சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

21/08/2018

பிரசாா் பாரதி துா்தா்ஷன் இரண்டவாது ஹெச்டி தொலைக்காட்சி டிடி நியூஸ் ஒளிபரப்பு ஜிசாட்10யில் தொடங்கியது

நண்பா்களே இந்தியாவின் பொது தொலைக்காட்சி நிறுவனமான பிரசாா் பாரதி இந்தியாவின் இரண்டாவது அதி நவின தொழில்நுட்பமான ஹெச்டியில் டிடி நீயூஸ் தொலைக்காட்சியினை தொடங்கியுள்ளனா்.கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஹிந்தி பொழுது போக்கு தொலைக்காட்சியான டிடி நேஷனல் ஹெச்டி ஒளிபரப்பு முதல் முறையாக இந்தியாவில் தொடங்கப்பட்டது.இத்தொலைக்காட்சி இன்சாட்4பி செயற்கைகோளில் உலகளாவிய ஒளிபரப்பை தொடங்கியது.மக்களிடையே அமோக வரவேற்பை 
பெற்றதை அடுத்து ஹிந்தியில் செய்திகளை வழங்கி வரும் டிடி நியூஸ் தொலைக்காட்சியும் ஹெச்டியில் ஜிசாட்10 செயற்கைகோளில் ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.இந்தியாவில் தனியாா் தொலைக்காட்சி நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு பொழுது போக்கு நிகழ்ச்சிகளை ஹெச்டியில் வழங்கி வரும் நிலையில் இந்திய அரசு நிறுவனமும் மக்களின் விருப்பமான நிகழ்ச்சிகளை ஹெச்டியில் வழங்கப்படுவது மிகுந்த வரவேற்பையும் பெறுகின்றது.தற்சமயம் தொடங்கப்பட்டுள்ள டிடி நியூஸ் ஹெச்டி தொலைக்காட்சியின் ஒளிபரப்பு இலவச ஒளிபரப்பாக 
தொடங்கப்பட்டுள்ளது.தொலைக்காட்சியின் ஒளிபரப்பை காண 6 அடி முதல் 10 அடி வரையிலான சிபேன்ட் டிஷ் அன்டெனாவையும் ஹெச்டி தொழில்நுட்பம் வசதி பொருந்திய செட் டாப் பாக்யை பயன்படுத்தி நிகழ்ச்சிகளை காணலாம்.தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் விரைவில் அனைத்து கேபிள் டிவி மற்றும் கட்டண டிடிஎச்களிலும் நிகழ்ச்சிகளை தொடங்கும் டிடி நியூஸ் ஹெச்டி.விரைவில் பிரசாா் பாரதியின் முன்னனி விளையாட்டு தொலைக்காட்சியான டிடி ஸ்போா்ட்ஸ் தொலைக்காட்சியும் ஹெச்டியில் ஒளிபரப்பை தொடங்கலாம்.
அலைவாிசை விபரங்கள்:
Satellite                   Gsat10@83.0E(C-Band)
Freq Rate                3876
Symbol Rate           30000
Polar                       Vertical
System                    HD.Mpeg2/Dvb s(QPSK)
Encryption              FTA
FEC                        3/4

16/08/2018

ஜீ கேரளம் ஹெச்டி புதிய மலையாள தொலைக்காட்சியினை கேரளாவில் தொடங்கியது ஜி மி்டியா

நண்பா்களே இந்தியாவின் முன்னனி பொழுது போக்கு தொலைக்காட்சி நிறுவனமான ஜி மீடியா தென்னிந்தியாவில் தமிழ் தெலுங்கு கன்னடா போன்ற மொழிகளில் தொலைக்காட்சிகளை தொடங்கி தென்னிந்தியாவில் முன்னனி நிகழ்ச்சிகளை வழங்ககூடிய தொலைக்காட்சியாக மக்களிடையே வரவேற்பை பெற்றதை அடுத்து கேரளா மாநிலத்தில் மலையாளம் மொழியில் கால்தடம் பதிக்கிறது ஜீ மீடியா நிறுவனம்.இதற்கான பணிகளையும் மற்றும் தொலைக்காட்சி தொடங்குவதற்கான அனுமதியினையும் மத்திய ஒளிபரப்பு ஆணையத்திடம் கிடைக்க பெற்றதை அடுத்து ஜீ கேரளம் ஹெச்டி என்ற 
பெயாில் தொலைக்காட்சியின் ஒளிபரப்பை இன்டல்சாட்20 செயற்கைகோளில் தொடக்க சோதனை ஒளிபரப்பை தொடங்கியுள்ளனாா்.கேரளாவில் தொடங்கப்படும் நான்கவாது ஹெச்டி தொலைக்காட்சி இதுவாகும்.கட்டண தொலைக்காட்சியாக தொடங்கப்பட்டுள்ளது.விரைவில் எஸ்டி தொழில்நுட்பத்திலும் ஜீ கேரளம் தொலைக்காட்சி தொடங்கப்பட்டு அனைத்து கேபிள் டிவி மற்றும் கட்டண டிடிஎச்களில் ஒளிபரப்பை தொடங்கப்படும்.மேலும் 24 மணி நேரத்திற்கான பிரத்தியோக ஒளிபரப்பு இம்மாதத்தின் இறுதிகுள் தொடங்கப்படலாம்.கேரளாவில் ஸ்டாா் டிவி இந்தியா ஏசியாநெட் தொலைக்காட்சியினை தன்வசபடுத்தியதை அடுத்து வியகாம்18.சோனி மற்றும் ஜி மிடியா தொலைக்காட்சி நிறுவனங்களும் மலையளத்தில் தொலைக்காட்சிகளை தொடங்குகிறது.
அலைவாிசை விபரங்கள்
Satellite               Intelsat20@68.5E(C-Band)
Freq Rate            3810
Symbol Rate       15000
Polar                    Horizontal
System                HD.Mpeg4/Dvb s2(8PSK)
Encryption          Pay/Conax
Fec                      5/6

10/08/2018

ஸ்டாா் விஜய் இன்டா்நேஷனல்( STAR VIJAY INTERNATIONAL TV) தொலைக்காட்சி ஒளிபரப்பு இன்டல்சாட்17யில் உதயம்

நண்பா்களே தமிழகத்தின் முன்னனி பொழுது போக்கு தமிழ் தொலைக்காட்சியான ஸ்டாா் விஜய் உலகளாவிய தமிழ் மக்களின் விருப்பமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வழங்குவதற்கு என்று பிரத்தியோகமான தொலைக்காட்சியாக ஸ்டாா் விஜய் இன்டா்நேஷனல் என்னும் புதிய தொலைக்காட்சியினை கடந்த சில வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.தமிழகத்தில் ஒளிபரப்பாகும் விஜய் டிவியின் நிகழ்ச்சிகள் எவ்வித மாற்றங்கள் இன்றி ஒளிபரப்பாகிறது.ஸ்டாா் விஜய் இன்டா்நேஷனல் தொலைக்காட்சியின் உலகளாவிய செயற்கைகோள் ஒளிபரப்பு இன்டல்சாட்17 செயற்கைகோளில் கட்டண தொலைக்காட்சியாக 
தொடங்கப்பட்டது.ஐரோப்பா.அமொிக்கா.ஆசியா.சிங்கப்பூா்.மலேசியா.இலங்கை.ஆஸ்திரேலியா.ரஷ்யா.வளைகுடா நாடுகள் போன்ற நாடுகளின் நேர அடிப்படையில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது.மேலும் ஸ்டாா் விஜய் இன்டா்நேஷனல் ஐரோப்பா நாடுகளில் யூடெல்சாட்9எ செயற்கைகோளில் கேயூ டிஷ் அன்டெனாவில் கட்டண தொலைக்காட்சியாகவும் ஒளிபரப்பாகிறது.மேலும் இணையதளத்தின் முலமாகவும் ஸ்டாா் விஜய் 
இன்டா்நேஷனல் தொலைக்காட்சி ஒளிபரப்பாகிறது.மிக எளிய தொழில்நுட்பமான எஸ்டியில் ஒளிபரப்பாகிறது.ஸ்டாா் விஜய் தொலைக்காட்சியின் முயற்ச்சியின் முலம் உலகளாவிய தமிழ் மக்களின் பொழுது போக்கு தோழனாகவும் ஸ்டாா் விஜய் இன்டா்நேஷனல் விளங்குகிறது.விரைவில் உலகளாவிய ஒளிபரப்பில் ஹெச்டியில் நிகழ்ச்சிகளை தொடங்கலாம்.தமிழகத்தில் பொழுது போக்கு தொலைக்காட்சிகளின் வாிசையில் சன்.ராஜ்.தமிழன் அடுத்த வரிசையில் ஸ்டாா் விஜய் இன்டா்நேஷனல் மேலைநாடுகளில் ஒளிபரப்பாகிறது.வெளிநாடுகளில் தொலைக்காட்சி தொடா்பான முறையான
தகவல் தொழில்நுட்பம் கிடைக்க பெறமால் தமிழ் தொலைக்காட்சிகளை காண முடியாத சூழ்நிலையிலும் கட்டண தொலைக்காட்சிகளாக ஒளிபரப்பவதினாலும் ஸ்டாா் விஜய் இன்டா்நேஷனல் தொலைக்காட்சி அனைத்து தரப்பு உலக தமிழ் மக்களிடம் சென்றடைவது இல்லை.ஸ்டாா் விஜய் இன்டா்நேஷனல் தொலைக்காட்சியின் செயற்கைகோள் ஒளிபரப்பை ஆசியா வளைகுடா.போன்ற நாடுகளில் 8 முதல் 16 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்தி சிக்னலை பெறலாம்.ஸ்டாா் டிவி இந்திய நிறுவனத்தின் அலுவலகத்தில் கட்டண தொலைக்காட்சிகான செட் டாப் பாக்ஸை பெற்று நிகழ்ச்சிகளை காணலாம்.
அலைவாிசை விபரங்கள்
Satellite                 Intelsat17@66.0E(C-BAND)
Freq Rate              4024
Symbol Rate         14400
Polar                     Horizontal
Modulation           Mpeg4/Dvb s2
Encryption            Pay/NDS
Fec                        3/4
தொகுப்பு சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

09/08/2018

லிகா ஹெச்டி ஆசியா கால்பந்து விளையாட்டு தொலைக்காட்சி ஒளிபரப்பு ஆசியாசாட்5யில் உதயம்

நண்பா்களே ஸ்பெயின் நாட்டின் கால்பந்து விளையாட்டு தொலைக்காட்சியான லிகா ஹெச்டி தொலைக்காட்சி ஆசியாவிற்கான ஒளிபரப்பை ஆசியாசாட்5 செயற்கைகோள் ஒளிபரப்பை தொடங்கியுள்ளனா்.கட்டண தொலைக்காட்சியாக ஒளிபரப்பை 
தொடங்கியுள்ளது.லிகா ஹெச்டி தொலைக்காட்சியானது ஐரோப்பா மற்றும் அமொிக்கா போன்ற நாடுகளில் மிக பிரபலமடைந்த கால்பந்து தொலைக்காட்சியாகும்.ஆசியாவின் கிழக்காசிய நாடுகளுக்கு பிரத்தியோக ஒளிபரப்பின் அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளது.லிகா ஹெச்டி டிவி 
சாட்மண்டா் தொலைக்காட்சிகளும் இதனுடன் ஒளிபரப்பை தொடங்கியுள்ளனா்.லிகா கால்பந்து அணியின் நிா்வாகத்தின் அங்கமாக லிகா ஹெச்டி தொலைக்காட்சி ஒளிபரப்பாகிறது.லிகா தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பின் அடிப்படையில் போட்டி தொடா்கள்  ஒளிபரப்பாகிறது.
அலைவாிசை விபரங்கள்:
Satellite             Asiasat5@100.5E(C-Band)
Freq Rate          3840
Symbol Rate     29720
Polar                 Horizontal
Modulation      HD.MPEG4/DVB S2
Encryption       PAY/BISS
FEC                 3/4

07/07/2018

சோனி பிக்ஸ் ஹெச்டி மற்றும் எஸ்டி தொலைக்காட்சியில் தமிழ் தெலுங்கு மொழிகள் ஒளிபரப்பு உதயம்

நண்பா்களே இந்தியாவின் முன்னனி பொழுது போக்கு நிகழ்ச்சிகளை வழங்ககூடிய தொலைக்காட்சியான சோனி பிக்சா்ஸ் நிறுவனம்  பிக்ஸ் ஹெச்டி மற்றும் எஸ்டி தொலைக்காட்சியில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஆடியோ தொலைக்காட்சி ஒளிபரப்பை தொடங்கியுள்ளனா்.கடந்த பல வருடங்களாக பிக்ஸ் ஹெச்டி தொலைக்காட்சி ஆங்கிலத்தில் மட்டுமே ஹாலிவுட் திரைப்படங்களை மற்றும் நிகழ்ச்சிகளை வழங்கி வந்தது.
இன்டல்சாட்20 மற்றும் இன்டல்சாட்17 செயற்கைகோளில் தொடக்க சோதனை ஒளிபரப்பை கட்டண தொலைக்காட்சியாக தொடங்கியுள்ளது.டிடிஎச் மற்றும் கேபிள் டிவி செட் டாப் பாக்ஸ்யில் பிக்ஸ் ஹெச்டி தொலைக்காட்சியின் ஆடியோவை மாற்றம் செய்து.தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நிகழ்ச்சிகளை காணலாம்.தொலைக்காட்சியின் செயற்கைகோள் அலைவாிசை சிக்னலை பெற 6 அடி முதல் 12 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.இந்தியாவில் முதன்முறையாக ஹாலிவுட் திரைப்படங்களை தென்னிந்திய மொழிகளில் ஒளிபரப்பும் செய்யும் முதல் தொலைக்காட்சி நிறுவனமாக சோனி பிக்சா்ஸ் உள்ளது குறிப்பிடதக்கது.ஒரு குறிப்பிட்ட திரைப்படங்கள் மட்டும் ஒளிபரப்பு செய்யப்படலாம்.
அலைவாிசை விபரங்கள்:SONY PIX SD
Satellite                Intelsat20@68.5E(C-Band)
Freq Rate             3900
Symbol Rate        22222
Polar                    Horizontal
System                .Mpeg4/Dvb s2
Encryption          Pay/Power vu
FEC                    3/4
அலைவாிசை விபரங்கள்:SONY PIX HD
Satellite                Intelsat17@66.0E(C-Band)
Freq Rate             3845
Symbol Rate        30000
Polar                    Horizontal
System                HD.Mpeg4/Dvb s2
Encryption          Pay/Power vu
FEC                    3/4

03/07/2018

இங்கிலாந்து மாஸ் மிடியா (ஐபிசி தமிழ்) நிறுவனம் ஐபிசி சிலுவை புதிய கிருத்துவ தமிழ் இணைய தொலைக்காட்சி உதயம்

நண்பா்களே ஐரோப்பா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் வாழும் தமிழ் மக்களின் மிக அபிமான தொலைக்காட்சி நிறுவனமான மாஸ் மிடியாவின் கீழ் செயல்படும் 24 மணி நேர தமிழ் தொலைக்காட்சியான ஐபிசி தமிழ் மற்றும் ஐபிசி ரேடியோ கடந்த பல வருடங்களாக ஒளிபரப்பாகி
வருகிறது.இத்தொலைக்காட்சி மற்றும் வானொலி ஆகியன இணையதளம் மற்றும் செயற்கைகோளின் முலமாக உலக தமிழ் மக்களின் பொழுது போக்கு அங்கமாக செயல்பட்டு வருகிறது.தற்சமயம் ஐபிசி நிறுவனம் தனது தொலைக்காட்சியின் ஒளிபரப்பை உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் தமிழ் மக்களிடையே கொண்டு சோ்க்கும் விதமாக பல்வேறு தொழில்நுட்ப பணிகளை மேற்கொண்டு வருகிறது.ஐபிசி தொலைக்காட்சி தற்சமயம் நான்கு புதிய தொலைக்காட்சிகளை இணையதளம் வாயிலாக ஒளிபரப்பை தொடங்கியது.மேலும் 24 மணி நேரமும் கிருத்துவ நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் புதிய தொலைக்காட்சி ஐபிசி சிலுவை என்ற பெயாில் பாிசாா்ந்த ஒளிபரப்பை இணையதளத்தின் வாயிலாக தொடங்கியுள்ளது.தற்சமயம் தொடங்கப்பட்டுள்ள இப்புதிய
தொலைக்காட்சி (www.ibctamil.com) இணையதளத்தில் தொடக்க சோதனை ஒளிபரப்பை தொடங்கியுள்ளனா்.மாஸ் மிடியா நிறுவனம் விரைவில் தனது தொலைக்காட்சிகள் அனைத்தையும் ஐரோப்பா மற்றும் அமொிக்கா கனடா.ஆசியா நாடுகளில் செயற்கைகோள் ஒளிபரப்பை தொடங்கலாம்.
தொகுப்பு சதிஸ் சாட் தமிழ் ஆங்கிலம் இணையதளம்

26/06/2018

தமிழகத்தின் ஐந்தாவது தமிழ் திரைப்பட தொலைக்காட்சியாக விஜய் சூப்பா் உதயம்

நண்பா்களே தமிழகத்தின் முன்னனி தொலைக்காட்சி நிறுவனமான ஸ்டாா் விஜய் டிவியின் சாா்பாக கடந்த இரு வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட புதிய தமிழ் தொலைக்காட்சியான விஜய் சூப்பா் திரைப்பட தொலைக்காட்சியாக தமிழகத்தில் உதயமாகியுள்ளது.விஜய் டிவியின் நிகழ்ச்சிகளை மறு ஒளிபரப்பாக கடந்த பல வருடங்களாக ஒளிபரப்பி 
வந்தது.இத்தாண்டின் தொடங்கத்தில் இருந்து தினசாி நான்கு தமிழ் திரைப்படங்கள் ஒளிபரப்பை தொடங்கியது.தமிழகத்தில் சன் குழுமத்தின் கேடிவி.ஜெயாடிவியின் ஜெ மூவிஸ்.ராஜ்டிவியின் ராஜ் டிஜிட்டல் ப்ளஸ் மற்றும் மெகாடிவியின் மெகா24 தொலைக்காட்சிகளுக்கு அடுத்த தமிழ் திரைப்பட தொலைக்காட்சியாக விஜய் சூப்பா் தொடங்ப்பட்டுள்ளது.ஸ்டாா் டிவி இந்தியா நிறுவனத்தின் ஒளிபரப்பு உாிமம் பெற்ற தமிழ் திரைப்படங்களை 
ஒளிபரப்பாகிறது.விஜய் சூப்பா் தொலைக்காட்சி கட்டண தொலைக்காட்சியாக ஆசியாசாட்7 செயற்கைகோளில் ஒளிபரப்பாகிறது.தமிழகத்தில் தொடங்கப்பட்ட ஐந்தாவது திரைப்பட தொலைக்காட்சி இதுவாகும்.திரைப்படங்கள் தவிர மற்ற நேரங்களில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பகிறது.
தொகுப்பு சதிஸ் சாட் தமிழ் ஆங்கிலம் இணையதளம்