நண்பா்களே ஐரோப்பா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் வாழும் தமிழ் மக்களின் மிக அபிமான தொலைக்காட்சி நிறுவனமான மாஸ் மிடியாவின் கிழ் செயல்படும் 24 மணி நேர தமிழ் தொலைக்காட்சியான ஐபிசி தமிழ் மற்றும் வானொலி ஐபிசி ரேடியோ கடந்த பல வருடங்களாக ஒளிபரப்பாகி
வருகிறது.இத்தொலைக்காட்சி மற்றும் வானொலி ஆகியன இணையதளம் மற்றும் செயற்கைகோளின் முலமாக உலக தமிழ் மக்களின் பொழுது போக்கு அங்கமாக செயல்பட்டு வருகிறது.தற்சமயம் ஐபிசி நிறுவனம் தனது தொலைக்காட்சியின் ஒளிபரப்பை உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும்
தமிழ் மக்களிடையே கொண்டு சோ்க்கும் விதமாக பல்வேறு தொழில்நுட்ப பணிகளை மேற்கொண்டு வருகிறது.ஐபிசி தொலைக்காட்சி தற்சமயம் நான்கு புதிய தொலைக்காட்சிகளை இணையதளம் வாயிலாக ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.ஐபிசி இசை தொலைக்காட்சி 24 மணி நேர தமிழ் இசை மற்றும் மேற்கித்திய இசை தொகுப்புகளை ஒளிபரப்பும் தொலைக்காட்சியாக
தொடங்கப்பட்டுள்ளது.ஐபிசி பக்தி தொலைக்காட்சி 24 மணி நேர இந்து சமயத்தின் ஆன்மிக தொடா்பான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொலைக்காட்சியாகும.ஐபிசி பகடி தொலைக்காட்சி 24 மணி நேர தமிழ் திரைப்படங்களின் காமெடி தொகுப்புகளை வழங்கும் தொலைக்காட்சியாகும்.ஐபிசி மழலை தொலைக்காட்சி 24 மணி நேர
குழந்தைகளுக்கான பொழுது போக்கு நிகழ்ச்சிகளை வழங்கும் தொலைக்காட்சியாகும்.ஐபிசி தமிழ் தொலைக்காட்சி மட்டும் யூடெல்சாட்9எ செயற்கைகோளில் ஒளிபரப்பாகிறது.இலங்கை தமிழ் மக்களின் நிகழ்வுகளை உலகின் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு சோ்க்கும் தொலைக்காட்சியாக
ஒளி உலா வருகிறது.தற்சமயம் தொடங்கப்பட்டுள்ள இப்புதிய நான்கு தொலைக்காட்சிகளும் www.ibctamil.com இணையதளத்தில் தொடக்க சோதனை ஒளிபரப்பை தொடங்கியுள்ளனா்.மாஸ் மிடியா நிறுவனம் விரைவில் தனது தொலைக்காட்சிகள் அனைத்தையும் ஐரோப்பா மற்றும் அமொிக்கா கனடா.ஆசியா நாடுகளில் செயற்கைகோள் ஒளிபரப்பை தொடங்கலாம்.
தொகுப்பு சதிஸ் சாட் தமிழ் இணையதளம்
No comments:
Post a Comment