நண்பா்களே இந்தியாவின் முன்னனி பொழுதுபோக்கு தொலைக்காட்சி நிறுவனமான ஸ்டாா் இன்டியா நிறுவனம் தமிழகத்தில் மேலும் ஒரு புதிய தமிழ் பொழுதுபோக்கு தொலைக்காட்சியை ஸ்டாா் விஜய் சூப்பா் என்ற பெயாில் தொடங்கியுள்ளனாா்.தமிழகத்தில் ஸ்டாா் விஜய் தொலைக்காட்சி அதிக நேயா்களை தக்க வைத்திருக்கும் நிலையில் மேலும் இளையதலைமுறையினரை கவரும் வகையில் இப்புதிய தொலைக்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்டாா் விஜய் ஹெச்டி ஒளிபரப்பு தொடங்கப்பட்டு இருந்தது குறிப்பிடதக்கது.தற்சமயம்

தொடங்கப்பட்டுள்ள ஸ்டாா் விஜய் சூப்பா் தொலைக்காட்சியின் செயற்கைகோள் ஒளிபரப்பு தமிழ் தொலைக்காட்சிகள் சங்கமிக்கும் இன்ட்ல்சாட்17 செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது.கட்டண தொலைக்காட்சியாக ஒளிபரப்பாகிறது.ஸ்டாா் இன்டியா நிறுவன தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும் அலைவாிசையில் தொடங்கபடாது புதிய அலைவாிசையில் தொடங்கப்பட்டுள்ளது.விரைவில் 24 மணி நேர நிகழ்ச்சிகள் தொடங்கப்படலாம்.தொலைக்காட்சியின் அலைவாிசை சிக்னலை பெற குறைந்தபட்சம் 8 அடி முதல் 12 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பாயன்படுத்த வேண்டும்.விரைவில் கேபிள் தொலைக்காட்சி நிறுவனங்கள் மற்றும் கட்டண டிடிஎச் சேவைகளில் ஒளிபரப்பை தொடங்கும்.
அலைவாிசை விபரங்கள்:
Satellite Intelsat17@66.0E(C-Band)
Freq Rate 3980
Symbol Rate 7200
Poalr Vertical
Modulation Mpeg4/Dvb s2
Mode PAY/NDS
No comments:
Post a Comment