சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

27/11/2014

ராஜ் டிவி குழுமத்தின் தொலைக்காட்சிகளின் செயற்கைகோள் ஒளிபரப்பு சைனாசாட்12@87.5Eக்கு மாற்றம்

நண்பா்களே தென் தமிழகத்தின் முன்னனி பொழுது தொலைக்காட்சிகளை ஒளிபரப்பி வரும் ராஜ டிவி குழுமத்தின் தொலைக்காட்சிகளின் செயற்கைகோள் ஒளிபரப்பு ஆசியாசாட்5@100.5E செயற்கைகோளில் இருந்து சைனாசாட்12 எனும் புதிய செயற்கைகோளுக்கு மாற்றம் 
செய்யப்படவுள்ளது.தற்சமயம் இதற்கான தொழில்நுட்ப பணிகள் நிறைவடைந்து சைனாசாட்12@87.5E செயற்கைகோளில் சோதனை ஒளிபரப்பை தொடங்கியுள்ளனா்.தற்சமயம் ராஜ் டிவி மட்டும் ஒளிபரப்பை தொடங்கியிருக்கும் நிலையில் மாற்ற தொலைக்காட்சிகளும் விரைவில் ஒளிபரப்பை தொடங்கலாம்.இப்புதிய செயற்கைகோளில் கடந்த சில 
மாதங்களுக்கு முன்பு ஒளிபரப்பை தொடங்கி நிறுத்தம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடதக்க செய்தியாகும்.இப்புதிய அலைவரிசையின் சிக்னலை பெற குறைந்த பட்சம் 8 முதல் 10.12.16 அளவுள்ள சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.மேலும் தொடங்கப்பட்டுள்ள அலைவரிசை MPEG4/DVB S2 தொழில்நுட்பத்தில் சிக்னல் கிடைக்கிறது.ஆசியாசாட்5 யில் ஒளிபரப்பாகிய இலவச தொலைக்காட்சிகளே இப்புதிய செயற்கைகோளில் ஒளிபரப்பாகும்.
புதிய அலைவரிசை விபரங்கள்;
Freq Rate               4140
Symbol Rate          28800
Polar                     Vertical
Modulation            Mpeg4/dvb s2
Mode                    Fta/Irdeto2

23/11/2014

பிளவா் டிவி புதிய மலையாள பொழுதுபோக்கு தொலைக்காட்சி ஒளிபரப்பு இன்டல்சாட17@66.0Eயில் தொடக்கம்

நண்பா்களே கேரளா மாநிலத்தின் புதிய பொழுது போக்கு தொலைக்காட்சி பிளவா்டிவி என்ற பெயரில் தொடக்கப்பட்டு்ள்ளது.இப்புதிய மலையாள தொலைக்காட்சியின் உலகளாவிய செயற்கைகோள் ஒளிபரப்பு மலையாள 
தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும் ஈசல் சியாம் ஒளிபரப்பு முனையத்தின் புதிய அலைவரிசையில் சோதனை ஒளிபரப்பு தொடக்கப்பட்டுள்ளது.தற்சமயம் மலையாள திரைப்பாடல்களுடன் தொடக்கப்பட்டுள்ள பிளவா்டிவியின் 24 மணிநேர ஒளிபரப்பு சேவை விரைவில் தொடங்கப்படலாம்.கேரளா மாநிலத்தை பொறுத்தமட்டிலும் பொழுது போக்கு தொலைக்காட்சிகள் எண்ணிக்கை வெகுவாக கடந்த இரண்டு  வருடங்களில் அதிகரித்துள்ளது.பிளவா் தொலைக்காட்சியின் அலைவரிசை சிக்னலை பெற குறைந்தபட்சம் 8 மற்றும் அதற்கு மேற்பட்ட சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.
அலைவரிசை விபரங்கள்
Freq Rate           3966
Symbol Rate       8800
Polar                   Vertical
Modultion            Mpeg4/Dvb s2
mode                   Fta

15/11/2014

மாங்கோலிய நாட்டு D டிஷ்டிவி ஹெச்டி தொலைக்காட்சிகள் டெல்ஸ்டார் 18@138,0E தொடக்கம்

நண்பா்களே மங்கோலிய நாட்டு டிடிஎச் தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவையான D டிஷ்டிவி குழுமத்தின் அதிநவின ஹெச்டி தொலைக்காட்சிகள் 
இலவச ஒளிபரப்பாக தொடங்கப்பட்டுள்ளது.இவற்றில் பிபிசி நாலேஜ் எச்டி.SPS பிரைம் எச்டி.அமெரிக்கா நாட்டின் சிபிஎஸ் டிவி நிகழ்ச்சிகளை வழங்கும் RTL&CBS என்டொ்ய்மென்ட் எச்டி.RTL&CBS எக்ஸ்டிரிம் எச்டி.போன்ற தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகிறது.இவற்றின் ஒளிபரப்பு தற்காலிக 
இலவச ஒளிபரப்பே எவ்வித நேரங்களிலும் கட்டண தொலைக்காட்சிகளாக மாற்றப்படலாம்.ஆசியா நாடுகளுக்கு மிக எளிதாக இத்தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும் செயற்கைகோளான TELSTAR18@138.0E அலைவரிசைகள் 60செமீ அளவுள்ள டிஷ் ஆன்டெனா முலம் கிடைக்கிறது.
அலைவரிசை விபரங்கள்;
Freq Rate            12630
Symbol Rate         43200
Polar                     Horizontal
Modulation            HD.Mpeg4/Dvb s2
Mode                    Fta

09/11/2014

எபிக் டிவி ஹெச்டி( EPIC TV HD HIINDI)புதிய இந்தி பொழுதுபோக்கு தொலைக்காட்சி ஒளிபரப்பு இன்டல்சாட்20@68.5Eயில் தொடக்கம்

நண்பா்களே இந்தியாவின் வடமாநில மக்களின் பொழுது தொலைக்காட்சிகளின் வரிசையில் இந்தி மொழியில் 24 மணிநேர பொழுது போக்கு தொலைக்காட்சி அதிநவின உயா்தர தொழில்நுட்பமான ஹெச்டி 
வடிவில் எபிக் தொலைக்காட்சி நிறுவனத்தின் முதல் பொழுது போக்கு தொலைக்காட்சியாக எபிக் டிவி என்ற பெயரில் புதிதாக தொடக்கப்பட்டுள்ளது.இப்புதிய ஹெச்டி தொலைக்காட்சியின் உலகளாவிய செயற்கைகோள் ஒளிபரப்பு ஈசல் சியாம் டெலிஸ்பாட் ஒளிபரப்பு நிறுவனத்தின் அலைவரிசையில் இன்டல்சாட்20 செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது.தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளின் 24 மணி நேர 
ஒளிபரப்பு நவம்பா் 19 திகதி முதல் தொடக்கப்பட வுள்ளது.வரலாற்று புராண தொடா்கள்.மாயஜால திகில் தொடா்கள் மற்றும் எண்ணற்ற நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகவுள்ளது.தொலைக்காட்சியின் சோதனை ஒளிபரப்பு அடிப்படையில் இலவச தொலைக்காட்சியாக தற்சமயம் தொடக்கப்பட்டுள்ளது.24 மணி நேர ஒளிபரப்பு தொடக்கப்பட்டதும் கட்டண தொலைக்காட்சியாக மாற்றமடையலாம்.வடமாநிலங்களை 
பொறுத்தமட்டிலும் மிக முன்னனி நிறுவன பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளுக்கு மத்தியில் இப்புதிய ஹெச்டி தொலைக்காட்சி மிக வித்தியாசமான முறையில் நிகழ்ச்சிகளை வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.அலைவரிசை சிக்னல் மிக எளிதான 6.8.10.12.16 பிட் சிபேன்ட் டிஷ் ஆன்டெனாகளில் கிடைக்கப்பெறும்.
அலைவரிசை விபரங்கள்;
Freq Rate       4180
Symbol Rate   21600
Polar               Vertical
Modulation      HD.Mpeg4/dvb s2
Mode              Irdeto2/Fta

06/11/2014

நியூஸ் 7 தமிழ் செய்திகள் தொலைக்காட்சி ஒளிபரப்பு டிஷ்டிவிடிடிஎச்யில் NSS6@95.0E தொடக்கம்

நண்பா்களே தமிழ் நாட்டில் கடந்த வாரத்தில் புதிதாக தொடக்கப்பட்ட தமிழ் செய்திகள் தொலைக்காட்சியான நியூஸ்7 ஒளிபரப்பை விரிவுபடுத்தும் வகையில் அனைத்து தனியார் டிடிஎச்களிலும் புதிதாக சோ்க்கப்பட்டு 
வருகிறது.அத்தவகையில் சன் டிடிஎச்.ஏா்டெல் டிடிஎச் களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நியூஸ்7 தொலைக்காட்சி ஒளிபரப்பை தொடக்கியது.தற்சமயம் இந்தியாவின் மற்றொரு டிடிஎச் சேயைான டிஷ்டிவி டிடிஎச்யில் ஒளிபரப்பை தொடக்கியுள்ளது இப்புதிய தமிழ் செய்திகள் தொலைக்காட்சியான நியூஸ்7 தற்காலிக அடிப்படையில் முறையில்இலவச 
ஒளிபரப்பாக டிஷ்டிவி நிறுவனத்தின் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும் செயற்கைகோளான NSS6@95.0Eயில் ஒளிபரப்பாகிறது.இலவச ஒளிபரப்பு எந்நேத்திலும் நிறுத்தப்படலாம்.மிக எளிதான MPEG2/DVB Sதொழில்நுட்ப செட் டாப் பாக்ஸ்யில் ஒளிபரப்பை காணும் வகையில் தொடக்கப்பட்டுள்ளது.
அலைவரிசை விபரங்கள்;
Freq Rate               12537
Symbol Rate           40700
Polar                       Vertical
Modulation              Mpeg2/Dvb s
Mode                      Fta

04/11/2014

விண் டிவி( WIN TV TAMIL)தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு இன்டல்சாட்17@66.0E செயற்கைகோளில்

நண்பா்களே தமிழ் தொலைக்காட்சிகள் வரலாற்றில் அன்று முதல் இன்று வரை மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து தொடா்ச்சியாக நிகழ்ச்சிகளை வழங்கி வரும் தமிழ் தொலைக்காட்சியான விண் டிவி பற்றிய தொகுப்பு
தமிழகத்தில் தொலைக்காட்சிகள் எண்ணிக்கை கடந்த சில வருடங்களில் வெகுவாக அதிகரித்துள்ளன.புதிய தமிழ் தொலைக்காட்சிகளின் அதிகரிப்பால் நிண்டகால தொலைக்காட்சிகள் தங்கள் நிலையில் மாற்றம் செய்து அத்தொலைக்காட்சிகளுக்கு நிகராக நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றன.அந்த வரிசையில் பார்த்தோம் என்றால் விண் 
தமிழ்தொலைக்காட்சி தொடக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகின்றன.ஆனால் இன்றைய சூழ்நிலையில் இத்தொலைக்காட்சிகள் தொழில்நுட்பத்தில் மாற்றம் எற்படுத்தி மக்கள்பணியில் செயலாற்றி வருகிறது.விண் தொலைக்காட்சி 1994 ஆம் ஆண்டு காலத்தில் தொடங்கப்பட்டு இன்று வரை இலவச ஒளிபரப்பாக தன் நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது.தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் என்று பார்த்தால் 
பொழுதுபோக்கு.அரசியல் தொடா்பான விவாத நிகழ்ச்சிகள்.மற்றும் விளையாட்டு மற்றும் பல நிகழ்ச்சிகளை வழங்குகிறது.விண் தொலைக்காட்சியின் உலகளாவிய செயற்கைகோள் ஒளிபரப்பு இன்டல்சாட்17 செயற்கைகோளில் சென்னை டெலிஸ்பாட் முனையத்தின் முலம் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.விண் தொலைக்காட்சி அரசு கேபிள் 
மற்றும் தனியார் கேபிள் நிறுவனங்களில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.அரசு மற்றும் தனியார் டிடிஎச் சேவைகளில் விண்டிவியின் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு இடம்பெறவில்லை என்பது குறிப்பிடதக்க விடையாமாகும்.விண் தொலைக்காட்சியை தங்கள் வீடுகளிலோ அல்லது அலுவலகத்திலோ காண விரும்பினால் தொடா்பு கொள்ளுங்கள் சதிஸ்சாட் தமிழ் தளத்தை.
அலைவரிசை விபரங்கள்:
satellite            :  Intelsat17@66.0E
Frequncy         :  4015
Symbol Rate    : 30000
Polar               ; Vertical
Modulation      : Mpeg4/dvb s2
Mode              : FTA

01/11/2014

துா்தா்ஷனின் டிடி பிரி டிஷ் சேவையில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சிகளில் டிடி பிரி முத்திரை(லோகோ)அறிமுகம்

நண்பா்களே இந்திய அரசின் பொது ஒளிபரப்பு நிறுனமான துா்தா்ஷன் வழங்கும் வீடு தேடி வரும் டிடி பிரி டிஷ் இலவச இந்திய தொலைக்காட்சிகள் சேவையில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.டிடி பிரி டிஷ் சேவையில் 
ஒளிபரப்பாகும் அனைத்து தொலைக்காட்சிகளிலும் டிடி பிரி டிஷ் டிடிஎச் சேவையின் புதிய முத்திரை(லோகோ) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இம்மாற்றம் டிடி பிரி டிஷ்யில்ஒளிபரப்பாகும் மூன்று அலைவரிசைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இனி வரக்கூடிய காலங்களில் இலவச ஒளிபரப்பு சேவையில் இடம்பெறும் 
தொலைக்காட்சிகள் அனைத்திலும் இப்புதிய முத்திரை இடம் பெறும்.இந்தியாவில் செயல்படும் மாற்ற தனியார் டிடிஎச் சேவை நிறுவனங்கள் இதே முறையில் தொலைக்காட்சிகளை ஒளிபரப்பாகி வருவது குறிப்பிடதக்கது.இதன் முலம் இந்தியாவின் டிடி பிரி டிஷ் இலவச தொலைக்காட்சிகளை தவறாக பயன்படுத்துவது முற்றிலும் தடுக்கபடும்.
டிடி பிரி டிஷ் டிடிஎச் இந்திய அரசால் கடந்த 2003ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் கட்டணமின்றி இலவச தொலைக்காட்சிகளை அனைத்து தரப்பு மக்களும் காண கூடிய முறையில் தொடங்கப்பட்டு அடிதட்டு மக்களிடையே சிறந்த வரவேற்ப்பும் கிடைத்தது.அரசின் இச்சேவை முலம் மலைவாழ் மற்றும் எல்லை புற மக்களும் மிக பயன் அடைந்துள்ளனா் குறிப்பிடதக்கது.டிடி பிரி டிஷ் 
சேவையை மக்களிடையே கொண்டு சோ்க்கும் வகையில் புதிய தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பை இணைத்து வருகிறது.தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பில் அரசு தொலைக்காட்சியான டிடிபொதிகை டிவி மட்டும் டிடி பிரி டிஷ்யில் ஒளிபரப்பை வழங்கி வருவது குறிப்பிடதக்க செய்தியாகும்.