நண்பா்களே இந்தியாவின் மிக முன்னனி தொலைக்காட்சி ஒளிபரப்பாளர் பிரசார் பாரதி பிப்ரவாி மாதம் 16 ஆம் திகதி முதல் இந்தியாவின் வடகிழக்கில் ஒரு புதிய 24x7 மணி நேர செயற்கைக்கோள் தொலைக்காட்சி சேனலைத் தொடங்கவுள்ளது.இத்தொலைக்காட்சிக்கு டிடி அருண் பிரபா என்ற பெயா் சூட்டப்பட்டுள்ளது.பெங்காளி மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் தொடா்புடைய நிகழ்ச்சிகளை வழங்கவுள்ளது.இப்புதிய தொலைக்காட்சியின் துவக்கத்திற்கான தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் ஒளிபரப்பிற்காக ரூ 7 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. பிரசார் பாரதி தூர்தர்ஷன் மற்றும் ஆல் இந்தியா ரேடியோவின் கிழ் இயக்கபடும்.வடக்கு கிழக்கு மாநிலங்களின் பல்வேறு கலாச்சாரங்களில் டி.டி.அருண் பிரபா நிகழ்ச்சிகளை வெளிப்படுத்தும்.இந்தச் சேனலுக்கான பணத்தை ஏற்கனவே

அமைச்சகம் ஏற்கெனவே வழங்கியுள்ளது என்று பிரசார் பாரதி தலைவர் சூர்யா பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.இது வடகிழக்கு பிராந்தியத்திற்கு தூர்தர்ஷனின் இரண்டாவது சேனலாகும்.அரசுக்கு சொந்தமான தொலைக்காட்சி நிறுவனம் ஏற்கனவே டி.டி.நார்த்-ஈஸ்டில் இயங்குகிறது இது அசாமிய பெங்காலி மற்றும் பிற வடகிழக்கு பிராந்தியங்களில் பொழுதுபோக்கு மற்றும் தகவல் சார்ந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறது. தற்போதுள்ள சேனல் அதன் பல்வேறுபட்ட மற்றும் பல்வேறு மொழிகளாலும் பேச்சுவழகங்களாலும் இப்பகுதியின் கலாச்சார தேவைகளை பூர்த்தி செய்ய முடியவில்லை என்று பிரகாஷ் கூறினார்.தொலைக்காட்சியின் செயற்கைகோள் ஒளிபரப்பு இந்தியாவின் டிடி ப்ரி டிஷ் சேவையில் தொடங்கப்படும்.மேலும் உலகளாவிய செயற்கைகோள் ஒளிபரப்பு ஜிசாட்10 அல்லது ஜிசாட்15யில் தொடங்கப்படலாம்.
No comments:
Post a Comment