சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

29/03/2013

CVR நியூஸ் இன்ங்லிஷ்.CVR பக்தி தொலைக்காட்சிகள் தொடக்கம் இன்டல்சாட்17@66.0Eலில்

சிவிஆர் நியூஸ் தெலுங்கு தொலைக்காட்சி இணையத்தில் இருந்து மிண்டும் இரு புதிய தொலைக்காட்சிகள் தொடங்கப்பட்டுள்ளது.இதில் முழமையான ஆங்கிலத்தில் 24 மணி நேரமும் ஆங்கில செய்திகளை வழங்கும் CVR நியூஸ் இன்ங்லிஷ் தொடங்கப்பட்டுள்ளது.இதே போன்று தெலுங்கு மொழியில் ஆன்மிக தொலைக்காட்சியையும் CVR பக்தி என்ற பெயரில் தொலைக்காட்சியை தொடங்கியுள்ளனார்.இந்த இரு தொலைக்காட்சிகளும் சோதனை ஒளிபரப்பை மட்டும் இன்டல்சாட்17லில் தொடங்கியுள்ளனர்.சிவிஆர் தெலுங்கு இணையத்தில் சிவிஆர் நியூஸ் தெலுங்கு,சிவிஆர் ஹெல்த், ஆகிய இரு தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு  சேவையை இன்டல்சாட்17லில் வழங்கி வருவது குறிப்பிடதக்கது.

அலைவரிசையின் விபரங்கள்
freq         3876
sym        14300
polar       H
system    mpeg4/dvb 2
mode      fta 

ஜென்டிவி ஃப்ளஸ் ஹிந்தி சோதனை தொடக்கம் இன்டலசாட்20@68.0e

ஜென் டிவி நியூஸ் ஹிந்தி தொலைக்காட்சி தனது இணைத்தில் இருந்து மற்றொரு புதிய பக்தி ஜென்டிவி ஃப்ளஸ்  தொலைக்காட்சியை
இன்டலசாட்20யில்  ஜென் டிவி நியூஸ் யின் அதே அலைவரிசையில் தொடங்கியுள்ளது இந்த புதிய தொலைக்காட்சியை.தற்சமயம் ஒரே மாதிரியான பக்தி நிகழ்ச்சிகள் மட்டும் ஜென்டிவி ஃப்ளஸ் ஒளிபரப்பாகிறது

அலைவரிசையின் விபரம்
freq          3854
sysm        7200
polar        h
system     mpeg4/dvbs 2
mode       fta

இன்டல்சாட்17@66யில் புதிய அலைவரிசை இன்டியா சிங்னல் தொடக்கம்

இன்டல்சாட்17யில் இன்டியாசிங்னால் புதிய அலைவரிசை ஒன்றை தொடங்கியுள்ளது. இந்த அலைவரிசையில் தெலுங்கு பெங்காளி மலையாளம்  போன்ற மாநில தொலைக்காட்சிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.இந்த புதிய அலைவரிசையானது 7/6 fec ரேட்டில் சிக்னல் உள்ளதால் 6.8.10.12.16 அளவுள்ள பெரிய டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்தி எளிதாக சிக்னாலை பெறலாம்.அதில் புதிய தொலைக்காட்சிகளுக்கான test cardம் தொடங்கப்பட்டுள்ளது.
புதிய அலைவரிசையின் விபரம்
FREQ    3876
SYM     14300
POLAR  H
SYSTEM   MPEG4/DVB S2

24/03/2013

ஐபில் 6வது மட்டைபந்து போட்டிகள் நேரடி ஒளிபரப்பு செய்யும் தொலைக்காட்சிகள்

இந்தியாவில் நடக்கவுள்ள இந்தியன் பீரிமியர் லீகயின் ஆறாவது  20க்கு 20 மட்டைபந்து போட்டிகளை நேரடி ஒளிபரப்பு செய்யும் தொலைக்காட்சிகள்  பற்றி பார்ப்போம்
          இந்தியாவின் சோனி நிறுவனத்தின் செட் மேக்ஸ்&செட் சிக்ஸ் HD&SD  ஆகிய தொலைக்காட்சிகள் இந்தியாவில் நேரடி ஒளிபரப்பு செய்கின்றனசெட் மேக்ஸ்&செட் சிக்ஸ் இருதொலைக்காட்சிகளும் கட்டண சேனல்களாக உள்ளது.இருப்பினும் கட்டண டிடிஎச்யில் குறைந்த கட்டணத்தில் இரு சேனல்களையும் காணலாம்.
.இதே போன்று இலங்கையின் சிஎஸ்என் விளையாட்டு தொலைக்காட்சியும் ஐபில் 6வது மட்டைபந்து போட்டிகளை நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.சிஸ்என் தற்சமயம் பிஸ் கட்டண சேனலாக APSTAR6யில் இடம் பெற்றுள்ளது
.இதே போன்று பாங்களாதேஷ் நாட்டின் மிக முக்கியமான மட்டைபந்து போட்டிகளை வழங்கும் சேனல்9னும் மட்டைபந்து போட்டிகளை  நேரடி ஒளிபரப்பு செய்யவுள்ளன சேனல்9னும் தற்சமயம் பிஸ் கட்டண சேனலாக APSTAR6யில் இடம் பெற்றுள்ளது
   ஆசியாசேட்3Sயில் இடம்பெற்றுள்ள நவ்டிவியும் ஐபிஎல் மட்டைபந்து போட்டிகளை நேரடி ஒளிபரப்பு செய்யவுள்ளது. இநத தொலைக்காட்சியும் இலவசமாக ஒளிபரப்புவது குறிப்பிடதக்கது.

 இந்தியன் பீரிமியர் லீகயின் ஆறாவது  20க்கு 20 மட்டைபந்து போட்டிகள் வரும்  
ஏப்ரல் 3 ம் திகதி முதல் தொடங்கப்படவுள்ளது.என்பது குறிப்பிடதக்கது.

ஏன்ஜல்டிவி மற்று்ம் டிடி ஒடியா சோதனை தொடக்கம் ST2@88.0E

 ஏன்ஜல் டிவி தமிழ் தொலைக்காட்சி மற்றும் டிடி ஒடியா ஆகிய தொலைக்காட்சிகள் தற்காலிகமாக  சோதனை தொலைக்காட்சிகளாக இலவசமாக விடியோகான் டிடி எச்யில் இடம்பெற்றுள்ளது .இந்த தொலைக்காட்சிகள் மிக மோசமான விடியோவில் ஒளிபரப்பாகிறது என்பது குறிப்பிடதக்கது.


அலைவரிசையின் விபரங்கள்
freq          11608
sym          43977
polar         H
system       mpeg4/dvb s2
mode         fta

22/03/2013

ஜி வரிசை மலேசியா இலவசமாக ஆசியாசேட்3எஸ்@105.0E

ஜி நெட்வொர்க்கின்  ஜி வரிசை மலேசியா தொலைக்காட்சி தற்சமயம் தற்காலிக இலவச தொலைக்காட்சியாக ஆசியாசேட்3எஸ் ல் ஒளிபரப்பாகிறது.இந்த தொலைக்காட்சியை பற்றி சொன்னால் இந்தியாவின் ஜிடிவி நிகழ்ச்சிகளை முழமையாக மலேசியா இந்தோனிசியா நாட்டில் வாழம்  இந்திய மக்களுக்கு நாடகம் திரைப்படம் பாடல்கள் என வழங்குகிறது.
அலைவரிசையின் விபரங்கள்
freq   3820
sym   27500
polar   vertical

21/03/2013

இலங்கையின் தரைவழி ஒளிபரப்பு தொலைக்காட்சிகள் தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும்

இலங்கையின் தரைவழி ஒளிபரப்பு தொலைக்காட்சிகள் தற்சமயம் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் டிடி ஆன்டெனாவின் வுடாக கிடைக்க பெருகிறது .இதில் தமிழ் தொலைக்காட்சிகளான வசந்தம்டிவி.நேத்ராடிவி.டான்டிவி.அலைடிவி.சக்திடிவி மற்றும் சிங்களா தொலைக்காட்சிகளும் கிடைக்க பெருகிறது .இந்த ஒளிபரப்பு திண்டுக்கலிலும் கிடைக்கிறது







18/03/2013

டிடி எச்யில் வரும் ஏப்ரல் 5 97 தொலைக்காட்சிகள்

இந்தியாவின் இலவச டிடிஎச் சேவையில் வரும் ஏப்ரல் மாதம் 5 திகதி முதல் 97  புதிய  தனியார் தொலைக்காட்சிகளை சேர்க்கவுள்ளது இதற்கான அறிவிப்பை தற்சமயம் டில்லியில் துர்தர்ஷன் வெளியிட்டுள்ளது.

8xm நெட்வொர்க்கின் ஜவ்லா மியூசிக் பாக்சாட்1R@38,0eல்

 8xm  நெட்வொர்க்கின் புதிய ஹிந்தி சேனல் ஜவ்லா மியூசிக் பாக்சாட்1ஆர்ல் தொடங்கப்பட்டுள்ளது.இந்த சேனல் தற்சமயம் ஹிந்தி டாப் ஹிட் பாடல் அனைத்தையும் வழங்கி வருகின்றனர் .பார்பதற்கு மிக அருமையான விடியோ    தரத்தில் உள்ளது .அதுவும் மிக எளிய முறையில் mpeg2 செட் டாப் பாக்ஸ்ல் கிடைக்கிறது இந்த சேனல் தற்சமயம் சோதனை ஒளிபரப்பின் முலம் பாடல்களை  வழங்கி வருகின்றது



அலைவரிசையின் விபரங்கள்
freq        3824
sym        2800
polar      vertical
system   mpeg2/dvbs
mode     fta

15/03/2013

பொதிகை தொலைக்காட்சி ஒரு கண்ணோட்டம்

தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னோடி தொலைக்காட்சியாக திகழம் நமது பொதிகை பற்றி ஒரு சிறு கண்ணோட்டம்
டிடி1 என்றால் அது நமது சென்னை தொலைக்காட்சி என்று தான் ஞாபகம் வரும் .
  1993 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 தேதி முதன் முதலாக மத்திய ஒளிபரப்பு ஆணையத்தின் கீழ் இயஙகும்  பிரசார் பாரதியான தூர்தர்ஷன் கேந்திரம் தமிழகத்தில் தமிழ் மொழியில் டிடி5 என்ற தொலைக்காட்சியை தொடங்கியது முதன் முதலில் தரைவழி ஒளிபரப்பு  மூலம் சேவையை தொடங்கிய நமது பொதிகை மாநிலத்தில் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் ஒளிபரப்பு சேவையை வழங்கியது .பின்பு படிபடியாக மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் சேவையை தொடங்கியது டிடி5.முதலில்டிடி1யில் ஒளிபரப்பாகும் ஹிந்தி நாடகங்களை( ஸ்ரீ கிருஷ்னா, ஜீனியர் ஜீ, சக்திமான், கேப்டன் யு,  மாஹபாரதம்) போன்ற தொடர்களை மொழிபெயர்ப்பு செய்து தமிழில் வழங்கியது.மற்ற நேரங்களில் தமிழ் செய்திகளையும் விவசாயம் தொடர்பான  நிகழ்ச்சிகளை மாலை பொழுதில் வழங்கியது.1995 முதல் டிடி5  அனது மாலை 3 மணி முதல் இரவு 11 மணி வரை தொலைக்காட்சி தொடர்கள், வயலும் வாழ்வும், கண்மணி பூங்கா, காண்போம் கற்போம், மங்கள இசை,சாப்பிட வாங்க, நாட்டியஞ்சலி, மிக மிக பிரபலமடைந்த நிகழ்ச்சியான வெள்ளி ஒளியும் ஒலியும், வாரத்தின் வெள்ளி இரவு 9.30க்கும் சனி இரவு 10.30க்கும் ஞாயிறு மாலை 4.30க்கும் தமிழ்திரைப்படங்கள் போன்ற நிகழ்ச்சிகளை வழங்கியது
     பின்பு டிடி5 என்ற பெயரை மாற்றம் செய்ய நேயர்களிடம் இருந்து கருத்து கேட்கப்பட்டது அதில் தேர்வு செய்யப்பட்டது பெயர் தான் .திருநெல்வேலி மாவட்டத்தில் பெயர் பெற்ற மற்றும் தமிழ் இதிகாசங்களில் வர்ணித்த  அந்த சிறப்புவாய்ந்த பொதிகை மலையின் பெயரையே 2000ஆம் ஆண்டு ஜனவரி 15 நாளில் பொதிகை தொலைக்காட்சி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது அனறைய காலங்களில் சாதாரன ஆன்டெனா முலம் 14 இஞ்ச் கருப்பு வெள்ளை தொலைக்காட்சிபெட்டியின் எளிய ஏழைமக்கள் காண கூடிய மிக தெளிவான ஒளிபரப்பை வழங்கிய

நமது பொதிகை 24 மணிநேர செயற்கை கோள் ஒளிபரப்பாக மாற்றப்பட்டு இந்தியாவின் இன்சாட்3எ முலம் கேபிள்டிவியின் முலமாகவும் பின்பு இந்தியாவின் 2003 ஆண்டு தொடங்கிய இலவச டிடி எச் சேவை முலமும் பொதிகை தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் நாட்டின் அனைத்து பகுதிகளில் மற்றும் மலைபகுதிகளில் வாழம் தமிழ்ர்களுக்கு தெளிவான  ஒளிபரப்பு கிடைக்கப் பெற்றது எத்தனை தமிழ்தொலைக்காட்சிகள் தொடங்கினாலும் பொதிகை டிவிக்கு மிகையாகது.வரும் 14 ஏப்ரல் 2013 அன்று நமது பொதிகை 20 ஆண்டில் அடியேடுத்து வைக்கிறது.20 ஆண்டுகளாமக தமிழ்ர்களுக்கென்று இன்று வரை இலவசமாக பல்சுவை நிகழ்ச்சிகளை தரும் நமது பொதிகை தொலைக்காட்சியின் பணி தொடருட்டும் என வாழ்த்துவோம்




                                                                                                               தொகு்ப்பு
                                                                                                           K.சதீஸ் சாட்       

சேனல்UFX மியூசிக் தொடங்கப்பட்டது இன்டல்சாட்17@66.0Eல்

 புதிய மியூசிக் தொலைக்காட்சிஒன்று இன்டல்சாட்17ல் சேனல்UFX மியூசிக் என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது.இந்த தொலைக்காட்சி 8 மாதங்களுக்கு முன்பு இதே செயற்கைகோளில் ஒளிபரப்பு செய்யப்பட்டு பின்பு நிறுத்தப்பட்டது.மிண்டும் அதே  இன்டல்சாட்17ல் தற்சமயம் புதிய வடிவத்தில் ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.இந்த  சேனல்UFX  தமிழ், மலையாலம், தெலுங்கு, கன்னடா, ஹிந்தி, ஆங்கிலம் போன்ற பல்வேறு மொழி பாடல்களை வழங்குகிறது.


அலைவரிசையின் விபரங்கள்
freq       4015
sym      30000
polar     vertical
system   mpeg4/dvb s2
mode     fta

12/03/2013

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 புதிய தொலைக்காட்சி தொடக்கியது ஆசியாசேட்3எஸ்


இந்தியாவில் மேலும் ஒரு புதிய விளையாட்டு தொலைக்காட்சி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தால் தொடங்கப்பட்டுள்ளது.ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 தொலைக்காட்சி தற்சமயம் ஆசியாசேட்3எஸ் என்ற செயற்கைகோளில் சோதனை ஒளிபரப்பு கட்டண சேனலாக தொடங்கப்பட்டுள்ளது.ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 பொறுத்தமட்டிலும் மடடைபந்து போட்டி இறகு பந்து போட்டி புட்பால் போன்ற அனைத்து போட்டிகளையும் நேரடியாக வழங்கும் எனவும் அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

10/03/2013

CCL நட்சத்திரங்கள் நடிகர்கள் மட்டைபந்து நேரடி அன்ஜன்டிவி

இந்திய நட்சத்திர நடிகர்கள் பங்கு பெறும் 20க்கு 20 ஓவர் மட்டைபந்து ஆட்டங்களை நேரடியாக இந்தி தொலைக்காட்சியான அன்ஜன்டிவி  ஒளிபரப்புகிறது.மற்றும் மலையாளத்தின் முதற் தர தொலைக்காட்சியான ஏசியாநெட் மிடில் ஈஸ்ட் நேரடியாக ஒளிபரப்புகின்றது
இந்த இரு தொலைக்காட்சிகளும் இன்டலசாட்17 மற்றும் இன்டல்சாட்20 இலவசமாக ஒளிபரப்பாகிறது என்பது கூறிப்பிடதக்கது.


அலைவரிசையின் விபரங்கள்
அன்ஜன்டிவி
sat       is20@68.0e
freq     3742
sym    7000
polar   v

ஏசியாநெட் மிடில் ஈஸ்ட்
sat        is17@66.0e
freq      4025
sym      4440
polar    v

08/03/2013

ஸ்ரீலங்கா vs பாங்களாதேஷ் மட்டைபந்து போட்டி நேரடி சிஎஸ்என்&மாஸ்ரன்கா

ஸ்ரீலங்கா கிரிகெட் அணி பாங்களாதேஷ் நாட்டிற்கு சுற்றுபயணம் மேற்கொள்வதை அடுத்து அங்கு நடைபெறும் ஒருநாள் மற்றும் டெஸ்ட்   மட்டைபந்து போட்டிகளை நேரடியாக ஸ்ரீலங்காவின் முதற் தர விளையாட்டு தொலைக்காட்சியான சிஎஸ்என் மற்றும் பாங்களாதேஷ்யின் மாஸ்ரன்க டிவி நேஷனல் ஆகிய தொலைக்காட்சிகள்  மார்ச் 8 திகதி முதல் 31 திகதி வரை வழங்குகிறது.தற்சமயம் பிஸ் கட்டண சேனல்களாக அப்ஸ்டார்7ல்  ஒளிபரப்பாகிறது.


அலைவரிசையின் விபரங்கள்
fre          4048
sym       2442
polar     vertical
system  mpeg4/dvbs2
mode    fta

DD தமிழ் புதிய தொலைக்காட்சி இலங்கையில் தொடக்கம்

இலங்கை தமிழ் அன்பர்களே புதிய தமிழ் தொலைக்காட்சி  ஒன்று DDடிவி  என்ற பெயரில்தொடங்கப்பட்டுள்ளது. இந்த தொலைக்காட்சியை பொருத்தமட்டிலும் தமிழ் தொடர்பான அனைத்து  நிகழ்ச்சிகளை வழங்குகிறது.  தினந்தோறும் இரு திரைப்படங்கள் புதிய திரைபாடல்கள் காமெடி செய்திகள் என பல்வேறு நிகழ்ச்சிகளை வழங்குகிறது. இலங்கையில் கொழம்புவில்
மடடும் ஒளிபரப்பாகும் DDடிவி செயற்கைகோள் ஒளிபரப்பு கிடையாது.

05/03/2013

மார்ட் ஆர்ட்ஸ் எச்டி தொடங்கம் மீயாசாட்3@91.0யில்

மலேசியாவின் அஸ்ட்ரோ நிறுவனம் தன்னுடைய C-BAND சேனல் வரிசையில் புதிய எச்டி தொலைக்காட்சியான மார்ட ஆர்ட்ஸ் எசடி தொடங்கியுள்ளனர்.இந்த சேனலை பொருத்தமட்டிலும் குத்துசண்டை கூங்கு பு மற்ற இதர நிகழ்ச்சிகளை வழங்குகிறது.

அலைவரிசையின் விபரங்கள்
 freq       4120
sym        30000
polar      h
system    hd mpeg4/dvbs 2
mode      fta  

04/03/2013

CSN ஸ்போர்ட்ஸ் செயற்கைகோள் ஒளிபரப்பு மாற்றம் apstar7@76.0eல்

சிஎஸ்என் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி தனது ஒளிபரப்பை இன்டல்சாட்906ல் இருந்து புதிய செயற்கைகோளான apstar7க்கு மாற்றியுள்ளனர்.இந்த மாற்றம் கடந்த வெள்ளிமுதல் புதிய செயற்கைகோளுக்கு இடமாற்றியுள்ளனர்.முன்பு இருந்ததை விட தற்போது dvbd s2 தொழில்நுட்பத்தில் மாற்றியுள்ளனர். மேலும் இந்த செயற்கைகோளை பொருத்தமட்டிலும் பாங்களதேஷ் நாட்டின் சேனல்9 மாஸ்ரன்கா போன்ற தொலைக்காட்சிகளும் இடம் பெற்றிருப்பது குறிப்பிடதக்கது.  சிஎஸ்என் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி கட்டண தொலைக்காட்சியாக apstar7ல் ஒளிபரப்படுகிறது.தற்சமயம் apstar7ல்  இலவசமாக ஒளிபரப்பாகிறது.

புதிய அலைவரிசையின் விபரங்கள்
freq     4048
sym     2447
poalr    vertical
system   mpeg4/dvbs 2
mode    pasy/fta

02/03/2013

மைடிவி புதிய தொடக்கம் இன்டல்சாட்20@68.0eல்

மைடிவி புதிய தொலைக்காட்சி சோதனை ஒளிபரப்பு தொடக்கம் இன்டல்சாட்20 தொடங்கியுள்ளனர்.

அலைவரிசையின் விபரங்கள்
freq    3753
sym    9299
polar   V
system  mpeg4/dvbs 2
mode   fta

இந்தியன் பிரிமியன் லீக் மட்டைபந்து போட்டிகள் நேரடி சேனல்9ல்

இந்தியன் பிரிமியர் லீக்யின் ஆறாவது 20க்கு20 ஒவர்  மட்டைபந்து போட்டிதொடர்களை பாங்களதேஷ் நாட்டின் பிரபல  தொலைக்காட்சியான சேனல்9 அனைத்து போட்டிகளையும் வரும் ஏப்ரல்3 திகதிமுதல் நேரடி ஒளிபரப்பு செய்யவுள்ளனர்.தறசமயம் சேனல்9 அனாது இலவசமாக apstar7 செயற்கைகோளில் ஒளிபரப்பாகிறது.



அலைவரிசையின் விபரங்கள்
freq        3792
sym        4443
polar      H
system   dvbs /mpeg4
mode     fta