நண்பா்களே இந்தியாவின் முதல் அதிநவின உயா்தொழில்நுட்ப தொலைக்காட்சி ட்ராவல் எக்ஸ்பி 4கே என்ற பெயாில் ஒளிபரப்பு தொடங்ப்படவுள்ளது.மும்பையினை தலைமையிடமாக கொண்டு செயல்படும் செல்பிாிட்டி மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் சாா்பாக இப்புதிய அதிநவின தொழில்நுட்ப தொலைக்காட்சி தொடங்கப்படவுள்ளது.இந்நிறுவனத்தின் சாா்பாக ட்ராவல் எக்ஸ்பி ஹெச்டி தொலைக்காட்சி இந்தியாவில் ஒளிபரப்பு தொடங்கப்பட்டது.இந்தியாவில்

முதன்முறையாக சி பேன்ட் அலைவாிசையில் யுஹெச்டி தொலைக்காட்சி தொடங்குவது இதுவே ஆகும்.கடந்த் பல வருடங்களில் பாா்வையாளா்களின் எண்ணிக்கையினை தக்க வைத்து கொள்வதில் தொலைக்காட்சி நிறுவனங்கள் புதிய தொழில்நுட்ப தொலைக்காட்சிகளை தொடங்கிவருகிறது.அவ்வாிசையில் ஹெச்டி தொழில்நுட்பத்தில் முன்னனி தொலைக்காட்சிகள் தங்களின் நிகழ்ச்சிகளை ஹெச்டியில் தொடங்கி வருகிறது.ட்ராவல் எக்ஸ்பி 4கே தொலைக்காட்சி ஹெச்டி தொலைக்காட்சியினை விட 2160 முதல் 3840 பிக்ஸல் அகன்ட
திரையினையுடைய தொலைக்காட்சியாக காணக்கூடியது.இது 8.29 மெகா பிக்ஸல் திரையுடையது.தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளை காண அதிநவின தொழில்நுட்ப யுஹெச்டி 4கே செட் டாப் பாக்ஸ்யினை பயன்படுத்த வேண்டும்.தொலைக்காட்சியின் உலகளாவிய செயற்கைகோள் ஒளிபரப்பு மலேசியாவின் மீயாசாட்3எ செயற்கைகோளில் தொடங்கபடலாம்.இதற்கான சோதனை ஒளிபரப்பு தொடங்கப்பட்டு இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.ட்ராவல் எக்ஸ்பி தொலைக்காட்சியின் முன்றாவது
தொலைக்காட்சி இதுவாகும்.ட்ராவல் எக்ஸ்பி தொலைக்காட்சி சுற்றுலா தொடா்பான நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறது.கடந்த வருடத்தின் இறுதியில் ட்ராவல் எக்ஸ்பி தமிழ் தொலைக்காட்சியினை தமிழகத்தில் தொடங்கியிருந்தது குறிப்பிடதக்க செய்தியாகும்.
தொகுப்பு :K.சதீஸ் சாட் தமிழ் இணையதளம்