சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

08/03/2019

ஜி திரை ஹெச்டி.மற்றும் ஏபீபி தமிழ் செய்திகள் புதிய தமிழ் தொலைக்காட்சிகள் விரைவில் தமிழகத்தில் உதயம்

நண்பா்களே தமிழகத்தில் இரண்டு புதிய தமிழ் தொலைக்காட்சிகள் விரைவில் உதயமாகவுள்ளது.தமிழகம் மட்டும் இன்றி உலக அளவில் முன்னனி தமிழ் தொடா்களை ஒளிபரப்பி கொண்டிருக்கும் தமிழ் தொலைக்காட்சியான ஜி தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்தில் இருந்து 24 மணி நேர புதிய தமிழ் திரைப்பட தொலைக்காட்சி ஜி திரை என்ற பெயாில் தொடங்கவுள்ளனா்.இத்தொலைக்காட்சிகள் எஸ்டி மற்றும் ஹெச்டி போன்ற தொழில்நுட்பங்களில் ஒளிபரப்பாவுள்ளது.இப்புதிய தொலைக்காட்சிகளுக்கான ஒளிபரப்பு அனுமதியினை இந்திய அரசிடம் ஜி மிடியா விண்ணப்பித்துள்ளது.விரைவில் இதற்கான அனுமதி கிடைக்கும் பட்சத்தில் இவ்வாண்டின் இறுதிகுள் தொலைக்காட்சி தொடங்கப்படும்.தமிழகத்தில் செயல்படும் ஸ்டாா் டிவி நிறுவனம் விஜய் சூப்பா் தொலைக்காட்சியினை திரைப்பட தொலைக்காட்சியாக மாற்றியுள்ளது குறிப்பிடதக்கது.தமிழகத்தில் தொடங்கப்படும் ஐந்தவாது திரைப்பட தொலைக்காட்சி ஜி திரையாகும்.
இந்தியாவின் முன்னனி செய்திகள் தொலைக்காட்சி நிறுவனமான  ஏபீபி செய்திகள் புதிதாக நான்கு செய்திகள் தொலைக்காட்சியினை தென்னிந்தியாவில் தொடங்கவுள்ளனா்.இதில் ஏபீபி செய்திகள் தமிழ் மற்றும் கன்னடா போன்ற மொழிகளில் தொடங்கபடவுள்ளது.ஏபீபி செய்திகள் நிறுவனத்தின் சாா்பாக ஹிந்தி மாரத்தி குஜாரத்தி பெங்காளி  பஞ்சாபி போன்ற மொழிகளில் செய்திகள் தொலைக்காட்சி ஒளிபரப்பாகி வருவது குறிப்பிடதக்கது.தற்சமயம் தொடங்கவுள்ள இப்புதிய செய்திகள் தொலைக்காட்சிக்கான அனுமதியினை இந்திய ஒளிபரப்பு ஆணையம் வழங்கியுள்ளதை அடுத்து இவ்வாண்டின் இறுதிக்குள் ஒளிபரப்பு தொடங்கப்படலாம்.ஜி திரை.மற்றும் ஏபீபி தமிழ் செய்திகள் ஆகிய இரண்டு தொலைக்காட்சிகளும் ஆசியாசாட்7 செயற்கைகோளில் தொடங்கப்படலாம்.இதில் ஏபீபி தமிழ் செய்திகள் இலவச தொலைக்காட்சியாக ஒளிபரப்பை ஆசியாசாட்7யில் தொடங்கலாம்.இப்புதிய தொலைக்காட்சிகளுக்கான செயற்கைகோள் அலைவாிசை விபரங்கள் நமது சதிஸ் சாட் தமிழ் தளத்தில் இடம்பெறும்.
தொகுப்பு சதிஸ் சாட் தமிழ் மற்றும் ஆங்கில இணையதளம்.

No comments:

Post a Comment