சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

18/06/2016

ஜெயா டிவி ஹெச்டி மற்றும் ஜெயா குழும தொலைக்காட்சிகள் புதிய அலைவாிசையில் இன்டல்சாட்20யில் ஒளிபரப்பு தொடக்கம்

நண்பா்களே தமிழகத்தின் முன்னனி தமிழ் பொழுது போக்கு தொலைக்காட்சியான ஜெயா டிவி குழுமத்தின் ஜெயா ப்ளஸ் ஜெயா மூவிஸ்ஜெயா மேக்ஸ் போன்ற தொலைக்காட்சிகள் புதிய செயற்கைகோள் அலைவாிசைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.மேலும் கடந்த பல
வருடங்களாக பழைய தொழில்நுட்பத்தில் ஒளிபரப்பாகி வந்த முன்னனி தமிழ் தொலைக்காட்சியான ஜெயா டிவி அதி நவின தொழில்நுட்பமான ஹெச்டி வடிவத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.தொலைக்காட்சியின் செயற்கைகோள் ஒளிபரப்பு அலைவாிசை 18.06.2016 முதல் பழைய அலைவாிசையில் இருந்து புதிய அலைவாிசைக்கு மாற்றம் 
செய்துள்ளனா்.அலைவாிசை சிக்னலை பெற குறைந்தபட்சம் 6 முதல் 12 வரையிலான சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.மேலும் ஜெயா டிவி தொலைக்காட்சி நிா்வாகத்தின் சாா்பாக தரப்பட்ட டிஜிட்டல் செட் டாப் பாக்ஸை டியூன் செய்து புதிய ஒளிபரப்பை காணலாம்.இருப்பினும் 
ஜெயா டிவி ஹெச்டி தொலைக்காட்சியை காண நிா்வாகத்தின் சாா்பாக புதிய செட் டாப் பாகஸ் தரப்படுகிறது.தற்சமயம் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு சோதனை ஒளிபரப்பின் அடிப்படையில் இலவச ஒளிபரப்பாக இன்டல்சாட்20யில் ஒளிபரப்பாகிறது.ஜெயா மூவிஸ் தொலைக்காட்சி மட்டும் தற்சமயம் ஒளிபரப்பாகும் அலைவாிசையில் இருந்து புதிய அலைவாிசையில் ஒளிபரப்பை தொடங்கியுள்ளனா்.இலவச தொலைக்காட்சியாக ஜெயா மூவிஸ் இன்டல்சாட்20யில் ஒளிபரப்பாகிறது.
அலைவாிசை விபரங்கள்
Satellite                   Intelsat20@68.5E (C-Band)
Freq Rate                4130
Symbol Rate           12800
Polar                        VERTICAL
Modulation              HD.MPEG4/DVB S2
Mode                       FTA
Satellite                   Intelsat20@68.5E (C-Band)
Freq Rate                3790
Symbol Rate           4300
Polar                       VERTICAL
Modulation             MPEG4/DVB S2
Mode                      FTA

09/06/2016

சோனி ஈஎஸ்பிஎன் ஹெச்டி தமிழ் மற்றும் சோனி ஈஎஸ்பிஎன் எஸ்டி தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு இன்டல்சாட்17 மற்றும் இன்டல்சாட்20யில் தொடக்க

நண்பா்களே இந்தியாவின் முன்னனி பொழுதுபோக்கு தொலைக்காட்சி நிறுவனமான சோனி குழுமத்தின் விளையாட்டு தொலைக்காட்சியான சோனி ஈஎஸ்பிஎன் மொழி வாாியான தொலைக்காட்சிகள் தொடங்கப்பட்டுள்ளன.ஐரோப்பாவில் நடைபெற உள்ள யூரோ கால்பந்து 2016 போட்டிதொடா்களை நேரடியாக இந்தியாவில் ஒளிபரப்பும் அனுமதியை ஈஎஸ்பிஎன் தொலைக்காட்சி நிறுவனத்துடன் இந்தியாவின் சோனி தொலைக்காட்சி பெற்றுள்ளது.போட்டி தொடா்கள் அனைத்தும் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் நேரடி வருணை வழங்கப்பட்டு வந்தது.தற்சமயம் தென்னிந்திய கால்பந்து ரசிகா்களை அதிகப்படுத்தும் நோக்கில் சோனி நிறுவனம் சோனி ஈஎஸ்பிஎன் ஹெச்டி தமிழ் மற்றும் சோனி 
ஈஎஸ்பிஎன் எஸ்டி வடிவங்களில் தொலைக்காட்சிகளை தொடங்கியுள்ளனா்.ஜின் 10 முதல் ஜிலை மாதம் வரை நடைபெறவுள்ள கால்பந்து போட்டி தொடா்களை தமிழ் மொழியில் வழங்குகிறது.தொலைக்காட்சிகள் அனைத்தும் கட்டண தொலைக்காட்சியாக நிறுவனத்தின் தொலைக்காட்சிகன் ஒளிபரப்பாகும் இன்டல்சாட்17 மற்றும் இன்டல்சாட்20 செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது.கட்டண  டிடிஎச் சேவையில்சோனி ஈஎஸ்பிஎன் தொலைக்காட்சியின் ஆடியோவை மாற்றம் செய்வதன் முலம் தமிழ் வருணையில் போட்டி தொடா்களை காணலாம்.இதே போன்று கடந்த மாதத்தில் சோனி சிக்ஸ்யில் விவா ஐபிஎல் போட்டி தொடா்களை தமிழ் பெங்களாலி.தெலுங்கு.மொழிகளில் ஒளிபரப்பு செய்யபட்டது.அதே போன்று இம்முறை தமிழ் பெங்களாலி தெலுங்கு அடித்தபடியாக மலையாளம் மொழியிலும் போட்டி தொடர்களை காணும் வகையில்  சோனி ஈஎஸ்பிஎன் மலையாளம் இன்டல்சாட்20யில் தொடங்கப்பட்டுள்ளது.யூரோ கால்பந்து போட்டி தொடா்கள் முடியும் வரை இத்தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும் என்பது குறிப்பிடதக்க செய்தியாகும்.
அலைவாிசை விபரங்கள்
Satellite               Intelsat17@66.0E(C-Band)
Freq Raate          3845
Symbol Rate       30000
Polar                   Horizontal
Modulation         HD.Mpeg4/Dvb s2
Mode                  PAY
Satellite               Intelsat20@68.5E(C-Band)
Freq Raate          3900
Symbol Rate       22222
Polar                   Horizontal
Modulation         Mpeg4/Dvb s2
Mode                  PAY

06/06/2016

ஜெயா டிவி ஹெச்டி(JAYA TV HD) புதிய தொழில்நுட்பத்தில் நிகழ்ச்சிகள் விரைவில் தமிழகத்தில் தொடக்கம்

நண்பர்களே தமிழ்நாட்டின் மிக முன்னனி தமிழ் தொலைக்காட்சிகள் அனைத்தும் அதிநவின தொழில்நுட்பமான ஹெச்டி வடிவில் நிகழ்ச்சிகள் மாற்றம் செய்து வருகின்றனா்.அத்வரிசையில் சன் குழுமத்தின் முன்னனி தொலைக்காட்சிகளான சன் டிவி.கேடிவி.சன் மீயூசிக் போன்ற தொலைக்காட்சிகளும்.ஸ்டாா் இன்டியா குழுமத்தின் ஸ்டார் விஜய் டிவி போன்ற தொலைக்காட்சியும் ஹெச்டி தொழில்நுட்ப வடிவத்தில் தொடங்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.அவ்வாிசையில் ஜெயா டிவி குழுமத்தின் பொழுது போக்கு தொலைக்காட்சியான ஜெயா டிவி ஹெச்டி 
புதிதாக விரைவில் தொடங்கப்படவுள்ளது.இதற்கான அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து தொலைக்காட்சிகான தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது.விரைவில் ஜெயா டிவி தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும் இன்டல்சாட்20 செயற்கைகோளின் அலைவரிசையில் தொடங்கப்படும்.தற்சமயம் பயன்பாட்டில் உள்ள கட்டண பாக்ஸ் மாற்றம் செய்யப்பட்டு புதிய ஹெச்டி பாக்ஸ் வழங்கப்படலாம்.விரைவில் இதற்கான அதிகார பூா்வா அறிவிப்பு ஜெயா டிவி நிா்வாகத்தில் இருந்து வெளியிடப்படலாம்.மற்ற தொலைக்காட்சிகளில் எவ்வித மாற்றம் இன்றி பழைய தொழில்நுட்பத்தில் செயல்படும்.விரைவில் அலைவரிசை தொடர்பான விபரங்கள் நமது சதிஸ் சாட் தளத்தில் வெளியிடப்படும்.
தொகுப்பு சதீஸ் சாட் தமிழ் தளம்

01/06/2016

நீயூஸ்18 தமிழ் செய்திகள் தொலைக்காட்சி 24 மணி நேர ஒளிபரப்பு விரைவில் தொடக்கம்

நண்பா்களே இந்தியாவின் முன்னனி செய்திகள் வழங்கும் நிறுவனமான நீயூஸ் 18 செய்திகள் தொலைக்காட்சி நிறுவனத்தின் சாா்பாக மொழிவாாியான 24 மணி நேர தமிழ் செய்திகள் தொலைக்காட்சி நீயூஸ் 18 தமிழ்நாடு என்ற பெயாில் தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பு தமிழகத்தில் தொடங்கப்பட்டது.இதே போன்று மலையாளம் மற்றும் அசாம் மொழிகளிலும் செய்திகள் தொலைக்காட்சி தொடங்கப்பட்டது.இத்தொலைக்காட்சிகளின் 
சோதனை ஒளிபரப்பு கடந்த மாதம் முதல் இன்டல்சாட்20 செயற்கைகோளில் தொடங்கப்பட்டது.இந்நிறுவனத்தின் சாா்பாக தென்னிந்தியா மற்றும் வடஇந்தியாவிலும் செய்திகள் தொலைக்காட்சி ஒளிபரப்பாகி வருகிறது.தொலைக்காட்சி தொடா்பான செயற்கைகோள் தொழில்நுட்ப விபரங்கள் கடந்த மாதத்தில் நமது சதிஸ்சாட் தமிழ் தளத்தில் வெளியிடப்பட்டு இருந்தது.நீயூஸ்18 தமிழ் செய்திகள் தொலைக்காட்சி 
நிறுவனத்தின் ஒளிபரப்பு கட்டண தொலைக்காட்சியாக தொடங்கப்பட்டுள்ளது.கேபிள் ஒளிபரப்பு செய்யக்கூடிய ஆப்ரேட்டா்களுக்கு நீயூஸ்18 தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்தின் சாா்பாக முற்றிலும் இலவசமாக செட் டாப் பாக்ஸ் வழங்கப்படுகிறது.இத்தொலைக்காட்சியினை கேபிள் இணைப்பு அல்லாது விடுகளில் டாடா ஸ்கை டிடிஎச்யில் ஒளிபரப்பாகிறது.விரைவில் அரசு கேபிள் நிறுவனம் மற்றும் மற்ற கட்டண டிடிஎச்யில் நீயூஸ்18 தமிழ் தொலைக்காட்சி காணலாம்.
மேலும் தொழில்நுட்ப மற்ற விபரங்கள் அறிந்திட நீயூஸ்18 நிறுவனத்தின் டிஷ்ரிபுஷன் அலுவலக விபரங்கள்:
பனோரோமா டெலிவிஷன் லிமிடெட்
5 & 6 பிளோா் போஸ்கான் மாரசு
பிளாக் பி நீயூ நம்பா் 84 84/1 அன்ட் 86
கோடம்பாக்கம் கை ரோடு
நுங்கபாக்கம்
சென்னை-34
தொலைப்பேசி-7338827916
மின்னஞ்சல்- nirmal.e@etv.co.in

17/05/2016

தமிழகத்தில் ஓம் டிவி புதிய பக்தி மற்றும் தமிழ் காலச்சார தொலைக்காட்சி ஒளிபரப்பு இன்டல்சாட்17யில் உதயம்

நண்பர்களே தமிழகத்தில் புதிய செயற்கைகோள் தமிழ் பக்தி மற்றும் தமிழ் பாரம்பாரியம் தொடா்புடைய கலாச்சார நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப கூடிய தொலைக்காட்சி ஓம் டிவி என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது.இப்புதிய தொலைக்காட்சியின் உலகளாவிய செயற்கைகோள் ஒளிபரப்பு தமிழ் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும் இன்டல்சாட்17 செயற்கைகோளில் பென்சி 
டிவியின் ஒளிபரப்பு உரிமத்தில் தொடங்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் தொடங்கப்படும் கலச்சார தொடா்புடைய நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் இரண்டாவது தமிழ் தொலைக்காட்சி இதுவாகும்.தொலைக்காட்சியின் தொடக்க நிகழ்ச்சிகளாக தமிழ் பக்தி பாடல்கள் ஒளிபரப்பாகி வருகிறது.கடந்த சில மாதங்களுக்கு முன்பு பென்சி டிவியின் நிகழ்ச்சிகள் அற்ற சோதனை 
ஒளிபரப்பு தொடங்கப்பட்டு வந்தது.ஓம் டிவியின் செயற்கைகோள் அலைவரிசையினை பெற குறைந்தபட்சம் 8 முதல் 16 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.மேலும் தொலைக்காட்சியினை காண Mpeg4/Dvb s2 தொழில்நுட்பம் பொருத்திய செட் டாப் பாக்ஸ்யை பயன்படுத்த வேண்டும்.ஓம் டிவி இலவச ஒளிபரப்பாக இன்டலசாட்17யில் ஒளி உலா வருகிறது. 
அலைவாிசை விபரங்கள்
Satellite                       Intelsat17@66.0E(C-Band)
Freq Rate                    3877
Symbol Rate               14300
Polar                            Horizontal
Modulation                  Mpeg4/Dvb s2(8psk)
Mode                           FTA

15/05/2016

சோனி வாக்,ஸ்டார் உத்சவ் மூவிஸ் புதிய ஹிந்தி திரைப்பட தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு ஆசியாசாட்7யில் தொடக்கம்

நண்பர்களே இந்தியாவின் முன்னனி தொலைக்காட்சி நிறுவனங்களான ஸ்டார் டிவி இந்தியா மற்றும் சோனி பிக்சர் டெலிவிஷன் நிறுனங்கள் இரண்டு புதிய ஹிந்தி திரைப்பட தொலைக்காட்சிகளை தொடங்கியுள்ளனர்.ஹிந்தியில் ஸ்டார் உத்சவ் எண்டெய்ன்மென்ட் தொலைக்காட்சி தொடங்கப்பட்டு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி 
வருகிறது.அவ்வரிசையில் ஸ்டார் உத்சவ் மூவிஸ் என்னும் புதிய தொலைக்காட்சி ஹிந்தியில் தொடங்கப்பட்டுள்ளது.வடந்தியாவை பொறுத்தமட்டிலும் ஹிந்தி திரைப்பட தொலைக்காட்சிகள் கடந்த வருடங்களாக வெகுவாக அதிகரித்து வருகிறது.இதே போன்று சோனி பிக்சர் டெலிவிஷன் நிறுவனமும் புதிய ஹிந்தி திரைப்பட தொலைக்காட்சியான 
சோனி வாக் என்னும் பெயரில் தொலைக்காட்சியினை தொடங்கியுன்னர்.கடந்த வருடத்தில் இப்புதிய தொலைக்காட்சிக்கான ஒளிபரப்பு அனுமதியை மத்திய ஒளிபரப்பு ஆணையம் அனுமதி வழங்கியிருந்தது.இவ்விரு புதிய தொலைக்காட்சிகளின் செயற்கைகோள் ஒளிபரப்பு ஆசியாசாட்7யில் தொடங்கப்பட்டுள்ளது.கடந்த வருடத்தில் 
வீயகாம்18 நிறுவனமும் ரிஸ்டி சினிபிளக்ஸ் ஹிந்தி திரைப்பட தொலைக்காட்சியினை தொடங்கியிருந்தது குறிப்பிடதக்கது.வட இந்தியாவில் ஸ்டார்.சோனி.யுடிவி.ஜி.சாகார.பி4யு  போன்ற நிறுவனங்களின் தொலைக்காட்சி அல்லாது புதிய நிறுவனங்களும் ஹிந்தி திரைப்பாட தொலைக்காட்சிகளை தொடங்கி வருகின்றன.
அலைவரிசை விபரங்கள்(STAR UTSAV MOVIES)
Satellite            Asiasat7@105.5E(C-Band)
Freq Rate         3800
Symbol rate     28100
Polar                Horizontal
Modulation      Mpeg4/Dvb s2
Mode               Fta

அலைவரிசை விபரங்கள்(SONY WAH TV )
Satellite            Asiasat7@105.5E(C-Band)
Freq Rate         4180
Symbol rate     30000
Polar                Vertical
Modulation      Mpeg4/Dvb s2
Mode               Pay

04/05/2016

வானவில் (VANAAVIL TV) தமிழ் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு இன்சாட்4எ செயற்கைகோளுக்கு மாற்றம்

நண்பர்களே தமிழகத்தில் கடந்த வருடத்தில் பெயர் மாற்றம் செய்த தமிழ் தொலைக்காட்சியான வானவில் டிவியின் உலகளாவிய செயற்கைகோள் ஒளிபரப்பு தற்சமயம் ஒளிபரப்பாகி வரும் இன்டல்சாட்20யில் இருந்து இன்சாட்4எ செயற்கைகோளில்  செயல்படும் நொய்டா என் எஸ் டி பி எல் டெலிஸ்பாட் நிறுவனத்தின் அலைவரைிசைக்கு மாற்றம் செய்யப்படவுள்ளது.
வானவில் டிவியின் 24 மணி நேர நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டு தமிழகம் முழுவதும் ஒளிபரப்பாகி வருகிறது.திரைப்படம்.நாடகம் மற்றும் பல வித்தியாசமான கலை நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றனர்.தற்சமயம் மாற்றம் செய்யப்பட்டுள்ள புதிய அலைவரைிசையின் சிக்னல் 6 முதல் 12 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவில் கிடைக்கிறது.
கிடைக்கிறது.முன்பு பயன்படுத்தி வந்த செட் டாப் பாக்ஸ்யில் அலைவரிசை யினை மாற்றம் செய்து வானவில் டிவியின் நிகழ்ச்சிகளை காணலாம்.இலவச ஒளிபரப்பாக இன்சாட்4எ செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது.கடந்த சில மாதங்களாக இன்டியா சிக்னல் டெலிஸ்பாட் ஒளிபரப்பு முனையத்தின் முலம் நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழகத்தில் ஒளிபரப்பாகி வந்தது.
அலைவரிசை விபரங்கள்:
Satellite              INSAT4A@83.0E(C-Band)
Freq Rate           3725
Symbol Rate      26666
Polar                  Horizontal
Modulation        Mpeg4/Dvb s
Mode                 FTA