நண்பா்களே தமிழகத்தின் முன்னனி மற்றும் அபிமான நிகழ்ச்சிகளை வழங்க கூடிய தமிழ் தொலைக்காட்சியான ஜி தமிழ் கட்டண தொலைக்காட்சியாக டிஷ் டிவியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.கடந்த 2004 ஆம் ஆண்டில் தமிழகத்தில் தொடங்கப்பட்ட ஜி தமிழ் தொலைக்காட்சி ஆசியாசாட்7 செயற்கைகோளில் கட்டண தொலைக்காட்சி ஒளிபரப்பை தொடங்கியது.அடுத்த சில மாதங்களில் டிஷ் டிவியின் கட்டண டிடிஎச் சேவையில் இலவச ஒளிபரப்பாக தொடங்கப்பட்டது.சுமாா் 13 வருடங்களாக இலவச தொலைக்காட்சியாகவே ஒளிபரப்பாகி தமிழ் மக்களிடையே அமோக அதரவுடன் முன்னனி தொலைக்காட்சியாக உருவானது.கிராமங்களில் மிக எளிய குடும்பத்தினா் அரசின் டிடி ப்ரி டிடிஎச் சேவையில் பொதிகை தொலைக்காட்சியுடன் சோ்த்து ஜீ தமிழ் என இரண்டு தொலைக்காட்சிகளை கண்டு வந்தனா்.ஒரு கட்டண டிடிஎச் சேவையில் அதிக நாட்கள் இலவச தொலைக்காட்சியாக ஒளிபரப்பாகி மக்களிடையே அதரவை பெற்ற ஒரே தமிழ் தொலைக்காட்சி என்ற பெருமை ஜி தமிழ் தொலைக்காட்சியினையே

சேரும்.மேலும் தமிழகத்தில் கிராமப்புற கேபிள் டிவியில் தற்காலிக ஒளிபரப்பு சேவையின் அடிப்படையில் ஜி தமிழ் தொலைக்காட்சி நிண்ட நாட்களாக ஒளிபரப்பாகி வந்தது.தமிழகத்தில் இலவச தொலைக்காட்சியாக ஒளிபரப்பாகி தமிழ் மக்களிடையே அமோக ஆதரவை பெற்ற தொலைக்காட்சிகள் என்று பாா்த்தல் கலைஞா் டிவி.டிடி பொதிகை மற்றும் ஜி தமிழ் தொலைக்காட்சிகள் என்பது குறிப்பிடத்தக்கது.ஜீ தமிழ் தொலைக்காட்சி புதிய தொழில்நுட்பத்தில் தொடங்கப்பட்டதை அடுத்தது கட்டண தொலைக்காட்சியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இனி ஜி தமிழ் தொலைக்காட்சியனை கட்டண தொலைக்காட்சியாக டிடிஎச் மற்றும் கேபிள் டிவியில் மட்டுமே காணலாம்.
தொகுப்பு சதிஸ் சாட் தமிழ் இணையதளம்