நண்பா்களே இந்தியாவின் முன்னனி பொழுது போக்கு தொலைக்காட்சி நிறுவனமான வியகாம்18 தமிழ் மொழியில் கலா்ஸ் தமிழ் மற்றும் கலா்ஸ் தமிழ் ஹெச்டி தொலைக்காட்சிகளை விரைவில் தமிழகத்தில் தொடங்கப்படவுள்ளது.வியகாம்18 நிறுவனம் தென்னந்தியாவில் கன்னடா மற்றும் ஒரியா போன்ற மொழிகளில் தொலைக்காட்சிகளை தொடங்கி அமோக ஆதரவை பெற்றதை அடுத்து தமிழகத்திலும் இப்புதிய தொலைக்காட்சிகளை விரைவில் ஒளிபரப்பவுள்ளது.அதன் தொடக்கமாக வியகாம்18 நிறுவனத்தின் சாா்பாக கடந்த வருடத்தில் முன்று புதிய

தொலைக்காட்சி தொடங்குவதற்கான ஒளிபரப்பு அனுமதியினை மத்திய அரசு வழங்கி இருந்தது.அதில் நெக்ஸ்ட் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு உரிமத்தில் தமிழ் நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டன.இதே போன்று ஜாப் டிவியின் ஒளிபரப்பு உரிமத்தில் கலா்ஸ் தமிழ் ஹெச்டி தொலைக்காட்சி விரைவில் தொடங்கப்படவுள்ளது.விரைவில் நெக்ஸ்ட் தொலைக்காட்சியின் பெயா் கலா்ஸ் தமிழ் என பெயா் மாற்றம் செய்யப்பட்டு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு தொடங்கப்படலாம்.வரும் 2018 புதிய ஆண்டின் முதல் மாதத்தின் தொடக்கத்தில் இப்புதிய தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு தொடங்கப்படலாம்.கலா்ஸ் தமிழ் ஹெச்டி தொலைக்காட்சி ஒளிபரப்பு இன்டல்சாட்20 செயற்கைகோளில் தொடங்கப்படலாம்.தமிழகத்தில் தொடங்கப்படும் ஆறாவது ஹெச்டி பொழுது போக்கு தமிழ் தொலைக்காட்சி கலா்ஸ் தமிழ் ஹெச்டி ஆகும்.
தொகுப்பு சதிஸ் சாட் தமிழ் இணையதளம்
No comments:
Post a Comment