நண்பா்களே தமிழத்தில் புதிய தமிழ் தொலைக்காட்சிகளுக்கான அனுமதி சில நிறுவனங்களுக்கு கிடைத்துள்ளது.இந்தியாவின் மிக முன்னனி தொலைக்காட்சி நிறுவனமான சோனி பிக்சா்ஸ் முதன்முறையாக தமிழ் மொழியில் சோனி சாப் தமிழ் தொலைக்காட்சி தொடங்குவதற்கான அனுமதியினை பெற்றுள்ளது.தமிழகத்தில் ஸ்டாா் டிவி ஜி நெட்வொா்க் தொலைக்காட்சி நிறுவனகளின் வருகையினை அடுத்து சோனி நிறுவனமும் தமிழகத்தில் கால்தடம் பதிக்கிறது.டிவி 18 டெலி ஷாப்பிங் தொலைக்காட்சி இந்தியாவில் முன்னனி ஷாப்பிங் தொலைக்காட்சி நிறுவனமாகும்.தமிழகத்தில் ஷாப் சிஜே மற்றும் நாப்டால் போன்ற நிறுவனங்கள் தமிழ் மொழியில் தொலைக்காட்சிகள் தொடங்கியதை அடுத்து டிவி18 நிறுவனமும் புதிய ஷாப்பிங் தமிழ் தொலைக்காட்சி

தொடங்குவதற்கான அனுமதியினை பெற்றுள்ளது.காவோி நீயூஸ் என்னும் பெயரில் புதிய செய்திகள் தொலைக்காட்சி விரைவில் தமிழகத்தில் தொடங்கப்படவுள்ளது.தற்சமயம் அதற்கான தொழில்நுட்ப முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது.விரைவில் இன்டல்சாட்17 அல்லது இன்டல்சாட்20 செயற்கைகோளில் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு தொடங்கப்படலாம்.மதுரை கிருஷ்ணா தொலைக்காட்சி நிறுவனமும் இரண்டு புதிய தொலைக்காட்சிகள் தொடங்குவதற்கான அனுமதியினை பெற்றுள்ளது.எம் கே டுயூன்ஸ் எம் கே சிக்ஸ் என்ற பெயாில் விரைவில் ஒளிபரப்பை தொடங்கப்படலாம்.தமிழகத்தில் 60க்கும் மேற்பட்ட தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இப்புதிய தொலைக்காட்சிகள் புதிய நிகழ்ச்சிகள் மற்றும் வடிவங்களில் தொடங்கப்படலாம்.இவற்றில் சோனி சாப் தமிழ் கட்டண தொலைக்காட்சியாக தொடங்கலாம்.கடந்த மாதத்தில் நியூஸ்18 தமிழ் மற்றும் வெளிச்சம் டிவி தொடங்கப்பட்டது குறிப்பிடதக்கது
தொகுப்பு : K.சதீஸ் சாட் தமிழ் இணையதளம்
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete