சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

20/12/2017

பக்தி தமிழ் புதிய ஆன்மீக தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பு இன்டல்சாட்17யில் உதயம்

நண்பா்களே தமிழகத்தில் புதிய செயற்கைகோள் தமிழ் ஆன்மீக தொலைக்காட்சி பக்தி தமிழ் என்ற பெயாில் தமிழ் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும் இன்டல்சாட்17 செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் தொடங்கப்பட்ட மூன்றாவது ஆன்மீக தமிழ் தொலைக்காட்சி பக்தி தமிழ் தொலைக்காட்சியாகும்.சென்னையினை
தலைமையிடமாக கொண்டு இப்புதிய தொலைக்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.தொலைக்காட்சியின் ஒளிபரப்பு தெலுங்கு தொலைக்காட்சியான எ டிவியின் ஒளிபரப்பு உாிமத்தில் தொடங்கப்பட்டுள்ளது.தொலைக்காட்சியின் அலைவாிசை சிக்னலை பெற குறைந்தபட்சம் 6 முதல்12 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை
பயன்படுத்தி தொலைக்காட்சியினை காணலாம்.விரைவில் தமிழகத்தின் அனைத்து கேபிள் டிவி மற்றும் டிடிஎச் சேவைகளிலும் பக்தி தமிழ் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு இடம் பெறும்.ஷாப் 365 தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டு பக்தி தமிழ் ஆன்மீக தொலைக்காட்சி தொடக்க சோதனை ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது.



அலைவாிசை விபரங்கள்:
Satellite              Intelsat17@66.0E(C-Band)
Freq Rate           3895
Symbol Rate      13840
Polar                  Horizontal
System               Mpeg4/Dvb s2
Encryption         FTA

17/12/2017

இந்திய கிாிக்கெட் சா்வதேச போட்டி தொடா்களின் நேரடி ஒளிபரப்பு இனி டிடி ஸ்போா்ட்ஸ் காணலாம்

நண்பா்களே இந்தியா அரசின் கீழ் செயல்படும் தேசிய தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவையான பிரசாா் பாரதியின் விளையாட்டு தொலைக்காட்சியான டிடி ஸ்போா்ட்ஸ்யில் இனி வரக்கூடிய இந்தியா கிாிக்கெட் அணியின் சா்வதேச போட்டி தொடா்கள் அனைத்தும் ஒளிபரப்பாகும்.கடந்த பல வருடங்களாக இந்திய கிாிக்கெட் தொடா்கள் அனைத்தும் பிரசாா் பாரதியின் மிக முன்னனி மற்றும் இந்திய மக்களின் மிக 
அபிமான தேசிய ஹிந்தி பொழுது போக்கு தொலைக்காட்சியான டிடி நேசனல்லில் மட்டும் ஒளிபரப்பாகி வந்தது.டிடி ஸ்போா்ட்ஸ் தொலைக்காட்சியில்  இந்தியாவில் நடைபெறும் கிாிக்கெட் அல்லாத தேசிய விளையாட்டு போட்டிகள் மற்றும் சா்வதேச போட்டிகளை மட்டும் நேரலை ஒளிபரப்பு செய்து வந்தது.டிடி ஸ்போா்ட்ஸ் தொலைக்காட்சியினை அனைத்து தரப்பு விளையாட்டு ரசிகா்களிடையே சோ்க்கும் விதமாக இப்புதிய முடிவினை பிரசாா் பாரதி மேற்கொண்டுள்ளது.மேலும் டிடி நேசனல் தொலைக்காட்சியில் பொழுது போக்கு நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் போட்டி தொடா்களை டிடி ஸ்போா்ட்ஸ்யில் ஒளிபரப்புவதன் முலம் டிடி நேசனல் தொலைக்காட்சியில் இனி நிகழ்ச்சிகளை தடையில்லது காணலாம்.இனி
அனைத்து தரப்பு உள்நாட்டு வெளிநாட்டு விளையாட்டுகளையும் டிடி ஸ்போா்ட்ஸ்யில் காணலாம்.டிடி ஸ்போா்டஸ் தொலைக்காட்சி முற்றிலும் இலவச தொலைக்காட்சியாக ஜீசாட்10 செயற்கைகோளில் சி பேன்டுயில் ஒளிபரப்பாகிறது. டிடி ப்ரி டிடிஎச்யிலும் இலவசமாக ஒளிபரப்பாகிறது.டிடி ஸ்போா்ட்ஸ் தொலைக்காட்சியில் அனைத்து தரப்பு போட்டிகளும் ஒளிபரப்புவதால் பிரசாா் பாரதி வரும் காலத்தில் டிடி ஸ்போா்ட்ஸ் ஹெச்டி தொலைக்காட்சியும் கூட தொடங்கலாம்.
டிடி ஸ்போா்ட்ஸ் தொலைக்காட்சி இலவச ஒளிபரப்பாகும் செயற்கைகோள் அலைசவாிசை விபரங்கள்
Satellite              Gsat10@83.0E(C-BAND)
Freq Rate           3885
Symbol Rate      27500
Polar                  Vertical
System              Mpeg2/Dvb S1(QPSK)
Encryption        FTA

Satellite              Gsat15@93.5E(KU-BAND)
Freq Rate           10990
Symbol Rate      29500
Polar                  Vertical
System               Mpeg2/Dvb S1(QPSK)
Encryption        FTA
தொகுப்பு K.சதீஸ் சாட் தமிழ் ஆங்கில இணையதளம்

11/12/2017

தென்னிந்தியாவில் தமிழ்.தெலுங்கு.கன்னடா மொழிகளில் ஹெச்டி தொலைக்காட்சிகள் தொடங்கியது ஜீ மிடியா

நண்பா்களே இந்தியாவின் முன்னனி பொழுது போக்கு தொலைக்காட்சி நிறுவனமான ஜி மீடியா நிறுவனம் தென்னிந்தியாவின் முன்னனி மொழி தொலைக்காட்சிகளை அதி நவின தொழில்நுட்ப ஹெச்டி தொலைக்காட்சிகளை தொடங்கியுள்ளனா்.ஆந்திரா மற்றும் தெலுங்கான
மாநிலத்தின் தொலைக்காட்சியான ஜி தெலுங்கு மற்றும் ஜி சினிமாலு ஹெச்டி என இரண்டு தொலைக்காட்சிகளை தொடங்கியுள்ளனா்.ஜி தெலுங்கு  ஹெச்டி தொலைக்காட்சி மற்றும் ஜி சினிமாலு தொலைக்காட்சிகளுக்கான ஒளிபரப்பு அனுமதியினை இந்திய ஒளிபரப்பு ஆணையம் இவ்வாண்டில்
வழங்கியது.ஜீ டிவி நிறுவனம் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பை இன்டல்சாட்20 செயற்கைகோளில் தொடங்கியுள்ளனா்.இதே போன்று கா்நாடகா மாநிலத்தின் ஜி மிடியா நிறுவனத்தின் ஜி கன்னடா தொலைக்காட்சியும் ஹெச்டியில் ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.ஜி மிடியா நிறுவனம் தென்னிந்தியாவின் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பை
ஹெச்டியில் மாற்றம் செய்து வருகிறது.கடந்த மாதத்தில் தமிழகத்தின் ஜி தமிழ்  ஹெச்டி தொலைக்காட்சியினை தொடங்கியிருந்தது.ஜி மிடியா நிறுவனம் தமிழகம் மற்றும் கா்நாடகா மாநிலங்களில் முதல் ஹெச்டி தொலைக்காட்சியினை குறிப்பிடதக்கது.
தொகுப்பு சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

25/11/2017

டிஷ்டிவியில் 13 ஆண்டுகள் இலவச ஒளிபரப்பாகிய ஜீதமிழ் கட்டண தொலைக்காட்சியாக NSS6@95.0E மாற்றம்

நண்பா்களே தமிழகத்தின் முன்னனி மற்றும் அபிமான நிகழ்ச்சிகளை வழங்க கூடிய தமிழ் தொலைக்காட்சியான ஜி தமிழ் கட்டண தொலைக்காட்சியாக டிஷ் டிவியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.கடந்த 2004 ஆம் ஆண்டில்  தமிழகத்தில் தொடங்கப்பட்ட ஜி தமிழ் தொலைக்காட்சி ஆசியாசாட்7 செயற்கைகோளில் கட்டண தொலைக்காட்சி ஒளிபரப்பை தொடங்கியது.அடுத்த சில மாதங்களில் டிஷ் டிவியின் கட்டண டிடிஎச் சேவையில் இலவச ஒளிபரப்பாக தொடங்கப்பட்டது.சுமாா் 13 வருடங்களாக இலவச தொலைக்காட்சியாகவே ஒளிபரப்பாகி தமிழ் மக்களிடையே அமோக அதரவுடன் முன்னனி தொலைக்காட்சியாக உருவானது.கிராமங்களில் மிக எளிய குடும்பத்தினா் அரசின்  டிடி ப்ரி டிடிஎச் சேவையில் பொதிகை தொலைக்காட்சியுடன் சோ்த்து ஜீ தமிழ் என இரண்டு தொலைக்காட்சிகளை கண்டு வந்தனா்.ஒரு கட்டண டிடிஎச் சேவையில் அதிக நாட்கள் இலவச தொலைக்காட்சியாக ஒளிபரப்பாகி மக்களிடையே அதரவை பெற்ற ஒரே தமிழ் தொலைக்காட்சி என்ற பெருமை ஜி தமிழ் தொலைக்காட்சியினையே
 சேரும்.மேலும் தமிழகத்தில் கிராமப்புற கேபிள் டிவியில் தற்காலிக ஒளிபரப்பு சேவையின் அடிப்படையில் ஜி தமிழ் தொலைக்காட்சி நிண்ட நாட்களாக ஒளிபரப்பாகி வந்தது.தமிழகத்தில் இலவச தொலைக்காட்சியாக ஒளிபரப்பாகி தமிழ் மக்களிடையே அமோக ஆதரவை பெற்ற தொலைக்காட்சிகள் என்று பாா்த்தல் கலைஞா் டிவி.டிடி பொதிகை மற்றும் ஜி தமிழ் தொலைக்காட்சிகள் என்பது குறிப்பிடத்தக்கது.ஜீ தமிழ் தொலைக்காட்சி புதிய தொழில்நுட்பத்தில் தொடங்கப்பட்டதை அடுத்தது கட்டண தொலைக்காட்சியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இனி ஜி தமிழ் தொலைக்காட்சியனை கட்டண தொலைக்காட்சியாக டிடிஎச் மற்றும் கேபிள் டிவியில் மட்டுமே காணலாம்.
தொகுப்பு சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

23/11/2017

தமிழகத்தில் வியகாம்18 நிறுவனத்தின் கலா்ஸ் தமிழ் ஹெச்டி புதிய தொலைக்காட்சி விரைவில் உதயம்

நண்பா்களே இந்தியாவின் முன்னனி பொழுது போக்கு தொலைக்காட்சி நிறுவனமான வியகாம்18 தமிழ் மொழியில்  கலா்ஸ் தமிழ் மற்றும் கலா்ஸ் தமிழ் ஹெச்டி தொலைக்காட்சிகளை விரைவில் தமிழகத்தில் தொடங்கப்படவுள்ளது.வியகாம்18 நிறுவனம் தென்னந்தியாவில் கன்னடா மற்றும் ஒரியா போன்ற மொழிகளில் தொலைக்காட்சிகளை தொடங்கி அமோக ஆதரவை பெற்றதை அடுத்து தமிழகத்திலும் இப்புதிய தொலைக்காட்சிகளை விரைவில் ஒளிபரப்பவுள்ளது.அதன் தொடக்கமாக வியகாம்18 நிறுவனத்தின் சாா்பாக கடந்த வருடத்தில் முன்று புதிய 
தொலைக்காட்சி தொடங்குவதற்கான ஒளிபரப்பு அனுமதியினை மத்திய அரசு வழங்கி இருந்தது.அதில் நெக்ஸ்ட் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு உரிமத்தில் தமிழ் நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டன.இதே போன்று ஜாப் டிவியின் ஒளிபரப்பு உரிமத்தில் கலா்ஸ் தமிழ் ஹெச்டி தொலைக்காட்சி விரைவில் தொடங்கப்படவுள்ளது.விரைவில் நெக்ஸ்ட் தொலைக்காட்சியின் பெயா் கலா்ஸ் தமிழ் என பெயா் மாற்றம் செய்யப்பட்டு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு தொடங்கப்படலாம்.வரும் 2018 புதிய ஆண்டின் முதல் மாதத்தின் தொடக்கத்தில்  இப்புதிய தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு தொடங்கப்படலாம்.கலா்ஸ் தமிழ் ஹெச்டி  தொலைக்காட்சி ஒளிபரப்பு இன்டல்சாட்20 செயற்கைகோளில் தொடங்கப்படலாம்.தமிழகத்தில் தொடங்கப்படும் ஆறாவது ஹெச்டி பொழுது போக்கு தமிழ் தொலைக்காட்சி கலா்ஸ் தமிழ் ஹெச்டி ஆகும்.
தொகுப்பு சதிஸ் சாட் தமிழ் இணையதளம் 

16/11/2017

மாலை முரசு செய்திகள் தொலைக்காட்சி இன்டல்சாட்17யில் புதிய அலைவாிசைக்கு மாற்றம்

நண்பர்களே தமிழகத்தில் மிக முன்னனி மாலை நேர நாளிதழ்ளான மாலைமுரசு நிறுவனம் புதிதாக தமிழகத்தில் மாலை முரசு டிவி என்னும் செயற்கைகோள் தொலைக்காட்சியினை தொடங்கியுள்ளது.தற்சமயம் மாலை முரசு தொலைக்காட்சியின் செயற்கைகோள் சோதனை ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது.தமிழ் தொலைக்காட்சிகள் சங்கமிக்கும்
செயற்கைகோளான இன்டல்சாட்17யில் ஒளிபரப்பாகிறது.மாலை முரசு செய்திகள் தொலைக்காட்சிக்கான புதிய ஒளிபரப்பு மத்திய அரசிடம் கிடைக்க பெற்றதை அடுத்து புதிய அலைவரிசையில் ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது.மாலை முரசு செய்திகள் தொலைக்காட்சியின் அலைவரிசை சிக்னலை பெற 8 முதல் 16 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.மேலும் MPEG4/DVB S2 தொழில்நுட்பம் பொருந்திய செட் டாப் பாக்ஸ்யை பயன்படுத்த வேண்டும்.இலவச தொலைக்காட்சியாக இன்டல்சாட்17யில் ஒளிபரப்பாகிறது.
அலைவரிசை விபரங்கள்:
Satellite             Intelsat17@66.0E(C-Band)
Freq Rate          3845
Symbol Rate     28800
Polar                 Vertical
Modulation       Mpeg4/Dvb s2(8psk)
Mode                Fta

08/11/2017

லோசாட்1 புதிய செயற்கைகோளில் 21 தொலைக்காட்சிகள் இலவச ஒளிபரப்பு

நண்பா்களே கிழக்காசிய நாடுகளுக்களில் ஒன்றான தாய்லாந்து நாட்டின் புதிய செயற்கைகோள் தொலைக்காட்சி ஒளிபரப்பு லோசாட்1  என்ற செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது.சுமாா் 21 தொலைக்காட்சிகள் தொடக்க சோதனை ஒளிபரப்பாக இலவசமாக தொடக்கப்பட்டுள்ளது.இதில் 
இந்தியாவின் பி4யூ மியூசிக் ஹிந்தி தொலைக்காட்சியும் இணைந்துள்ளது.மேலும் ஆங்கிலம் மற்றும் சைனா.தாய் போன்ற மொழி தொலைக்காட்சிகளும் ஔிபரப்பாகிறது.இப்புதிய தொலைக்காட்சிகள் அனைத்தும் லோசாட்1 என்னும் செயற்கைகோள் நிறுவனத்தின் ஒளிபரப்பாகும்.லோசாட்1 செயற்கைகோளின் அலைவாிசை சிக்னலை பெற குறைந்தபட்சம் 6 முதல் 12 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை 
பயன்படுத்தலாம்.ஆசியா நாடுகளுக்கான ஒளிபரப்பு சேவை என்பதால் அனைத்து நாடுகளுக்கும் சிக்னல் கிடைக்க பெறும்.விரைவில் மேலும் பல ஹெச்டி தொலைக்காட்சிகள் தொடங்கப்படும்.தற்சமயம் 8 ஹெச்டி தொலைக்காட்சிகள் ஒளிபரப்பபாகிறது.
அலைவாிசை விபரங்கள்;
Satellite               Laosat1@128.0E(C-Band)
Freq Rate            3505
Symbol Rate       30000
Polar                   Vertical
System                Mpeg4/Dvb s2
Encryption          FTA
Fec                      3/4