நண்பர்களே தமிழ் தொலைக்காட்சியில் முதன்முறையாக அதிநவின தொழில்நுட்ப வசதியுடைய அல்ட்ரா ஹெச்டி வடிவில் புதிய தமிழ் தொலைக்காட்சி சோதனை ஒளிபரப்பை தற்காலிக அடிப்படையில் ஜெர்மனி நாட்டின் ஹெரிஜான் தொலைக்காட்சி ஒளிபரப்பு செயற்கைகோள் முனையத்தின் முலம் யூடெல்சாட்70பி செயற்கைகோளில் தொடங்கியுள்ளனர்.ஆசியாவில் முதன்முறையாக தமிழ் நிகழ்ச்சிகளை


வழங்ககூடிய அதிநவின தொழில்நுட்ப அல்ட்ரா ஹெச்டி தொலைக்காட்சியை தொடங்கியுள்ளது வரவேற்க்கதக்கது.தற்சமயம் ஒரு குறிப்பிட்ட திரைப்பாடல்களுடன் நிகழ்ச்சிகளை வழங்கிவருகிறது.ஜெர்ரி அல்ட்ரா ஹெச்டி ஸ்டுடியோ நிறுவனத்தின் சார்பாக தொடங்கப்பட்டுள்ளது.யூடெல்சாட்70 செயற்கைகோளில் தற்சமயம் மூன்று அல்ட்ரா தொலைக்காட்சிகளை தொடங்கியுள்ளனர்.இத்தொலைக்காட்சிகளை
காண அதிநவின வசதியுடைய அல்ட்ரா ஹெச்டி செட் டாப் பாக்ஸ் பயன்படுத்த வேண்டும்.இத்தொலைக்காட்சி வளைகுடா.ஆசியா மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கான பிரத்தியோக சோதனை ஒளிபரப்பு தொலைக்காட்சியாகும்.இலவச தொலைக்காட்சியாக தமிழ் அல்ட்ரா ஹெச்டி யூடெல்சாட்70பியில் ஒளிபரப்பாகிறது.முதன்முறையாக அல்ட்ரா ஹெச்டி தொலைக்காட்சி படதொகுப்புகள் நமது சதீஸ் சாட் தமிழ் இணையதளத்தில்.
அலைவரிசை விபரங்கள்:
Satellite Eutelsat70B@70.5E(KU-Band)
Freq Rate 11355
Symbol Rate 45000
Polar Vertical
Modulation UHD/MPEG4/DVB S2
Mode FTA
No comments:
Post a Comment