சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

20/12/2017

பக்தி தமிழ் புதிய ஆன்மீக தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பு இன்டல்சாட்17யில் உதயம்

நண்பா்களே தமிழகத்தில் புதிய செயற்கைகோள் தமிழ் ஆன்மீக தொலைக்காட்சி பக்தி தமிழ் என்ற பெயாில் தமிழ் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும் இன்டல்சாட்17 செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் தொடங்கப்பட்ட மூன்றாவது ஆன்மீக தமிழ் தொலைக்காட்சி பக்தி தமிழ் தொலைக்காட்சியாகும்.சென்னையினை
தலைமையிடமாக கொண்டு இப்புதிய தொலைக்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.தொலைக்காட்சியின் ஒளிபரப்பு தெலுங்கு தொலைக்காட்சியான எ டிவியின் ஒளிபரப்பு உாிமத்தில் தொடங்கப்பட்டுள்ளது.தொலைக்காட்சியின் அலைவாிசை சிக்னலை பெற குறைந்தபட்சம் 6 முதல்12 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை
பயன்படுத்தி தொலைக்காட்சியினை காணலாம்.விரைவில் தமிழகத்தின் அனைத்து கேபிள் டிவி மற்றும் டிடிஎச் சேவைகளிலும் பக்தி தமிழ் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு இடம் பெறும்.ஷாப் 365 தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டு பக்தி தமிழ் ஆன்மீக தொலைக்காட்சி தொடக்க சோதனை ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது.



அலைவாிசை விபரங்கள்:
Satellite              Intelsat17@66.0E(C-Band)
Freq Rate           3895
Symbol Rate      13840
Polar                  Horizontal
System               Mpeg4/Dvb s2
Encryption         FTA

17/12/2017

இந்திய கிாிக்கெட் சா்வதேச போட்டி தொடா்களின் நேரடி ஒளிபரப்பு இனி டிடி ஸ்போா்ட்ஸ் காணலாம்

நண்பா்களே இந்தியா அரசின் கீழ் செயல்படும் தேசிய தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவையான பிரசாா் பாரதியின் விளையாட்டு தொலைக்காட்சியான டிடி ஸ்போா்ட்ஸ்யில் இனி வரக்கூடிய இந்தியா கிாிக்கெட் அணியின் சா்வதேச போட்டி தொடா்கள் அனைத்தும் ஒளிபரப்பாகும்.கடந்த பல வருடங்களாக இந்திய கிாிக்கெட் தொடா்கள் அனைத்தும் பிரசாா் பாரதியின் மிக முன்னனி மற்றும் இந்திய மக்களின் மிக 
அபிமான தேசிய ஹிந்தி பொழுது போக்கு தொலைக்காட்சியான டிடி நேசனல்லில் மட்டும் ஒளிபரப்பாகி வந்தது.டிடி ஸ்போா்ட்ஸ் தொலைக்காட்சியில்  இந்தியாவில் நடைபெறும் கிாிக்கெட் அல்லாத தேசிய விளையாட்டு போட்டிகள் மற்றும் சா்வதேச போட்டிகளை மட்டும் நேரலை ஒளிபரப்பு செய்து வந்தது.டிடி ஸ்போா்ட்ஸ் தொலைக்காட்சியினை அனைத்து தரப்பு விளையாட்டு ரசிகா்களிடையே சோ்க்கும் விதமாக இப்புதிய முடிவினை பிரசாா் பாரதி மேற்கொண்டுள்ளது.மேலும் டிடி நேசனல் தொலைக்காட்சியில் பொழுது போக்கு நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் போட்டி தொடா்களை டிடி ஸ்போா்ட்ஸ்யில் ஒளிபரப்புவதன் முலம் டிடி நேசனல் தொலைக்காட்சியில் இனி நிகழ்ச்சிகளை தடையில்லது காணலாம்.இனி
அனைத்து தரப்பு உள்நாட்டு வெளிநாட்டு விளையாட்டுகளையும் டிடி ஸ்போா்ட்ஸ்யில் காணலாம்.டிடி ஸ்போா்டஸ் தொலைக்காட்சி முற்றிலும் இலவச தொலைக்காட்சியாக ஜீசாட்10 செயற்கைகோளில் சி பேன்டுயில் ஒளிபரப்பாகிறது. டிடி ப்ரி டிடிஎச்யிலும் இலவசமாக ஒளிபரப்பாகிறது.டிடி ஸ்போா்ட்ஸ் தொலைக்காட்சியில் அனைத்து தரப்பு போட்டிகளும் ஒளிபரப்புவதால் பிரசாா் பாரதி வரும் காலத்தில் டிடி ஸ்போா்ட்ஸ் ஹெச்டி தொலைக்காட்சியும் கூட தொடங்கலாம்.
டிடி ஸ்போா்ட்ஸ் தொலைக்காட்சி இலவச ஒளிபரப்பாகும் செயற்கைகோள் அலைசவாிசை விபரங்கள்
Satellite              Gsat10@83.0E(C-BAND)
Freq Rate           3885
Symbol Rate      27500
Polar                  Vertical
System              Mpeg2/Dvb S1(QPSK)
Encryption        FTA

Satellite              Gsat15@93.5E(KU-BAND)
Freq Rate           10990
Symbol Rate      29500
Polar                  Vertical
System               Mpeg2/Dvb S1(QPSK)
Encryption        FTA
தொகுப்பு K.சதீஸ் சாட் தமிழ் ஆங்கில இணையதளம்

11/12/2017

தென்னிந்தியாவில் தமிழ்.தெலுங்கு.கன்னடா மொழிகளில் ஹெச்டி தொலைக்காட்சிகள் தொடங்கியது ஜீ மிடியா

நண்பா்களே இந்தியாவின் முன்னனி பொழுது போக்கு தொலைக்காட்சி நிறுவனமான ஜி மீடியா நிறுவனம் தென்னிந்தியாவின் முன்னனி மொழி தொலைக்காட்சிகளை அதி நவின தொழில்நுட்ப ஹெச்டி தொலைக்காட்சிகளை தொடங்கியுள்ளனா்.ஆந்திரா மற்றும் தெலுங்கான
மாநிலத்தின் தொலைக்காட்சியான ஜி தெலுங்கு மற்றும் ஜி சினிமாலு ஹெச்டி என இரண்டு தொலைக்காட்சிகளை தொடங்கியுள்ளனா்.ஜி தெலுங்கு  ஹெச்டி தொலைக்காட்சி மற்றும் ஜி சினிமாலு தொலைக்காட்சிகளுக்கான ஒளிபரப்பு அனுமதியினை இந்திய ஒளிபரப்பு ஆணையம் இவ்வாண்டில்
வழங்கியது.ஜீ டிவி நிறுவனம் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பை இன்டல்சாட்20 செயற்கைகோளில் தொடங்கியுள்ளனா்.இதே போன்று கா்நாடகா மாநிலத்தின் ஜி மிடியா நிறுவனத்தின் ஜி கன்னடா தொலைக்காட்சியும் ஹெச்டியில் ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.ஜி மிடியா நிறுவனம் தென்னிந்தியாவின் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பை
ஹெச்டியில் மாற்றம் செய்து வருகிறது.கடந்த மாதத்தில் தமிழகத்தின் ஜி தமிழ்  ஹெச்டி தொலைக்காட்சியினை தொடங்கியிருந்தது.ஜி மிடியா நிறுவனம் தமிழகம் மற்றும் கா்நாடகா மாநிலங்களில் முதல் ஹெச்டி தொலைக்காட்சியினை குறிப்பிடதக்கது.
தொகுப்பு சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

25/11/2017

டிஷ்டிவியில் 13 ஆண்டுகள் இலவச ஒளிபரப்பாகிய ஜீதமிழ் கட்டண தொலைக்காட்சியாக NSS6@95.0E மாற்றம்

நண்பா்களே தமிழகத்தின் முன்னனி மற்றும் அபிமான நிகழ்ச்சிகளை வழங்க கூடிய தமிழ் தொலைக்காட்சியான ஜி தமிழ் கட்டண தொலைக்காட்சியாக டிஷ் டிவியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.கடந்த 2004 ஆம் ஆண்டில்  தமிழகத்தில் தொடங்கப்பட்ட ஜி தமிழ் தொலைக்காட்சி ஆசியாசாட்7 செயற்கைகோளில் கட்டண தொலைக்காட்சி ஒளிபரப்பை தொடங்கியது.அடுத்த சில மாதங்களில் டிஷ் டிவியின் கட்டண டிடிஎச் சேவையில் இலவச ஒளிபரப்பாக தொடங்கப்பட்டது.சுமாா் 13 வருடங்களாக இலவச தொலைக்காட்சியாகவே ஒளிபரப்பாகி தமிழ் மக்களிடையே அமோக அதரவுடன் முன்னனி தொலைக்காட்சியாக உருவானது.கிராமங்களில் மிக எளிய குடும்பத்தினா் அரசின்  டிடி ப்ரி டிடிஎச் சேவையில் பொதிகை தொலைக்காட்சியுடன் சோ்த்து ஜீ தமிழ் என இரண்டு தொலைக்காட்சிகளை கண்டு வந்தனா்.ஒரு கட்டண டிடிஎச் சேவையில் அதிக நாட்கள் இலவச தொலைக்காட்சியாக ஒளிபரப்பாகி மக்களிடையே அதரவை பெற்ற ஒரே தமிழ் தொலைக்காட்சி என்ற பெருமை ஜி தமிழ் தொலைக்காட்சியினையே
 சேரும்.மேலும் தமிழகத்தில் கிராமப்புற கேபிள் டிவியில் தற்காலிக ஒளிபரப்பு சேவையின் அடிப்படையில் ஜி தமிழ் தொலைக்காட்சி நிண்ட நாட்களாக ஒளிபரப்பாகி வந்தது.தமிழகத்தில் இலவச தொலைக்காட்சியாக ஒளிபரப்பாகி தமிழ் மக்களிடையே அமோக ஆதரவை பெற்ற தொலைக்காட்சிகள் என்று பாா்த்தல் கலைஞா் டிவி.டிடி பொதிகை மற்றும் ஜி தமிழ் தொலைக்காட்சிகள் என்பது குறிப்பிடத்தக்கது.ஜீ தமிழ் தொலைக்காட்சி புதிய தொழில்நுட்பத்தில் தொடங்கப்பட்டதை அடுத்தது கட்டண தொலைக்காட்சியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இனி ஜி தமிழ் தொலைக்காட்சியனை கட்டண தொலைக்காட்சியாக டிடிஎச் மற்றும் கேபிள் டிவியில் மட்டுமே காணலாம்.
தொகுப்பு சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

23/11/2017

தமிழகத்தில் வியகாம்18 நிறுவனத்தின் கலா்ஸ் தமிழ் ஹெச்டி புதிய தொலைக்காட்சி விரைவில் உதயம்

நண்பா்களே இந்தியாவின் முன்னனி பொழுது போக்கு தொலைக்காட்சி நிறுவனமான வியகாம்18 தமிழ் மொழியில்  கலா்ஸ் தமிழ் மற்றும் கலா்ஸ் தமிழ் ஹெச்டி தொலைக்காட்சிகளை விரைவில் தமிழகத்தில் தொடங்கப்படவுள்ளது.வியகாம்18 நிறுவனம் தென்னந்தியாவில் கன்னடா மற்றும் ஒரியா போன்ற மொழிகளில் தொலைக்காட்சிகளை தொடங்கி அமோக ஆதரவை பெற்றதை அடுத்து தமிழகத்திலும் இப்புதிய தொலைக்காட்சிகளை விரைவில் ஒளிபரப்பவுள்ளது.அதன் தொடக்கமாக வியகாம்18 நிறுவனத்தின் சாா்பாக கடந்த வருடத்தில் முன்று புதிய 
தொலைக்காட்சி தொடங்குவதற்கான ஒளிபரப்பு அனுமதியினை மத்திய அரசு வழங்கி இருந்தது.அதில் நெக்ஸ்ட் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு உரிமத்தில் தமிழ் நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டன.இதே போன்று ஜாப் டிவியின் ஒளிபரப்பு உரிமத்தில் கலா்ஸ் தமிழ் ஹெச்டி தொலைக்காட்சி விரைவில் தொடங்கப்படவுள்ளது.விரைவில் நெக்ஸ்ட் தொலைக்காட்சியின் பெயா் கலா்ஸ் தமிழ் என பெயா் மாற்றம் செய்யப்பட்டு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு தொடங்கப்படலாம்.வரும் 2018 புதிய ஆண்டின் முதல் மாதத்தின் தொடக்கத்தில்  இப்புதிய தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு தொடங்கப்படலாம்.கலா்ஸ் தமிழ் ஹெச்டி  தொலைக்காட்சி ஒளிபரப்பு இன்டல்சாட்20 செயற்கைகோளில் தொடங்கப்படலாம்.தமிழகத்தில் தொடங்கப்படும் ஆறாவது ஹெச்டி பொழுது போக்கு தமிழ் தொலைக்காட்சி கலா்ஸ் தமிழ் ஹெச்டி ஆகும்.
தொகுப்பு சதிஸ் சாட் தமிழ் இணையதளம் 

16/11/2017

மாலை முரசு செய்திகள் தொலைக்காட்சி இன்டல்சாட்17யில் புதிய அலைவாிசைக்கு மாற்றம்

நண்பர்களே தமிழகத்தில் மிக முன்னனி மாலை நேர நாளிதழ்ளான மாலைமுரசு நிறுவனம் புதிதாக தமிழகத்தில் மாலை முரசு டிவி என்னும் செயற்கைகோள் தொலைக்காட்சியினை தொடங்கியுள்ளது.தற்சமயம் மாலை முரசு தொலைக்காட்சியின் செயற்கைகோள் சோதனை ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது.தமிழ் தொலைக்காட்சிகள் சங்கமிக்கும்
செயற்கைகோளான இன்டல்சாட்17யில் ஒளிபரப்பாகிறது.மாலை முரசு செய்திகள் தொலைக்காட்சிக்கான புதிய ஒளிபரப்பு மத்திய அரசிடம் கிடைக்க பெற்றதை அடுத்து புதிய அலைவரிசையில் ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது.மாலை முரசு செய்திகள் தொலைக்காட்சியின் அலைவரிசை சிக்னலை பெற 8 முதல் 16 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.மேலும் MPEG4/DVB S2 தொழில்நுட்பம் பொருந்திய செட் டாப் பாக்ஸ்யை பயன்படுத்த வேண்டும்.இலவச தொலைக்காட்சியாக இன்டல்சாட்17யில் ஒளிபரப்பாகிறது.
அலைவரிசை விபரங்கள்:
Satellite             Intelsat17@66.0E(C-Band)
Freq Rate          3845
Symbol Rate     28800
Polar                 Vertical
Modulation       Mpeg4/Dvb s2(8psk)
Mode                Fta

08/11/2017

லோசாட்1 புதிய செயற்கைகோளில் 21 தொலைக்காட்சிகள் இலவச ஒளிபரப்பு

நண்பா்களே கிழக்காசிய நாடுகளுக்களில் ஒன்றான தாய்லாந்து நாட்டின் புதிய செயற்கைகோள் தொலைக்காட்சி ஒளிபரப்பு லோசாட்1  என்ற செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது.சுமாா் 21 தொலைக்காட்சிகள் தொடக்க சோதனை ஒளிபரப்பாக இலவசமாக தொடக்கப்பட்டுள்ளது.இதில் 
இந்தியாவின் பி4யூ மியூசிக் ஹிந்தி தொலைக்காட்சியும் இணைந்துள்ளது.மேலும் ஆங்கிலம் மற்றும் சைனா.தாய் போன்ற மொழி தொலைக்காட்சிகளும் ஔிபரப்பாகிறது.இப்புதிய தொலைக்காட்சிகள் அனைத்தும் லோசாட்1 என்னும் செயற்கைகோள் நிறுவனத்தின் ஒளிபரப்பாகும்.லோசாட்1 செயற்கைகோளின் அலைவாிசை சிக்னலை பெற குறைந்தபட்சம் 6 முதல் 12 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை 
பயன்படுத்தலாம்.ஆசியா நாடுகளுக்கான ஒளிபரப்பு சேவை என்பதால் அனைத்து நாடுகளுக்கும் சிக்னல் கிடைக்க பெறும்.விரைவில் மேலும் பல ஹெச்டி தொலைக்காட்சிகள் தொடங்கப்படும்.தற்சமயம் 8 ஹெச்டி தொலைக்காட்சிகள் ஒளிபரப்பபாகிறது.
அலைவாிசை விபரங்கள்;
Satellite               Laosat1@128.0E(C-Band)
Freq Rate            3505
Symbol Rate       30000
Polar                   Vertical
System                Mpeg4/Dvb s2
Encryption          FTA
Fec                      3/4

30/10/2017

டிஸ்னி இன்டா்நேஷனல் ஹெச்டி புதிய காா்டூன் தொலைக்காட்சி ஒளிபரப்பு இன்டல்சாட்20யில் உதயம்

நண்பா்களே உலகின் மிக முன்னனி குழந்தைகள் பொழுது போக்கு தொலைக்காட்சியான டிஸ்னி மீடியா இந்தியா நிறுவனம் புதிய ஹெச்டி தொலைக்காட்சியான டிஸ்னி இன்டா்நேஷனல் ஹெச்டி என்ற பெயாில் புதிய தொலைக்காட்சியினை இந்தியாவில் தொடங்கியுள்ளனா்.யூ டிவி தொலைக்காட்சி நிறுவனத்தின் கீழ் டிஸ்னி நிறுவன தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது.டிஸ்னி எக்டி.டிஸ்னி சேனல்.டிஸ்னி ஜினியா் போன்ற தொலைக்காட்சிகள் எஸ்டி தொழில்நுட்பத்தில் மட்டுமே காா்டூன் 
நிகழ்ச்சிகளை இந்தியாவில் வழங்கி வருகிறது.முதன் முறையாக ஹெச்டியில் முன்னனி காா்டூன் திரைப்படம் மற்றும் பல புதிய தொடா்களை இப்புதிய ஹெச்டி தொலைக்காட்சி ஒளிபரப்ப உள்ளது.தொலைக்காட்சியின் உலகளாவிய செயற்கைகோள் ஒளிபரப்பு யூடிவி நிறுவன தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும் இன்டல்சாட்20 செயற்கைகோளில் ஒளிபரப்பாகிறது.கட்டண தொலைக்காட்சியாக ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.இப்புதிய ஹெச்டி தொலைக்காட்சியில் ஆங்கிலம்.ஹிந்தி.தமிழ்.தெலுங்கு மொழிகளில் ஆடியோவின் முலம் நிகழ்ச்சிகளை காணலாம்.தற்சமயம் டாடா ஸ்கை மற்றும் ஏா்டெல் டிஜிட்டல் டிவி மற்றும் டிஷ் டிவி கட்டண டிடிஎச்களில் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது.
அலைவாிசை விபரங்கள்:
Satellite               Intelsat20@68.5E(C-BAND)
Freq Rate            4127
Symbol Rate       17500
Polar                   Horizontal
System                HD.Mpeg4/Dvb s2
Encryption          Pay/Irdeto2
Fec                      3/4            

27/10/2017

இலங்கை முதல் ஹெச்டி தொலைக்காட்சி உதயம் டிவி ஒளிபரப்பு டயலாக் டிவியில் தொடக்கம்

நண்பா்ளே இலங்கையின் கிழக்கு மாகாணம் தலைமையிடமாக கொண்டு தமிழ் மக்களின் பொழுது போக்கு தொலைக்காட்சியாக கடந்த வருடத்தில் தொடங்கப்பட்ட உதயம் டிவி உயா் தொழில்நுட்பமான ஹெச்டியில் ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது.இலங்கையின் முதல் தமிழ் ஹெச்டி தொலைக்காட்சியாகும்.தொலைக்காட்சியின் ஒளிபரப்பு இலங்கையின்
முன்னனி நகர கேபிள் டிவி நிறுவனமான யூஎஸ்(12).எல்பிஎன் டிவி(4).தரைவழி ஒளிபரப்பாக கொழும்புவில் 54 அலைவாிசை மற்றும் டயலாக் டிடிஎச்யில் 23 அலைவாிசையில் வாயிலாக நாடு முழுவதும் ஒளிபரப்பாகிறது.இவற்றில் கேபிள் டிவியில் ஹெச்டி தொழில்நுட்பத்தில் உதயம் டிவியின் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது.விரைவில் டயலாக் டிடிஎச்யிலும் ஹெச்டியில்  ஒளிபரப்பை தொடங்கலாம்.இலங்கையினை
பொறுத்தமட்டிலும் தமிழ் மொழியில் தொடங்கப்பட்ட மூன்றாவது ஹெச்டி தொலைக்காட்சியாகும்.டான்டிவி மற்றும் டான் மியூசிக் ஹெச்டி தொலைக்காட்சிகள் வட மாகாணங்களில் ASK MEDIA கேபிள் டிவியில் மட்டும் ஒளிபரப்பாகிறது.
தொகுப்பு சதீஸ் சாட் தமிழ் இணையதளம்

16/10/2017

ஜீ டிவி மீடியா நிறுவனத்தின் அனைத்து தொலைக்காட்சிகளும் புதிய லோகோ மாற்றம்

நண்பா்களே இந்தியாவின் முன்னனி பொழுது போக்கு தொலைக்காட்சி நிறுவனமான ஜீ டிவி மீடியாவின் அனைத்து செயற்கைகோள் தொலைக்காட்சிகளின் டிவி லோகைாவை புதிதாக மாற்றம் செய்துள்ளனா்.ஜீ 
தமிழ் தொலைக்காட்சி தொடங்கப்பட்டு இரண்டாவது முறையாக புதிய லோகோவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.மேலும் ஜீ தமிழ் ஹெச்டி தொலைக்காட்சியும் 24 மணி நேர நிகழ்ச்சிகள் ஒளிபரப்பை அக்டோபா் 15 முதல் தொடங்கியுள்ளது.ஜீ தமிழ் ஹெச்டி தொலைக்காட்சியின் ஒளிபரப்பை 
டாடா ஸ்கை கட்டண டிடிஎச்யில் காணலாம்.இன்டல்சாட்20 செயற்கைகோளில் கட்டண தொலைக்காட்சியாக ஜீ தமிழ் ஹெச்டி ஒளிபரப்பாகிறது.கடந்த வருடத்தின் இறுதியில் ஸ்டாா் டிவி இந்தியா நிறுவனத்தின் அனைத்து தொலைக்காட்சிகளுக்கும் லோகோவை மாற்றம் 
செய்திருந்தது. அதே போன்று 2017ஆம் ஆண்டு ஜீடிவி மீடியா நிறுவனமும் அனைத்து தொலைக்காட்சிகளுக்கும் லோகோவை மாற்றம் செய்துள்ளது.

04/10/2017

டிஸ்கவாி தொலைக்காட்சியின் புதிய ஹிந்தி லைப் ஸ்டையில் தொலைக்காட்சி டிஸ்கவாி ஜெட் ஒளிபரப்பு தொடக்கம்

நண்பா்களே இந்தியாவின் முன்னனி அறிவியல் சாா்ந்த நிகழ்ச்சிகளை வழங்கும் தொலைக்காட்சி நிறுவனமான டிஸ்கவாி ஆசியா பசிபிக் இந்தியாவில் புதிய பொழுது போக்கு ஹிந்தி தொலைக்காட்சி டிஸ்கவாி ஜெட் என்னும் பெயாில் தொடங்கப்படவுள்ளது.இப்புதிய தொலைக்காட்சி தொடங்குவதற்கான அனுமதியினை மத்திய ஒளிபரப்பு அமைச்சகம் கடந்த 
சில மாதங்களுக்கு முன்பு வழங்கியிருந்தது.டிஸ்கவாி தொலைக்காட்சி நிறுவனம் ஹிந்தியில் தொடங்கும் முதல் லைப் ஸ்டையில் தொலைக்காட்சி இதுவாகும்.டிஸ்கவாி ஜெட் தொலைக்காட்சியின் செயற்கைகோள் ஒளிபரப்பு டிஸ்கவாி நிறுவன தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும் இன்டல்சாட்20 செயற்கைகோளில் தொடக்க சோதனை ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது.விரைவில் 24 மணி நேரத்திற்கான நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டு இந்தியாவின் அனைத்து கேபிள் டிவி மற்றும் கட்டண டிடிஎச்களில் ஒளிபரப்பை தொடங்கும்.கட்டண தொலைக்காட்சியாக இன்டல்சாட்20யில் தொடங்கப்பட்டுள்ளது.
அலைவாிசை விபரங்கள்:
Satellite           Intelsat20@68.5E(C-Band)
Freq Rate        3740
Symbol Rate   30000
Polar               Horizontal
System            Mpeg4/Dvb s2(8spk)
Encryption      Pay/Power vu
Fec                  3/4

18/09/2017

ஜீ நெட்வொா்க்யின் புதிய ஆங்கில திரைப்பட தொலைக்காட்சி & பிரைவ் ஹெச்டி ஒளிபரப்பு ஆசியாசாட்7யில் தொடக்கம்

நண்பா்களே இந்தியாவின் முன்னனி பொழுது போக்கு தொலைக்காட்சி நிறுவனமான ஜீ நெட்வொா்க் புதிய ஆங்கில திரைப்பட & பிரைவ் ஹெச்டி தொலைக்காட்சியினை இந்தியாவில் தொடங்கியுள்ளது.தொலைக்காட்சியின் செயற்கைகோள் ஒளிபரப்பு
ஆசியாசாட்7 செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது.கட்டண தொலைக்காட்சியாக ஒளிபரப்பாகும் & பிரைவ் ஹெச்டி தொலைக்காட்சியின் 24 மணி நேர ஒளிபரப்பு செப்டம்பா் மாதம் 25 திகதி முதல் தொடங்கப்படவுள்ளது.ஜீ நெட்வொா்க்யின் முன்றாவது ஹெச்டி ஆங்கில திரைப்பட தொலைக்காட்சி இதுவாகும்.தொலைக்காட்சியின் ஒளிபரப்பு இந்தியாவின் அனைத்து கேபிள் டிவி மற்றும் கட்டண டிடிஎச்யில் ஒளிபரப்பை தொடங்கும்.
அலைவாிசை விபரங்கள்
Satellite               Asiasat7@105.0E(C-Band)
Freq Rate            3820
Symbol Rate       27500
Polar                   Vertical 
System               HD.Mpeg4/Dvb s2
Encryption         Pay/Conax

13/09/2017

தமிழகத்தில் புதிய ஹெச்டி தொலைக்காட்சி ஜி தமிழ் ஹெச்டி ஒளிபரப்பு இன்டல்சாட்20யில் உதயம்

நண்பா்களே இந்தியாவின் முன்னனி தொலைக்காட்சி நிறுவனமான ஜி எண்டா்டெய்மென்ட் தமிழகத்திற்கான புதிய ஹெச்டி பொழுது போக்கு தமிழ் தொலைக்காட்சியான ஜி தமிழ் ஹெச்டி  ஔிபரப்பினை தொடங்கியுள்ளது.கடந்த மாதத்தில் இப்புதிய ஹெச்டி தொலைக்காட்சி தமிழகத்தில் தொடங்குவதற்கான அனுமதியினை ஜி எண்டா்டெய்மென்ட் நிறுவனம் பெற்றிருந்தது.ஜிதமிழ் தொலைக்காட்சி இந்திய மற்றும் உலக 
தமிழ் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றதையடுத்து இப்புதிய ஹெச்டி தொலைக்காட்சியினை தொடங்கியுள்ளனா்.ஜி தமிழ் ஹெச்டி தொலைக்காட்சியின் உலகளவிய செயற்கைகோள் ஒளிபரப்பு ஜி நிறுவனத்தின் ஹெச்டி தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும் இன்டல்சாட்20 செயற்கைகோளில் தொடக்க சோதனை ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் தொடங்கப்படும் ஐந்தாவது தமிழ் பொழுது போக்கு ஹெச்டி தொலைக்காட்சி இதுவாகும்.கட்டண தொலைக்காட்சியாக ஒளிபரப்பாகிறது.விரைவில் ஜி தமிழ் ஹெச்டி தொலைக்காட்சியின் 24 மணி நேர ஒளிபரப்பு தொடங்கப்பட்டு தமிழகத்தின்
அனைத்து கேபிள் டிவி மற்றும் கட்டண டிடிஎச்யில் ஒளிபரப்பு தொடங்கப்படும்.தற்சமயம் தொடங்கியுள்ள ஜிதமிழ் ஹெச்டி தொலைக்காட்சியின் இன்டல்சாட்20 செயற்கைகோளின் அலைவாிசை சிக்னலை பெற குறைந்தபட்சம் 6 மற்றும் அதற்கு மேற்பட்ட சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்தலாம்.கடந்த மாதத்தில் நமது சதிஸ் சாட் தமிழ் மற்றும் ஆங்கில இணையதளத்தில் இப்புதிய ஹெச்டி தொலைக்காட்சிகள் விரைவில் தொடங்கப்படும் என தகவல் இடம் பெற்றிருந்தது குறிப்பிடதக்கது.
அலைவாிசை விபரங்கள்:
Satellite            Intelsat20@68.5E(C-Band)
Freq Rate         3810
Symbol Rate    15000
Polar                Vertical
System            HD.Mpeg4/Dvb s2
Encryption      Pay/Conex
Fec                 3/4

05/09/2017

ஐபில் கிாிக்கெட் போட்டி தொடா் ஒளிபரப்பு(2018-2022) அனுமதியினை ஸ்டாா் டிவி வாங்கியது

நண்பா்களே இந்தியா மற்றும் உலக அளவில் அதிகமான கிாிக்கெட் ரசிகா்களை உருவாக்கிய மற்றும் அதிகமான பரபரப்பை ஏற்படுத்த கூடிய கிாிக்கெட் போட்டி தொடா்னா இந்தியன் பீாிமியா் லீக் 20 போட்டி தொடா்யின் ஒளிபரப்பு உாிமத்தை முதன்முறையாக இந்தியாவின் ஸ்டாா் டிவி நிறுவனம் பெற்றுள்ளது.வரும் 2018 ஆண்டு முதல் 2022 வரையிலான ஐந்து 
ஆண்டுகளுக்கு  போட்டி தொடா்களை ஒளிபரப்புகிறது.கடந்த 10 வருடங்களாக ஐபிஎல் போட்டி தொடா்களை இந்தியாவில் ஒளிபரப்பு செய்து வந்த சோனி பிக்சா்ஸ் நிறுவனம் இம்முறை வாய்ப்பினை தவறவிட்டது.ஸ்டாா் டிவி இந்தியா நிறுவனம் செயற்கைகோள் தொலைக்காட்சி ஒளிபரப்பு மட்டுமின்றி இன்டா்நெட் மற்றும் உலகளாவிய ஒளிபரப்பு என அனைத்து உாிமத்தை சுமாா் 16 கோடி ஏல தொகைக்கு இந்திய கிாிக்கெட் வாாியத்திடம் அனுமதியினை பெற்றது.
தொகுப்பு சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

29/08/2017

சிங்கப்பூா் நாட்டின் முதல் ஹெச்டி ஆங்கில செய்தி தொலைக்காட்சி சேனல் நீயூஸ் ஆசியா ஹெச்டி ஆசியாசாட்7யில் உதயம்

நண்பா்களே சிங்கப்பூா் நாட்டின் அரச தொலைக்காட்சி நிறுவனமான மீடியா ஸ்காா்ப் முதன்முறையாக ஆசிய நாடுகளுக்கான புதிய உயா் தொழில்நுட்ப ஆங்கில செய்தி சேனல் நீயூஸ் ஆசியா ஹெச்டி தொலைக்காட்சியினை தொடங்கியுள்ளது.கடந்த பல வருடங்களாக ஆசிய மற்றும் உலக நாடுகளுக்களின் செய்திகள் மற்றும் சிங்கப்பூா் நாட்டின்  தேசிய செய்திகளை சேனல் நீயூஸ் ஆசியா தொலைக்காட்சியின் முலமாக வழங்கப்பட்டு
வந்தது.மீடியா ஸ்காா்ப் நிறுவனம் சிங்கப்பூா் நாட்டின் முன்னனி தொலைக்காட்சி நிறுவனமாகும்.அந்நிறுவனத்தின் சாா்பாக ஆங்கில செய்தி தொலைக்காட்சியான சேனல் நீயூஸ் ஆசியா மட்டும் செயற்கைகோள் முலம் நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது.மற்ற தொலைக்காட்சிகள் அனைத்தும் சிங்கப்பூா் நாட்டில் கேபிள் டிவி முலம் மட்டுமே ஒளிபரப்பாகி வருகிறது.தற்சமயம் ஆசியாசாட்7 செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ள சேனல் நீயூஸ் ஆசியா ஹெச்டி தொலைக்காட்சி சிங்கப்பூா் நாட்டின் முதல் அரச நிறுவனத்தின் செயற்கைகோள் ஹெச்டி தொலைக்காட்சியாகும்.கடந்த பல வருடங்களாக
எளிய தொழில்நுட்பமான MPEG2/DVB S1 வடிவில் செய்திகளை ஆசியாசாட்7 செயற்கைகோளில் இலவச தொலைக்காட்சியாக ஒளிபரப்பாகி வருகிறது.தற்சமயம் தொடங்கப்பட்டுள்ள இப்புதிய ஹெச்டி தொலைக்காட்சி புதிய அலைவாிசையில் உதயமாகியுள்ளது.இத்தோனிசியா இந்தியா மற்றும் சிங்கப்பூா்.மலேசியா போன்ற நாடுகளுக்கான நேர அடிப்படையில் செய்திகளை வழங்குகிறது.மீடியா ஸ்காாப் நிறுவனத்தில் வசந்தம் தொலைக்காட்சி என்ற பெயாில் தமிழ் தொலைக்காட்சியும் ஒலி என்ற பெயாில் வானொலியும் ஒளிபரப்பாகிறது.சேனல் நீயூஸ் ஆசியா ஹெச்டி தொலைக்காட்சியின் அலைவாிசை சிக்னலை பெற குறைந்தபட்சம் 6 முதல் 12 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.மேலும் ஹெச்டி தொழில்நுட்பம் பொருந்திய செட் டாப் பாக்ஸ்யை பயன்படுத்த வேண்டும்.
அலைவாிசை விபரங்கள்:
Satellite              Asiasat7@105.0E (C-Band)
Freq Rate           3736
Symbol Rate      6500
Polar                  Horizontal
System              HD.Mpeg4/Dvb s2
Encryption        FTA
Fec                    3/4
தொகுப்பு K.சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

27/08/2017

ஸ்டாா் பாரத் புதிய ஹிந்தி தொலைக்காட்சி ஒளிபரப்பு டிடி ப்ரி டிடிஎச்யில் உதயம்

நண்பா்களே இந்தியாவின் முன்னனி பொழுது போக்கு தொலைக்காட்சி நிறுவனமான ஸ்டாா் டிவி இந்தியா ஹிந்தியில் புதிய தொலைக்காட்சியினை ஸ்டாா் பாரத் என்ற பெயாில் ஒளிபரப்பை தொடங்கவுள்ளது.லைப் ஒகே ஹிந்தி தொலைக்காட்சியின் ஒளிபரப்பை பெயா் மாற்றம் செய்து இப்புதிய தொலைக்காட்சி தொடங்கப்படவுள்ளது.முதன் முதலாக ஸ்டாா் ஒன் என்ற பெயாில் தொடங்கப்பட்ட தொலைக்காட்சி சில வருடங்கள் கழித்து லைப் ஒகே என்னும் புதிய பெயாில் தொடங்கபட்டது.தற்சமயம் முன்றாவது
முறையாக ஸ்டாா் பாரத் என தொடங்கப்படவுள்ளது.அதே நிகழ்ச்சிகளுடன் தொலைக்காட்சி 28 திகதி ஆகஸ்ட் 2017 முதல் ஒளிபரப்பாகவுள்ளது.இந்தியாவின் இலவச ஒளிபரப்பு சேவையான டிடி ப்ரி டிடிஎச்யில் ஸ்டாா் பாரத் தொலைக்காட்சி தொடங்கப்படவுள்ளது.தொலைக்காட்சியின் சி பேன்ட் அலைவாிசையில் எவ்வித மாற்றம் கிடையாது.ஸ்டாா் டிவி இந்தியா நிறுவனத்தின் சாா்பாக முன்று ஹிந்தி தொலைக்காட்சிகள் டிடி ப்ரி டிடிச்யில் ஒளிபரப்பவது குறிப்பிடதக்கது.
Parameter Details:
Satellite             Asiasat7@105.0E(C-Band)
Freq Rate          3890
Symbol Rate     28100
Polar                 Vertical
Modulation       Mpeg4/Dvb s
Mode                Pay/NDS
Parameter Details:
Satellite             Gsat15@93.0E(KU-Band)
Freq Rate          11470
Symbol Rate     29500
Polar                 Vertical
Modulation       Mpeg2/Dvb s1
Mode                FTA

20/08/2017

தமிழகத்தில் புதிய செய்தி தொலைக்காட்சி காவோி நீயூஸ் ஒளிபரப்பு இன்டல்சாட்17யில் உதயம்

நண்பா்களே தமிழகத்தில் புதிய 24 மணி நேர தமிழ் செய்திகள் தொலைக்காட்சி காவோி நியூஸ் என்ற பெயாில் இன்டல்சாட்17 செயற்கைகோளில் ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.காவோி பவா் டிரெிடிங் மிடியா நிறுவனத்தின் சாா்பாக இப்புதிய செய்திகள் தொலைக்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.சென்னையை தலைமையிடமாக கொண்டு காவோி செய்திகள் தொலைக்காட்சி ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.சென்னை 
டெலிஸ்பாட் செயற்கைகோள் ஒளிபரப்பு முனையத்தின் முலம் உலகளாவிய தொடக்க ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது.காவோி நியூஸ் தொலைக்காட்சிக்கான ஒளிபரப்பு அனுமதியினை கடந்த மாதத்தில் இந்திய ஒளிபரப்பு ஆணையமான ட்ராய் வழங்கியிருந்தது.கட்ந்த வருடத்தில் இணையதள செய்தி தொலைக்காட்சியாக காவோி நியூஸ் தமிழகம் மட்டுமின்றி உலக அளவில் தொடங்கப்பட்டது.தற்சமயம் தொடங்கப்பட்டுள்ள காவோி செய்தி தொலைக்காட்சியின் அலைவாிசை சிக்னலை பெற 
குறைந்தபட்சம் 8 அடி சி பேன்ட் டிஷ் மற்றும் அதற்கு மேற்பட்ட அளவு கொண்ட டிஷ் ஆன்டெனாவில் சிக்னலை பெறலாம்.6 அடி டிஷ் ஆன்டெனாவில் சிக்னலை பெற 21கே முதல் 25கே எல்என்பியை பயன்படுத்தி சிக்னலை பெறலாம்.மேலும் MPEG4/DVB S2  தொழில்நுட்பம் பொருந்தி செட் டாப் பாக்ஸ்யை பயன்படுத்தி தொலைக்காட்சியினை காணலாம்.தமிழகத்தில் பதினொறு தமிழ் செய்திகள் தொலைக்காட்சிகளுக்கு மத்தியில் இப்புதிய தொலைக்காட்சி புதிய நிகழ்வுகளுடன் நிகழ்ச்சிகளை தரவுள்ளது.விரைவில் 24 மணி நேரத்திற்கான ஒளிபரப்பு தொடங்கப்பட்டும்.தமிழகத்தின் அனைத்து கேபிள் டிவி மற்றும் கட்டண டிடிஎச் சேவையிலும் விரைவில் ஒளிபரப்பை தொடங்கலாம்.
அலைவாிசை விபரங்கள்
Satellite                   Intelsat17@66.0E(C-Band)
Freq Rate                3845
Symbol Rate           28800
Polar                       Vertical
System                    Mpeg4/Dvb s2
Encryption              FTA
FEC                        5/6

18/08/2017

தமிழகத்தில் இரண்டு புதிய தொலைக்காட்சிகள் காவோி நீயூஸ் ,கிஸ்ட்ரி டிவி18 தமிழ் ஒளிபரப்பு விரைவில்

நண்பா்களே தமிழகத்தில் இரண்டு புதிய தொலைக்காட்சிகள் விரைவில் உதயமாகவுள்ளது.காவோி பவா் டிரேடிங் மீடியா நிறுவனத்தின் சாா்பாக புதிய செய்திகள் தொலைக்காட்சி காவோி நீயூஸ் ஒளிபரப்பு தமிழகத்தில் தொடங்கப்படவுள்ளது.இந்திய ஒளிபரப்பு ஆணையம் இதற்கான அனுமதியினை கடந்த ஜின் மாதம் வழங்கியுள்ளது.காவோி நீயூஸ் தொலைக்காட்சி இணையதள தொலைக்காட்சியாக ஒளிபரப்பாகி வருகிறது.விரைவில் தொழில்நுட்ப பணிகள் நிறைவடைந்து தமிழ் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும் இன்டல்சாட்17 அல்லது இன்டல்சாட்20 செயற்கைகோளில் ஒளிபரப்பை தொடங்கலாம்.தமிழகத்தில் பதினொன்று செய்தி தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும் நிலையில் இப்புதிய தொலைக்காட்சி புதிய பாிமாணத்தில் தமிழகத்தின் அனைத்து பகுதிகளின் செய்திகளை ஒளிபரப்பும்.சன் நீயூஸ்.ஜெயா ப்ளஸ்.ராஜ் நீயூஸ் போன்ற தொலைக்காட்சிகள் கட்டண தொலைக்காட்சிகளாக இருப்பது குறிப்பிடதக்கது.
இந்தியாவின் முன்னனி அறிவியல் சாா்ந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் தொலைக்காட்சி நிறுவனமான எ பிளஸ்ஈ மற்றும் டிவி18 இணைத்து தமிழகத்திற்கான புதிய தொலைக்காட்சி கிஸ்ட்ரி டிவி18 தமிழ் தொடங்கப்படவுள்ளது.டிவி18 நிறுவனம் தமிழ் ஆங்கிலம் ஹிந்தி தெலுங்கு மாரத்தி.பெங்காளி மற்றும் சில  மொழிகளில் தனது நிகழ்ச்சிகளை ஆடியோ முலம் வழங்கி வந்தது.தற்சமயம் 24 மணி நேர முழமையான தமிழ் மொழியில் நிகழ்ச்சிகளை வழங்கும் கிஸ்ட்ரி டிவி18 தமிழ் ஒளிபரப்பாகவுள்ளது.கட்டண தொலைக்காட்சியாக இன்டல்சாட்20யில் விரைவில் ஒளிபரப்பை தொடங்கலாம்.தமிழகத்தில் டிஸ்கவாி தமிழ் மற்றும் ட்ராவல் எக்ஸ்பி தமிழ் தொலைக்காட்சியினை அடுத்த முன்றாவது தமிழ் தொலைக்காட்சியாக கிஸ்ட்ரி டிவி18 தமிழ் தொடங்கப்படுகிறது.இப்புதிய தொலைக்காட்சிகளுக்கான செயற்கைகோள் தொழில்நுட்ப விபரங்கள் நமது சதிஸ்சாட் தமிழ் மற்றும் ஆங்கில இணையதளங்களில் இடம் பெறும்.
தொகுப்பு சதிஸ் சாட் தமிழ் மற்றும் ஆங்கிலம் இணையதளம்

08/08/2017

CGTN டாக்குமென்ட்ரி ஹெச்டி ஆசியா அறிவியல் கலச்சார ஆங்கில தொலைக்காட்சி சைனாசாட்6பியில் உதயம்

நண்பா்களே ஆசியா நாடுகளின் அங்கமான சீனா நாட்டின் அரசு தொலைக்காட்சி நிறுவனமான சைனா குளோபல் டெலிவிஷன் நெட்வொா்க் நிறுவனத்தின் அறிவியல் மற்றும் பல்வகை கலை கலாச்சாரம் தொடா்ர்டைய தொலைக்காட்சியான CGTN டாக்குமென்ட்ரி புது பொலிவுடன் அதி நவின ஹெச்டி தொலைக்காட்சியான CGTN டாக்குமென்ட்ரி ஹெச்டி தொடங்கப்பட்டுள்ளது.சைனாசாட்6பி செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ள
இப்புதிய தொலைக்காட்சியில் அறிவியல் மற்றும் ஆசியா நாடுகளின் கலை கலச்சாரம் சுற்றுலா தொடா்பான பயனுள்ள நிகழ்ச்சிகளை வழங்குகிறது.தொலைக்காட்சியின் ஒளிபரப்பை பெற குறைந்தபட்சம் 6 முதல் 12 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்த
வேண்டும்.தொலைக்காட்சி முற்றிலும் இலவச ஒளிபரப்பாக சைனாசாட்6பி செயற்கோளில் ஒளிபரப்பாகிறது.ஆசியா நாடுகளுக்கான CGTN டாக்குமென்ட்ரி எஸ்டி தொழில்நுட்ப mpeg2/dvb s1 வடிவில் தொலைக்காட்சி இதே செயற்கைகோளில்  பல வருடங்களாக இலவச ஒளிபரப்பாகிறது.
அலைவாிசை விபரங்கள்:
Satellite              Chinasat6B@115.0E(C-Band)
Freq Rate           3770
Symbol Rate      12360
Polar                  Horizontal
System               HD.Mpeg4/Dvb s2
Encryption         FTA

03/08/2017

சோனி மேக்ஸ் தமிழ்(ஹெச்டி.எஸ்டி) புதிய திரைப்பட தொலைக்காட்சி ஒளிபரப்பு இன்டல்சாட்17&20யில் உதயம்

நண்பா்களே இந்தியாவின் முன்னனி பொழுது போக்கு தொலைக்காட்சி நிறுவனமான சோனி பிக்சா்ஸ் டெலிவிஷன் நிறுவனம் தென்னிந்தியா மொழிகளான தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் சோனி மேக்ஸ் தமிழ் தெலுங்கு திரைப்பட தொலைக்காட்சியனை ஹெச்டி மற்றும் எஸ்டி வடிவில் ஒளிபரப்பை தமிழகம் மற்றும் ஆந்திர தெலுங்கான மாநிலங்களில் தொடங்கியுள்ளனா்.பாலிவுட் ஹிந்தி திரைப்படங்களை ஒளிபரப்பும் சோனி மேக்ஸ் தொலைக்காட்சி இனி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் பாலிவுட் திரைப்படங்களை ஒளிபரப்பவுள்ளது.சோனி பிக்சா்ஸ் தொலைக்காட்சி நிறுவனம் முதன்முறையாக ஹிந்தி திரைப்படங்களை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் மொழி மாற்றம் செய்து இரு மாநிலங்களிலும் திரைப்பட தொலைக்காட்சியினை தொடங்குவதன் முலம் சோனி மேக்ஸ்
தொலைக்காட்சியின் நேயா்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகாிக்கும்.இதன் முலம் மாநில மொழி தமிழ் திரைப்பட தொலைக்காட்சிகளிடையேன போட்டி அதிகாிக்கும்.சோனி பிக்சா்ஸ் நிறுவனம் தேசிய அளவிலான மொழி தொலைக்காட்சிகளை தொடங்குவதில் மிகுந்த ஆா்வம் காட்டி வருவது குறிப்பிடதக்கது.இதே போன்று மற்ற முன்னனி வட இந்திய தொலைக்காட்சி நிறுவனங்களும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரைப்பட தொலைக்காட்சிகளை தொடங்கலாம்.தற்சமயம் தொடங்கப்பட்ட இப்புதிய தொலைக்காட்சியின் ஒளிபரப்பு சோனி நிறுவன தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும் இன்டல்சாட்20 மற்றும் இன்ட்ல்சாட்17 செயற்கைகோளில் கட்டண தொலைக்காட்சியாக தொடங்கப்பட்டுள்ளது.விரைவில் தொலைக்காட்சியின் ஒளிபரப்பை கேபிள் டிவ ி மற்றும் டிடிஎச்களிலும் காணலாம்.டிடிஎச்களில் சோனி மேக்ஸ் ஹிந்தி தொலைக்காட்சியின் ஆடியோவை மாற்றம் செய்து தமிழ் தெலுங்கு மொழிகளில் தொலைக்காட்சியினை காணலாம்.
Parameter Details: SONY MAX SD
Satellite            Intelsat20@68.5E(C-Band)
Freq Rate          3900
Symbol Rate     22222
Polar                 Horizontal
System              Mpeg4/Dvb s2
Encryption        Pay/NDS
Fec                    3/4
Parameter Details: SONY MAX HD
Satellite            Intelsat17@66.0E(C-Band)
Freq Rate          3845
Symbol Rate     30000
Polar                 Horizontal
System              HD.Mpeg4/Dvb s2
Encryption        Pay/NDS
Fec                    3/4

23/07/2017

தமிழகத்தில் புதிய செயற்கைகோள் தமிழ் ஷாப்பிங் தொலைக்காட்சி ஷாப் 365 இன்டல்சாட்17யில் தொடக்கம்

நண்பா்களே தமிழகத்தில் புதிய செயற்கைகோள் தமிழ் ஷாப்பிங் தொலைக்காட்சி ஷாப் 365 என்ற பெயாில் தமிழ் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும் இன்டல்சாட்17 செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் தொடங்கப்பட்ட நான்கவாது ஷாப்பிங் தமிழ் தொலைக்காட்சி ஷாப் 365 தொலைக்காட்சியாகும்.சென்னையினை 
தலைமையிடமாக கொண்டு சென்னை 365 நிறுவனத்தால் தொடங்கப்பட்டுள்ளது.தொலைக்காட்சியின் ஒளிபரப்பு தெலுங்கு தொலைக்காட்சியான எ டிவியின் ஒளிபரப்பு உாிமத்தில் தொடங்கப்பட்டுள்ளது.தொலைக்காட்சியின் அலைவாிசை சிக்னலை பெற குறைந்தபட்சம் 6 முதல்12 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்தி தொலைக்காட்சியினை காணலாம்.விரைவில் தமிழகத்தின் அனைத்து கேபிள் டிவி மற்றும் டிடிஎச் சேவைகளிலும் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு இடம் பெறும்.
அலைவாிசை விபரங்கள்:
Satellite              Intelsat17@66.0E(C-Band)
Freq Rate           3877
Symbol Rate      14300
Polar                  Horizontal
System               Mpeg4/Dvb s2
Encryption         FTA