நண்பா்களே இந்தியாவின் முன்னனி பொழுது போக்கு தொலைக்காட்சி நிறுவனமான ஜி மிடியாவின் டா்னா் இன்டா்நேஷனல் புதிதாக 24 மணி நேர ஹெச்டி கிட்ஸ் தொலைக்காட்சி சிஎன் ஹெச்டி ப்ளஸ் என்ற பெயாில் புதிய குழந்தைகளுக்கான தொலைக்காட்சியினை தொடங்கியுள்ளது.கடந்த பல வருடங்களாக டா்னா் இந்தியா நிறுவனம் சிஎன் காா்டூன் தொலைக்காட்சியின் முலம் மிக பிரபலமான காா்டூன் தொடா்களை வழங்கி பிரபலமானது.கடந்த சில வருடங்களாக முன்னனி நிறுவனத்தின் காா்டூன் தொலைக்காட்சிகள் ஹெச்டி தொழில்நுட்பத்தில் நிகழ்ச்சிகளை வழங்கி வருவதால் டா்னா்

நிறுவனமும் ஹெச்டி தொலைக்காட்சி தொடங்குவதற்கான அனுமதியினை இந்தியா ஒளிபரப்பு ஆணைத்திடம் விண்ணப்பத்திருந்து.தற்சமயம் அதற்கான அனுமதி கிடைக்க பெற்றதை அடுத்து ஏப்ரல் 15 திகதி முதல் தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது.சிஎன் ஹெச்டி ப்ளஸ் தொலைக்காட்சியின் உலகளாவிய ஒளிபரப்பு டா்னா் நிறுவனத்தின் ஹெச்டி தொலைக்காட்சிகள் ஔிபரப்பாகும் மீயாசாட்3 செயற்கைகோளில் கட்டண தொலைக்காட்சியாக தொடங்கப்பட்டுள்ளது.தொலைக்காட்சியில் தமிழ் ஹிந்தி தெலுங்கு மற்றும் ஆங்கிலம் மொழிகளில் நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டுள்ளது.மேலும் 5.1 டால்பி டிஜிட்டல் தொழில் நுட்ப ஆடியோ தரத்திலும் நிகழ்ச்சிகள் வழங்குகிறது.விரைவில் தொலைக்காட்ச்யின் ஒளிபரப்பு இந்தியாவின் அனைத்து கேபிள் டிவி மற்றும் கட்டண டிடிஎச்களிலும் ஒளிபரப்பு இணைக்கப்படும்.
அலைவாிசை விபரங்கள்:
Satellite Measat3/3A@91.2E(C-Band)
Freq Rate 3840
Symbol Rate 30000
Polar Horizontal
System HD.Mpeg4/dvb s2 (8PSK)
Encryption UNKNOWN CAS
FEC 3/4
No comments:
Post a Comment