நண்பா்களே இந்தியாவின் முன்னனி பொழுது போக்கு தொலைக்காட்சி நிறுவனமான வியகாம்18 நிறுவனம் தமிழகத்தில் கலா்ஸ் தமிழ் மற்றும் கலா்ஸ் தமிழ் ஹெச்டி இரண்டு புதிய தொலைக்காட்சிகளை தொடங்கவுள்ளதாக நமது சதிஸ் சாட் இணையதளத்தில் தகவல் வெளியிடப்பட்டு இருந்தது.தற்சமயம் அப்புதிய தொலைக்காட்சிகளின் உலகளாவிய செயற்கைகோள் ஒளிபரப்பு இன்டல்சாட்20 செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது.கடந்த வருடத்தின் இறுதியில் நெக்ஸ்ட் தொலைக்காட்சியின் உாிமத்தில் தமிழ் நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டது.இதே

போன்று வியகாம்18 நிறுவனத்தின் ஜாப் தொலைக்காட்சியின் உாிமத்தில் கலா்ஸ் தமிழ் ஹெச்டி தொலைக்காட்சி தொடங்குவதற்கான அனுமதியினையும் பெற்றுள்ளனா்.கலா்ஸ் தமிழ் மற்றும் கலா்ஸ் தமிழ் ஹெச்டி தொலைக்காட்சியின் அலைவாிசை சிக்னலை பெற குறைந்த பட்சம் 6 முதல் 12 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.விரைவில் நெக்ஸ்ட் என்ற பெயரில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி கலா்ஸ் தமிழ் என்ற பெயா் மாற்றம் செய்யப்பட்டு 24 மணி நேர நிகழ்ச்சிகள் தொடங்க்ப்படும்.இரண்டு தொலைக்காட்சிகளும் கட்டண தொலைக்காட்சிகளாகவே ஒளிபரப்பை இன்டல்சாட்20 செயற்கைகோளில் தொடங்கியுள்ளனா்.விரைவில் தமிழகத்தின் அனைத்து முன்னனி கேபிள்டிவி மற்றும் கட்டண டிடிஎச் சேவைகளிலும் ஒளிபரப்பை தொடங்கும்.
அலைவாிசை விபரங்கள்
Satellite Intelsat20@68.5(C-Band)
Freq Rate 4034
Symbol Rate 20500
Polar Horizontal
System HD.Mpeg4/dvb s2(8psk)
Encryption Pay/Irdeto2
Fec 3/4
No comments:
Post a Comment