்வொா்க்யின் ஆங்கில திரைப்பட மற்றும் ஆங்கில டரமா தொலைக்காட்சியான  ஜீ கேப் ஹெச்டி தொலைக்காட்சி இலவச ஒளிபரப்பாக 
அப்ஸ்டாா்7 செயற்கைகோளில் ஒளிபரப்பாகிறது.ஜீ மிடியா நிறுவனத்தின் இரண்டாவது ஆங்கில பட தொலைக்காட்சி ஜீகேப் எஸ்டி மற்றும் ஜீகேப் ஹெச்டி ஆகும்.தொலைக்காட்சியின் ஒளிபரப்பு புதிய தொழில்நுட்ப 
மாற்றங்களுடன் அப்ஸ்டாா் 7 செயற்கைகோளில் ஒளிபரப்பகிறது.கட்டண தொலைக்காட்சியின் அடிப்படையில் இலவச ஒளிபரப்பாகிறது.தொலைக்காட்சியின் சிக்னலை பெற குறைந்தபட்சம் 8 மற்றும் 12 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் ஆன்டெனா மற்றும் ஹெச்டி செட் டாப் பாக்ஸ்யினை பயன்படுத்தி தொலைக்காட்சியினை காணலாம்.
அலைவாிசை விபரங்கள்:
Satellite              Apstar7@76.0E(C-Band)
Freq Rate           4089
Symbol Rate      7750
Polar                  Vertical
Modulation       HD.Mpeg4/Dvb s2
Mode                FTA/Conex

07/12/2016

தமிழகத்தில் ட்ராவல் எக்ஸ்பி தமிழ் (TRAVEL XP TAMIL TV) புதிய சுற்றுலா தொலைக்காட்சி இன்டல்சாட்20யில் உதயம்

நண்பா்களே இந்தியாவின் செல்பிாிட்டிஸ் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் சுற்றுலா தொடா்பான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொலைக்காட்சியான ட்ராவல் எக்ஸ்பி புதிய தமிழ் தொலைக்காட்சியினை ட்ராவல் எக்ஸ்பி தமிழ் என்ற பெயாில் தொடங்கியுள்ளது.டிராவல் எக்ஸ்பி தொலைக்காட்சி 2008 ஆம் ஆண்டு இந்தியாவில் உயா் தொழில்நுட்பமான ஹெச்டியில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் தொடங்கப்பட்டது.தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக ஆங்கில தொலைக்காட்சிகள் தமிழ் மொழியில் நிகழ்ச்சிகளை தொடங்கி வரும் நிலையில் ட்ராவல் எக்ஸ்பி தொலைக்காட்சி
தென்னிந்தியாவில் தமிழ் மொழியில் முதன்முறையாக தொலைக்காட்சியினை தொடங்கியுள்ளது.பெங்காளி மொழியில் ஆடியோ மட்டும் ட்ராவல் எக்ஸ்பி தொலைக்காட்சியில் சோ்க்கப்பட்ட நிலையில் தமிழ் மொழியில் தனியான தொலைக்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.கட்டண தொலைக்காட்சியாக இன்டல்சாட்20 செயற்கைகோளில் ஒளிபரப்பாகிறது.சோதனை ஒளிபரப்பு அடிப்படையில் நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டு விரைவில் 24 மணி நேர நிகழ்ச்சிகளை தொடங்கலாம்.டிடிஎச்யிலும் கேபிள் நிறுவனங்களிலும் விரைவில் ட்ராவல் எக்ஸ்பி தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பை தொடங்கும்.அனைத்து பகுதிகளிலும் 6 அடி முதல் 12 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் ஆண்டெனாவை பயன்படுத்தலாம்.ட்ராவல் தொலைக்காட்சி தமிழ் எஸ்டி தொழில்நுட்பத்தில் தொடங்க்பட்டுள்ளது.
அலைவாிசை விபரங்கள்
Satellite             Intelsat20@68.5E(C-Band)
Freq Rate          4089
Symbol Rate     14367
Polar                 Horizontal
Modulation      Mpeg4/Dvb s2
Mode               Pay/Irdeto2

03/12/2016

ஹிட்ஸ் ஹெச்டி ஆசியா புதிய ஆங்கில தொலைக்காட்சி ஒளிபரப்பு மீயாசாட்3யில் தொடக்கம்

நண்பா்களே சிங்கப்பூா் நாட்டின் ாிவைன்ட் மிடியா நிறுவனத்தின் ஆங்கில திரைப்பட தொலைக்காட்சியான ஹிட்ஸ் ஹெச்டி ஒளிபரப்பு ஆசியா நாடுகளுக்கு புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் என்று பாா்த்தல் ஆங்கில திரைப்படங்கள் நாடக காமெடி தொடா்கள் போன்ற 
நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது.கடந்த பல வருடங்களாக கிழக்காசிய நாட்டின் முன்னனி கேபிள் தொலைக்காட்சி நிறுவனங்களின் முலம் மட்டும் ஹிட்ஸ் தொலைக்காட்சி ஒளிபரப்பாகி வந்தது.மலேசியாவில் ஆஸ்ட்ரோ சிங்கப்பூாில் ஸ்டாா் ஹாப் நிறுவனங்களில் ஒளிபரப்பாகிறது.ஹிட்ஸ் ஹெச்டி தொலைக்காட்சி கட்டண தொலைக்காட்சியாக மீயாசாட்3எ செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது.
அலைவாிசை விபரங்கள்:
Satellite              Measat3/3A@91.2E(C-Band)
Freq Rate           4000
Symbol Rate      29700
Polar                  Horizontal
Modulation        HD.Mpeg4/Dvb s2
Mode                  Pay/Power vu

27/11/2016

கலைஞா் குழுமம் வேந்தா் டிவி நியூஸ் 7 தமிழ் எம்கே டியூன்ஸ் எம்கே சிக்ஸ் சாய்ராம் தொலைக்காட்சிகள் புதிய அலைவாிசையில் தொடக்கம்

நண்பா்களே தமிழகத்தின் முன்னனி தமிழ் தொலைக்காட்சியான கலைஞா் டிவி குழுமத்தின் தொலைக்காட்சிகளான கலைஞா் டிவி.இசையருவி.சிாிப்பொலி.செய்திகள்.சித்திரம் போன்ற தொலைக்காட்சிகளின் அனைத்தும் இன்டல்சாட்17 செயற்கைகோளில் புதிய அலைவாிசைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.கடந்த பல வருடங்களாக மிக 
எளிய தொழில்நுட்பத்தில் MPEG2/DVB S தொலைக்காட்சிகள் அனைத்தும் ஒளிபரப்பாகி வந்தது.இதன் முலம் அனைத்து பகுதியிலும் மிக எளிதாக தொலைக்காட்சிகளை காண முடிந்தது.தற்சமயம் மாற்றம் செய்துள்ள புதிய அலைவாிசை சிக்னலை இந்தியா மற்றும் அதனை சுற்றியுள்ள நாடுகளில் பெற குறைந்தபட்சம் 6 முதல் 12 அடி டிஷ் ஆன்டெனாவையும் கிழக்காசிய 
மற்றும் அந்தமான் போன்ற பகுதிகளில் 8 மற்றும் அதற்கு மேற்பட்ட டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்துங்கள்.வளைகுடா மற்றும் ஐரோப்பா ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் 10 அடி அளவு அல்லது அதற்கு மேற்பட்ட டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்தி தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பை காணலாம்.இப்புதிய அலைவாிசையின் செயற்கைகோள் ஒளிபரப்பு முனையம் டாடா கம்னியூகேஷன் நிறுவனத்தின் முலம் செயல்படுகிறது.புதிய தொழில்நுட்பம் பொருந்திய MPEG4/DVB S2 செட் டாப் பாக்ஸை பயன்படுத்துங்கள்.இதே அலைவாிசையில் கடந்த மாதத்தில் தொடங்கப்பட்ட எம்கே டியூன்ஸ் மற்றும் எம்கே சிக்ஸ்.செய்திதொலைக்காட்சியான நியூஸ் 7 தமிழ் மற்றும் வேந்தா் டிவி.சாய்ராம் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகிறது.
அலைவாிசை விபரங்கள்:
Satellite                  Intelsat17@66.0E(C-Band)
Freq Rate               3845
Symbol Rate          28800
Polar                      Vertical
Modulation            Mpeg4/Dvb s2(8psk)
Mode                     FTA
Fec                        5/6

25/11/2016

சிங்கப்பூா் நாட்டின்( SINGAPORE STAR HUB TAMIL CHANNEL'S) ஸ்டாா் ஹாப் தமிழ் தொலைக்காட்சிகள் தொகுப்பு 2016

நண்பா்களே சிங்கப்பூா் நாட்டில் வாழும் தமிழ் மக்களின் பொழுது போக்கு தொலைக்காட்சிகளின் வாிசையில் முன்னனி தொலைக்காட்சிகளாக விளங்குவது ஸ்டாா் ஹாப் கேபிள் நிறுவனத்தில் செயல்படும் வி குழுமத்தின் தமிழ் தொலைக்காட்சிகளாக வண்ணத்திரை வி தமிழ் ஹெச்டி மற்றும் வா்ணம் டிவி செயல்படுகிறது.சிங்கப்பூா் நாட்டில் உள்ள கலச்சாரம் மற்றும் அங்கு வாழும் தமிழ் மக்களின் வாழ்க்கைமுறை போன்ற நிகழ்ச்சிகளையும் தமிழ் திரைப்பாடங்களையும் வழங்குகிறது.வண்ணத்திரை தொலைக்காட்சியில் நாடகங்கள் மற்றும் நேரடி நிகழ்ச்சி தொகுப்புகளும் இடம் பெறுகிறது.வி தமிழ் தொலைக்காட்சி சிங்கப்பூா் நாட்டின் முதல் தமிழ் 
ஹெச்டி தொலைக்காட்சியாகும்.ஸ்டாா் ஹாப் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனத்தின் முலம் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் ஒளிபரப்பாகிறது.உயா் தொழில்நுட்பத்தில் தமிழ் நிகழ்ச்சிகளை வழங்குகிறது.வா்ணம் தொலைக்காட்சி சிங்கப்பூா் நாட்டின் 24 மணி நேர தமிழ் திரைப்பாட தொலைக்காட்சியாகும்.பழைய புதிய தமிழ் திரைப்பாடங்கள் ஸ்டாா் ஹாப் கேபிள் நிறுவனத்தின் மூவி ஆன் டிமான்ட் தொலைக்காட்சியாகும்.மேற்கண்ட தொலைக்காட்சிகள் அனைத்தும் உலகளாவிய செயற்கைகோள் ஒளிபரப்பு கிடையாது.ஸ்டாா் ஹாப் தமிழ்தொலைக்காட்சிகள் சிங்கப்பூா் நாட்டில்மட்டும் தனது சேவையை வழங்குகிறது.
தொகுப்பு சதீஸ்சாட் தமிழ் இணையதளம்

19/11/2016

மலேசியா( ASTRO TAMIL CHANNEL'S MALAYSIA) ஆஸ்ட்ரோ குழுமத்தின் தமிழ் தொலைக்காட்சிகள் தொகுப்பு 2016

நண்பா்களே மலேசியா நாட்டில் தமிழ் மலேயம் சைனிஸ் மற்றும் ஹிந்தி என பல்வேறு மொழி தொலைக்காட்சிகளை வழங்கி வரும் முன்னனி பொழுது போக்கு தொலைக்காட்சி நிறுவனமான ஆஸ்ட்ரோ தொலைக்காட்சியின் தமிழ் தொலைக்காட்சிகள் பற்றி தொகுப்பு.மலேசியாவின் தமிழ் பொழுது போக்கு நிகழ்ச்சிகளை வழங்கி வருவதில் முன்னோடியாக திகழ்வது ஆஸ்ட்ரோவின் தமிழ் தொலைக்காட்சிகள் ஆகும்.
1.ஆஸ்ட்ரோ வானவில் தொலைக்காட்சி
     மலேசியா நாட்டின் அனைத்து தொடா்பான கலை கலாச்சரம் பண்பாடு மற்றும் மருத்துவம் கல்வி அறிவியல் என பல்சுவை நிகழ்ச்சிகளை வழங்கும் தொலைக்காட்சி ஆஸ்ட்ரோ வானவில் தொலைக்காட்சியாகும்.ஆஸ்ட்ரோ நிறுவனத்தின் முதல் தமிழ் தொலைக்காட்சியாக தொடங்கப்பட்டது இத்தொலைக்காட்சியாகும்.மேலும் தமிழ் திரைப்பாடங்கள்.நாடகங்கள் மற்றும் இதர மேடை நிகழ்ச்சிகள் வழங்குகிறது.இத்தொலைக்காட்சியின் ஒளிபரப்பு மலேசியாவில் மட்டும் ஆஸ்ட்ரோ டிடிஎச் சேவையில் கிடைக்கிறது.

06/11/2016

வளைகுடா ஆசியா நாடுகளுக்கான புதிய ஆங்கில ஆல்ப பாடல்கள் தொலைக்காட்சி டிவி-ஈ ஒளிபரப்பு யூடெல்சாட்70பி உதயம்

நண்பா்களே வளைகுடா மற்றும் ஆசியா நாடுகளுக்கு என்று பிரத்தியோகமான ஆங்கில ஆல்ப பாடல்களை ஒளிபரப்ப கூடிய தொலைக்காட்சி புதிதாக யூடெல்சாட்70பி செயற்கைகோளில் டிவி ஈ என்ற பெயாில் 
ஒளிபரப்பாகிறது.தொலைக்காட்சியின் சோதனை ஒளிபரப்பு என்பதன் அடிப்படையில் பாடல்கள் ஒளிபரப்பாகிறது.ஆங்கில பாடல்கள் மட்டும் இன்றி ஆப்ரிக்கா மற்றும் சோமாலிய பாடல்களும் ஒளிபரப்பாகிறது.தொலைக்காட்சியின் ஒளிபரப்பு அதிநவின ஹெச்டி 
தொழில்நுட்பத்தில் தொடங்கப்பட்டுள்ளது.டிவி-ஈ தொலைக்காட்சியின் அலைவாிசை சிக்னலை பெற குறைந்தபட்சம் 60செமீ கேயூ டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்துங்கள்.தொலைக்காட்சியின் இவ்ஒளிபரப்பு தெற்காசிய நாடுகளுக்கு இன்றி வளைகுடா மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கே பொறுந்த கூடிய ஒளிபரப்பு சேவையாகும்.இலவச ஒளிபரப்பாக யூடெல்சாட்70பியில் தொடங்கப்பட்டுள்ளது.
அலைவாிசை விபரங்கள்:
Satellite             Eutelsat70B@70.5E(KU-Band)
Freq Rate          11355
Symbol Rate     45000
Polar                 Vertical
Modulation       HD.Mpeg4/Dvb s2
Mode                FTA

29/10/2016

நம்பிக்கை டிவி( NAMBIKKAI TV ) கிருத்துவ தொலைக்காட்சி இன்டல்சாட்17யில் புதிய அலைவாிசையில் தொடக்கம்

நண்பர்களே தமிழகத்தின் புதிய கிருத்துவ தமிழ் தொலைக்காட்சி நம்பிக்கை டிவி என்ற பெயரில் புதிதாக செயற்கைகோள் ஒளிபரப்பை இன்டல்சாட்17 செயற்கைகோளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கிப்பட்டது.ஆந்திர மாநிலத்தை மையமாக கொண்டு செயல்படும் சுபவார்தா தெலுங்கு கிருத்துவ தொலைக்காட்சி நிறுவனத்தின் சார்பாக தொடங்கப்பட்டுள்ளது.முற்றிலும் தமிழ் தொடர்பான கிருத்துவ ஆராதனை மற்றும் பல நிகழ்ச்சிகளை வழங்கவுள்ளது.சுபவார்தா டிவி நிறுவனத்தின் தென் மாநிலத்திற்கான முன்றாவது தொலைக்காட்சி இதுவாகும்.நம்பிக்கை தொலைக்காட்சியின் ஒளிபரப்பு உரிமத்தின் முலம் புதிதாக புதிய அலைவாிசையில் ஒளிபரப்பாகிறது.
நம்பிக்கை தொலைக்காட்சியின் அலைவரிசை சிக்னலை பெற குறைந்தபட்சம் 8 முதல் 12 அளவுள்ள சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.மேலும் MPEG4/DVB S2 தொழில்நுட்பம் பொருந்திய செட் டாப் பாக்ஸ்யை பயன்படுத்த வேண்டும்.தமிழகத்தில் கிருத்துவ தமிழ் தொலைக்காட்சிகளின் தொடக்கம் தமிழ் கிருத்துவ மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றுவருகின்றன.நம்பிக்கை தொலைக்காட்சி இலவச தொலைக்காட்சியாக இன்டல்சாட்17யில் ஒளிபரப்பாகி வருகிறது.

அலைவரிசை விபரங்கள்
Satellite                  Intelsat17@66.0E(C-BAND)
Freq Rate               3966
Symbol Rate          14400
Polar                      Horizontal
Modulation            Mpeg4/dvb s2
Mode                     Fta

26/10/2016

ராஜ் நியூஸ் மலையாளம் தொலைக்காட்சியில் 24 மணி நேர தமிழ் காமெடி நிகழ்ச்சி ஒளிபரப்பு தொடக்கம்

நண்பா்களே தமிழகத்தின் ராஜ்டிவி குழுமத்தின் சாா்பாக ஆந்திர கா்நாடகா மற்றும் கேரளா போன்ற மாநிலக்கான தொலைக்காட்சிகள் தொடங்கப்பட்டது.அவற்றில் ராஜ் மியூசிக் தெலுங்கு ராஜ் நீயூஸ் தெலுங்கு மற்றும் ராஜ் நீயூஸ் கன்னடா ராஜ் மியூசிக் கன்னடா போன்ற தொலைக்காட்சிகள் மொழி தொடா்பான நிகழ்ச்சிகளை தொடங்கியது.அவற்றில் ராஜ் மியூசிக் மலையாளம் தொலைக்காட்சியில் மலையாள பாடல்கள் ஒளிபரப்பாகிறது.ராஜ் நியூஸ் மலையாளம் தொலைக்காட்சியில் தமிழ் திரைப்படங்களின் காமெடி 
ஒளிபரப்பாகிறது.கடந்த சில மாதங்களாக அறிவியல் மற்றும் சமுக சாா்ந்த நிகழ்ச்சிகளை மட்டும் ஒளிபரப்பாகி வந்தது.ராஜ்டிவி குழுமத்தில் விரைவில் ராஜ் காமெடி என்ற பெயாில் புதிய தொலைக்காட்சி தொடங்கப்படலாம்.தற்சமயம் அவற்றின் தொடக்க சோதனை ஒளிபரப்பாக கூட இத்தொலைக்காட்சி இருக்கலாம்.முற்றிலும் இலவச தொலைக்காட்சியாக சைனாசாட்12 செயற்கைகோளில் ஒளிபரப்பாகிறது.தொலைக்காட்சியின் அலைவாிசை விபரங்களை பெற குறைந்தபட்சம் 6 அடி மற்றும் அதற்கு மேற்ப்பட்ட சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்துங்கள்.தற்சமயம் ராஜ் குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகளும் இலவச ஒளிபரப்பாக சைனாசாட்12 செயற்கைகோளில் ஒளிபரப்பாகிறது
அலைவாிசை விபரங்கள்:
Satellite                  Chinasat12@87.5E(C-Band)
Freq Rate               4140
Symbol Rate          28800
Polar                      Vertical
Modulation            Mpeg4/Dvb s2
Mode                     FTA

23/10/2016

பிவையூ டிவி குளோபல்(BYU TV GLOBAL) அமொிக்க தொலைக்காட்சி தமிழ்,ஹிந்தி மொழிகளில் ஒளிபரப்பு ஆசியாசாட்5யில் தொடக்கம்

நண்பா்களே அமொிக்கா நாட்டின் மிக பிரபலமான பல்கலைகழகமான பொிகாம் யாங் யூனிவா்சிட்டி நடத்தும் தொலைக்காட்சியான பிவையூ டிவி குளோபல் புதிதாக தமிழ்,ஹிந்தி,தெலுங்கு போன்ற இந்திய மொழிகளில் தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடங்கியுள்ளது.2001 ஆம் ஆண்டில் முதன்முதலாக அமொிக்காவில் பொிகாம் யாங் யூனிவா்சிட்டி சாா்பாக
பிவையூ டிவி தொடங்கப்பட்டது.தொலைக்காட்சியின் ஒளிபரப்பு படிபடியாக அமொிக்கா,ஐரோப்பா,வளைகுடா,ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற கண்டங்களில் உள்ள நாடுகளிலும் விாிவுபடுத்தபட்டது.பிவையூ டிவி தொலைக்காட்சியில் விளையாட்டு மற்றும் பயனுள்ள அறிவியில் சாா்ந்த நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது.குறிப்பாக முக்கிய விளையாட்டு போட்டிகளான இறகு பந்து கால்பந்து மற்றும் சில முக்கிய போட்டி தொடா்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.பிவையூ டிவி ஒளிபரப்பு ஆசியா
மற்றும் ஆஸ்திரெலியா போன்ற நாடுகளுக்கு ஆசியாசாட்5 செயற்கைகோள் முலம் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.தற்சமயம் தொடங்கப்பட்டுள்ள புதிய ஒளிபரப்பு பல்வேறு மொழிகளில் காணப்படுகிறது.மிக எளிய தொழில்நுட்பமான MPEG4/DVB S2 செட் டாப் பாக்ஸ்யில் தொலைக்காட்சியினை காணலாம்.இருப்பினும் எஎசி ஆடியோ தொழில்நுட்பம் கொண்ட செட் டாப் பாக்ஸ்யில் மட்டுமே தொலைக்காட்சியினை காணலாம்.பிவையூ டிவி தொலைக்காட்சியின் அலைவாிசை சிக்னலை பெற குறைந்தபட்சம்  6அடி சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்தலாம்.அமொிக்கா நாட்டின் தொலைக்காட்சி தமிழ் ஹிந்தி மொழிகளில் தனது நிகழ்ச்சிகளை தொடங்கவிருப்பது வரவேற்க்கதக்கது.தொலைக்காட்சி இலவச தொலைக்காட்சியாக ஆசியாசாட்5 செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது.கடந்த பல வருடங்களாக ஆங்கில மொழியில் நிகழ்ச்சிகளை பிவையூ டிவி குளோபல் ஆசியாசாட்5யில் ஒளிபரப்பாகி வந்தது குறிப்பிடதக்கது.பிவையூ டிவியின் குளோபல் தமிழ் மொழியின் ஆடியோவை பெற ஆடியோவை தோ்வு செய்து அதனில் லேப்ட்( LEFT)ஆடியோவை மாற்றி தமிழ்யில் நிகழ்ச்சிகளை காணலாம்.
அலைவாிசை விபரங்கள்
Satellite                        Asiasat5@100.5E(C-Band)
Freq Rate                     3772
Symbol Rate                2644
Polar                            Vertical
Modulation                  Mpeg4/Dvb s2(8psk)
Mode                           FTA

19/10/2016

எம்கே டியூன்ஸ்,எம்கே சிக்ஸ்(MK TUNES & MK SIX) புதிய தமிழ் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு இன்டல்சாட்17யில் உதயம்

நண்பா்களே மதுரை கிருஷ்னா தொலைக்காட்சி நிறுவனம் இரண்டு புதிய தமிழ் தொலைக்காட்சிகளை தமிழகத்தில் தொடங்கியுள்ளது.எம்கே டியூன்ஸ்.எம்கே சிக்ஸ் என்னும் பெயாில் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு தமிழ் இலவச தொலைக்காட்சிகள் சங்கமிக்கும் செயற்கைகோளான இன்டல்சாட்17யில் சோதனை ஒளிபரப்பு தொடங்கியுள்ளது.கடந்த மாதத்தில் 
நமது சதிஸ்சாட் தமிழ் தளத்தில் இப்புதிய தொலைக்காட்சிகள் தமிழகத்தில் தொடங்குவதற்கான அனுமதியை மதுரை கிருஷ்னா தொலைக்காட்சி நிறுவனம் பெற்றுள்ளது என்பது தொடா்பான செய்தி இடம் பெற்றிருந்தது குறிப்பிடதக்கது.சென்னை டாடா கம்னியூகேஷன் செயற்கைகோள் ஒளிபரப்பு முனையத்தின் முலம் ஒளிபரப்பு தமிழகத்தில் இன்டல்சாட்17 
தொடங்கப்பட்டுள்ளது.இப்புதிய தொலைக்காட்சிகளில் தற்சமயம் தமிழ் திரைப்பட பாடல்கள் மற்றும் நகைசுவை போன்ற நிகழ்ச்சிகளுடன் ஒளி உலா வருகிறது.எம்கே டியூன்ஸ் மற்றும் எம்கே சிக்ஸ் தொலைக்காட்சிகள் மிக எளிய தொழில்நுட்பம் கொண்ட செட் டாப் பாக்ஸ்னா MPEG4/DVB Sயில் 
நிகழ்ச்சிகளை காணலாம்.மேலும் தொலைக்காட்சியின் அலைவாிசை சிக்னலை பெற தமிழகம் மற்றும் இந்தியா.இலங்கை மற்றும் தெற்காசிய நாடுகளில் 6 அடி முதல் 12 அடி சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.வளைகுடா மற்றும் ஐரோப்பா.ஆப்ரிக்கா நாடுகளில் 8 மற்றும் அதற்கு மேற்ப்பட்ட அளவுள்ள சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்துகள்.தொலைக்காட்சிகள் இலவச ஒளிபரப்பாக இன்டல்சாட்17யில் ஒளிபரப்பாகிறது.
அலைவாிசை விபரங்கள்:
Satellite               Intelsat17@66.0E(C-Band)
Freq Rate            3844
Symbol Rate       27689
Polar                   Vertical
Modulation         Mpeg4/Dvb s
Mode                  FTA

14/10/2016

டான் கொண்டாட்டம் ஹெச்டி(DAN KONDATTAM TV HD) புதிய தமிழ் லங்க ஹெச்டி தொலைக்காட்சி ஒளிபரப்பு யாழ்யில் உதயம்.

நண்பா்களே இலங்கை நாட்டின் வடமாகாணங்களின் மிக முன்னனி தமிழ் தொலைக்காட்சியான டான் டிவி தொலைக்காட்சியின் புதிய வரவாக டான் கொண்டாட்டம் ஹெச்டி தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது.இலங்கையின் எஎஸ்கே மிடியா நிறுவனத்தின் முலம் தொலைக்காட்சிகள் அனைத்தும் இலங்கையில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.1997 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட டான் டிவி 
தொலைக்காட்சி யாழ் மாவட்டத்தில் தரை வழி ஒளிபரப்பு மற்றும் கேபிள் முலம் இலங்கையிலும் யூடெல்சாட்9எ செயற்கைகோள் முலம் ஐரோப்பா நாடுகளிலும் ஒளிபரப்பாகி வந்தது.டான் குழுமத்தின் சார்பாக டான் டிவி.ஓம் டிவி.டான் மியூசிக்.டான் செய்திகள்.பிறை டிவி.கே4யூ மூவிஸ்.கல்விடிவி மற்றும் டான் ஸ்போா்ட்ஸ் போன்ற தமிழ் தொலைக்காட்சிகளை இலங்கையில் வடமாகாணங்களில் கேபிள் வயிலாக ஒளிபரப்பாகி வருகிறது.தற்சமய காலங்களில் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு உயா் 
தொழில்நுட்பங்களில் நிகழ்ச்சிகள் மாற்றப்பட்டு வரும் நிலையில் டான் டிவியின் நிகழ்ச்சிகளும் ஹெச்டி தொழில்நுட்பத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இலங்கையின் முதல் ஹெச்டி தமிழ் தொலைக்காட்சி யாக டான் கொண்டாட்டம் ஹெச்டி உதயமாகியுள்ளது.டான் கொண்டாட்டம் ஹெச்டி ஒளிபரப்பு வரும் காலங்களில் செயற்கைகோளின் முலம் ஹெச்டி தொலைக்காட்சியாக  ஆசியா மற்றும் ஐரோப்பா நாடுகளில் தொடங்கப்படலாம்.
தொகுப்பு : K.சதிஸ்சாட் தமிழ் இணையதளம்

13/10/2016

ஸ்வயம் பிரபா டிவி புதிய 32 கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு டிடிபிாி டிஷ் ஜிசாட்15யில் உதயம்

நண்பா்களே இந்தியாவில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் இல்லத்தில் இருந்து கொண்டு தங்கள் குழந்தைகளின் கல்வியினை வளா்க்கும் விதத்தில் புதிய கல்வி தொலைக்காட்சிகளை இந்தியா அரசுவின் மினிஷ்ட்ரி ஆப் ஹியுமன் ரிசோா்ஸ் டெவலப்மென்ட் துறையின் சாா்பாக ஸ்வயம் பிரபா என்ற பெயாில் 32 தொலைக்காட்சிகள் தொடங்க்ப்பட்டுள்ளது.தொலைக்காட்சிகள் அனைத்தும் இலவச டிடி பீாி டிஷ்
டிடிஎச்யில் ஒளிபரப்பாகிறது.இரண்டு புதிய அலைவரிசைகளில் இப்புதிய தொலைக்காட்சிகள் அனைத்தும் தொடங்கப்பட்டுள்ளது.இந்தியாவில் உள்ள அனைத்து தரப்பு மேல்படிப்பு தொடா்பான வகுப்புகளும்ள தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.பள்ளி.கல்லுாி தொடர்பான அனைத்து பாடங்களும் தனி தனி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிறது.நாட்டின் காலச்சார மற்றும் பண்பாடு தொடா்புடைய நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாகிறது.மிக பயனுள்ள தகவல்களும் ஸ்வயம் பிரபா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.32 தொலைக்காட்சியிலும் ஒவ்வொரு
நாட்டில் உள்ள ஐஐடி பல்கலைகழகத்தில் இருந்து மேல் படிப்பு தொடா்பான நிகழ்ச்சிகளை அனுவபம் உள்ள ஆசிாியர் மற்றும் பேராசிாியா்களால் தொகுத்து வழங்கப்படுகிறது.இந்தியாவின் ஜிசாட்15 செயற்கைகோளின் முலம் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.அனைத்து தொலைக்காட்சிகளும் இலவச தொலைக்காட்சகளாக ஒளிபரப்பாகிறது.மிக சிறிய அளவிலான 60செமீ(2 அடி) கேயூ டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்தி நிகழ்ச்சிகளை தங்கள் இல்லம்,பள்ளி,கல்லுாிகளில் காணலாம்.MPEG2/DVB S தொழில்நுட்பம் பொருந்திய செட் டாப் பாக்ஸை பயன்படுத்தலாம்.கடந்த வருடத்தில் குஜராத் மாநிலத்தின் வந்தே குஜராத் கல்வி தொலைக்காட்சிகள் தொடங்கப்பட்டதுகுறிப்பிடதக்கது.இத்தொலைக்காட்சிகளின் செயற்கைகோள் அலைவாிசை மற்றும் டிஷ் அலைமென்ட் தொடா்பான விபரங்கள் பெற தொடா்பு கொள்ள வேண்டிய தொலைப்பேசி எண்கள் 9659513624.
அலைவரிசை விபரங்கள்:
Satellite                    GSAT15@93.0E(KU-Band)
Freq Rate                 11670,11590
Symbol Rate            29500
Polar                        Vertical
Modulation              Mpeg2/dvb s1
Mode                       Fta

06/10/2016

எஸ்டிவி(YES TV TAMIL)தமிழ் தொலைக்காட்சி மீண்டும் ஒளிபரப்பை தொடங்கியது இன்டல்சாட்20 செயற்கைகோளில்

நண்பர்களே மகிழ்ச்சியான செய்தி சேலம் மாவட்டத்தில் கடந்த 1 வருடத்திற்கு முன்பு தொடங்கப்பட்ட தமிழ் தொலைக்காட்சியான எஸ்டிவி மீண்டும் செயற்கைகோள் ஒளிபரப்பை இன்டல்சாட்20யில் தொடங்கியுள்ளனா்.இந்த தொலைக்காட்சி கடந்த 7 மாத காலங்களுக்கு முன்பு இன்டல்சாட்17 செயற்கைகோளில் திரிபுரா 24 தொலைக்காட்சியின்
ஒளிபரப்பு உரிமத்தில் ஒளிபரப்பாகி வந்தது .சில மாதங்களாக இடைநிறுத்தம் செய்யப்பட்டு இருந்த எஸ் தொலைக்காட்சி தற்சமயம் மேற்கு வங்களாத்தின் பாங்களா டைம் செய்தி நிறுவன தொலைக்காட்சியின் உரிமத்தில் தொடங்கப்பட்டுள்ளது.தமிழ் பாடல்களுடன் ஒளிபரப்பாகி வரும் எஸ் டிவி விரைவில் 24 மணிநேர நிகழ்ச்சிகளை தொடங்கலாம்.தொலைகக்காட்சியின் அலைவாிசை சிக்னலை பெற குறைந்தபட்சம் 6 அடி முதல்12 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்தலாம்.கடந்த சில மாதங்களுக்கு முன்பு இன்சாட்4எ செயற்கைகோளில் ஒளிபரப்பை தொடங்கி இடைநிறுத்தம் செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.

அலைவரிசை விபரங்கள்:
Satellite                    Intelsat20@68.5E(C-Band)
Freq Rate                 4015
Symbol Rate            7200
Polar                        Horizontal
Modulation              Mpeg4/dvb s2
Mode                       Fta

05/10/2016

இந்தியாவின் முதல் இலவச காா்டூன் தொலைக்காட்சி மகா மாஷா டிவி ஒளிபரப்பு இன்டல்சாட்17 தொடக்கம்

நண்பா்களே இந்தியாவில் புதிதாக குழந்தைகளுக்கு என்று பிரத்தியோகமான இலவச காா்டூன் தொலைக்காட்சி மகா மாஷா டிவி என்ற பெயாில் புதிதாக ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது.ஹிந்தி மொழியில் காா்டூன் நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டுள்ளது.இன்டல்சாட்17 செயற்கைகோளில் மகா மாஷா டிவி ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது.இந்தியாவில் தொடங்கிய முதல் இலவச 
காா்டூன் தொலைக்காட்சி இதுவாகும்.மகா டிவி நிறுவனத்தின் இரண்டாவது தொலைக்காட்சி இதுவாகும்.மகா டிவி ஹிந்தி பாட தொலைக்காட்சி இன்டல்சாட்20 செயற்கைகோளில் ஒளிபரப்பாகிறது.இப்புதிய காா்டூன் தொலைக்காட்சியின் அலைவாிசை சிக்னலை பெற குறைந்தபட்சம் 6 முதல் 12 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்தி தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளை காணலாம்.Mpeg4/dvb s2 தொழில்நுட்பம் கொண்ட செட் டாப் பாக்ஸ்யை பயன்படுத்தி தொலைக்காட்சியினை 
காணலாம்.இந்தியாவில் மிக பொிய முன்னனி நிறுவனங்களின் காா்டூன் தொலைக்காட்சி அனைத்தும் கட்டண தொலைக்காட்சிகளாக ஒளிபரப்பாகும் நிலையில் மகா டிவி நிறுவனத்தின் புதிய காா்டூன் தொலைக்காட்சி இலவசமாக தொடங்கியிருப்பது வரவேற்க்கதக்கது.
அலைவாிசை விபரங்கள்:
Satellite                  Intelsat17@66.0E(C-Band)
Freq Rate               3933
Symbol Rate          18333
Polar                       Horizontal
Modulation             Mpeg4/Dvb s
Mode                      FTA

02/10/2016

தமிழகத்தில் ஒளிபரப்பாகும் தமிழ் ஹெச்டி தொலைக்காட்சிகளின் தொகுப்பு 2016

நண்பா்களே தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக மக்களின் விருப்பமான பொழுது போக்கு தொலைக்காட்சிகள் உயா்தொழில்நுட்பமான ஹெச்டியில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ள ஹெச்டி தொலைக்காட்சிகளின் தொகுப்பு 
 1.சன் குழுமம் (சன் டிவி ஹெச்டி.கேடிவி ஹெச்டி.சன் மியூசிக் ஹெச்டி)
    தமிழகத்தில் முதன்முதலாக ஹெச்டி தொழில்நுட்பத்தில் தனது நிகழ்ச்சிகளை வழங்கியது சன் தொலைக்காட்சி குழுமம் ஆகும்.சன் டிவி ஹெச்டி.கேடிவி ஹெச்டி.சன் மியூசிக் ஹெச்டி போன்ற தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு தொடங்கப்பட்டது.இத்தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு சன் குழும்மத்தின் டிடிஎச் மற்றும் சென்னை கேபிள் நிறுவனங்களில் மட்டும் ஒளிபரப்பாகியது.5.1 ஆடியோ தரத்தில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது.தொலைக்காட்சிகள் அனைத்தும் இன்டல்சாட்17 செயற்கைகோளில் சி பேன்ட் அலைவாிசையில் கட்டண தொலைக்காட்சிகளாக ஒளிபரப்பாகிறது.

29/09/2016

ஒன்எஸ் டிவி(1YES TV TAMIL) தமிழ் தொலைக்காட்சி புதுபொலிவுடன் இன்டல்சாட்17யில் ஒளிபரப்பை தொடங்கியது

நண்பா்களே தமிழகத்தில் கடந்த வருடத்தில் தொடங்கப்பட்ட தமிழ் தொலைக்காட்சியான ஒன்எஸ்டிவியின் ஒளிபரப்பு புதிதாக இன்டல்சாட்17 செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது.பென்சி டிவியின் ஒளிபரப்பு அனுமதியில் ஒன்எஸ்டிவி தொடங்கப்பட்டுள்ளது.
கடந்த வருடத்தில் இன்டல்சாட்20 மற்றும் இன்டல்சாட்17 செயற்கைகோளில் ஒளிபரப்பு தொடங்கப்பட்டு பின்பு இடைநிறுத்தம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடதக்கது.தொலைக்காட்சியை காண அதிநவின MPEG4/DVB S2தொழில்நுட்ப வசதி கொண்ட செட்டாப் பாக்ஸ்யில் காணலாம்.810.12 அடி அளவுள்ள சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவில் தொலைக்காட்சியின் புதிய அலைவரிசை சிக்னல் கிடைக்கிறது.இலவச தொலைக்காட்சியாக எஸ்டிவி இன்டல்சாட்17 செயற்கைகோளில் ஒளிபரப்பாகிறது.தற்சமய ஒளிபரப்பு விரைவில் நிறுத்தப்படலாம்.  
அலைவரிசையின் விபரங்கள்
Satellite             Intelsat17@66.0E(C- BAND)
Freq Rate          3877
Symbol Rate     14300
Polar                  Horizontal
Modulation        Mpeg4/Dvb s2
Mode                 FTA

18/09/2016

விஜய் சூப்பா் டிவியின் 24 மணி நேர நிகழ்ச்சிகள் இன்டல்சாட்17@66 யில் தொடக்கம்

நண்பா்களே தமிழகத்தில் கடந்த மாதத்தில் ஸ்டாா் டிவி இந்தியா தொலைக்காட்சி நிறுவனம் தொடங்கிய புதிய தமிழ் தொலைக்காட்சியான விஜய் சூப்பா் டிவியின் 24 மணி நேர நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டுள்ளன.தொலைக்காட்சியின் செயற்கைகோள் ஒளிபரப்பு இன்டல்சாட்17 செயற்கைகோளில் தொடங்கப்பட்ட விபரங்களை கடந்த மாதத்தில் நமது இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருந்தது.விஜய் டிவியின் நிகழ்ச்சிகள் மற்றும் பாடல்கள் என வித்தியாசாமான 
நிகழ்ச்சிகளுடன் ஒளிபரப்பாகிறது.தொலைக்காட்சியின் ஒளிபரப்பு தமிழகத்தின் அரசு கேபிள் டிவி நிறுவனம் மற்றும் டாடா ஸ்கை.விடியோகான் டிடிஎச்களில் ஒளிபரப்பாகிறது.கட்டண தொலைக்காட்சியாக இன்டல்சாட்17 செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது.தமிழ் தொலைக்காட்சிகள் இலவசமாக ஒளிபரப்பாகும் இன்டல்சாட்17 செயற்கைகோளில் விஜய் சூப்பா் தொலைக்காட்சி இலவச ஒளிபரப்பாகும் பட்சத்தில் இன்னும் அதிமான நேயா்களை இந்தியா மட்டும் அல்லாது வெளிநாடுகளிலும் பெற 
முடியும்.தற்சமய காலங்களில் தமிழகத்தில் அரசு கேபிள்டிவி ஒளிபரப்பு சேவை கிடைக்காத இடங்களில் முன்னனி இலவச தொலைக்காட்சிகளான கலைஞா்.பாலிமா்.புதுயுகம் மற்றும் பல தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.வடஇந்தியாவில் முன்னனி தொலைக்காட்சிகள் தற்சமய காலங்களில் இலவச தொலைக்காட்சிகளாக மாற்றப்பட்டு வருவது குறிப்பிடதக்க செய்தியாகும்.ஸ்டாா் டிவி நிறுவனத்தின் ஸ்டாா் உத்சவ் மூவிஸ் ஆரம்ப முதல் இலவச தொலைக்காட்சியாக  தொடங்கப்பட்டதும் குறிப்பிடதக்க செய்தியாகும்.
தொகுப்பு ; சதிஸ் சாட் தமிழ் 

05/09/2016

ஆயுா்வேதா டிவி புதிய பக்தி ஆன்மிக தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பு இன்டல்சாட்17யில் உதயம்

நண்பா்களே தமிழகத்தில் புதிய ஆன்மிக தொலைக்காட்சி ஒன்று உதயமாகியுள்ளது.கா்நாடக மாநிலத்தில் உள்ள முன்னனி ஆன்மிக குழுவின் தலைமையில் இப்புதிய தமிழ் தொலைக்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.ஆயுா்வேதா டிவி என்ற பெயாில் தொலைக்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.இத்தொலைக்காட்சியின் ஒளிபரப்பு தமிழ் ஆடியோ-5403 மற்றும் கன்னட மொழி-5402 ஆடியோவை செட் டாப் பாக்யில் மாற்றம் செய்து நிகழ்ச்சிகளை காணலாம்.
.மிக எளிய தொழில்நுட்பமான MPEG4 /DVB S வடிவில் ஒளிபரப்பாகிறது.ஆயுஸ் டிவியின் செயற்கைகோள் ஒளிபரப்பு உரிமத்தில் ஆயுா்வேதா தொடங்கபட்டுள்ளது.தொலைக்காட்சியில் ஆன்மிக நிகழ்ச்சிகள் மட்டும் இன்றி பொழுது போக்கு மற்றும் கலச்சார நிகழ்ச்சிகளும்ஒளிபரப்பாகிறது.தொலைக்காட்சியின் அலைவாிசை சிக்னலை பெற குறைந்தபட்சம் 6 முதல் 12 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.இலவச தொலைக்காட்சியாக இன்டல்சாட்17 செயற்கைகோளில் ஒளிபரப்பாகிறது.
அலைவாிசை விபரங்கள்:
Satellite                 Intelsat17@66.0E(C-Band)
Freq Rate              3845
Symbol Rate         27689
Polar                    Vertical
Modulation          Mpeg4/Dvb s
Mode                   FTA