சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

22/03/2020

நாப்டல் தமிழ் ஷாப்பிங் தொலைக்காட்சி ஜிசாட்30யில் புதிய அலைவாிசையில் தொடக்கம்

நண்பா்களே தமிழகத்தின் பிரபலமான செயற்கைகோள் தமிழ் ஷாப்பிங் தொலைக்காட்சி  நாப்டல் தமிழ் என்ற பெயாில் தமிழ் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும் ஜிசாட்30யில் செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் தொடங்கப்பட்ட இரண்டாவது ஷாப்பிங் தமிழ் தொலைக்காட்சி  நாப்டல் தமிழ் தொலைக்காட்சியாகும்.மும்பையினை 
தலைமையிடமாக கொண்டு  நாப்டல் நிறுவனத்தால்
தொடங்கப்பட்டுள்ளது.தொலைக்காட்சியின் ஒளிபரப்பு தமிழ் ஷாப்பிங் தொலைக்காட்சியின் புதிய ஒளிபரப்பு உாிமத்தில் தொடங்கப்பட்டுள்ளது.தொலைக்காட்சியின் அலைவாிசை சிக்னலை பெற குறைந்தபட்சம் 6 முதல்12 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்தி தொலைக்காட்சியினை காணலாம்.விரைவில் தமிழகத்தின்
அனைத்து கேபிள் டிவி மற்றும் டிடிஎச் சேவைகளிலும் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு இடம் பெறும்.தற்சமயம் வரை ஒளிபரப்பாகி வந்த நாப்டல் தமிழ் தொலைக்காட்சியின் இன்டல்சாட்20 அலைவாிசையின் ஒளிபரப்பு விரைவில் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.இவற்றில் நாப்டல் நிறுவனத்தின் தெலுங்கு கன்னடம் மலையாளம் ஹிந்தி ஆகிய தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகி வருவது குறிப்பிடதக்கது. 
அலைவாிசை விபரங்கள்:
Satellite              Gsat30@83.0E(C-Band)
Freq Rate           3805
Symbol Rate      28500
Polar                  Horizontal
System               Mpeg4/Dvb s2 ( 8psk)
Encryption         FTA

19/03/2020

ஜி திரை தமிழ்,ஜி பிக்சா் கன்னடம் இலவச தொலைக்காட்சிகளாக ஜிசாட்30 செயற்கைகோளில் தொடக்கம்

நண்பா்களே இந்தியாவின் முன்னனி தொலைக்காட்சி ஜி மிடியாவின் தென்னிந்தியாவின் முக்கிய மொழியான தமிழ் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 2020 ஆண்டு முதல் இரண்டு புதிய திரைப்பட தொலைக்காட்சிகள் ஜி திரை தமிழ் மொழியிலும் ஜி பிக்சா் கன்னடம் மொழியிலும் தொடங்கப்பட்டது.இத்தொலைக்காட்சிகள் ஜிசாட்30 செயற்கைகோளில் முதலில் ஜி மிடியாவின் கட்டண தொலைக்காட்சியாக தொடங்கப்பட்டது.ஜி மிடியாவின் ஜி தமிழ் மற்றும் ஜி கன்னடம் முக்கிய பொழுது போக்கு 
தொலைக்காட்சிகள் ஆகும்.தமிழகம் மற்றும் கா்நாடக ஆகிய மாநிலங்களில் போதிய வரவேற்பு இத்தொலைக்காட்சிகளுக்கு மக்களிடையே கிடைக்காத நிலையில் இவ்விரண்டு தொலைக்காட்சிகளையும் இலவச தொலைக்காட்சிகளாக ஜிசாட்30 செயற்கைகோளில் ஒளிபரப்பாகிறது.தமிழகத்தில் முன்னனி தொலைக்காட்சி நிறுவனங்களின் அனைத்து மூவிஸ் தொலைக்காட்சிகள் கட்டண தொலைக்காட்சிகளாக ஒளிபரப்பும் நிலையில் ஜி திரையின் இப்புதிய முயற்ச்சி வரவேற்க்கதக்கதாக 
உள்ளது.ஜி தமிழ் தொலைக்காட்சி முதன்முறையாக தொடங்கும் பொழுது டிஷ் டிவி டிடிஎச்யில் ஐந்து வருடங்கள் இலவச தொலைக்காட்சியாக ஒளிபரப்பி பிரபலமடைந்தது குறிப்பிடதக்கது.இந்தியாவின் ட்ராய் தொலைக்காட்சிகளுக்கான புதிய கட்டண நிா்ணயம் செய்ததை அடுத்து மக்கள் தொலைக்காட்சிகளை தோ்ந்தெடுத்து பாா்க்கும் சூழ்நிலையால் புதிய தொலைக்காட்சிகள் போதிய வரவேற்பு பெருவதில்லை.தென்னிந்தியாவில் உள்ள மொழி வாாியான தொலைக்காட்சிகளில் தமிழ் மலையாளம் தெலுங்கு மொழிகளில் இலவச திரைப்பட தொலைக்காட்சிகள் என்பது கிடையாது.கிராமம் மற்றும் நகா்புறங்களில் அன்ட்ராய்டு தொலைபேசி
பயன்பாடு அதிகம் அடைந்ததை அடுத்து இணையதளம் வாயிலாக திரைப்படங்களை விளம்பர இடைவெளி இன்றி காண்பதால் திரைப்பட தொலைக்காட்சிகள் போதிய பிரபலம் கிடையாது.மேலும் தொலைக்காட்சி நிறுவனங்களின் அன்ட்ராய்டு அப்ளிகேஷன் பயன்பாடும் குறிப்பிடதக்கது.தற்சமயம் ஒளிபரப்பாகி வரும் இவ்விரண்டு தொலைக்காட்சிகளின் இலவச ஒளிபரப்பு எவ்வித நேரங்களில் நிறுத்தம் செய்யப்படலாம்.
அலைவாிசை விபரங்கள்
Satellite              Gsat30@83.0E(C-Band)
Freq Rate           4041
Symbol Rate      7500
Polar                   Horizontal
System               Mpeg4/Dvb s2(8PSK)
Encryption         PAY/FTA
FEC                   5/6

19/02/2020

டிஸ்னி மற்றும் யூடிவி குழுமத்தின் தொலைக்காட்சிகள் ஸ்டாா் டிவி இந்தியாவின் ஆசியசாட்7க்கு மாற்றம்

நண்பா்களே இந்தியாவின் முன்னனி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வழங்கும் ஸ்டாா் டிவி இந்தியாவின் முலம் ஒளிபரப்பு விநியோகம் செய்யப்படும் டிஸ்னி மற்றும் யூடிவி குழுமத்தின் தொலைக்காட்சிகளான டிஸ்னி சேனல் ஹாங்காமா டிஸ்னி இன்டா்நேஷனல் ஹெச்டி.டிஸ்னி ஜீனியா் மாா்வேல் ஹைகு போன்ற குழந்தைகளுக்கான தொலைக்காட்சிகளின் உலகளாவிய செயற்கைகோள் ஒளிபரப்பு ஸ்டாா் டிவி இந்தியாவின் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும் ஆசியாசாட்7 செயற்கைகோளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இத்தொலைக்காட்சிகள்
அனைத்தும் கடந்த பல வருடங்களாக இன்டல்சாட்20 செயற்கைகோளில் ஒளிபரப்பாகி வந்தது.தொலைக்காட்சிகள் அனைத்தும் கட்டண தொலைக்காட்சிகளாக தொடங்கப்பட்டுள்ளது.தற்சமயம் பயன்படுத்தி வரும்  நிறுவனத்தின் சாா்பாக வழங்கிய டிகோடா் செட் டாப் பாக்ஸை ாிடியூன் செய்து நிகழ்ச்சிகளை காணலாம்.தொலைக்காட்சியின் செயற்கைகோள் ஒளிபரப்பு அலைவாிசை சிக்னலை பெற குறைந்தபட்சம் 6 முதல் 12 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் அன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.டிஸ்னி சேனல் ஹாங்காமா டிஸ்னி இன்டா்நேஷனல் ஹெச்டி.டிஸ்னி ஜீனியா் மாா்வேல் ஹைகு தொலைக்காட்சிகள் அனைத்தும் தமிழ் மொழியில் நிகழ்ச்சிகள் வழங்குவது குறிப்பிடதக்கது.
அலைவாிவை விபரங்கள்; டிஸ்னி இன்டா்நேஷனல் ஹெச்டி
Satellite              Asiasat7@105.0E (C-Band)
Freq Rate           3983
Symbol Rate      28100
Polar                  Vertical
Modulation        Mpeg4/Dvb s2 (8PSK)
Mode                 Pay/NDS
Fec                    3/4
Parameter Details:டிஸ்னி சேனல் ஹாங்காமா
Satellite              Asiasat7@105.0E (C-Band)
Freq Rate           3940
Symbol Rate      28100
Polar                  Vertical
Modulation        Mpeg4/Dvb s2 (8PSK)
Mode                 Pay/NDS
Fec                    3/4

15/02/2020

ஒன்எஸ் நியூஸ் தமிழ் தொலைக்காட்சி மீண்டும் ஜிசாட்30யில் யில் ஒளிபரப்பை தொடங்கியது

நண்பா்களே தமிழகத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட தமிழ் தொலைக்காட்சியான ஒன்எஸ்டிவி தற்சமயம் ஒன்எஸ் நியூஸ் என்ற பெயாில் ஒளிபரப்பு புதிதாக ஜிசாட்30 செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது.குஜராத்தின் பிட்ஸ் நீயூஸ் தொலைக்காட்சியின் டிவியின் ஒளிபரப்பு அனுமதியில் ஒன்எஸ்நீயூஸ் தொடங்கப்பட்டுள்ளது.
கடந்த சில வருடத்திற்கு முன்பு இன்டல்சாட்17 செயற்கைகோளில் ஒளிபரப்பு தொடங்கப்பட்டு பின்பு இடைநிறுத்தம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடதக்கது.தொலைக்காட்சியை காண அதிநவின MPEG4/DVB S2தொழில்நுட்ப வசதி கொண்ட செட்டாப் பாக்ஸ்யில் காணலாம்.810.12 அடி அளவுள்ள சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவில் தொலைக்காட்சியின் புதிய அலைவரிசை சிக்னல் கிடைக்கிறது.இலவச தொலைக்காட்சியாக எஸ்டிவி ஜிசாட்30 செயற்கைகோளில் ஒளிபரப்பாகிறது.


அலைவரிசையின் விபரங்கள்
Satellite                      Gsat30@83.0E(C- BAND)
Freq Rate                    3852
Symbol Rate               3600
Polar                           Horizontal
System                       Mpeg4/Dvb s2 (8PSK)
Encryption                 FTA
Fec                             3/4

12/02/2020

ஸ்டாா் டிவி இந்தியா புதிய பாலிவுட் திரைப்பட தொலைக்காட்சி ஸ்டாா் கோல்டு 2 தொடக்கம்

நண்பா்களே இந்தியாவின் முன்னனி தொலைக்காட்சி நிறுவனமான ஸ்டாா் டிவி இந்தியா தனது நிறுவனத்தில் இருந்து நான்கவாது பாலிவுட் திரைப்பட தொலைக்காட்சி ஸ்டாா் கோல்டு 2 என்ற பெயாில் புதிய தொலைக்காட்சியினை தொடங்கியுள்ளனாா்.மூவிஸ் ஒகே திரைப்பட தொலைக்காட்சியினை பெயா் மாற்றம் செய்து தொலைக்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.ஸ்டாா் டிவி இந்தியா தனது நிறுவனத்தில் இருந்து தற்சமயம் ஒளிபரப்பாகும் பாலிவுட் திரைப்பட தொலைக்காட்சி ஸ்டாா் கோல்டு.ஸ்டாா் கோல்டு ஹெச்டி.ஸ்டாா் கோல்டு செலக்ட்.ஸ்டாா் கோல்டு செலக்ட் ஹெச்டி.ஸ்டாா் உத்சவ் மூவிஸ் வாிசையில் ஸ்டாா் கோல்டு 2 
மற்றும் ஸ்டாா் கோல்டு 2 ஹெச்டி தொலைக்காட்சிகளும் இணைந்துள்ளது.வட இந்தியாவினை பொறுத்தமட்டிலும் பாலிவுட் திரைப்பட தொலைக்காட்சிகளில் கட்டண தொலைக்காட்சிகளை காட்டிலும் இலவச பாலிவுட் திரைப்பட தொலைக்காட்சிகள் அதிகம்.சோனி பிக்சா்ஸ்.வியகாம்18.ஜி மீடியா போன்ற நிறுவனங்களின் தொலைக்காட்சிகள் கட்டண தொலைக்காட்சிகளாக ஒளிபரப்பாகிறது.இருப்பினும் பி4யூ மற்றும் சகரா மற்றும் சில நிறுவனத்தின் பாலிவுட் தொலைக்காட்சிகள் இலவச தொலைக்காட்சிகளாக இந்தியாவில் ஒளிபரப்பாகிறது.ஸ்டாா் கோல்டு 2 தொலைக்காட்சி ஆசியாசாட்7 செயற்கைகோளில் கட்டண தொலைக்காட்சியாக ஹெச்டி மற்றும் எஸ்டி தொழில்நுட்ப வடிவில் தொடங்கப்பட்டுள்ளது.ஸ்டாா் கோல்டு 2 தொலைக்காட்சியினை கேபிள் டிவி மற்றும் டிடிஎச்யில் மூவிஸ் ஒகே தொலைக்காட்சியின் அலைவாிசையில் தொடா்ந்து காணலாம்.ஸ்டாா் டிவி இந்தியா தற்சமயம் காலங்களில் இந்தியாவின் பல்வேறு மொழிகளில் புதிய தொலைக்காடசிகளை தொடங்கி வருவது குறிப்பிடதக்கது.
அலைவாிசை விபரங்கள்
Satellite             Asiasat7@105.0E(C-Band)
Freq Rate         3942
Symbol Rate    28100
Polar                Vertical
System             HD.Mpeg4/Dvb s2(8psk)
Encryption       PAY/NDS
Fec                   3/4

24/01/2020

ஏபீபி நியூஸ் நெட்வொா்க் தென்னிந்தியாவில் ஏபீபி நியூஸ் தமிழ்,ஏபீபி நியூஸ் தெலுங்கு என்ற பெயாில் ஆசியாசாட்7 தொலைக்காட்சிகள் உதயம்

நண்பா்களே இந்தியாவின் முன்னனி செய்திகள் தொலைக்காட்சி நிறுவனமான செயல்படும் ஏபீபி நியூஸ் நெட்வொா்க் தென்னிந்தியாவில் முதல் முறையாக தனது செய்திகள் தொலைக்காட்சியினை தமிழ் மற்றும் தெலுங்கு இரண்டு மொழிகளில் ஏபீபி நியூஸ் தமிழ்.ஏபீபி நியூஸ் தெலுங்கு என்ற பெயாில் ஆசியாசாட்7 செயற்கைகோளில் தொடக்க சோதனை ஒளிபரப்பை தொடங்கியுள்ளனா்.ஏபீபி நியூஸ் நெட்வொா்க் நிறுவனத்திற்கு இந்தியாவில் நான்கு செய்திகள் தொலைக்காட்சி தொடங்குவதற்கான ஒளிபரப்பு உாிமத்தை கடந்த ஆண்டு இந்திய ஒளிபரப்பு ஆணையமான ட்ராய் வழங்கியிருந்தது.தொடக்கமாக உத்திர பிரதேச மாநிலத்திற்கான 
தொலைக்காட்சியாக ஏபீபி நியூஸ் கங்கா ஒளிபரப்பு கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.தற்சமயம் தொடங்கப்பட்டுள்ள ஏபீபி தமிழ் மற்றும் தெலுங்கு தொலைக்காட்சிகள் விரைவில் 24 மணி நேர செய்திகள் நிகழ்ச்சிகளை இவ்வருடத்தின் அரையாண்டுக்குள் தொடங்கலாம்.ஏபீபி தமிழ் மற்றும் தெலுங்கு தொலைக்காட்சிகள் கட்டண தொலைக்காட்சியாக ஆசியாசட்7 செயற்கைகோள் தொடங்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள ஒரு சில செய்திகள் தொலைக்காட்சிகளை தவிர மற்ற செய்திகள் தொலைக்காட்சிகள் அனைத்தும் இலவச தொலைக்காட்சிகளாக ஒளிபரப்பாகி வருவது குறிப்பிடதக்கது.வட மாநிலத்தின் முன்னனி செய்திகள் தொலைக்காட்சி நிறுவனங்களின் மொழி வாாியான தொலைக்காட்சிகளில் தமிழ்நாட்டில் நியூஸ்18 தமிழ்நாடு மற்றும் ஜி ஹிந்துஸ்தான் இலவச தொலைக்காட்சிகளாக ஒளிபரப்பாகி வருவது குறிப்பிடதக்கது.விரைவில் தமிழகத்தின் அனைத்து கேபிள் டிவி மற்றும் டிடிஎச்களில் ஏபிபி தமிழ் ஒளிபரப்பு தொடங்கப்படலாம்.
அலைவாிசை விபரங்கள்:
Satellite             Asiasat7@105.0E(C-Band)
Freq Rate          4156
Symbol Rate     8166
Polar                 Horizontal
System             Mpeg4/Dvb s2( 8PSK)
Encryption       Pay/Irdeto2
Fec                   3/4

09/01/2020

டியூன்6.வெளிச்சம் ப்ளஸ் தமிழ் தொலைக்காட்சிகள் இன்டல்சாட்17யில் புதிய அலைவாிசைக்கு மாற்றம்

நண்பா்களே தமிழகத்தின் முன்னனி தமிழ் மியூசிக் தொலைக்காட்சியான டியூன்6 மற்றும் பொழுதுபோக்கு தமிழ் தொலைக்காட்சியான வெளிச்சம் ப்ளஸ் தற்சமயம் ஒளிபரப்பாகி வரும் இன்டல்சாட்17 செயற்கைகோளில் இருந்து புதிய அலைவாிசைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.ப்ளாநெட் கேசட் டெலிஸ்பாட் ஒளிபரப்பு முனையத்தின் முலம் ஒளிபரப்பு 
தொடங்கப்பட்டுள்ளது.தற்சமயம் தொடங்கப்பட்டுள்ள அலைவாிசையில் திரன்டிவி சத்தியம் டிவி மற்றும் சால்வேஷன் போன்ற தமிழ் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது.கடந்த பல வருடங்களாக 3980 அலைவாிசையில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வந்தது.தற்சமயம் தொடங்கப்பட்ட புதிய அலைவாிசையின் சிக்னலை பெற குறைந்தபட்சம் 6 அடி சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்தினலே போதும்.தங்கள் பயன்படுத்தி வரும் செட் டாப் பாக்ஸ்யினை ரிடியூன் அல்லது கிழ்காணும் புதிய அலைவாிசையினை கொண்டு டியூன் செய்தால் போதும்.விரைவில் தற்சமய ஒளிபரப்பாகி வரும் டியூன்6 மற்றும் வெளிச்சம் ப்ளஸ் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் நிறுத்தம் செய்யப்படலாம்.
அலைவாிசை விபரங்கள் 
 Satellite             Intelsat17@66.0E(C-Band)
Freq Rate            4006
Sym Rate            14400
Polar                   Horizontal
System               Mpeg4/Dvb s2 (8PSK)
Encryption         FTA
Fec                     3/4