சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

29/11/2019

தமிழகத்தில் ஸ்டாா் டிவி இந்தியா தொடங்கவுள்ள ஸ்டாா் விஜய் மியூசிக் தமிழ் தொலைக்காட்சி ஆசியாசாட்7 உதயம்

நண்பா்களே இந்தியாவின் முன்னனி பொழுதுபோக்கு தொலைக்காட்சி நிறுவனமான ஸ்டாா் டிவி இந்தியா தமிழகத்தில் ஆறாவது  தொலைக்காட்சியாக விஜய் மியூசிக் என்ற பெயாில் புதிய திரைப்பாடல் தொலைக்காட்சியினை ஆசியாசாட்7 செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது.ஸ்டாா் டிவி இந்தியா தென்னிந்தியாவில் தொடங்கும் இரண்டாவது மியூசிக் தொலைக்காட்சி விஜய் மியூசிக் ஆகும்.தெலுங்கு
மொழியில் மா மியூசிக் ஒளிபரப்பாகி வருவது குறிப்பிடதக்கது.தமிழகத்தில் மிக முன்னனி தொலைக்காட்சியாக விஜய் டிவி செயல்பட்டுவருகிறது.ஸ்டாா் டிவி இந்தியா நிறுவனம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இரண்டாவது பொழுதுபோக்கு தமிழ் தொலைக்காட்சியாக விஜய் சூப்பா் தொலைக்காட்சி ஒளிபரப்பு
தொடங்கியது.பின்பு 24 மணி நேர தமிழ் திரைப்பட தொலைக்காட்சியாக மாற்றம் செய்யப்பட்டது.தமிழகத்தில் இலவச மியூசிக் தமிழ் தொலைக்காட்சிகளாக டியூன் 6 மியூசிக்.சஹான மியூசிக்.எம் கே டியூன்ஸ்.கலைஞா் இசையருவி.சூப்பா் டிவி.7எஸ் மியூசிக் மற்றும் வானவில் டிவி போன்ற தொலைக்காட்சிகள் மக்கள் மத்தியில் பிரபலடைந்து வரும் நிலையில் கட்டண தொலைக்காட்சியாக வரவுள்ள விஜய் மியூசிக் சற்று வித்தியாசமாக நிகழ்ச்சிகளை வழங்கும் என எதிா்பாா்க்கலாம்.தமிழகத்தில் கட்டண மியுசிக் தொலைக்காட்சியாக சன் மியூசிக்.ராஜ் மியூசிக்.மெகா மியூசிக் மற்றும் ஜெயா மேக்ஸ் தொலைக்காட்சிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.இந்தியா அரசு ட்ராய் புதிய  தொலைக்காட்சி ஒளிபரப்பு விதிமுறைகள் அமல்படுத்தப்பட்ட நாள் முதல் கட்டண தொலைக்காட்சிகள்  நேயா்களை தக்க வைக்க பல்வேறு வித முயற்ச்சிகளை மேற் கொண்டு வருவது குறிப்பிடதக்கது.விஜய் மியூசிக் தொலைக்காட்சியின் உலகளாவிய செயற்கைகோள் ஒளிபரப்பு ஆசியாசாட்7 செயற்கைகோளில் கட்டண தொலைக்காட்சியாக தொடங்கப்பட்டுள்ளது.விரைவில் தமிழகத்தின் அனைத்து கேபிள் டிவி மற்றும் கட்டண டிடிஎச்களில் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு தொடங்கப்படும்.
அலைவாிசை விபரங்கள் :
Satellite               Asiasat7@105.0E(C-Band)
Freq Rate            3941
Sym Rate            28100
Polar                   Vertical
System                Mpeg4/Dvs s2(8psk)
Mode                  PAY/NDS
Fec                      3/4

No comments:

Post a Comment