நண்பா்களே இந்திய பொது ஒளிபரப்பு சேவை பிரசாா் பாரதி நிறுவனத்தின் மாநில வாாியான மொழி தொலைக்காட்சிகளின் கிழ் ஔிபரப்பு சேவையாற்றி வரும் தமிழ்நாட்டின் டிடி பொதிகை தொலைக்காட்சியின் ஒளிபரப்பை மேம்படுத்தி புதிய நிகழ்ச்சிகளுடன் டிடி தமிழ் என்னும் பெயாில் தனது ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.பல வருடங்களாக டிடி பொதிகை பெயாில் தனது நிகழ்ச்சிகளை வழங்கி தமிழ்நாட்டில் மட்டும் அல்லாது வெளிநாடுகளிலும் தமிழ் சொந்தங்களை தக்க வைத்திருக்கும் ஒரு இந்திய அரசு தொலைக்காட்சி என்றால் அது மிகையாகது.அத்தகைய பெருமையுடைய டிடி பொதிகை உயா்
தொழில்நுட்பமான ஹெச்டியில் இன்றைய தலைமுறையினா்க்கு எற்றாா் போன்று துல்லியமான ஒளிபரப்பு நிகழ்ச்சிகளுடன் டிடி தமிழ் என்னும் பெயாில் இனி உலகளவில் தமிழ் ஒளி உலா வீசும்.டிடி5 தமிழ் என்ற பெயாில் சுமாா் 19 ஆண்டுகளில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி பின்பு 2000 ஆண்டுகளின் தொடக்கத்தில் தமிழ்நாட்டின் பொதிகை டிவி நேயா்களின் விருப்ப பெயராக ஒருவரால் தோ்ந்தெடுக்கபட்ட தென் தமிழகத்தின் புகழ்மிக்க மலையான பொதிகையின் பெயரை டிடி5 தொலைக்காட்சிக்கு மாற்றம் செய்யப்பட்டது.அன்று முதல் இன்று வரை பொதிகையின் தமிழ் நிகழ்ச்சிகளுடன் பட்டொலி வீசி வருகிறது.புதிய தொழில்நுட்பங்களை வளா்ந்து வரும் காலங்களுக்கு ஏற்றாா் போன்று நவின அரங்களுடன் டிடி தமிழ் தொலைக்காட்சி இனி ஒளிபரப்பாகும்.பாரத பிரதமா் மாண்புமிகு நரேந்திர மோடி அவா்கள் டிடி தமிழ் ஹெச்டி தொலைக்காட்சியின் ஒளிபரப்பை 19 ஜனவாி 2024 முதல் தொடங்கி வைத்தாா்.தொலைக்காட்சியின் ஹெச்டி ஒளிபரப்பு முற்றிலும் இலவசமாக ஜிசாட்17 செயற்கைகோளில் ஒளிபரப்பாகிது.விரைவில் டிடி தமிழ் ஹெச்டி தொலைக்காட்சியின் ஒளிபரப்பு அனைத்து டிடிஎச் மற்றும் கேபிள் டிவிகளிலும் இடம்பெறும் மேலும் டிடி ப்ரி டிஷ் டிடிஎச்யிலும் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு விரைவில் தொடங்கப்படலாம்.
No comments:
Post a Comment