நண்பா்களே மதுரை கிருஷ்னா தொலைக்காட்சி நிறுவனம் இரண்டு புதிய தமிழ் தொலைக்காட்சிகளை தமிழகத்தில் தொடங்கியுள்ளது.எம்கே டியூன்ஸ்.எம்கே சிக்ஸ் என்னும் பெயாில் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு தமிழ் இலவச தொலைக்காட்சிகள் சங்கமிக்கும் செயற்கைகோளான இன்டல்சாட்17யில் சோதனை ஒளிபரப்பு தொடங்கியுள்ளது.கடந்த மாதத்தில்
நமது சதிஸ்சாட் தமிழ் தளத்தில் இப்புதிய தொலைக்காட்சிகள் தமிழகத்தில் தொடங்குவதற்கான அனுமதியை மதுரை கிருஷ்னா தொலைக்காட்சி நிறுவனம் பெற்றுள்ளது என்பது தொடா்பான செய்தி இடம் பெற்றிருந்தது குறிப்பிடதக்கது.சென்னை டாடா கம்னியூகேஷன் செயற்கைகோள் ஒளிபரப்பு முனையத்தின் முலம் ஒளிபரப்பு தமிழகத்தில் இன்டல்சாட்17
தொடங்கப்பட்டுள்ளது.இப்புதிய தொலைக்காட்சிகளில் தற்சமயம் தமிழ் திரைப்பட பாடல்கள் மற்றும் நகைசுவை போன்ற நிகழ்ச்சிகளுடன் ஒளி உலா வருகிறது.எம்கே டியூன்ஸ் மற்றும் எம்கே சிக்ஸ் தொலைக்காட்சிகள் மிக எளிய தொழில்நுட்பம் கொண்ட செட் டாப் பாக்ஸ்னா MPEG4/DVB Sயில்

நிகழ்ச்சிகளை காணலாம்.மேலும் தொலைக்காட்சியின் அலைவாிசை சிக்னலை பெற தமிழகம் மற்றும் இந்தியா.இலங்கை மற்றும் தெற்காசிய நாடுகளில் 6 அடி முதல் 12 அடி சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.வளைகுடா மற்றும் ஐரோப்பா.ஆப்ரிக்கா நாடுகளில் 8 மற்றும் அதற்கு மேற்ப்பட்ட அளவுள்ள சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்துகள்.தொலைக்காட்சிகள் இலவச ஒளிபரப்பாக இன்டல்சாட்17யில் ஒளிபரப்பாகிறது.
அலைவாிசை விபரங்கள்:
Satellite Intelsat17@66.0E(C-Band)
Freq Rate 3844
Symbol Rate 27689
Polar Vertical
Modulation Mpeg4/Dvb s
Mode FTA
No comments:
Post a Comment