நண்பர்களே இந்தியா அரசுவின் பொது ஒளிபரப்பு தொலைக்காட்சி நிறுவனமான பிரசார் பாரதி தொலைக்காட்சி இந்திய மக்களின் பொழுதுபோக்கு மற்றும் இந்திய பாரம்பாரியம் போன்ற நிகழ்ச்சிகளை வழங்ககூடிய மிக முன்னனி கலச்சார மற்றும் விளையாட்டு.வேளாண்மை.கல்வி போன்ற துறைகளில் தொலைக்காட்சிகளை தொடங்கியுள்ளது.அந்த வரிசையில் விளையாட்டு

தொலைக்காட்சியான டிடிஸ்போர்ட்ஸ் தொடங்கப்பட்டு உள்நாட்டில் நடைபெறும் விளையாட்டு தொடர்கள் மற்றும் ஒலிம்பிக்.ஆசியா நாடுகளில் நடைபெறும் தொடர்களையும் ஒளிபரப்பு செய்கிறது.அதே போன்று இந்திய மக்களின் பாரம்பாரியம் மற்றும் கலச்சார தொடர்பான நிகழ்ச்சிகளை வழங்ககூடிய தொலைக்காட்சியா டிடி பாரதி தொடங்கப்பட்டுள்ளது.நாட்டில் வேளாண்மை துறையில் புதிய மாற்றங்களையும் தாங்கள் உற்பத்தி செய்யும்
பயிர்களின் விலை மற்றும் பயிர் செய்யும் விபரங்களையும்.வானிலை மாற்றங்கள் போன்ற நிகழ்வுகளை இந்திய விவசாயிகள் தங்கள் இல்லங்களில் அறிந்து கொள்ள டிடி கிஷன் டிவி தொடங்க்ப்பட்டுள்ளது.நாட்டின் கல்வி வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில் விட்டில் இருந்தபடியே பாடங்களை அறிந்து கொள்ள டிடி கயின்தர்ஷன் மற்றும் யுஜிசி போன்ற தொலைக்காட்சிகள தொடங்கியுள்ளது.இத்தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு டிடி பிரி டிடிஎச்யிலும் தொடங்க்ப்பட்டுள்ளது.இந்திய அரசு மேற்கண்ட தொலைக்காட்சிகளான டிடி
பாரதி.டிடி கிஷன்.டிடி கயின்தர்ஷன் மற்றும் யுஜிசி ஆகியன இந்தியாவின் அனைத்து மொழி வாரியாக தொடங்கினால் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையும்.இத்தொலைக்காட்சிகளில் ஹிந்தி மொழியில் மட்டும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது.இந்திய அரசு பொது தொலைக்காட்சி துர்தர்ஷன் நிறுவனத்தின் அனைத்து தொலைக்காட்சிகளையும் பயன்படுத்துவோம்.நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக செயல்படுவோம்.
தொகுப்பு சதீஸ் சாட் தமிழ்
No comments:
Post a Comment