நண்பா்களே தமிழகத்தில் புதிதாக கல்வி தொலைக்காட்சி தொடங்கப்படவுள்ளது.இதற்கான தொழில்நுட்ப பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மேலும் பள்ளிக்கல்வி துறை சார்பில் நீட் தேர்வு தொடா்பான பயிற்சி அளிக்கவும்,மாணவர்கள் தங்களது சந்தேகங்களை நேரலை மூலம் நிபுணர்களிடம் ஆலோசனை பெறும் வகையில் நிகழ்ச்சிகள் தயாாிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.கல்வித்துறையில் அனுபவம் உள்ள சுமார் 50 ஆசிரியர்களை கொண்டு கல்வி நிகழ்ச்சிகளை தயாரித்து வருகிறார்கள். கல்வி தொலைக்காட்சி சேனலில் எந்தவொரு விளம்பரமும் இல்லாமல் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்படும்.இதில் 15 விதமான கல்வி தொடர்பான நிகழ்ச்சிகள் 8 மணி நேரம் ஒளிபரப்படும்.இந்த நிகழ்ச்சிகள் ஒரே நாளில் இரண்டு முறைக்கு மேல் மறு ஒளிபரப்பு செய்யப்படும்.இதன் மூலம் நிறைய மாணவர்கள் பள்ளி முடிந்த பிறகு கல்வி நிகழ்ச்சிகளை பார்க்க முடியும்.தமிழகத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கல்வி

தொலைக்காட்சி தொடங்குவதற்கான அனுமதியினை புதிய தலைமுறை தொலைக்காட்சி நிறுவனம் பெற்றிருந்தது.கல்வி என்னும் பெயாில் தொலைக்காட்சி தொடங்கப்பட்டு நிகழ்ச்சிகள் ஏதும் ஒளிபரப்பு செய்யப்படமால் இடைநிறுத்தம் செய்யப்பட்டது.தற்சமயம் தமிழ அரசு இப்புதிய முயற்ச்சியில் களம் இறங்கியுள்ளது.கல்வி டிவியின் தொடக்க சோதனை ஒளிபரப்புதமிழ்நாடு அரசு கேபிள் டி.வி.யில் சேனல் 200-வது நம்பரில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.மேலும் மற்ற கேபிள் டிவி நிறுவனங்களிலும் தொலைக்காட்சியின் சேவை விரைவில் தொடங்கபடவுள்ளது.கல்வி டிவி செயற்கைகோள் தொலைக்காட்சியாக தொடங்கப்பட்டால் தமிழகத்திின் கேபிள்டிவி சேவை இல்லாத கிராமப் பகுதிகளில் தொலைக்காட்சியின் சேவை எளிதாக கிடைக்கப் பெறும்.
தொகுப்பு சதீஸ்சாட் தமிழ் ஆங்கில இணையதளம்