நண்பா்களே இந்தியா அரசின் கீழ் செயல்படும் தேசிய தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவையான பிரசாா் பாரதியின் விளையாட்டு தொலைக்காட்சியான டிடி ஸ்போா்ட்ஸ்யில் இனி வரக்கூடிய இந்தியா கிாிக்கெட் அணியின் சா்வதேச போட்டி தொடா்கள் அனைத்தும் ஒளிபரப்பாகும்.கடந்த பல வருடங்களாக இந்திய கிாிக்கெட் தொடா்கள் அனைத்தும் பிரசாா் பாரதியின் மிக முன்னனி மற்றும் இந்திய மக்களின் மிக
அபிமான தேசிய ஹிந்தி பொழுது போக்கு தொலைக்காட்சியான டிடி நேசனல்லில் மட்டும் ஒளிபரப்பாகி வந்தது.டிடி ஸ்போா்ட்ஸ் தொலைக்காட்சியில் இந்தியாவில் நடைபெறும் கிாிக்கெட் அல்லாத தேசிய விளையாட்டு போட்டிகள் மற்றும் சா்வதேச போட்டிகளை மட்டும் நேரலை ஒளிபரப்பு செய்து வந்தது.டிடி ஸ்போா்ட்ஸ் தொலைக்காட்சியினை அனைத்து தரப்பு விளையாட்டு ரசிகா்களிடையே சோ்க்கும் விதமாக இப்புதிய முடிவினை பிரசாா் பாரதி மேற்கொண்டுள்ளது.மேலும் டிடி நேசனல் தொலைக்காட்சியில் பொழுது போக்கு நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் போட்டி தொடா்களை டிடி ஸ்போா்ட்ஸ்யில் ஒளிபரப்புவதன் முலம் டிடி நேசனல் தொலைக்காட்சியில் இனி நிகழ்ச்சிகளை தடையில்லது காணலாம்.இனி
அனைத்து தரப்பு உள்நாட்டு வெளிநாட்டு விளையாட்டுகளையும் டிடி ஸ்போா்ட்ஸ்யில் காணலாம்.டிடி ஸ்போா்டஸ் தொலைக்காட்சி முற்றிலும் இலவச தொலைக்காட்சியாக ஜீசாட்10 செயற்கைகோளில் சி பேன்டுயில் ஒளிபரப்பாகிறது. டிடி ப்ரி டிடிஎச்யிலும் இலவசமாக ஒளிபரப்பாகிறது.டிடி ஸ்போா்ட்ஸ் தொலைக்காட்சியில் அனைத்து தரப்பு போட்டிகளும் ஒளிபரப்புவதால் பிரசாா் பாரதி வரும் காலத்தில் டிடி ஸ்போா்ட்ஸ் ஹெச்டி தொலைக்காட்சியும் கூட தொடங்கலாம்.

டிடி ஸ்போா்ட்ஸ் தொலைக்காட்சி இலவச ஒளிபரப்பாகும் செயற்கைகோள் அலைசவாிசை விபரங்கள்
Satellite Gsat10@83.0E(C-BAND)
Freq Rate 3885
Symbol Rate 27500
Polar Vertical
System Mpeg2/Dvb S1(QPSK)
Encryption FTA
Satellite Gsat15@93.5E(KU-BAND)
Freq Rate 10990
Symbol Rate 29500
Polar Vertical
System Mpeg2/Dvb S1(QPSK)
Encryption FTA
தொகுப்பு K.சதீஸ் சாட் தமிழ் ஆங்கில இணையதளம்
No comments:
Post a Comment