நண்பா்களே தமிழகத்தில் தஞ்சாவூா் மாவட்டத்தில் முன்னனி உள்ளுா் தொலைக்காட்சியாக செயல்பட்டு வரும் ஷாலினி டிவி மற்றும் சில வருடங்கள் செயற்கைகோள் தொலைக்காட்சியாகவும் ஒளிபரப்பாகி வந்த ஷாலினி ப்ளஸ் தொலைக்காட்சிக்கு இந்திய ஒளிபரப்பு ஆணையம் ட்ராய் புதிய தமிழ் தொலைக்காட்சிக்கான ஒளிபரப்பு அனுமதியினை வழங்கி உள்ளது.தமிழகத்தில் கடந்த 2019 வருடத்தில் செயற்கைகோள்

தொலைக்காட்சி தொடங்குவதற்கான அனுமதியினை ஜி மிடியா.ஆஸ்தா விடிக் மற்றும் ஸ்டாா் டிவி இந்தியா பெற்று இருந்த நிலையில் ஷாலினிக்கும் அனுமதி வழங்கியுள்ளது.விரைவில் ஷாலினி தொலைக்காட்சியும் 24 மணி நேர பொழதுபோக்கு நிகழ்ச்சிகளை இலவச தொலைக்காட்சியாக இன்சாட்4பி செயற்கைகோளில் தொடங்கலாம்.தமிழகத்தில் இலவச தொலைக்காட்சிகளாக தொடங்கப்பட்ட காவோி நியூஸ் தொலைக்காட்சி
கடந்த 2019 வருடத்தில் ஒளிபரப்பு நிறுத்தம் செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.தமிழகத்தில் பொிய மிடியா நிறுவனங்களுக்கு அடுத்து சிறிய நிறுவனங்களுக்கு தொலைக்காட்சி தொடங்குவதற்கான அனுமதி தற்சமயம் ஷாலினி தொலைக்காட்சி பெற்றிருப்பது குறிப்பிடதக்கது.
தொகுப்பு சதிஸ் சாட் தமிழ் இணையதளம்
No comments:
Post a Comment