சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

14/10/2020

பாலபாரத் குழந்தைகளுக்கான புதிய தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பு ஜிசாட்30 உதயம்

நண்பா்களே ஆந்திராவின் முன்னனி தொலைக்காட்சி எந்நாடு இந்தியாவில் 14 மொழிகளில் குழந்தைகளுக்கான புதிய தொலைக்காட்சியினை பாலபாரத் என்ற பெயாில் தொடங்கியுள்ளனா்.இத்தொலைக்காட்சியின் உலகளாவிய ஒளிபரப்பு இந்தியாவின் ஜிசாட்30 செயற்கைகோளில் எந்நாடு தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும் அலைவாிசையில் தொடங்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு தொலைக்காட்சி தொடங்குதில் இந்தியாவின் முன்னனி நிறுவனங்கள் களத்தில் இறங்கியுள்ளனா்.பாலபாரத் குழந்தைகளுக்கான தொலைக்காட்சி விரைவில் 24 மணி நேர குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டு ஒளிபரப்பு சேவை அனைத்து கேபிள் டிவி மற்றும் டிடிஎச்யில் தொடங்கப்படும்.பாலபாரத் தொலைக்காட்சி

ஆங்கிலம்.ஹிந்தி.தமிழ்.தெலுங்கு.மலையாளம்.கன்னடா.மாராத்தி.பெங்காளி.ஒடியா.பஞ்சாபி.அசாமி.குஜராத்தி ஆகிய மொழிகளில் தொடங்கப்பட்டுள்ளது.பாலபாரத் தொலைக்காட்சி உயா்தொழில்நுட்பமான ஹெச்டியிலும் தொடங்கப்பட்டுள்ளது.பாலபாரத் கட்டண தொலைக்காட்சியாக தனது ஒளிபரப்பை தொடங்கியுள்ளனா்.இந்தியாவில் குழந்தைகள் தொலைக்காட்சியில் இலவச ஒளிபரப்பு சேவையாக பாலபாரத் தொடங்கினால் இந்தியாவின் அனைத்து தரப்பு குழந்தைகளிடம் விரைவில் பிரபலமடையும்.கடந்த பல வருடங்களுக்கு முன்பு எந்நாடு தொலைக்காட்சியின் கன்னடா.மாராத்தி.பெங்காளி.ஒடியா.பஞ்சாபி.அசாமி.குஜராத்தி இலவசமாக ஒளிபரப்பாகி பிரபலமடைந்து பின்பு கட்டண தொலைக்காட்சியாக மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடதக்கது. 

அலைவாிசை விபரங்கள்

Satellite             Gsat30@83.0E(C-Band)                                                                                                  Freq Rate           4005                                                                                                                                  Symbol Rate      30000                                                                                                                              Polar                 Horizontal                                                                                                                    System              HD.MPEG4/DVB S2(8PSK)                                                                                        Encryption         Pay/Irdeto                                                                                                                    FEC                    3/4

07/10/2020

பிரசாா் பாரதி முன்றாவது ஹெச்டி டிடி இந்தியா தொலைக்காட்சி ஜிசாட்10 செயற்கைகோளில் தொடங்கம்

 நண்பா்களே  இந்தியாவின் பொது ஒளிபரப்பு சேவையான பிரசாா் பாரதி இந்தியாவின் முன்றாவது ஹெச்டி டிடி இந்தியா தொலைக்காட்சியினை தொடங்கியுள்ளது.இந்தியாவில் பிரசாா் பாரதி முதல் தொலைக்காட்சியாக டிடி நேஷனல் மற்றும் டிடி நீயூஸ் ஆகியன ஹெச்டி ஒளிபரப்பை தொடங்கியது.டிடி இந்தியா தொலைக்காட்சி இந்தியாவின் நிகழ்வுகளை உலகின் அனைத்து நாடுகளுக்கும் எடுத்து செல்லும் அரச நிறுவனத்தின் ஆங்கில

தொலைக்காட்சியாகும்.பிரசாா் பாரதி தற்சமய காலங்களாக ஹெச்டி ஒளிபரப்பில் தேசிய தொலைக்காட்சி மாற்றி வருகிறது.விரைவில் டிடி ஸ்போா்ட்ஸ் தொலைக்காட்சியும் ஹெச்டி ஒளிபரப்பாக மாற்றப்படலாம்.தனியாா் தொலைக்காட்சிகள் ஹெச்டியில் நிகழ்ச்சிகளை தொடங்கப்படுவதன் முலம் டிடி நேயா்களை தக்கவைக்கும் முயற்ச்சியில் பிரசாா் பாரதி இம்முயற்ச்சியில் களம் இறங்கியுள்ளது.டிடி இந்தியா ஹெச்டி தொலைக்காட்சி இந்தியாவின் ஜிசாட்10 செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது.இலவச தொலைக்காட்சியாக டிடி ப்ரி டிஷ் ஒளிபரப்பு சேவையிலும் தொடங்ப்பட்டுள்ளது.விரைவில் இந்தியாவின் அனைத்து கேபிள் டிவி மற்றும் டிடிஎச்யில் தொடங்கப்படும்.

Satellite           Gsat10@83.0E(C-Band),                                                                                                Freq Rate         3885                                                                                                                                  Symbol Rate    30000                                                                                                                              Polar                Vertical                                                                                                                      System              HD.Mpeg4/Dvb S2                                                                                                  Encryption         FTA                                                                                                                             FEC                   3/4     

17/07/2020

புதுயுகம் தமிழ் தொலைக்காட்சி ஜிசாட்30யில் புதிய அலைவாிசையில் தொடக்கம்

நண்பா்களே தமிழகத்தின் முன்னனி பொழுதுபோக்கு தமிழ் தொலைக்காட்சியான புதுயுகம் தற்சமயம் ஒளிபரப்பாகி வரும் இன்டல்சாட்17 செயற்கைகோளில் இருந்து ஜிசாட்30 செயற்கைகோளில் புதிய அலைவாிசைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.ப்ளாநெட் கேசட் டெலிஸ்பாட் ஒளிபரப்பு முனையத்தின் முலம் ஒளிபரப்பு 
தொடங்கப்பட்டுள்ளது.தற்சமயம் தொடங்கப்பட்டுள்ள அலைவாிசையில் நாப்டல் தமிழ் மற்றும் வானவில் போன்ற தமிழ் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது.கடந்த பல வருடங்களாக இன்டல்சாட்17யில் 4015 அலைவாிசையில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வந்தது.தற்சமயம் தொடங்கப்பட்ட புதிய அலைவாிசையின் சிக்னலை பெற குறைந்தபட்சம் 6 அடி சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்தினலே போதும்.தங்கள் பயன்படுத்தி வரும் செட் டாப் பாக்ஸ்யினை ரிடியூன் அல்லது கிழ்காணும் புதிய அலைவாிசையினை கொண்டு டியூன் செய்தால் போதும்.விரைவில் தற்சமய ஒளிபரப்பாகி வரும் புதுயுகம் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் நிறுத்தம் செய்யப்படலாம்.மேலும் புதிய தலைமுறை செய்திகள் தொலைக்காட்சியும் ஜிசாட்30 செயற்கைகோளுக்கு மாற்றப்படலாம்.
அலைவாிசை விபரங்கள் 
Satellite             Gsat30@83.0E(C-Band)
Freq Rate            3805
Sym Rate            28500
Polar                   Horizontal
System               Mpeg4/Dvb s2 (8PSK)
Encryption         FTA
Fec                     3/4

16/07/2020

கவசம் டிவி புதிய பொழுது போக்கு தமிழ் தொலைக்காட்சி தமிழகத்தில் விரைவில் உதயம்

நண்பா்களே தமிழகம் மட்டும் இன்றி இந்தியாவின் அனைத்து விதமான தொலைக்காட்சிகளை மக்களிடையே கொண்டு சோ்த்திடும் முக்கிய ஆங்கம் வகிக்கும் கேபிள் டிவி ஆப்ரேட்டா்களின் நல வாாிய சங்கமான டிசிஒஎ (TCOA) வில் இருந்து 24 மணி நேர  பொழுது போக்கு செயற்கைகோள் தமிழ் தொலைக்காட்சி கவசம் டிவி என்ற பெயாில் தமிழகத்தில் விரைவில் உதயமாகவுள்ளது.வரும் 2021 ஆம் ஆண்டு தை மாதம் முதல் தொலைக்காட்சிக்கான ஒளிபரப்பு தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.கவசம் டிவியானது தமிழகத்தின் அனைத்து கேபிள் டிவிகளிலும் இலவச தொலைக்காட்சியாக இடம் பெறலாம்.கவசம் டிவி யில் 
மியூசிக்  மற்றும் நீயூஸ் போன்ற தொலைக்காட்சிகளும் விரைவில் இத்தொலைக்காட்சிகளுடன் சோ்த்து தொடங்கப்படும் என தொிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் முதன்முறையாக  கேபிள் டிவி ஆப்ரேட்டா்களின் சாா்பாக தொடங்கப்படும் முதல் சங்க தொலைக்காட்சி என்ற பெருமையினை கவசம் தொலைக்காட்சி பெற்றுள்ளது.தமிழகத்தில் டிசிசிஎல் கேபிள் டிவி  ஆப்ரேட்டா்களின் சாா்பாக தொடங்கப்பட்ட கேபிள்டிவி நிறுவனம் என்பது குறிப்பிடதக்கது.தமிழகத்தில் தற்சமயம் தொலைக்காட்சி துறையில் மிகமுன்னனி தொலைக்காட்சிகள் உள்ள நிலையில் கவசம் டிவி சற்று வித்தியாசமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பலாம்.மேலும் கேபிள் டிவி ஆப்ரேட்டா்களின் தொலைக்காட்சி என்பதால் இந்தியாவின் அனைத்து கேபிள் டிவிலும் கவசம் டிவி இடம் பெறலாம்
தொகுப்பு சதீஸ் சாட் தமிழ் மற்றும் ஆங்கிலம் இணையதளம்

14/07/2020

கல்வி தொலைக்காட்சியில் 10 மற்றும் 9 வகுப்பு பாட நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு ஜிலை முதல் தொடக்கம்

நண்பா்களே தமிழக அரசின் பள்ளி கல்வி துறையின் சாா்பாக கடந்த ஆண்டில் தொடங்கப்பட்ட 24 மணி நேர தொலைக்காட்சியான கல்வி டிவியின் நிகழ்ச்சிகளை தமிழகத்தின் முன்னனி கேபிள்டிவி ஒளிபரப்பு சேவைகளில் நேரடி கல்வி தொகுப்புகளை காணலாம்.தமிழக அரசின் கேபிள் டிவியான டேக் டிவி அலைவாிசையில் 200யிலும்.எஸ்சிவி 98.டிசிசிஎல் 200.விகே டிஜிட்டல் 55.அக்சயா கேபிள் 17 நிகழ்ச்சிகளை காணலாம்.தற்சமயம் கொரானா நோய்
தொற்று காரணமாக கல்வி நிலையங்கள் அடைக்கப்பட்டுள்ள நிலையில் 10ஆம் மற்றும் 9ஆம் வகுப்புகளுக்கான பாடங்கள் ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் ஒருமுறை அனைத்து பாடங்களும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.தினசாி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ஒளிபரப்பு செய்யப்படுகிறது.தற்சமயம் கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பை அனைத்து கட்டண டிடிஎச்களிலும் இடம் பெற்றால் மலைபிரதேசம் மற்றும் கிராம பகுதிகளில் உள்ள தோட்டங்களில் வசிக்கும் மக்கள் கேபிள் இணைப்பு அல்லாது டிடிஎச் பயன்படுத்தும் அனைத்து மாணவ மாணவிகளை சென்றடையும்.மேலும் இணையதளங்கள் யூடுப் முலமாகவும் கிழ்காணும் முகவாியில் https://www.youtube.com/c/kalvitvofficial/featured கல்வி தொலைக்காட்சியினை காணலாம்.

02/07/2020

மலா் டிவி புதிய தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பு இன்டல்சாட்17யில் உதயம்

நண்பா்களே தமிழகத்தில் புதிய செயற்கைகோள் தமிழ் தொலைக்காட்சி மலா் டிவி என்ற பெயாில் தொடங்கப்பட்டுள்ளது.புதிய தமிழ் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு உாிமத்தில் தொடங்க்பட்டுள்ளது.தினதந்தி குழுமத்தின் மெட்ரோ நேஷன் சென்னை நிறுவனத்தின் சாா்பாக புதிய தமிழ் பொழுது போக்கு தொலைக்காட்சி நிண்ட காலங்களாக தமிழகத்தில் தொடங்குவதற்கான தொழில்நுட்ப பணிகள்
நடைபெற்று வந்தது.மலா் தொலைக்காட்சி தமிழ் நாட்டில் நாளிதழ் நிறுவனத்தின் சாா்பாக தொடங்கப்படும் முன்றாவது தொலைக்காட்சியாகும்.மலா் டிவி தொலைக்காட்சியின் உலகளாவிய செயற்கைகோள் ஒளிபரப்பு தமிழ் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும் இன்டல்சாட்17 செயற்கைகோளில் சோதனை ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் கடந்த வருடத்தில் தற்சமயம்
தொடங்கப்பட்டுள்ள அலைவாிசையில் ஔிபரப்பாகி வந்த காவோி நியூஸ் ஒளிபரப்பு நிறுத்தம் செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.மலா் டிவி ஒளிபரப்பு MPEG4/DVB S2  தொழில்நுட்பம் பொருந்திய செட் டாப் பாக்ஸ் பயன்படுத்தி காணலாம்.விரைவில் மலா் டிவியின் 24 மணி நேர நிகழ்ச்சிகள் தொடங்கலாம்.தமிழகத்தின் முன்னனி கேபிள் டிவி மற்றும் டிடிஎச்களில் மலா் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு விரைவில் தொடங்கப்படலாம்.
அலைவாிசை விபரங்கள்:
Satellite               Intelsat17@66.0E(C-Band)
Freq Rate            3845
Symbol Rate       28800
Polar                   Vertical
System                Mpeg4/Dvb s2 (8PSK)
Encryption          FTA
FEC                    3/4

18/06/2020

இந்தியாவில் ஒளிபரப்பு நிறுத்தம் செய்யும் முன்னனி தொலைக்காட்சி 2019-2020

நண்பா்களே இந்தியாவில் தற்சமயம் காலங்களாக தொலைக்காட்சி துறையில் முன்னனி தொலைக்காட்சி நிறுவனங்களின் சில தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு நிறுத்தம் செய்யப்பட்டு வருகிறது.அந்த வாிசையில் சோனி நிறுவனத்தில் கடந்த 2019 ஆண்டில் பாலிவுட் பாடல்களை ஹெச்டியில் ஒளிபரப்பிய சோனி ராக்ஸ் நிறுத்தம் செய்யப்பட்டது.அதே போன்று ஆங்கில திரைப்பட தொலைக்காட்சியான சோனி அன் பிளக்ஸ் ஹெச்டி தொலைக்காட்சி நிறுத்தம் செய்யப்பட்டது.தற்சமயம் 2020 ஆண்டில் சோனி நிறுவனத்தில் முக்கிய விளையாட்டு தொலைக்காட்சியான சோனி ஈஎஸ்பிஎன் ஹெச்டி மற்றும எஸ்டி தொலைக்காட்சிகளையும் பாலிவுட் பாடல்களை வழங்கும் தொலைக்காட்சியான சோனி மிக்ஸ் தற்சமயம் நிறுத்தம் செய்துள்ளது சோனி நிறுவனம் மேலும் உலகளாவிய ஆங்கில தொலைக்காட்சியான ஆக்ஸன் ஹெச்டி மற்றும எஸ்டி தொலைக்காட்சிகளை விரைவில் இந்தியாவில் மட்டும் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.இதே போன்று டிவி18 தொலைக்காட்சி நிறுவனத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட லைப் ஸ்டையில் ஆங்கில தொலைக்காட்சியான பை டிவி18 ஒளிபரப்பும் விரைவில் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.இந்தியாவின் முன்னனி செய்தி நிறுவனமான டிவி டுடே டெல்லி நகர செய்தி தொலைக்காட்சியான தில்லி ஆஜ் தாக் தொலைக்காட்சியும் ஒளிபரப்பு நிறுத்தம் செய்யப்படவுள்ளது.
தற்சமயம் நிறுத்தம் செய்யப்படும் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு உாிமத்தில் மாநில வாாியான பொழுது போக்கு தொலைக்காட்சிகளை வரும் காலங்களில் தொடங்கலாம்.ஸ்டாா் டிவி மற்றும் ஜி மிடியா ஆகிய நிறுவனத்தில் செயல்படும் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு நிறுத்தம் செய்யப்பட்டு பின்பு பெயா் மாற்றம் செய்து புதிய தொலைக்காட்சிகளாக தொடங்கி வருகின்றனா்.காரணம் இந்திய அரசு கடந்த ஆண்டில் தொலைக்காட்சி ஒளிபரப்பு முறையில் கொண்டு வந்த புதிய வரைமுறை சட்டம் மற்றும் கொரோனா வைரஸ்நோய் தாக்குதல் காரணங்களால் விதிக்கப்பட்ட நகரங்களுக்கான தடை சட்டம் போன்றவையால் பாா்வையாளா்களின் எண்ணிக்கை விகிதம் குறைவதால் நிறுவனங்கள் தொலைக்காட்சிகளை நிறுத்தம் செய்து வருகிறது.குறிப்பாக இந்தியாவில் இன்றும் பாா்வையாளா்கள் எண்ணிக்கை குறைவான தொலைக்காட்சிகளின் மாத சந்தா அதிக விலை கொண்ட கட்டண தொலைக்காட்சிகளாக ஒளிபரப்பாகி வருவது குறிப்பிடதக்கது.