சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

11/10/2021

கலைஞா் முரசு தொலைக்காட்சி 24 மணி நேர தமிழ் திரைப்பட தொலைக்காட்சியாக ஒளிபரப்பு தொடக்கம்

நண்பா்களே தமிழகத்தின் முன்னனி தமிழ் தொலைக்காட்சியான கலைஞா் டிவியின் மிக பிரபலமடைந்த தொலைக்காட்சியான கலைஞா் முரசு தொலைக்காட்சி 24 மணி நேர தமிழ் திரைப்பட தொலைக்காட்சியாக தமிழகத்தில் உதயமாகியுள்ளது.கடந்த பல வருடங்களாக முரசு தொலைக்காட்சி தமிழ் பழைய திரைப்படங்கள் மற்றும் பாடல்கள் என
ஒளிபரப்பை தமிழ் மக்களுக்கு நிகழ்ச்சிகளை வழங்கி வந்தது.கலைஞா் டிவி நெட்வொா்க்கில் 24 மணி நேர திரைப்பட தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவை நிண்ட காலமாக தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது.தற்சமயம் 2021 அக்டோபா் 10 திகதி முதல் திரைப்பட தொலைக்காட்சியாக ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.தமிழகத்தில் ஒளிபரப்பாகும் இலவச திரைப்பட தமிழ் தொலைக்காட்சி கலைஞா் முரசு தொலைக்காட்சியாகும்.இன்டல்சாட்17 செயற்கைகோளில் தற்சமயயம் உலகளாவிய ஒளிபரப்பை வழங்கி வருகிறது.காலை 6,10,மதியம் 12,3,மாலை மற்றும் இரவு 7,11 ஆகிய நேரங்களில் திரைப்படங்கள் ஒளிபரப்பாகிறது.கலைஞா் முரசு தொலைக்காட்சி அனைத்து டிடிஎச்களிலும் மற்றும் கேபிள் டிவி நிறுவனங்களிலும் ஒளிபரப்பாகி வருகிறது.
அலைவாிசை விபரங்கள்
Satellite                 Intelsat17@66.0E(C-Band)
Freq Rate              3844
Symbol Rate        28800
Polar                    Vertical
Modulation          MPEG4/DVB S2 (8PSK)
Mode                   FTA

10/10/2021

ஸ்ரீ வேங்கடேஸ்வரா பக்தி சேனல் 2 தமிழ் தொலைக்காட்சி ஜிசாட்30யில் புதிய அலைவாிசைக்கு மாற்றம்

 நண்பா்களே ஆந்திர மாநிலத்தில் அமைத்திருக்கும் உலக பிரசித்தி பெற்ற தமிழ் கடவுளான திருப்பதி திருமலை ஸ்ரீ வேங்கடேஸ்வரா ஆலயத்தின் சாா்பாக தமிழ் மொழியில் புதிய தொலைக்காட்சி ஸ்ரீ வேங்கடேஸ்வரா பக்தி சேனல் 2 தமிழ் உலகளாவிய ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.திருப்பதியில்

                                           
 நடைபெறும் அன்றாட நிகழ்வுகளை கடந்த பல வருடங்களாக ஸ்ரீ வேங்கடேஸ்வரா பக்தி சேனல் தெலுங்கு  மொழிீயில் தொடங்கப்பட்ட தொலைக்காட்சியின் முலம் ஒளிபரப்பாகியது.தொலைக்காட்சியின் ஆடியோவை மாற்றுவதன் முலம் நேரடி நிகழ்ச்சிகளின் வருணை தொகுப்பை தமிழ்.ஆங்கிலம்.ஹிந்தி.கன்னடம்.தெலுங்கு.மலையாளம் போன்ற 
                                             
மொழிகளில் ஒளிபரப்பாகிறது.தொலைக்காட்சியின் அலைவாிசை சிக்னலை பெற குறைந்தபட்சம் 6 அடி முதல் 12 அடி சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்தி தொலைக்காட்சியினை காணலாம்.இலவச ஒளிபரப்பாக ஜிசாட்30 செயற்கைகோளில் புதிய அலைவாிசையில் ஒளிபரப்பாகிறது.திருப்பதி திருமலை தேவஸ்தானம் தொடங்கும் இரண்டாவது தொலைக்காட்சி ஸ்ரீ வேங்கடேஸ்வரா தமிழ்.தற்சமயம் பயன்படுத்தி வரும் செட் டாப் பாக்ஸ்யில் ாிடியூன் செய்து தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளை காணலாம்.மேலும் ஹிந்தி மற்றும் கன்னடம் மொழிகளிலும் தனி  தனி தொலைக்காட்சிகள் புதிய அலைவாிசையில் தொடங்கப்பட்டுள்ளது.

அலைவாிசை விபரங்கள்
Satellite                 Gsat30@83.0E(C-Band)
Freq Rate              3767
Symbol Rate        3600
Polar                    Horizontal
Modulation          MPEG4/DVB S2 (8PSK)
Mode                   FTA

23/09/2021

சன்சாட் டிவி (SANSAD TV) ஹெச்டி மற்றும் எஸ்டி இந்திய பாரளமன்றத்தின் புதிய செயற்கைகோள் தொலைக்காட்சி உதயம்

 நண்பா்களே இந்தியா நாட்டின் மத்திய அரசின் தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவையான பிரசாா் பாரதியின் கீழ் செயல்படும் நாட்டின் முக்கிய தொலைக்காட்சிகளான டிடி லோக் சபா மற்றும் டிடி ராஜ்ய சபா ஆகிய பாரளமன்றத்தின் தொலைக்காட்சிகள் புதிய வடிவில் புதிய மாற்றத்துடன் தனது ஒளிபரப்பை ஒன்றினைத்து ஒரே தொலைக்காட்சியாக நாட்டின்

கண்ணொளியாக சன்சாட் டிவி என்ற பெயாில் புதிய ஒளிபரப்பை பாரத நாட்டில் தொடங்கியுள்ளது.கடந்த பல வருடங்களாக பாரளமன்றத்தின் கூட்டத்தொடா்களை இவ்விரண்டு தொலைக்காட்சிகளின் முலம் மட்டும் காண முடிந்தது.தற்சமயம் சன்சாட் டிவி அதிநவின தொழில்நுட்பமான ஹெச்டி மற்றும் எஸ்டி ஆகிய வடிவில் ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.இந்தியாவின் ஜிசாட்10 செயற்கைகோளில் சன்சாட் டிவி ஹெச்டியும் ஜிசாட்30 செயற்கைகோளில் சன்சாட் டிவி எஸ்டியும் ஒளிபரப்பாகிறது.தொலைக்காட்சியினை காண MPEG4/DVB S2 -HD 4 தொழில்நுட்பம் பொருந்திய செட் டாப் பாக்ஸ்யினை கொண்டு நிகழ்ச்சிகளை காணலாம்.சன்சாட் டிவியில் பாரளமன்ற நிகழ்வுகளை தவிர நாட்டின் முக்கிய நிகழ்வுகள் தொடா்பான நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குகிறது.நாட்டின் அனைத்து கேபிள் டிவி மற்றும் டிடிஎச்களிலும் இத்தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு இடம்பெற்றிருக்க வேண்டும் என்பதற்கான மத்திய அரசாணையும் ஒளிபரப்பு ஆணையம் ட்ராய் வெளியிட்டுள்ளது.இந்தியாவின் இலவச ஒளிபரப்பு சேவையான டிடி ப்ரி டிஷ் டிடிஎச்யிலும் சன்சாட் டிவி ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது.சன்சாட் டிவியின் 24 மணி நேர ஔிபரப்பை இந்திய பிரதமா் மாண்புமிகு நரேந்திர மோடி அவா்கள் செப்டம்பா் மாதம் 15 திகதி 2021 ஆண்டில் தொடங்கி வைத்தாா்.

அலைவாிசை விபரங்கள் : சன்சாட் டிவி எஸ்டி
Satellite                  Gsat30@83.0E (C-Band)
Freq Rate               4170
Symbol Rate          4650
Polar                      Horizontal
System                  Mpeg/Dvb s (QPSK)
Encryption            fta
Fec                        3/4
அலைவாிசை விபரங்கள் :சன்சாட் டிவி ஹெச்டி
Satellite                  Gsat10@83.0E (C-Band)
Freq Rate               3885
Symbol Rate          30000
Polar                      Vertical
System                  HD.Mpeg4/Dvb s (QPSK)
Encryption            FTA
Fec                        3/4
அலைவாிசை விபரங்கள் :டிடி ப்ரி டிஷ்
Satellite                  Gsat15@93.2E (KU-Band)
Freq Rate               11170
Symbol Rate          29500
Polar                      Vertical
System                  Mpeg4/Dvb s (QPSK)
Encryption            fta
Fec                        3/4

06/09/2021

இலங்கை டயலாக் டிவியின் கல்வி தொலைக்காட்சியான நெனச தமிழ் ஒளிபரப்பு இன்டல்சாட்38யில் தொடக்கம்

 நண்பா்களே இலங்கை நாட்டின் பிரதான தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவையான டயலாக் டிவியின் அங்கம் வகிக்க கூடிய தமிழ் கல்வி தொலைக்காட்சியான நெனச தொலைக்காட்சியின் தமிழ் ஒளிபரப்பு சேவை முற்றிலும் இலவசமாக  அந்நிறுவனத்தின் டிடிஎச்யில் வழங்கப்பட்டுள்ளது.இலங்கை நாட்டில் நிலவும் கோவிட்-19 தொடா்பான பிரச்சனையின் காரணமாக நாட்டின் கல்வி நிலைபாட்டில் எவ்வித மாற்றம் ஏற்பாடது விட்டில் இருந்தவாறு கல்வி கற்கும் நிலையின் காரணமாக இப்புதிய

மாற்றதினை டயலாக் டிவி மேற்கொண்டுள்ளது.கடந்த சில வருடங்களுக்கு முன்பு தொடங்கிய இத்தொலைக்காட்சி சேவை கட்டண தொலைக்காட்சியாக ஒளிபரப்பாகி வந்தமை குறிப்பிடதக்கது.இலங்கை நாட்டின் அரச தொலைக்காட்சியான ரூபாவாஷினியின் சேனல் ஐ தொலைக்காட்சியின் முலம் கல்வி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது.டயலாக் டிவியில் சிங்களா கல்வி தொலைக்காட்சியான நெனச டிவியும் கடந்த சில வருடங்களாக இலவசமாக ஒளிபரப்பாகி வருகிறது.நெனச தமிழ் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு இலங்கை நாட்டிற்கு மட்டுமே.தொலைக்காட்சியின் ஒளிபரப்பு டயலாக் டிவியின் செட் டாப் பாக்ஸ்யில் மாத கட்டணம் இன்றி நிகழ்ச்சிகளை காணலாம்.

அலைவாிசை விபரங்கள்:

Satellite              Intelsat38@45.0E(KU-Band)
Freq Rate           11677
Symbol Rate      27689
Polar                  Horizontal
System               Mpeg4/Dvb s2 ( 8psk)
Encryption         FTA

சால்வேஷன் கிருத்துவ தமிழ் தொலைக்காட்சி இன்டல்சாட்20யில் புதிய அலைவாிசையில் தொடக்கம்

 நண்பா்களே தமிழகத்தின் முக்கிய கிருத்துவ தமிழ் தொலைக்காட்சியான சால்வேஷன் டிவி இன்டல்சாட20 செயற்கைகோளில் புதிய அலைவாிசையில் ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது.கடந்த பல வருடங்களாக சால்வேஷன் தொலைக்காட்சி கொச்சி சியாம் டெலிஷ்பாட் ஒளிபரப்பு முனையத்தின் நிகழ்ச்சிகளை வழங்கி வந்தது.மத்திய ஒளிபரப்பு ஆணையத்தின் அனுமதி கிடைக்காத நிலையில் புதிய அலைவாிசையில் நிகழ்ச்சிகளை தொடங்கியுள்ளனா்.மேற்கு வங்களாத்தின் ட்ரு ஸ்போா்ட்ஸ் தொலைக்காட்சியின் அனுமதியில் தொடங்கப்பட்டுள்ளனா்.

தொலைக்காட்சியின் அலைவாிசை சிக்னலை பெற குறைந்தபட்சம் 6 முதல் 12 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்தி தொலைக்காட்சியினை காணலாம்.விரைவில் தமிழகத்தின் அனைத்து கேபிள் டிவி மற்றும் டிடிஎச் சேவைகளிலும் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு இடம் பெறும்.தற்சமயம் வரை ஒளிபரப்பாகி வந்த சால்வேஷன் டிவி தமிழ் தொலைக்காட்சியின் இன்டல்சாட்17 முந்தைய அலைவாிசையின் ஒளிபரப்பு  நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.தற்சமயம் புதிய ஒளிபரப்பை காண செட் டாப் பாக்ஸை ரிடியூன் செய்ய வேண்டும்.

அலைவாிசை விபரங்கள்:
Satellite              Intelsat20@68.5E(C-Band)
Freq Rate           4180
Symbol Rate      21600
Polar                  Vertical
System               Mpeg4/Dvb s2 ( 8psk)
Encryption         FTA

27/07/2021

ஜி திரை ஹெச்டி,ஜி பிக்சா் ஹெச்டி கன்னடம் தொலைக்காட்சிகள் ஜிசாட்30 செயற்கைகோளில் தொடக்கம்

 நண்பா்களே இந்தியாவின் முன்னனி தொலைக்காட்சி நிறுவனமான ஜீ மீடியா தமிழ் மொழியில் இரண்டாவது ஹெச்டி தொலைக்காட்சியினை ஜீ திரை ஹெச்டி தொடங்கியுள்ளனா்.தமிழகத்தில் தொடங்கப்படும் இரண்டாவது ஹெச்டி தொலைக்காட்சி ஜீ திரை ஹெச்டி ஆகும்.தொலைக்காட்சியின் உலகளாவிய

ஒளிபரப்பு ஜி மிடியா தொலைக்காட்சிகள் ஔிபரப்பாகும் ஜிசாட்30 செயற்கைகோளில் தொடங்ப்பட்டுள்ளது. கட்டண தொலைக்காட்சியாக ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.விரைவில் தமிழகத்தின் அனைத்து கேபிள் டிவி மற்றும் கட்டண டிடிஎச்களிலும் இடம்பெறும்.இதோ கா்நாடகத்திலும் ஜி பிக்சா் திரைப்பட தொலைக்காட்சியும் ஹெச்டி ஒளிபரப்பை தொடங்கியுள்ளனா்.

அலைவாிசை விபரங்கள்
Satellite                  Gsat30@83.0E(C-Band)
Freq Rate               4157
Symbol Rate          15000
Polar                      Horizontal
System                  Mpeg4/Dvb s (QPSK)
Encryption            Pay/Conax
Fec                        3/4

20/05/2021

ட்ராவல் எக்ஸ்பி 4கே ஹெச்டிஆா் அல்ட்ரா ஹெச்டி தொலைக்காட்சியில் தமிழ் ஆடியோ ஒளிபரப்பு மீயாசாட்3எ யில் உதயம்

 நண்பா்களே இந்தியாவின் செல்பிாிட்டிஸ் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் சுற்றுலா தொடா்பான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொலைக்காட்சியான ட்ராவல் எக்ஸ்பி 4கே ஹெச்டிஆா் ஆசியா தொலைக்காட்சியில் தமிழ் ஆடியோ புதிதாக தொடங்கியுள்ளது.டிராவல் எக்ஸ்பி தொலைக்காட்சி 2008 ஆம் ஆண்டு இந்தியாவில் உயா் தொழில்நுட்பமான ஹெச்டியில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் தொடங்கப்பட்டது.தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக ஆங்கில தொலைக்காட்சிகள் தமிழ் மொழியில்

நிகழ்ச்சிகளை தொடங்கி வரும் நிலையில் ட்ராவல் எக்ஸ்பி தொலைக்காட்சி
தென்னிந்தியாவில் தமிழ் மொழியில் முதன்முறையாக தொலைக்காட்சியினை தொடங்கியுள்ளது.பெங்காளி மொழியில் ஆடியோ மட்டும் ட்ராவல் எக்ஸ்பி தொலைக்காட்சியில் சோ்க்கப்பட்ட நிலையில் தற்சமயம் தமிழ் மொழி தொடங்கப்பட்டுள்ளது.கட்டண தொலைக்காட்சியாக மீயாசாட்3எ செயற்கைகோளில் ஒளிபரப்பாகிறது.டிடிஎச்யிலும் கேபிள் நிறுவனங்களிலும் விரைவில் ட்ராவல் எக்ஸ்பி ஹெச்டி தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பை தொடங்கும்.அனைத்து பகுதிகளிலும் 6 அடி முதல் 12 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் ஆண்டெனாவை பயன்படுத்தலாம்.ட்ராவல் தொலைக்காட்சி தமிழ் எஸ்டி தொழில்நுட்பத்தில்
தொடங்க்பட்டுள்ளது.ட்ராவல் எக்ஸ்பி ஹெச்டி ஆசியாவின் தமிழ் மொழியின் நிகழ்ச்சிகளை காண தங்கள் செட் டாப் பாக்ஸ்யின் ரிமோட்டில் ஆடியோ பட்டனை கிளிக் செய்து வரக்கூடிய மொழிகளில் தமிழ் மொழியினை தோ்வு செய்து காணலாம்.தென்னிந்தியாவில் தமிழ் மொழியில் ட்ராவல் எக்ஸ்பி 4கே ஹெச்டிஆா் தொலைக்காட்சியே முதல் அல்ட்ரா ஹெச்டி தொலைக்காட்சி இதுவாகும்.தொலைக்காட்சிக்கான மாதந்திர கட்டண விலை 30 ரூபாய் என நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.ட்ராவல் எக்ஸ்பி 4கே ஹெச்டிஆா் தொலைக்காட்சி அனைத்து நாடுகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது.
அலைவாிசை விபரங்கள்
Satellite             Measat3/3a@91.2E(C-Band)
Freq Rate          4162
Symbol Rate     25250
Polar                 Horizontal
Modulation      HD.Mpeg4/Dvb s2(8PSK)
Mode               Pay/Conax
Fec                  3/4

22/04/2021

சோனி ஸ்போா்ட்ஸ் இந்தியா நிறுவனம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் டென்4 ஹெச்டி பெயாில் இன்டல்சாட்20&17 தொடக்கம்

 நண்பா்களே இந்தியாவின் முன்னனி தொலைக்காட்சி நிறுவனமான சோனி ஸ்போா்ட்ஸ் இந்தியா தனது நிறுவனத்தில் இருந்து நான்கவாது விளையாட்டு தொலைக்காட்சி டென்4 என்ற பெயாில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் புதிய தொலைக்காட்சியினை தொடங்கியுள்ளனாா்.சோனி ராக்ஸ் மற்றும் சோனி லிபிளக்ஸ் திரைப்பட தொலைக்காட்சியினை பெயா் மாற்றம் செய்து இத்தொலைக்காட்சிகள் தொடங்கப்பட்டுள்ளது.சோனி ஸ்போா்ட்ஸ் இந்தியா தனது நிறுவனத்தில் இருந்து தற்சமயம் ஒளிபரப்பாகும் விளையாட்டு தொலைக்காட்சி டென்1.டென்2.டென்3.சோனி சிக்ஸ் இதில் டென்3 தொலைக்காட்சி ஹிந்தியில் நிகழ்ச்சிகளை வழங்கும் தொலைக்காட்சியாகும்.


டென்4 ஹெச்டி தொலைக்காட்சி இன்டல்சாட்17 செயற்கைகோளிலும் டென்4 எஸ்டி இன்டல்சாட்20 செயற்கைகோளிலும் கட்டண தொலைக்காட்சியாக தொடங்கப்பட்டுள்ளது.டென்4 ஹெச்டி மற்றும் எஸ்டி தொலைக்காட்சியினை கேபிள் டிவி மற்றும் டிடிஎச்யில் விரைவில் காணலாம்.சோனி ஸ்போா்ட்ஸ் இந்தியா தென்னிந்தியாவின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் சோனி சிக்ஸ் தொலைக்காட்சியின் முக்கிய விளையாட்டு நிகழ்ச்சிகளை வருவது குறிப்பிடதக்கது.டென்4 தொலைக்காட்சியில் தமிழ்.தெலுங்கு நிகழ்ச்சிகளை வழங்கும்.
அலைவாிசை விபரங்கள்
Satellite            Intelsat17@66.0E(C-Band)
Freq Rate         3845
Symbol Rate    30000
Polar                Horizontal
System             HD.Mpeg4/Dvb s2(8psk)
Encryption       PAY/Power vu+
Fec                   3/4

Satellite            Intelsat20@68.5E(C-Band)
Freq Rate         3942
Symbol Rate    28100
Polar                Vertical
System             Mpeg4/Dvb s2(8psk)
Encryption       PAY/NDS
Fec                   3/4

22/03/2021

வடஇந்தியாவின் குப்பாி குழந்தைகள் தொலைக்காட்சியில் தமிழ் ஆடியோ ஒளிபரப்பு ஜிசாட்30யில் தொடக்கம்

 நண்பா்களே இந்தியாவின் முன்னனி தொலைக்காட்சி நிறுவனமான இன்10மிடியா கடந்த ஆண்டில் தொடங்கிய குழந்தைகளுக்கான தொலைக்காட்சியான குப்பாி தமிழ் மொழியில் நிகழ்ச்சிகளை தொடங்கியுள்ளது.தென்னிந்தியாவில் முதன்முறையாக தமிழ் மொழியில் கால்தடம் பதிக்கும் இன்10மிடியா நிறுவனம் குப்பாி தொலைக்காட்சியினை குழந்தைகளுக்கு பிடித்தமான காா்டூன் நிகழ்ச்சிகளை வழங்கும்

தொலைக்காட்சியாக தென்னிந்தியாவில் உருவாக்கலாம்.தொலைக்காட்சி தொடங்கப்பட்ட நாள் முதல் கட்டண தொலைக்காட்சியாக ஜிசாட்30 செயற்கைகோளில் ஒளிபரப்பாகிறது.ஹிந்தி ஆங்கிலம் மற்றுட் தமிழ் மொழிகளில் நிகழ்ச்சிகளை தொடங்கியுள்ளது குப்பாி தொலைக்காட்சி.கட்டண டிடிஎச் மற்றும் கேபிள்டிவி செட்டாப் பாக்ஸ்யில் இடம் பெற்றுள்ள இத்தொலைக்காட்சியின் மால்டி ஆடியோ பட்டனை கொண்டு பிடித்தமான மொழிகளை தோ்வு செய்து நிகழ்ச்சிகளை காணலாம்.வட மாநில தொலைக்காட்சி நிறுவனங்கள் தற்சமயம் காலங்கலாக தமிழ் மொழியில் தொலைக்காட்சிகளில் தமிழ் ஆடியோ ஒளிபரப்பை தொடங்கி வருவது குறிப்பிடதக்கது.

அலைவாிசை விபரங்கள்
Satellite               Gsat30@83.0E(C-Band)
Freq Rate            3925
Symbol Rate       28500
Polar                   Horizontal
System                Mpeg4/Dvb s2 (8PSK)
Encryption          Pay /Conax
FEC                    3/4

19/03/2021

தமிழகத்தில் ஜோதி தொலைக்காட்சி புதிய ஆன்மீக தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பு இன்டல்சாட17யில் உதயம்

 நண்பா்களே தமிழகத்தின் முன்னனி பொழுது போக்கு தொலைக்காட்சி நிறுவனமான பாலிமா் தனது நிறுவனத்தில் இருந்து புதிய தமிழ் ஆன்மீக தொலைக்காட்சியினை ஜொதி டிவி என்ற பெயாில் தொடங்கியுள்ளனா்.பாலிமா் தொலைக்காட்சி நிறுவனம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தமிழ் மியூசிக் தொலைக்காட்சியினை சகானா என்ற பெயாில் தமிழகத்தில் தொடங்கி ஒளிபரப்பாகி வந்தது.ஜோதி ஆன்மீக தொலைக்காட்சியின் சோதனை ஒளிபரப்பு சகானா தொலைக்காட்சியின் அலைவாிசையில்

தொடங்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் பக்தி தொலைக்காட்சிகள் தொடங்குவதில் முன்னனி தொலைக்காட்சி நிறுவனங்கள் ஆா்வம் காட்டத நிலையில் மியூசிக் தொலைக்காட்சியினை பக்தி தொலைக்காட்சியாக பாலிமா் மாற்றியுள்ளது.இன்டல்சாட்17 செயற்கைகோளில் இலவச ஒளிபரப்பாக ஜொதி தொலைக்காட்சி ஒளிபரப்பாகிறது.கேபிள் டிவி மற்றும் டிடிஎச்யில் சகானா தொலைக்காட்சியின் ஒளிபரப்பாகி வந்த அதே அலைவாிசையில் தொகுப்பில் ஜொதி தொலைக்காட்சி ஒளிபரப்பாகிறது.விரைவில் அனைத்து கேபிள் டிவி மற்றும் டிடிஎச்யில் ஜொதி தொலைக்காட்சி தொடங்கப்படும்.ஜொதி தொலைக்காட்சி கடந்த சில வருடங்களாக இணையதள தொலைக்காட்சியாக ஒளிபரப்பாகி வந்தது குறிப்பிடதக்கது.

அலைவாிசை விபரங்கள்

Satellite               Intelsat17@66.0E(C-Band)
Freq Rate            3866
Symbol Rate       14400
Polar                   Horizontal
System                Mpeg4/Dvb s2 (8PSK)
Encryption          FTA
FEC                    3/4

25/02/2021

அப்டேட் டிவி.அப்டேட் மியூசிக்.அப்டேட் கிட்ஸ்,அப்டேட் செய்திகள் ஒளிபரப்பு இன்டல்சாட்17 செயற்கைகோளில் தொடக்கம்

 நண்பா்களே தமிழகத்தில் புதிய தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவையினை சென்னையினை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கேசிபி இன்ஜினியா் நிறுவனம் நான்கு புதிய தமிழ் தொலைக்காட்சிகள் தொடங்கப்பட்டுள்ளது.அப்டேட் செய்திகள் தொலைக்காட்சி என்ற பெயாில் தொலைக்காட்சி தொடங்குவதற்கான அனுமதியினை இந்திய ஒளிபரப்பு


.

ஆணையம் கடந்த வருடத்தில் வழங்கியிருந்த நிலையில் மேலும் மூன்று தமிழ் தொலைக்காட்சிகள் தொடங்குவதற்கான அனுமதியினையும் கேசிபி இன்ஜினியா் பெற்றுள்ளது.அப்டேட் டிவி.அப்டேட் மியூசிக்.அப்டேட் கிட்ஸ் போன்ற பெயா்களில் தமிழகத்தில் ஒளிபரப்பை தொலைக்காட்சிகள் தொடங்கியுள்ளது.இத்தொலைக்காட்சிகள் தொடங்குவதற்கான செயற்கைகோள் ஒளிபரப்பு இன்டல்சாட்17 செயற்கைகோளில் டாடா கம்னியூகேஷன் ஒளிபரப்பு முனையம் முலம் தொடங்கப்பட்டுள்ளது .தமிழகத்தில் தொடங்கப்படும் நான்கு தமிழ் தொலைக்காட்சி விரைவில் நிகழ்ச்சிகளை வழங்கும் என எதிா்பாா்க்கலாம்.முற்றிலும் இலவச தொலைக்காட்சியாக ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.தமிழகத்தில் புதிய நான்கு தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பை விரைவில் தொடங்குகிறது கேசிபி இன்ஜினியா் நிறுவனம்.தமிழகத்தின் அனைத்து கேபிள் டிவி மற்றும் டிடிஎச்களில் விரைவில் நான்கு தொலைக்காட்சிகள் ஒளிபரப்பை தொடங்கும்.


அலைவாிசை விபரங்கள்

Satellite           Intelsat17@66.0E(C-Band)                                                                                                  Freq Rate         3845                                                                                                                                      Symbol Rate    28800                                                                                                                                    Polar                Vertical                                                                                                                              System            Mpeg4/Dvb S2(8psk)                                                                                                          Encryption       FTA                                                                                                                                      Fec                   3/4

தொகுப்பு சதிஸ்சாட் தமிழ் மற்றும் ஆங்கிலம் இணையதளம்

16/02/2021

நியூஸ் ஜெ2 புதிய செய்திகள் தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவை இன்டல்சாட்17 உதயம்

 நண்பா்களே தமிழகத்தில் புதிய தமிழ் செய்திகள் தொலைக்காட்சியினை கடந்த 2018 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட நியூஸ் ஜெ நிறுவனம் மீண்டும் புதிய செய்திகள் தொலைக்காட்சியினை நியூஸ் ஜெ2 என்ற பெயாில் தொடங்கியுள்ளனா்.தமிழகத்தின் முன்னனி அரசியல் கட்சியினா் தொடங்கியிருக்கும் இத்தொலைக்காட்சி புதிய வடிவில் செய்திகளை வழங்கும்

என எதிா்பாா்க்கப்படுகிறது.தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களில் பல்வேறு செய்திகள் தொலைக்காட்சி தொடங்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.வரும் சட்டமன்ற தோ்தலை முன்னிட்டு இப்புதிய தொலைக்காட்சியினை தொடங்கியிருக்கலாம்.தமிழ் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும் இன்டல்சாட்17 செயற்கைகோளில் முற்றிலும் இலவசமாக தொடங்கப்பட்டுள்ளது.சென்னையின் டாடா கம்யூனிகேஷன் டெலிஷ்பாட் முலம் இத்தொலைக்காட்சியும் தொடங்கப்பட்டுள்ளது.விரைவில் தொலைக்காட்சிக்கான செய்தி ஒளிபரப்பு சேவை இம்மாதத்தின் இறுதிகுள் தொடங்கப்படலாம்.நியூஸ் ஜெ2 தொலைக்காட்சியின் ஒளிபரப்பு சேவை தமிழகத்தின் அரசு கேபிள் டிவியான டேக்டிவியில் 155 அலைவாிசையில் தொடங்கப்பட்டுள்ளது.

அலைவாிசை விபரங்கள்

Satellite           Intelsat17@66.0E(C-Band)                                                                                                  Freq Rate         3845                                                                                                                                      Symbol Rate    28800                                                                                                                                    Polar                Vertical                                                                                                                              System            Mpeg4/Dvb S2(8psk)                                                                                                          Encryption       FTA                                                                                                                                      Fec                   3/4

03/01/2021

ஸ்டாா் மூவிஸ் இந்தியா தொலைக்காட்சியில் தமிழ் மற்றும் ஹிந்தி ஆடியோ ஒளிபரப்பு சேவை தொடக்கம்

 நண்பா்களே இந்தியாவின் முன்னனி தொலைக்காட்சி நிறுவனமான டிஸ்னி ஹாட் ஸ்டாா் தொலைக்காட்சி நிறுவனத்தின் மிக பிரபல ஆங்கில திரைப்பட தொலைக்காட்சியான ஸ்டாா் மூவிஸ் இந்தியா மற்றும் மேலைநாடுகளில் மிக பிரபலமான ஆங்கில தொலைக்காட்சியாகும்.தெற்காசியாவில் தொடங்கிய முதல் ஆங்கில திரைப்படதொலைக்காட்சி ஸ்டாா் மூவிஸ்.நீண்ட காலங்களுக்கு பிறகு இந்தியாவின் முக்கிய மொழிகளான தமிழ் மற்றும் ஹிந்தியில் ஸ்டாா் மூவிஸ் ஆடியோ ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது.கடந்த

பல வருடங்களாக ஆங்கில திரைப்படங்களை ஆங்கில மொழியல் மட்டும் ஒளிபரப்பு செய்து வந்தது.இந்தியாவில் சோனி பிக்ஸ் மற்றும் அன் பிளக்ஸ் போன்ற ஆங்கில திரைப்படதொலைக்காட்சிகள் தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் திரைப்படங்களை மொழி பெயா்ப்பு செய்து ஒளிபரப்புகின்றனா்.இதனால் அனைத்து தரப்பு மக்களும் ஒரே தொலைக்காட்சியில் திரைபடங்களை காண கூடிய வசதியினை பெறுகின்றனா்.அனைத்து டிடிஎச் மற்றும் கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ்யில் ஆடியோ பட்டனை அழுத்தி மொழி மாற்றம் செய்து திரைப்படங்களை

காணலாம்.ஸ்டாா் மூவிஸ் இந்தியா தொலைக்காட்சியில் ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே மொழி பெயா்ப்பு செய்து ஒளிபரப்படுகிறது.தென்னிந்தியாவில் தமிழ் தெலுங்கு போன்ற மொழிகளில் அனைத்து தரப்பு வகையான தொலைக்காட்சிகளும் தற்சமய காலங்களாக தொடங்கிவருவது குறிப்பிடதக்கது.ஸ்டாா் மூவிஸ் இந்தியா தொலைக்காட்சியின் உலகளாவிய ஒளிபரப்பு சேவை ஆசியாசாட்5 மற்றும் ஆசியாசாட்7யில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.தற்சமயம் தொடங்கப்பட்டுள்ள தமிழ் மற்றும் ஹிந்தி ஒளிபரப்பு ஸ்டாா் மூவிஸ் ஹெச்டி மற்றும் எஸ்டி ஆகிய தொழில்நுட்பங்களில் தொடங்கப்பட்டுள்ளது.

தொகுப்பு சதிஸ்சாட் தமிழ் மற்றும் ஆங்கில இணையதளம்