நண்பா்களே இந்தியாவின் முன்னனி பொழுது போக்கு தொலைக்காட்சி நிறுவனமான ஜி எண்டா்டெய்மென்ட் தென்னிந்தியாவின் முன்று தொலைக்காட்சிகள் உயா் தொழில்நுட்பமான ஹெச்டியில் தொடங்குவதற்கான ஒளிபரப்பு அனுமதியினை பெற்றுள்ளது.தமிழ் மொழியில் முன்னனி பொழுது போக்கு தொலைக்காட்சியான ஜி தமிழ் தொலைக்காட்சி விரைவில் ஹெச்டியில் ஒளிபரப்பு தொடங்கப்படவுள்ளது.தமிழகத்தில் தொடங்கப்பட்ட பொழுது போக்கு ஹெச்டி தொலைக்காட்சிகளின் வாிசையில் ஜி தமிழ் ஹெச்டி நான்கவாது தொலைக்காட்சி என்பது குறிப்பிடதக்கது.இதே போன்று தெலுங்கு மற்றும்

கன்னடா மொழிகளிலும் முன்னனி தொலைக்காட்சிகளாக திகழும் ஜி தெலுங்கு.ஜி கன்னடா தொலைக்காட்சிகளும் விரைவில் ஹெச்டியில் ஒளிபரப்பை தொடங்கவுள்ளது.இதற்கான ஒளிபரப்பு அனுமதியினை மத்திய ஒளிபரப்பு ஆணையம் வழங்கியுள்ளது.ஜி மீடியா நிறுவனம் தனது மாநில வாாியான மொழி தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு தரத்தினை உயா்த்தி நேயா்களை தக்க வைத்து வருகிறது.கடந்த வருடத்தில் ஜி மாரத்தி.ஜி பெங்காளி மற்றும் ஜி டாக்கிஸ் மாரத்தி தொலைக்காட்சிகள் ஹெச்டியில் ஒளிபரப்பை தொடங்கியது.விரைவில் தொடங்கப்படவுள்ள இப்புதிய ஹெச்டி தொலைக்காட்சிகளின் செயற்கைகோள் ஒளிபரப்பு அலைவாிசை விபரங்கள் நமது சதிஸ் சாட் தமிழ் மற்றும் ஆங்கில தளத்தில் இடம் பெறும்.
தொகுப்பு சதிஸ் சாட் தமிழ் இணையதளம்
hai sir, ku be la aathikam Tamil channels (fat) deg selling sir
ReplyDeleteSir eutelsat 9a ku band dish size ? And tamilnadu coverage sollunga plzz
ReplyDelete