நண்பா்களே மலேசியா நாட்டில் தமிழ் மலேயம் சைனிஸ் மற்றும் ஹிந்தி என பல்வேறு மொழி தொலைக்காட்சிகளை வழங்கி வரும் முன்னனி பொழுது போக்கு தொலைக்காட்சி நிறுவனமான ஆஸ்ட்ரோ தொலைக்காட்சியின் தமிழ் தொலைக்காட்சிகள் பற்றி தொகுப்பு.மலேசியாவின் தமிழ் பொழுது போக்கு நிகழ்ச்சிகளை வழங்கி வருவதில் முன்னோடியாக திகழ்வது ஆஸ்ட்ரோவின் தமிழ் தொலைக்காட்சிகள் ஆகும்.
1.ஆஸ்ட்ரோ வானவில் தொலைக்காட்சி
மலேசியா நாட்டின் அனைத்து தொடா்பான கலை கலாச்சரம் பண்பாடு மற்றும் மருத்துவம் கல்வி அறிவியல் என பல்சுவை நிகழ்ச்சிகளை வழங்கும் தொலைக்காட்சி ஆஸ்ட்ரோ வானவில் தொலைக்காட்சியாகும்.ஆஸ்ட்ரோ நிறுவனத்தின் முதல் தமிழ் தொலைக்காட்சியாக தொடங்கப்பட்டது இத்தொலைக்காட்சியாகும்.மேலும் தமிழ் திரைப்பாடங்கள்.நாடகங்கள் மற்றும் இதர மேடை நிகழ்ச்சிகள் வழங்குகிறது.இத்தொலைக்காட்சியின் ஒளிபரப்பு மலேசியாவில் மட்டும் ஆஸ்ட்ரோ டிடிஎச் சேவையில் கிடைக்கிறது.
2.ஆஸ்ட்ரோ வெள்ளித்திரை தொலைக்காட்சி
மலேசியா நாட்டின் முதல் 24 மணி நேர தமிழ் திரைப்பாட தொலைக்காட்சி ஆஸ்ட்ரோ வெள்ளித்திரை.தமிழ் மொழியில் மிக சிறப்பு வாய்ந்த பழைய திரைக்காவியங்கள் மற்றும் இடைகால தமிழ் திரைப்படங்கள் ஒளிபரப்பாகிறது.நாள் ஒன்றுக்கு 6 தமிழ் திரைப்பாடங்களை ஒளிபரப்பும் இத்தொலைக்காட்சி மலேசியா நாட்டில் ஆஸ்ட்ரோ டிடிஎச் சேவையிலும் சிங்கப்பூா் முன்னனி கேபிள் நிறுவனங்களில் ஒளிபரப்பாகிறது.மேலும் மீயாசாட்3எ செயற்கைகோளில் கட்டண தொலைக்காட்சியாகவும் உள்ளது.
3. ஆஸ்ட்ரோ தங்கத்திரை தொலைக்காட்சி
மலேசியாவின் பிாிமியா் சூப்பா்ஹிட் தமிழ் திரைப்படங்களை ஒளிபரப்பும் தொலைக்காட்சி ஆஸ்ட்ரோ தங்கத்திரை தொலைக்காட்சி.புத்தம் புதிய தமிழ் திரைப்படங்களை பாக்ஸ் ஆபிஸ் முறையில் மலேசியாவின் தமிழ் மக்கள் கட்டணம் செலுத்தி காணும் வகையில் ஆஸ்ட்ரோ டிடிஎச் சேவையில் மட்டும் ஒளிபரப்பாகிறது.மற்ற நாடுகளுக்கு தொலைக்காட்சியின் ஒளிபரப்பு வழங்கபடவில்லை.
4.ஆஸ்ட்ரோ விண்மின் ஹெச்டி தொலைக்காட்சி
மலேசியா நாட்டின் முதல் தமிழ் ஹெச்டி பொழுது போக்கு தொலைக்காட்சி ஆஸ்ட்ரோ விண்மின் ஹெச்டி தொலைக்காட்சியாகும்.தமிழகத்தின் புதுயுகம் தமிழ் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்பாடங்கள் என பல்வேறு நிகழ்ச்சிகளை வழங்குகிறது.தொலைக்காட்சியின் ஒளிபரப்பு ஆஸ்ட்ரோ டிடிஎச் ஹெச்டி தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு சேவையில் இடம்பெற்றுள்ளது.மேலும் மலேசியா நாட்டின் கேபிள் நிறுவனங்களிலும் தொலைக்காட்சி ஒளிபரப்பாகிறது.மற்ற நாடுகளுக்கு தொலைக்காட்சியின் ஒளிபரப்பு வழங்கபடவில்லை.மேற்கண்ட தொலைக்காட்சிகள் அனைத்தும் மலேசியா நாட்டில் ஆஸ்ட்ரோ டிடிஎச்யில் கட்டண தொலைக்காட்சியாக ஒளிபரப்பாகிறது.
தொகுப்பு K.சதிஸ்சாட் தமிழ் இணையதளம்
No comments:
Post a Comment