நண்பர்களே இந்தியாவின் முன்னனி பொழுதுபோக்கு தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனமான எம்எஸ்எம் புதிய விளையாட்டு தொலைக்காட்சி ஒன்றை சோனி ஈஎஸ்பிஎன் என்ற பெயரில் தொடங்கியுள்ளது.இத்தொலைக்காட்சிகள் அதிநவின தொழில்நுட்ப வடிவமான ஹெச்டி மற்றும் எஸ்டி வடிவங்களில் தொடங்கப்படுகிறது.சோனி ஈஎஸ்பிஎன் தொலைக்காட்சிக்கான செயற்கைகோள் சோதனை ஒளிபரப்பு அந்நிறுவனத்தின் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும் இன்டல்சாட்20 மற்றும் இன்டல்சாட்17யில் தொடங்கப்பட்டுள்ளது.சோனி கிக்ஸ் விளையாட்டு தொலைக்காட்சியின் பெயர் மாற்றம் செய்யப்பட்டு இத்தொலைக்காட்சி தொடங்கப்படுகிறது.இந்தியாவில் முன்னனி விளையாட்டு தொலைக்காட்சிகளாக கடந்த பல வருடங்களாக வலம் வந்த ஈஎஸ்பிஎன்

தொலைக்காட்சி சோனி நிறுவனத்துடன் இணைந்து விளையாட்டு போட்டிகளை இந்தியாவில் ஒளிபரப்ப உள்ளது.சோனி சிக்ஸ் தொலைக்காட்சி எம்எஸ்எம் நிறுவனத்தின் முதல் விளையாட்டு தொலைக்காட்சியாகும்.கிரிக்கெட்.புட்பால்.மற்றும் பல விளையாட்டு தொடர்களை நேரடி ஒளிபரப்பு சோனி ஈஎஸ்பிஎன் செய்ய உள்ளது.ஸ்டார் நிறுவன தொலைக்காட்சியுடன் இணைந்து ஈஎஸ்பிஎன் டிவி விளையாட்டு தொடர்களை பல வருடங்களாக இந்தியாவில் ஒளிபரப்பி வந்தது குறிப்பிடதக்கது.கட்டண தொலைக்காட்சியாக சோனி ஈஎஸ்பிஎன் எஸ்டி இன்டல்சாட்20யிலும் மற்றும் சோனி ஈஎஸ்பிஎன் ஹெச்டி இன்டல்சாட்17யிலும்தொடங்கப்பட்டுள்ளது.
அலைவரிசை விபரங்கள்:
CH SONY ESPN HD
Satellite Intelsat17@66.0E(C-BAND)
Freq Rate 3845
Symbol Rate 30000
Polar Horizontal
Modulation HD.Mpeg4/Dvb s2
Mode Pay
CH SONY ESPN SD
CH SONY ESPN SD
Satellite Intelsat20@68..5E(C-BAND)
Freq Rate 3900
Symbol Rate 22222
Polar Horizontal
Modulation .Mpeg4/Dvb s2
Mode Pay
No comments:
Post a Comment