சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

15/03/2013

பொதிகை தொலைக்காட்சி ஒரு கண்ணோட்டம்

தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னோடி தொலைக்காட்சியாக திகழம் நமது பொதிகை பற்றி ஒரு சிறு கண்ணோட்டம்
டிடி1 என்றால் அது நமது சென்னை தொலைக்காட்சி என்று தான் ஞாபகம் வரும் .
  1993 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 தேதி முதன் முதலாக மத்திய ஒளிபரப்பு ஆணையத்தின் கீழ் இயஙகும்  பிரசார் பாரதியான தூர்தர்ஷன் கேந்திரம் தமிழகத்தில் தமிழ் மொழியில் டிடி5 என்ற தொலைக்காட்சியை தொடங்கியது முதன் முதலில் தரைவழி ஒளிபரப்பு  மூலம் சேவையை தொடங்கிய நமது பொதிகை மாநிலத்தில் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் ஒளிபரப்பு சேவையை வழங்கியது .பின்பு படிபடியாக மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் சேவையை தொடங்கியது டிடி5.முதலில்டிடி1யில் ஒளிபரப்பாகும் ஹிந்தி நாடகங்களை( ஸ்ரீ கிருஷ்னா, ஜீனியர் ஜீ, சக்திமான், கேப்டன் யு,  மாஹபாரதம்) போன்ற தொடர்களை மொழிபெயர்ப்பு செய்து தமிழில் வழங்கியது.மற்ற நேரங்களில் தமிழ் செய்திகளையும் விவசாயம் தொடர்பான  நிகழ்ச்சிகளை மாலை பொழுதில் வழங்கியது.1995 முதல் டிடி5  அனது மாலை 3 மணி முதல் இரவு 11 மணி வரை தொலைக்காட்சி தொடர்கள், வயலும் வாழ்வும், கண்மணி பூங்கா, காண்போம் கற்போம், மங்கள இசை,சாப்பிட வாங்க, நாட்டியஞ்சலி, மிக மிக பிரபலமடைந்த நிகழ்ச்சியான வெள்ளி ஒளியும் ஒலியும், வாரத்தின் வெள்ளி இரவு 9.30க்கும் சனி இரவு 10.30க்கும் ஞாயிறு மாலை 4.30க்கும் தமிழ்திரைப்படங்கள் போன்ற நிகழ்ச்சிகளை வழங்கியது
     பின்பு டிடி5 என்ற பெயரை மாற்றம் செய்ய நேயர்களிடம் இருந்து கருத்து கேட்கப்பட்டது அதில் தேர்வு செய்யப்பட்டது பெயர் தான் .திருநெல்வேலி மாவட்டத்தில் பெயர் பெற்ற மற்றும் தமிழ் இதிகாசங்களில் வர்ணித்த  அந்த சிறப்புவாய்ந்த பொதிகை மலையின் பெயரையே 2000ஆம் ஆண்டு ஜனவரி 15 நாளில் பொதிகை தொலைக்காட்சி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது அனறைய காலங்களில் சாதாரன ஆன்டெனா முலம் 14 இஞ்ச் கருப்பு வெள்ளை தொலைக்காட்சிபெட்டியின் எளிய ஏழைமக்கள் காண கூடிய மிக தெளிவான ஒளிபரப்பை வழங்கிய

நமது பொதிகை 24 மணிநேர செயற்கை கோள் ஒளிபரப்பாக மாற்றப்பட்டு இந்தியாவின் இன்சாட்3எ முலம் கேபிள்டிவியின் முலமாகவும் பின்பு இந்தியாவின் 2003 ஆண்டு தொடங்கிய இலவச டிடி எச் சேவை முலமும் பொதிகை தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் நாட்டின் அனைத்து பகுதிகளில் மற்றும் மலைபகுதிகளில் வாழம் தமிழ்ர்களுக்கு தெளிவான  ஒளிபரப்பு கிடைக்கப் பெற்றது எத்தனை தமிழ்தொலைக்காட்சிகள் தொடங்கினாலும் பொதிகை டிவிக்கு மிகையாகது.வரும் 14 ஏப்ரல் 2013 அன்று நமது பொதிகை 20 ஆண்டில் அடியேடுத்து வைக்கிறது.20 ஆண்டுகளாமக தமிழ்ர்களுக்கென்று இன்று வரை இலவசமாக பல்சுவை நிகழ்ச்சிகளை தரும் நமது பொதிகை தொலைக்காட்சியின் பணி தொடருட்டும் என வாழ்த்துவோம்




                                                                                                               தொகு்ப்பு
                                                                                                           K.சதீஸ் சாட்       

No comments:

Post a Comment