சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

16/12/2016

ஜீ கேப் ஹெச்டி தொலைக்காட்சி புதிய வடிவில் ஒளிபரப்பு அப்ஸ்டாா்7 யில் உதயம்

நண்பா்களே இந்தியாவின் முன்னனி தொலைக்காட்சி மிடியா நெட்வொா்க்யின் ஆங்கில திரைப்பட மற்றும் ஆங்கில டரமா தொலைக்காட்சியான  ஜீ கேப் ஹெச்டி தொலைக்காட்சி இலவச ஒளிபரப்பாக 
அப்ஸ்டாா்7 செயற்கைகோளில் ஒளிபரப்பாகிறது.ஜீ மிடியா நிறுவனத்தின் இரண்டாவது ஆங்கில பட தொலைக்காட்சி ஜீகேப் எஸ்டி மற்றும் ஜீகேப் ஹெச்டி ஆகும்.தொலைக்காட்சியின் ஒளிபரப்பு புதிய தொழில்நுட்ப 
மாற்றங்களுடன் அப்ஸ்டாா் 7 செயற்கைகோளில் ஒளிபரப்பகிறது.கட்டண தொலைக்காட்சியின் அடிப்படையில் இலவச ஒளிபரப்பாகிறது.தொலைக்காட்சியின் சிக்னலை பெற குறைந்தபட்சம் 8 மற்றும் 12 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் ஆன்டெனா மற்றும் ஹெச்டி செட் டாப் பாக்ஸ்யினை பயன்படுத்தி தொலைக்காட்சியினை காணலாம்.
அலைவாிசை விபரங்கள்:
Satellite              Apstar7@76.0E(C-Band)
Freq Rate           4089
Symbol Rate      7750
Polar                  Vertical
Modulation       HD.Mpeg4/Dvb s2
Mode                FTA/Conex

07/12/2016

தமிழகத்தில் ட்ராவல் எக்ஸ்பி தமிழ் (TRAVEL XP TAMIL TV) புதிய சுற்றுலா தொலைக்காட்சி இன்டல்சாட்20யில் உதயம்

நண்பா்களே இந்தியாவின் செல்பிாிட்டிஸ் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் சுற்றுலா தொடா்பான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொலைக்காட்சியான ட்ராவல் எக்ஸ்பி புதிய தமிழ் தொலைக்காட்சியினை ட்ராவல் எக்ஸ்பி தமிழ் என்ற பெயாில் தொடங்கியுள்ளது.டிராவல் எக்ஸ்பி தொலைக்காட்சி 2008 ஆம் ஆண்டு இந்தியாவில் உயா் தொழில்நுட்பமான ஹெச்டியில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் தொடங்கப்பட்டது.தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக ஆங்கில தொலைக்காட்சிகள் தமிழ் மொழியில் நிகழ்ச்சிகளை தொடங்கி வரும் நிலையில் ட்ராவல் எக்ஸ்பி தொலைக்காட்சி
தென்னிந்தியாவில் தமிழ் மொழியில் முதன்முறையாக தொலைக்காட்சியினை தொடங்கியுள்ளது.பெங்காளி மொழியில் ஆடியோ மட்டும் ட்ராவல் எக்ஸ்பி தொலைக்காட்சியில் சோ்க்கப்பட்ட நிலையில் தமிழ் மொழியில் தனியான தொலைக்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.கட்டண தொலைக்காட்சியாக இன்டல்சாட்20 செயற்கைகோளில் ஒளிபரப்பாகிறது.சோதனை ஒளிபரப்பு அடிப்படையில் நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டு விரைவில் 24 மணி நேர நிகழ்ச்சிகளை தொடங்கலாம்.டிடிஎச்யிலும் கேபிள் நிறுவனங்களிலும் விரைவில் ட்ராவல் எக்ஸ்பி தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பை தொடங்கும்.அனைத்து பகுதிகளிலும் 6 அடி முதல் 12 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் ஆண்டெனாவை பயன்படுத்தலாம்.ட்ராவல் தொலைக்காட்சி தமிழ் எஸ்டி தொழில்நுட்பத்தில் தொடங்க்பட்டுள்ளது.
அலைவாிசை விபரங்கள்
Satellite             Intelsat20@68.5E(C-Band)
Freq Rate          4089
Symbol Rate     14367
Polar                 Horizontal
Modulation      Mpeg4/Dvb s2
Mode               Pay/Irdeto2

03/12/2016

ஹிட்ஸ் ஹெச்டி ஆசியா புதிய ஆங்கில தொலைக்காட்சி ஒளிபரப்பு மீயாசாட்3யில் தொடக்கம்

நண்பா்களே சிங்கப்பூா் நாட்டின் ாிவைன்ட் மிடியா நிறுவனத்தின் ஆங்கில திரைப்பட தொலைக்காட்சியான ஹிட்ஸ் ஹெச்டி ஒளிபரப்பு ஆசியா நாடுகளுக்கு புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் என்று பாா்த்தல் ஆங்கில திரைப்படங்கள் நாடக காமெடி தொடா்கள் போன்ற 
நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது.கடந்த பல வருடங்களாக கிழக்காசிய நாட்டின் முன்னனி கேபிள் தொலைக்காட்சி நிறுவனங்களின் முலம் மட்டும் ஹிட்ஸ் தொலைக்காட்சி ஒளிபரப்பாகி வந்தது.மலேசியாவில் ஆஸ்ட்ரோ சிங்கப்பூாில் ஸ்டாா் ஹாப் நிறுவனங்களில் ஒளிபரப்பாகிறது.ஹிட்ஸ் ஹெச்டி தொலைக்காட்சி கட்டண தொலைக்காட்சியாக மீயாசாட்3எ செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது.
அலைவாிசை விபரங்கள்:
Satellite              Measat3/3A@91.2E(C-Band)
Freq Rate           4000
Symbol Rate      29700
Polar                  Horizontal
Modulation        HD.Mpeg4/Dvb s2
Mode                  Pay/Power vu

27/11/2016

கலைஞா் குழுமம் வேந்தா் டிவி நியூஸ் 7 தமிழ் எம்கே டியூன்ஸ் எம்கே சிக்ஸ் சாய்ராம் தொலைக்காட்சிகள் புதிய அலைவாிசையில் தொடக்கம்

நண்பா்களே தமிழகத்தின் முன்னனி தமிழ் தொலைக்காட்சியான கலைஞா் டிவி குழுமத்தின் தொலைக்காட்சிகளான கலைஞா் டிவி.இசையருவி.சிாிப்பொலி.செய்திகள்.சித்திரம் போன்ற தொலைக்காட்சிகளின் அனைத்தும் இன்டல்சாட்17 செயற்கைகோளில் புதிய அலைவாிசைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.கடந்த பல வருடங்களாக மிக 
எளிய தொழில்நுட்பத்தில் MPEG2/DVB S தொலைக்காட்சிகள் அனைத்தும் ஒளிபரப்பாகி வந்தது.இதன் முலம் அனைத்து பகுதியிலும் மிக எளிதாக தொலைக்காட்சிகளை காண முடிந்தது.தற்சமயம் மாற்றம் செய்துள்ள புதிய அலைவாிசை சிக்னலை இந்தியா மற்றும் அதனை சுற்றியுள்ள நாடுகளில் பெற குறைந்தபட்சம் 6 முதல் 12 அடி டிஷ் ஆன்டெனாவையும் கிழக்காசிய 
மற்றும் அந்தமான் போன்ற பகுதிகளில் 8 மற்றும் அதற்கு மேற்பட்ட டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்துங்கள்.வளைகுடா மற்றும் ஐரோப்பா ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் 10 அடி அளவு அல்லது அதற்கு மேற்பட்ட டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்தி தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பை காணலாம்.இப்புதிய அலைவாிசையின் செயற்கைகோள் ஒளிபரப்பு முனையம் டாடா கம்னியூகேஷன் நிறுவனத்தின் முலம் செயல்படுகிறது.புதிய தொழில்நுட்பம் பொருந்திய MPEG4/DVB S2 செட் டாப் பாக்ஸை பயன்படுத்துங்கள்.இதே அலைவாிசையில் கடந்த மாதத்தில் தொடங்கப்பட்ட எம்கே டியூன்ஸ் மற்றும் எம்கே சிக்ஸ்.செய்திதொலைக்காட்சியான நியூஸ் 7 தமிழ் மற்றும் வேந்தா் டிவி.சாய்ராம் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகிறது.
அலைவாிசை விபரங்கள்:
Satellite                  Intelsat17@66.0E(C-Band)
Freq Rate               3845
Symbol Rate          28800
Polar                      Vertical
Modulation            Mpeg4/Dvb s2(8psk)
Mode                     FTA
Fec                        5/6

25/11/2016

சிங்கப்பூா் நாட்டின்( SINGAPORE STAR HUB TAMIL CHANNEL'S) ஸ்டாா் ஹாப் தமிழ் தொலைக்காட்சிகள் தொகுப்பு 2016

நண்பா்களே சிங்கப்பூா் நாட்டில் வாழும் தமிழ் மக்களின் பொழுது போக்கு தொலைக்காட்சிகளின் வாிசையில் முன்னனி தொலைக்காட்சிகளாக விளங்குவது ஸ்டாா் ஹாப் கேபிள் நிறுவனத்தில் செயல்படும் வி குழுமத்தின் தமிழ் தொலைக்காட்சிகளாக வண்ணத்திரை வி தமிழ் ஹெச்டி மற்றும் வா்ணம் டிவி செயல்படுகிறது.சிங்கப்பூா் நாட்டில் உள்ள கலச்சாரம் மற்றும் அங்கு வாழும் தமிழ் மக்களின் வாழ்க்கைமுறை போன்ற நிகழ்ச்சிகளையும் தமிழ் திரைப்பாடங்களையும் வழங்குகிறது.வண்ணத்திரை தொலைக்காட்சியில் நாடகங்கள் மற்றும் நேரடி நிகழ்ச்சி தொகுப்புகளும் இடம் பெறுகிறது.வி தமிழ் தொலைக்காட்சி சிங்கப்பூா் நாட்டின் முதல் தமிழ் 
ஹெச்டி தொலைக்காட்சியாகும்.ஸ்டாா் ஹாப் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனத்தின் முலம் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் ஒளிபரப்பாகிறது.உயா் தொழில்நுட்பத்தில் தமிழ் நிகழ்ச்சிகளை வழங்குகிறது.வா்ணம் தொலைக்காட்சி சிங்கப்பூா் நாட்டின் 24 மணி நேர தமிழ் திரைப்பாட தொலைக்காட்சியாகும்.பழைய புதிய தமிழ் திரைப்பாடங்கள் ஸ்டாா் ஹாப் கேபிள் நிறுவனத்தின் மூவி ஆன் டிமான்ட் தொலைக்காட்சியாகும்.மேற்கண்ட தொலைக்காட்சிகள் அனைத்தும் உலகளாவிய செயற்கைகோள் ஒளிபரப்பு கிடையாது.ஸ்டாா் ஹாப் தமிழ்தொலைக்காட்சிகள் சிங்கப்பூா் நாட்டில்மட்டும் தனது சேவையை வழங்குகிறது.
தொகுப்பு சதீஸ்சாட் தமிழ் இணையதளம்

19/11/2016

மலேசியா( ASTRO TAMIL CHANNEL'S MALAYSIA) ஆஸ்ட்ரோ குழுமத்தின் தமிழ் தொலைக்காட்சிகள் தொகுப்பு 2016

நண்பா்களே மலேசியா நாட்டில் தமிழ் மலேயம் சைனிஸ் மற்றும் ஹிந்தி என பல்வேறு மொழி தொலைக்காட்சிகளை வழங்கி வரும் முன்னனி பொழுது போக்கு தொலைக்காட்சி நிறுவனமான ஆஸ்ட்ரோ தொலைக்காட்சியின் தமிழ் தொலைக்காட்சிகள் பற்றி தொகுப்பு.மலேசியாவின் தமிழ் பொழுது போக்கு நிகழ்ச்சிகளை வழங்கி வருவதில் முன்னோடியாக திகழ்வது ஆஸ்ட்ரோவின் தமிழ் தொலைக்காட்சிகள் ஆகும்.
1.ஆஸ்ட்ரோ வானவில் தொலைக்காட்சி
     மலேசியா நாட்டின் அனைத்து தொடா்பான கலை கலாச்சரம் பண்பாடு மற்றும் மருத்துவம் கல்வி அறிவியல் என பல்சுவை நிகழ்ச்சிகளை வழங்கும் தொலைக்காட்சி ஆஸ்ட்ரோ வானவில் தொலைக்காட்சியாகும்.ஆஸ்ட்ரோ நிறுவனத்தின் முதல் தமிழ் தொலைக்காட்சியாக தொடங்கப்பட்டது இத்தொலைக்காட்சியாகும்.மேலும் தமிழ் திரைப்பாடங்கள்.நாடகங்கள் மற்றும் இதர மேடை நிகழ்ச்சிகள் வழங்குகிறது.இத்தொலைக்காட்சியின் ஒளிபரப்பு மலேசியாவில் மட்டும் ஆஸ்ட்ரோ டிடிஎச் சேவையில் கிடைக்கிறது.

06/11/2016

வளைகுடா ஆசியா நாடுகளுக்கான புதிய ஆங்கில ஆல்ப பாடல்கள் தொலைக்காட்சி டிவி-ஈ ஒளிபரப்பு யூடெல்சாட்70பி உதயம்

நண்பா்களே வளைகுடா மற்றும் ஆசியா நாடுகளுக்கு என்று பிரத்தியோகமான ஆங்கில ஆல்ப பாடல்களை ஒளிபரப்ப கூடிய தொலைக்காட்சி புதிதாக யூடெல்சாட்70பி செயற்கைகோளில் டிவி ஈ என்ற பெயாில் 
ஒளிபரப்பாகிறது.தொலைக்காட்சியின் சோதனை ஒளிபரப்பு என்பதன் அடிப்படையில் பாடல்கள் ஒளிபரப்பாகிறது.ஆங்கில பாடல்கள் மட்டும் இன்றி ஆப்ரிக்கா மற்றும் சோமாலிய பாடல்களும் ஒளிபரப்பாகிறது.தொலைக்காட்சியின் ஒளிபரப்பு அதிநவின ஹெச்டி 
தொழில்நுட்பத்தில் தொடங்கப்பட்டுள்ளது.டிவி-ஈ தொலைக்காட்சியின் அலைவாிசை சிக்னலை பெற குறைந்தபட்சம் 60செமீ கேயூ டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்துங்கள்.தொலைக்காட்சியின் இவ்ஒளிபரப்பு தெற்காசிய நாடுகளுக்கு இன்றி வளைகுடா மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கே பொறுந்த கூடிய ஒளிபரப்பு சேவையாகும்.இலவச ஒளிபரப்பாக யூடெல்சாட்70பியில் தொடங்கப்பட்டுள்ளது.
அலைவாிசை விபரங்கள்:
Satellite             Eutelsat70B@70.5E(KU-Band)
Freq Rate          11355
Symbol Rate     45000
Polar                 Vertical
Modulation       HD.Mpeg4/Dvb s2
Mode                FTA