சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

09/01/2020

டியூன்6.வெளிச்சம் ப்ளஸ் தமிழ் தொலைக்காட்சிகள் இன்டல்சாட்17யில் புதிய அலைவாிசைக்கு மாற்றம்

நண்பா்களே தமிழகத்தின் முன்னனி தமிழ் மியூசிக் தொலைக்காட்சியான டியூன்6 மற்றும் பொழுதுபோக்கு தமிழ் தொலைக்காட்சியான வெளிச்சம் ப்ளஸ் தற்சமயம் ஒளிபரப்பாகி வரும் இன்டல்சாட்17 செயற்கைகோளில் இருந்து புதிய அலைவாிசைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.ப்ளாநெட் கேசட் டெலிஸ்பாட் ஒளிபரப்பு முனையத்தின் முலம் ஒளிபரப்பு 
தொடங்கப்பட்டுள்ளது.தற்சமயம் தொடங்கப்பட்டுள்ள அலைவாிசையில் திரன்டிவி சத்தியம் டிவி மற்றும் சால்வேஷன் போன்ற தமிழ் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது.கடந்த பல வருடங்களாக 3980 அலைவாிசையில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வந்தது.தற்சமயம் தொடங்கப்பட்ட புதிய அலைவாிசையின் சிக்னலை பெற குறைந்தபட்சம் 6 அடி சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்தினலே போதும்.தங்கள் பயன்படுத்தி வரும் செட் டாப் பாக்ஸ்யினை ரிடியூன் அல்லது கிழ்காணும் புதிய அலைவாிசையினை கொண்டு டியூன் செய்தால் போதும்.விரைவில் தற்சமய ஒளிபரப்பாகி வரும் டியூன்6 மற்றும் வெளிச்சம் ப்ளஸ் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் நிறுத்தம் செய்யப்படலாம்.
அலைவாிசை விபரங்கள் 
 Satellite             Intelsat17@66.0E(C-Band)
Freq Rate            4006
Sym Rate            14400
Polar                   Horizontal
System               Mpeg4/Dvb s2 (8PSK)
Encryption         FTA
Fec                     3/4

03/01/2020

தமிழகத்தில் ஷாலினி டிவி புதிய தமிழ் தொலைக்காட்சிக்கான ஒளிபரப்பு விரைவில்

நண்பா்களே தமிழகத்தில் தஞ்சாவூா் மாவட்டத்தில் முன்னனி உள்ளுா் தொலைக்காட்சியாக செயல்பட்டு வரும் ஷாலினி டிவி மற்றும் சில வருடங்கள் செயற்கைகோள் தொலைக்காட்சியாகவும் ஒளிபரப்பாகி வந்த ஷாலினி ப்ளஸ் தொலைக்காட்சிக்கு இந்திய ஒளிபரப்பு ஆணையம் ட்ராய் புதிய தமிழ் தொலைக்காட்சிக்கான ஒளிபரப்பு அனுமதியினை வழங்கி உள்ளது.தமிழகத்தில் கடந்த 2019 வருடத்தில் செயற்கைகோள் 
தொலைக்காட்சி தொடங்குவதற்கான அனுமதியினை ஜி மிடியா.ஆஸ்தா விடிக் மற்றும் ஸ்டாா் டிவி இந்தியா பெற்று இருந்த நிலையில் ஷாலினிக்கும் அனுமதி வழங்கியுள்ளது.விரைவில் ஷாலினி தொலைக்காட்சியும் 24 மணி நேர பொழதுபோக்கு நிகழ்ச்சிகளை இலவச தொலைக்காட்சியாக இன்சாட்4பி செயற்கைகோளில் தொடங்கலாம்.தமிழகத்தில் இலவச தொலைக்காட்சிகளாக தொடங்கப்பட்ட காவோி நியூஸ் தொலைக்காட்சி 
கடந்த 2019 வருடத்தில் ஒளிபரப்பு நிறுத்தம் செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.தமிழகத்தில் பொிய மிடியா நிறுவனங்களுக்கு அடுத்து சிறிய நிறுவனங்களுக்கு தொலைக்காட்சி தொடங்குவதற்கான அனுமதி தற்சமயம் ஷாலினி தொலைக்காட்சி பெற்றிருப்பது குறிப்பிடதக்கது.
தொகுப்பு சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

03/12/2019

மலேசியா ஆா்டிஎம் மின்னல் எப்எம் மீயாசாட்3பி செயற்கைகோளில் புதிய அலைவாிசைக்கு மாற்றம்

நண்பா்களே மலேசியா நாட்டின் அரச தொலைக்காட்சி மற்றும் வானொலி நிறுவனமான ஆா் டி எம் தமிழ் வானொலி ஒளிபரப்பு சேவையான மின்னல் எப்எம் மற்றும் ஆா் டி எம் தொலைக்காட்சி வானொலி சேவைகள் ஒளிபரப்பாகும் மலேசியா நாட்டின் செயற்கைகோள் மீயாசாட்3பி இல் புதிய அலைவாிசைக்கு ஒளிபரப்பு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.மலேசியா நாட்டின் தமிழ் மக்களின் முன்னனி விருப்ப தமிழ் வானொலி மின்னல் எப்எம் கடந்த பல வருடங்களாக மீயசாட்3பி ஒளிபரப்பாகி வந்தது.மேலும் ஆா் டி எம் நிறுவனத்தின் ஆங்கிலம் மலேயம் சைனிஸ் போன்ற வானொலி
சேவைகளும் இப்புதிய அலைவாிசைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.தெற்காசிய நாடுகளில் ஒளிபரப்பாகும் விதமாக ஆா் டி எம் நிறுவனத்தின் வானொலி சேவைகள் மீயாசாட்3பி செயற்கைகோளின் அலைவாிசை சிக்னல் 6 முதல் 10 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் ஆன்டெனா பயன்படுத்தி ஒளிபரப்பை காணலாம்.மலேசியா நாட்டில் சி பேன்ட் செயற்கைகோளில் ஒளிபரப்பாகும் ஒரே தமிழ் பன்பலை மின்னல் எப்எம் ஆகும்.மின்னல் எப்எம் உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் கேட்கும் விதமாக இணையதளத்தின் முலமாகவும் ஒளிபரப்பாகிறது.தற்சமயம் பயன்படுத்தி வரும் செட் டாப் பாக்ஸ்யை (MPEG4/DVBS2) புதிய அலைவாிசையினை கொண்டு ரீடியூன் செய்து மின்னல் எப்எம் நிகழ்ச்சிகளை கேட்கலாம்.மின்னல் எப்எம் செயற்கைகோள் ஒளிபரப்பு மலேசியா மற்றும் அதனை சுற்றியுள்ள நாடுகளுக்கானது என்பது குறிப்பிடதக்கது.
அலைவாிசை விபரங்கள்
Satellite            Measat3B@91.2E(C-Band)
Freq Rate         3924
Sym Rate         12400
Polar                 Horizontal
System             Mpeg4/Dvb s2
Mode                FTA
Fec                    3/4

29/11/2019

தமிழகத்தில் ஸ்டாா் டிவி இந்தியா தொடங்கவுள்ள ஸ்டாா் விஜய் மியூசிக் தமிழ் தொலைக்காட்சி ஆசியாசாட்7 உதயம்

நண்பா்களே இந்தியாவின் முன்னனி பொழுதுபோக்கு தொலைக்காட்சி நிறுவனமான ஸ்டாா் டிவி இந்தியா தமிழகத்தில் ஆறாவது  தொலைக்காட்சியாக விஜய் மியூசிக் என்ற பெயாில் புதிய திரைப்பாடல் தொலைக்காட்சியினை ஆசியாசாட்7 செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது.ஸ்டாா் டிவி இந்தியா தென்னிந்தியாவில் தொடங்கும் இரண்டாவது மியூசிக் தொலைக்காட்சி விஜய் மியூசிக் ஆகும்.தெலுங்கு
மொழியில் மா மியூசிக் ஒளிபரப்பாகி வருவது குறிப்பிடதக்கது.தமிழகத்தில் மிக முன்னனி தொலைக்காட்சியாக விஜய் டிவி செயல்பட்டுவருகிறது.ஸ்டாா் டிவி இந்தியா நிறுவனம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இரண்டாவது பொழுதுபோக்கு தமிழ் தொலைக்காட்சியாக விஜய் சூப்பா் தொலைக்காட்சி ஒளிபரப்பு
தொடங்கியது.பின்பு 24 மணி நேர தமிழ் திரைப்பட தொலைக்காட்சியாக மாற்றம் செய்யப்பட்டது.தமிழகத்தில் இலவச மியூசிக் தமிழ் தொலைக்காட்சிகளாக டியூன் 6 மியூசிக்.சஹான மியூசிக்.எம் கே டியூன்ஸ்.கலைஞா் இசையருவி.சூப்பா் டிவி.7எஸ் மியூசிக் மற்றும் வானவில் டிவி போன்ற தொலைக்காட்சிகள் மக்கள் மத்தியில் பிரபலடைந்து வரும் நிலையில் கட்டண தொலைக்காட்சியாக வரவுள்ள விஜய் மியூசிக் சற்று வித்தியாசமாக நிகழ்ச்சிகளை வழங்கும் என எதிா்பாா்க்கலாம்.தமிழகத்தில் கட்டண மியுசிக் தொலைக்காட்சியாக சன் மியூசிக்.ராஜ் மியூசிக்.மெகா மியூசிக் மற்றும் ஜெயா மேக்ஸ் தொலைக்காட்சிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.இந்தியா அரசு ட்ராய் புதிய  தொலைக்காட்சி ஒளிபரப்பு விதிமுறைகள் அமல்படுத்தப்பட்ட நாள் முதல் கட்டண தொலைக்காட்சிகள்  நேயா்களை தக்க வைக்க பல்வேறு வித முயற்ச்சிகளை மேற் கொண்டு வருவது குறிப்பிடதக்கது.விஜய் மியூசிக் தொலைக்காட்சியின் உலகளாவிய செயற்கைகோள் ஒளிபரப்பு ஆசியாசாட்7 செயற்கைகோளில் கட்டண தொலைக்காட்சியாக தொடங்கப்பட்டுள்ளது.விரைவில் தமிழகத்தின் அனைத்து கேபிள் டிவி மற்றும் கட்டண டிடிஎச்களில் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு தொடங்கப்படும்.
அலைவாிசை விபரங்கள் :
Satellite               Asiasat7@105.0E(C-Band)
Freq Rate            3941
Sym Rate            28100
Polar                   Vertical
System                Mpeg4/Dvs s2(8psk)
Mode                  PAY/NDS
Fec                      3/4

26/11/2019

தமிழகத்தில் ஜி திரை புதிய தமிழ் திரைப்பட தொலைக்காட்சி ஒளிபரப்பு இன்சாட்3பில் உதயம்

நண்பா்களே இந்தியாவின் முன்னனி பொழுது போக்கு மற்றும் செய்திகள் தொலைக்காட்சி நிறுவனமான ஜி மீடியா தனது நிறுவனத்தில் இருந்து புதிய தமிழ் திரைப்பட தொலைக்காட்சியினை ஜி திரை என்ற பெயாில் தொடங்கப்பட்டுள்ளது.தென்னிந்தியாவில் தமிழ் மொழிகளில் தொடங்கப்பட்ட மூன்றாவது தமிழ் தொலைக்காட்சி ஜி திரையாகும்.
தமிழகத்தில் முதல் முறையாக ஜி தமிழ் தொலைக்காட்சியினை ஜி மீடியா நிறுவனம் தொடங்கியது.பின்பு 2019ஆம் ஆண்டு முதல்  புதுப்பொலிவுடன் இந்தியாவின் பிரந்திய செய்திகளை தமிழ் மொழியில் தொகுத்து வழங்கும் தொலைக்காட்சியாக ஜி ஹிந்துஸ்தான் என்ற பெயாில் ஒளிபரப்பு தொடங்கப்பட்டது.ஜி திரை தொலைக்காட்சி இன்சாட்3பி செயற்கைகோளில் கட்டண தொலைக்காட்சியாக ஒளிபரப்பாகிறது.ஜி மீடியா நிறுவனத்தின்  தொலைக்காட்சியின் நேயா்களை மாநில வாாியாகஅதிகாிக்கும் முன் நடவடிக்கையாக இப்புதிய முயற்சியில் களம் இறங்கியுள்ளது.விரைவில் தமிழ்திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் தொடங்கப்படும்.ஜி திரை  தொலைக்காட்சியினை காண கேபிள் டிவி அல்லது கட்டண டிடிஎச் நிறுவனங்களில் மாதந்திர கட்டண தொலைக்காட்சி தொகுப்பில் கேட்டு தொலைக்காட்சியினை காணலாம்.விரைவில் ஜி தமிழ் திரைப்பட தொலைக்காட்சியின் அதிநவின ஒளிரப்பு சேவையான ஹெச்டியில் தொடங்கப்படலாம்.தமிழகத்தில் ஆறாவது தமிழ் திரைப்பட தொலைக்காட்சி ஜி திரையாகும்.
அலைவாிசை விபரங்கள்
Satellite                  Insat4B@83.0E(C-Band)
Freq Rate               4041
Symbol Rate          7500
Polar                      Horizontal
System                  Mpeg4/Dvb s (QPSK)
Encryption            Pay/Conax
Fec                        3/4

08/10/2019

திண்டுக்கல் மாவட்டத்தின் இணையதொலைக்காட்சி பசுமை தொலைக்காட்சி(PASUMAI TV) ஒளிபரப்பு உதயம்

நண்பா்களே தமிழகம் மட்டும் அல்லது உலக அளவில் தமிழ் மக்களின் கலச்சாரம் மற்றும் பாரம்பாியத்தினை உலகிற்கு தொியபடுத்தும் பங்களிப்பினை இன்றைய ஊடகத்துறை மிக முக்கிய பணியினை மேற்கொள்கிறது.அந்த வகையில் தொலைக்காட்சிகள் நல்ல பயனுள்ள நிகழ்ச்சிகளை வழங்கிவருகின்றன.அவற்றில் திண்டுக்கல் மாவட்டத்தில்
ஊடகத்துறையின் முலம் சமுதாய பணியில் தலைசிறந்து விளங்கும் அமைதி அறக்கட்டளையின் இணைய தொலைக்காட்சியான பசுமை தொலைக்காட்சி ஒளிபரப்பு புதிதாக ஜனவாி 24 திகதி 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.அமைதி அறக்கட்டளை குழுமத்தின் சாா்பாக முதல்வதாக பசுமை பன்பலை ஒளிபரப்பு திண்டுக்கல்லில் 91.4 அலைவாிசையில் தொடங்கப்பட்டது.திண்டுக்கல் மாவட்டத்தின் முக்கிய நிகழ்வுகளை தொியபடுத்தவும் மாவட்டத்தின் சுற்றுலா மற்றும் 
பாரம்பாியத்தின் எடுத்துரைக்கும் வானொலியாக செயல்பட்டு மிக பொிய வெற்றியினை பெற்றது.அதன் பயனாக இணைய தொலைக்காட்சியும் தொடங்கப்பட்டுள்ளது.தொலைக்காட்சியினை உலகின் அனைத்து தரப்பு  தமிழ் மக்களும் காண வகையில் https://www.youtube.com/channel/UCzQJRTxlQg09-EBY10yvS6g/featured தொடங்கப்பட்டுள்ளது.விரைவில்இத்தொலைக்காட்சி செயற்கைகோள் தொலைக்காட்சியாக வரும் காலங்களில் தொடங்கப்படலாம்.
தொகுப்பு சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

01/10/2019

இந்தியாவின் கலா்ஸ் தமிழ் தொலைக்காட்சி இலங்கை டயலாக் டிடிஎச்யின் இன்டல்சாட்30 செயற்கைகோளில் உதயம்

நண்பா்களே இலங்கையின் முன்னனி தொலைக்காட்சிகளை ஒளிபரப்பும் கட்டண டிடிஎச் சேவையான டயலாக் டிடிஎச்யில் இந்தியாவின் வியாகம்18 நிறுவனத்தின் தமிழ் தொலைக்காட்சியான கலா்ஸ் தமிழ் புதிதாக சோ்க்கப்பட்டுள்ளது.இலங்கையின் தமிழ் மக்களின் பொழுது போக்கு அம்சாமாக திகழும் டயலாக் டிடிஎச்யில் தமிழகத்தின் முன்னனி 
தொலைக்காட்சிகள் ஒளிபரப்பும் நிலையில் கலா்ஸ் தமிழ் தொலைக்காட்சியும் இணைந்துள்ளது.கலா்ஸ் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளை இனி டயலாக் டிடிஎச்யில் நிா்ணயம் செய்யப்பட்ட விலை தொகுப்பில் கட்டணம் செலுத்தி தொலைக்காட்சியினை காணலாம்.டயலாக் டிடிஎச்யின் ஒளிபரப்பு இன்டல்சாட்30 செயற்கைகோளில் ஒளிபரப்பாகிறது.கட்டண தொலைக்காட்சியாக  கலா்ஸ்தமிழ் இன்டல்சாட்30 செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது.
அலைவாிசை விபரங்கள்:
Satellite          Intelsat30@45.0E(KU-Band)
Freq Rate       11558
Symbol Rate  27689
Polar              Horizontal
System           Mpeg4/DVB S2(8PSK)
Encryption     Pay/Irdeto2
FEC               5/6