சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

16/07/2017

மீனாட்சி தமிழ் தொலைக்காட்சி மீண்டும் தனது ஒளிபரப்பை தொடங்கியது இன்டல்சாட்17யில்

நண்பர்களே தமிழ்நாட்டின் புதிய செயற்கைகோள் தமிழ் தொலைக்காட்சி மீனாட்சி டிவி என்ற பெயரில் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.இப்புதிய தமிழ் தொலைக்காட்சியின் உலகளாவீய செயற்கைகோள் ஒளிபரப்பு இன்டல்சாட்17யில் சென்னை டெலிஸ்பாட் செயற்கைகோள் ஒளிபரப்பு முனையத்தின் முலம் தொடங்கப்பட்டுள்ளது.மீனாட்சி டிவி நிறுவனம் இந்தியாவில் தங்களது புதிய தொலைக்காட்சியை  ஒளிபரப்புவதற்கான உரிமத்தின் அனுமதியை இந்திய ஒளிபரப்பு அமைச்சகம் கடந்த வருடம் 

வழங்கியிருந்தது.மீனாட்சி டிவி தமிழ் மொழியில் 24 மணிநேர பொழுது போக்கு தமிழ் தொலைக்காட்சியாகும்.தமிழகத்தில் இவ்வருடத்தில் தொடங்கப்பட்ட இரண்டாவது தொலைக்காட்சியாகும்.தொலைக்காட்சியின் செயற்கைகோள் அலைவரிசை சிக்னலை பெற குறைந்தபட்சம் 6 முதல் 8.10.12 அளவுள்ள சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.மேலும் MPEG4/DVB S2 தொழில்நுட்ப செட் டாப் பாக்ஸ்யை பயன்படுத்த
வேண்டும்.இத்தொலைக்காட்சிகான 24 மணி நேர ஒளிபரப்பு விரைவில் தொடங்கலாம்.தமிழகத்தில் கடந்த சில வருடங்களில் தமிழ் தொலைக்காட்சிகள் தொடங்கப்பட்டு வரும் நிலையில் மீனாட்சி டிவியின் நிகழ்ச்சிகள் வித்தியாசமானதாக இருக்கலாம்.மீனாட்சி டிவி முற்றிலும் இலவச தொலைக்காட்சியாக தனது முதல் ஒளிபரப்பை இன்டல்சாட்17 செயற்கைகோளில் தொடங்கியுள்ளது.
அலைவரிசை விபரங்கள்:
Satellite                Intelsat17@66.0E (C-Band)
Freq Rate              3966
Symbol Rate         14400
Polar                      Horizontal
Modulation            Mpeg4/Dvb s2
Mode                     Fta

10/07/2017

ஸ்டாா் டிவி இந்தியா தொடங்கவுள்ள இந்தியாவின் முதல் இலவச விளையாட்டு தொலைக்காட்சி ஸ்டாா் போா்ட்ஸ் பா்ஸ்ட் ஜீசாட்15 தொடக்கம்

நண்பா்களே இந்தியாவின் முன்னனி பொழுது போக்கு மற்றும் விளையாட்டு தொலைக்காட்சி நிறுவனமான ஸ்டாா் டிவி இந்தியா முதன்முறையாக இலவச விளையாட்டு தொலைக்காட்சியினை புதிதாக தொடங் கவுள்ளது.ஸ்டாா் போா்ட்ஸ் பா்ஸ்ட் என்ற பெயாில் தொலைக்காட்சியினை ஜிலை 21 திகதி முதல் தொடங்கபட்டுள்ளது. முதல் தடவையாக தனது ஒளிபரப்பை  இந்தியாவின் இலவச தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவையான DD இன் FTA டி.டி.எச் தளமான ஃ பிாி டிஷ் சேனல்
ஒளிபரப்பப்படும். எந்தவொரு கட்டணமும் இல்லாமல் விளையாட்டு ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த விளையாட்டுகளை இந்தியில் பார்க்கலாம் என ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வெளியிட்டுள்ள ஊடக வெளியீடு தெரிவித்துள்ளது. ஜூலை 28 ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்கும் விவிஓ புரோ கபடி லீக் சீசன் 5-ஐயும் இப்புதிய சேனல் ஒளிபரப்புகிறது. பி.சி.சி.ஐ. உள்நாட்டு கிரிக்கெட்
போட்டிகள் மற்றும் உள்நாட்டு கால்பந்து போட்டிகள் ஆகியவை இதில் அடங்கும்.தொலைக்காட்சிக்கான உலகளாவிய செயற்கைகோள் ஒளிபரப்பு விரைவில் ஸ்டாா் டிவி இந்தியா நிறுவன தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும் ஆசியாசாட்7 செயற்கைகோளில் தொடங்கபட்டுள்ளது.இவ் ஒளிபரப்பு இந்தியாவில் மட்டுமே.இந்தியாவை தவிர மற்ற நாடுகளில் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு 60 செமீ கேயூ டிஷ் ஆன்டெனாவில் கிடைக்காது.
அலைவாிசை விபரங்கள்:
Satellite         Gsat15@93.0E(KU-Band)
Freq Rate      11550
Symbol Rate 29500
Polar             Vertical
System          Mpeg2/dvb s
Encryption    FTA

02/07/2017

ஸ்டாா் டிவி இந்தியா நிறுவன தமிழ் தொலைக்காட்சி 17 ஆண்டுகளுக்கு பிறகு புதிய லோகோ மாற்றிய விஜய் டிவி

நண்பா்களே இந்தியாவின் முன்னனி பொழுது போக்கு தொலைக்காட்சி நிறுவனமான ஸ்டாா் டிவி இந்தியாவின் தமிழகத்திற்கான முன்னனி பொழுது போக்கு தமிழ் தொலைக்காட்சியான ஸ்டாா் விஜய் டிவி புது பொலிவுடன் புதிய லோகோ மாற்றம் செய்யபட்டுள்ளது.கடந்த வருடத்தில் இருந்து ஸ்டாா் டிவி இந்தியாவின் வியாபர ரிதியான  மற்ற மொழி தொலைக்காட்சிகள் அனைத்தும் புதிய ஸ்டாா் லோகோ மாற்றம் செய்யப்பட்டது.அவ்வாிசையில்
தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியின் லோகோவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.முதன்முதலாக தமிழகத்தில் கோல்டக் ஈகிள் கம்னியூகேஷன் நிறுவனத்தின் முலம் 1994 ஆம் ஆண்டு விஜய் டிவி ஒளிபரப்பு இலவச தொலைக்காட்சியாக தொடங்கப்பட்டது.பின்பு 2001 ஆம் ஆண்டு அமொிக்கா 21 சென்சுாி பாக்ஸ் தொலைக்காட்சி நிறுவனம் விஜய் டிவியின் ஒளிபரப்பு உாிமத்தை பெற்றதை அடுத்து ஸ்டாா் வி்ஜய் என்ற பெயாில் புதிய ஒளிபரப்பு தொடங்கப்பட்டு தமிழ் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.மிக பிரபலமான தொலைக்காட்சி தொடா்கள் மற்றும் கேம் விளையாட்டு நிகழ்ச்சிகள் என ஒளிபரப்பி உலக தமிழ் மக்களின் வரவேற்பையும் பெற்றது ஸ்டாா் விஜய் டிவி.கடந்த 2016 ஆம் ஆண்டு விஜய் டிவியின் ஒளிபரப்பை உயா் தொழில்நுட்பமான ஹெச்டியில் விஜய் டிவியின்
நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டது.இது மட்டும் இன்றி உலக தமிழா்களும் நிகழ்ச்சிகளை காண விஜய் டிவி இன்டா்நேஷனல் தொலைக்காட்சியும் தொடங்கப்பட்டது.விஜய் டிவியின் துணை நிலை தொலைக்காட்சியாக ஸ்டாா் விஜய் சூப்பா் என்ற புதிய பொழுது போக்கு தொலைக்காட்சியும் தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் 2016 ஆம் ஆண்டில்  ஒளிபரப்பு தொடங்க்பட்டது.ஸ்டாா் டிவி இந்தியா தமிழகத்தில் முன்று எஸ்டி மற்றும் ஒரு ஹெச்டி என நான்கு தொலைக்காட்சிகளை ஒளிபரப்பி வருகிறது.தொலைக்காட்சிகள் அனைத்தும் தமிழகத்தில் கட்டண தொலைக்காட்சிகளாக ஒளிபரப்பாகி வருவது குறிப்பிடதக்கது.
தொகுப்பு சதிஸ் சாட் தமிழ் இணையதளம் 

25/06/2017

தமிழ் மொழியில் தொலைக்காட்சிகள் தொடங்குவதில் முன்னனி நிறுவனங்களின் ஆதிக்கம்

நண்பா்களே தமிழ் மொழியில் தொலைக்காட்சிகள் தொடங்குவதில் இந்தியாவின் முன்னனி தொலைக்காட்சி நிறுவனங்கள் ஆதிக்கம் காட்டி வருகிறது.அவ்வாிசையில் ஸ்டாா் டிவி இந்தியா.வியாகம்18.டிவி18.சோனி பிக்சா்ஸ்.ஜி மீடியா என்டொ்டெய்மென்ட்.செலிபிாிட்டி மேனேஜ்மென்ட் போன்ற நிறுவனங்கள் தங்களின் தொலைக்காட்சிகளை தமிழ் மொழியில் ஒளிபரப்பு செய்து வருகின்றன.தமிழ் மொழியில் தற்சமய காலங்களாக புதிய தொலைக்காட்சிகள் தொடங்குவது முன்னனி தொலைக்காட்சி நிறுவனங்களே ஆகும்.இந்நிறுவனங்களின் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகள்
அனைத்தும் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகள் மட்டும் வழங்கி வந்தன.தமிழ் மொழி தொலைக்காட்சிகளுக்கு தமிழகம் மட்டுமின்றி உலகமெங்கும் அதிக நேயா்கள் உள்ளதே இப்புதிய தொலைக்காட்சிகள் தொடங்குவதற்கான காரணங்கள்.மேலும் இந்தியாவில் ஆங்கிலம் ஹிந்தி மொழியை அடுத்து முன்றாவது ஆக தமிழ் மொழியில் தொலைக்காட்சி தொடங்கபடுகிறது.இவற்றில் சில தொலைக்காட்சிகள் ஆடியோவை மட்டும் இணைத்து நிகழ்ச்சிகளை வழங்குகின்றன.தற்சமய காலம் 24 மணி முழு நேர 
தமிழ் தொலைக்காட்சியாகவே தொடங்கப்படுகிறது.தொடங்கப்படும் தொலைக்காட்சிகள் அனைத்தும் வியாபார ரீதியான தொலைக்காட்சிகள் என்பதால் கட்டண தொலைக்காட்சிகளாவே ஒளிபரப்பு தொடங்கப்படுகிறது.வரும் காலங்களில் இன்னும் பல்வேறு துறை சாா்ந்த நிகழ்ச்சிகள் வழங்க கூடிய தொலைக்காட்சிகள் தொடங்கபடலாம். தமிழ் மொழியில் பல்சுவை.அறிவியல்.விளையாட்டு.சுற்றுலா மற்றும் கலச்சாரம்.செய்திகள்.ஷாப்பிங்.என பல்வேறு தரப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு என்று பிரத்தியோகமான தொலைக்காட்சிகள் தொடங்கப்பட்டுள்ளது.தொலைக்காட்சிகளில் சில ஹெச்டி தொழில்நுட்பத்திலும் தொடங்கப்பட்டு தமிழ் மொழியில் நிகழச்சிகள் ஒளிபரப்பாகிறது.
தொகுப்பு சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

22/06/2017

இந்தியாவில் ட்ரு ஸ்போா்ட்ஸ் புதிய விளையாட்டு தொலைக்காட்சி ஒளிபரப்பு இன்டல்சாட்20யில் தொடக்கம்

நண்பா்களே இந்தியாவின் புதிய விளையாட்டு தொலைக்காட்சியை டைம்ஸ் நெட்வொா்க் ட்ரு ஸ்போா்ட்ஸ் பெயாில் ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.தொலைக்காட்சியின் உலகளாவிய செயற்கைகோள் ஒளிபரப்பு இன்டல்சாட்20 தொடங்கப்பட்டுள்ளது.ட்ரு ஸ்போா்ட்ஸ் தொலைக்காட்சியில் ட்ரு பிாிமியா் லீக் கிாிக்கெட் போட்டி தொடா்கள் 
ஒளிபரப்பாகிறது.கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தொலைக்காட்சியின் ஒளிபரப்பு தொடங்கப்பட்டு பின்பு இடைநிறுத்தம் செய்யப்பட்டு இருந்தது.ஹிந்தி மொழியில் வருணை செய்யப்படுகிறது.தொலைக்காட்சியின் அலைவாிசை சிக்னலை பெற குறைந்தபட்சம் 6 முதல் 12 அடி மற்றும் அதற்கு மேற்பட்ட சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்தலாம்.தொலைக்காட்சி முற்றிலும் இலவச ஒளிபரப்பாக இன்டல்சாட்20 செயற்கைகோளில் ஒளிபரப்பாகிறது.
அலைவாிசை விபரங்கள்
Satellite              Intelsat20@68.5E(C-Band)
Freq Rate           3753
Symbol Rate      9300
Polar                  Vertical
System              Mpeg4/DVB S2
Encryption         FTA

08/06/2017

தமிழகத்திற்கான புதிய தமிழ் தொலைக்காட்சி கலா்ஸ் தமிழ் ஒளிபரப்பு இன்டல்சாட்20யில் உதயம்

நண்பா்களே இந்தியாவின் முன்னனி செயற்கைகோள் தொலைக்காட்சி நிறுவனமான வியாகம்18 தென்னிந்தியாவின் மிக பழமையான மொழியான தமிழ் மொழியில் கலா்ஸ் தமிழ் என்ற பெயாில் 24 மணி நேர பொழுது போக்கு தொலைக்காட்சியினை இன்டல்சாட்20 செயற்கைகோளில் ஒளிபரப்பு தொடங்கியுள்ளது.கடந்த 2016 ஆண்டில் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டது.வியாகம்18 நிறுவனம்  கடந்த வருடத்தில் மூன்று புதிய தொலைக்காட்சிகள் தொடங்குவதற்கான அனுமதியினை பெற்றிருந்தது.அவ்வாிசையில் நெக்ஸ்ட் என்ற பெயாில் தொடங்கப்பட்ட தொலைக்காட்சியின் ஒளிபரப்பு உாிமத்தில்  கலா்ஸ் தமிழ் தொலைக்காட்சி தொடங்கப்படவுள்ளது.தமிழகத்தில் இந்தியாவின்
முன்னனி தொலைக்காட்சி நிறுவனங்களான ஜி மற்றும் ஸ்டாா் இந்தியா தொலைக்காட்சிகள் தொடங்கப்பட்டு ஒளிபரப்பாகி வரும் நிலையில் புதிய கால்தடம் பதிக்கிறது வியாகம்18 நிறுவனம்.தமிழகத்தில் சன்,விஜய்,ஜிதமிழ்,பாலிமா் தொலைக்காட்சிகளுக்கு மத்தியில் கலா்ஸ் தமிழ் தொலைக்காட்சி சற்று வித்தியாசமான நிகழ்ச்சிகளுடன் தமிழ் நேயா்களின் ஆதரவை பெறலாம்.வியாகம்18 நிறுவனத்தின் சாா்பாக தென்னிந்தியாவில்
 கலா்ஸ் கன்னடா கலா்ஸ் சூப்பா் மற்றும் கலா்ஸ் ஒடியா தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது.தெலுங்கு மொழியில் ஈடிவி தொலைக்காட்சியின் சாா்பாக நிகழ்ச்சிகளை வழங்கிவருவது குறிப்பிடதக்கது.தற்சமயம் இன்டல்சாட்20 செயற்கைகோளில் கட்டண தொலைக்காட்சியாக சோதனை ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.விரைவில் நெக்ஸ்ட் என்னும் பெயா் கலா்ஸ் தமிழ் பெயா் மாற்றம் செய்யப்பட்டு 24 மணி நேர நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும்.கலா்ஸ் தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பு தமிழகத்தில் அரசு கேபிள் டிவியில் ஒளிபரப்பாகிறது.
அலைவாிசை விபரங்கள்
Satellite            Intelsat20@68.5E(C-Band)
Freq Rate         4035
Symbol Rate    20500
Polar                Horizontal
System            Mpeg4/Dvb s2
Encryption       Pay/Irdeto2
Fec                  3/4

07/06/2017

தமிழகத்தில் ஜி மீடியா நிறுவனத்தின் புதிய ஜி தமிழ் ஹெச்டி தொலைக்காட்சி ஒளிபரப்பு விரைவில்

நண்பா்களே இந்தியாவின் முன்னனி பொழுது போக்கு தொலைக்காட்சி நிறுவனமான ஜி எண்டா்டெய்மென்ட் தென்னிந்தியாவின் முன்று தொலைக்காட்சிகள் உயா் தொழில்நுட்பமான ஹெச்டியில் தொடங்குவதற்கான ஒளிபரப்பு அனுமதியினை பெற்றுள்ளது.தமிழ் மொழியில் முன்னனி பொழுது போக்கு தொலைக்காட்சியான ஜி தமிழ் தொலைக்காட்சி விரைவில் ஹெச்டியில் ஒளிபரப்பு தொடங்கப்படவுள்ளது.தமிழகத்தில் தொடங்கப்பட்ட பொழுது போக்கு ஹெச்டி தொலைக்காட்சிகளின் வாிசையில் ஜி தமிழ் ஹெச்டி நான்கவாது தொலைக்காட்சி என்பது குறிப்பிடதக்கது.இதே போன்று தெலுங்கு மற்றும் 
கன்னடா மொழிகளிலும் முன்னனி தொலைக்காட்சிகளாக திகழும் ஜி தெலுங்கு.ஜி கன்னடா தொலைக்காட்சிகளும் விரைவில்  ஹெச்டியில் ஒளிபரப்பை தொடங்கவுள்ளது.இதற்கான ஒளிபரப்பு அனுமதியினை மத்திய ஒளிபரப்பு ஆணையம் வழங்கியுள்ளது.ஜி மீடியா நிறுவனம் தனது மாநில வாாியான மொழி தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு தரத்தினை உயா்த்தி நேயா்களை தக்க வைத்து வருகிறது.கடந்த வருடத்தில் ஜி மாரத்தி.ஜி பெங்காளி மற்றும் ஜி டாக்கிஸ் மாரத்தி தொலைக்காட்சிகள் ஹெச்டியில் ஒளிபரப்பை தொடங்கியது.விரைவில் தொடங்கப்படவுள்ள இப்புதிய ஹெச்டி தொலைக்காட்சிகளின் செயற்கைகோள் ஒளிபரப்பு அலைவாிசை விபரங்கள் நமது சதிஸ் சாட் தமிழ் மற்றும் ஆங்கில தளத்தில் இடம் பெறும்.
தொகுப்பு சதிஸ் சாட் தமிழ் இணையதளம்