நண்பர்களே இந்தியா நாட்டின் வேளாண்மை துறையில் புதிய தொழில்நுட்பங்களை ஏற்படுத்தவும் வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையிலும் அன்றாட வேளாண்மை தொடர்பான தகவல்களை கிராமப்புற விவசாயிகள் தெரிந்து கொள்ளக்கூடிய வகையில் இந்தியா அரசின் கீழ் செயல்படும பிரசார் பாரதி பொது ஒளிபரப்பு நிறுவனத்தின் சார்பாக புதிய
வேளாண்மை தொலைக்காட்சியை கிஸ்ஷான் டிவி என்ற பெயரில் தொடங்கியுள்ளனர்.இத்தொலைக்காட்சிக்கான தொடக்க சோதனை ஒளிபரப்பு இன்சாட்3சி செயற்கைகோளிலும்.இந்திய அரசின் இலவச தொலைக்காட்சி சேவையான டிடிபிரி டிஷ் டிடிஎச்யிலும் ஒளிபரப்பை தொடங்கியுள்ளனர்.பிரசார் பாரதி நிறுவனத்தில் கடந்த சில வருடங்களுக்கு
முன்பு கிஸ்ஷான் தொலைக்காட்சி தொடங்கப்பட்டு பகுதி நேர நிகழ்ச்சிகளை மட்டும் வழங்கி வந்தது.தற்சமயம் இத்தொலைக்காட்சி முழுநேர தொலைக்காட்சியாக விரைவில் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் தொடங்கப்படவுள்ளது.துர்தர்ஷன் நிறுவனத்தில் பொழுதுபோக்கு.செய்திகள்.விளையாட்டு.காரச்சார போன்ற பிரிவுகளில் தொலைக்காட்சிகளை தொடங்கியுள்ளனர்.மிக எளிய தொழில்நுட்பமான MPEG2/DVB S1 செட்டாப் பாக்ஸயில் காணலாம்.தொலைக்காட்சிகளின்
அலைவரிசை சிக்னலை பெற 6 முதல் 12 அளவு வரையிலான சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்தலாம்.டிடிபிரி டிஷயில் தொலைக்காட்சியை காண 60செமீ டிஷ் போதுமானது.தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் ஹிந்தி மொழியில் ஒளிபரப்பாகிறது.
அலைவரிசை விபரங்கள்:
Satellite Insat4B@93.0E(KU-BAND)
Freq Rate 10990
Symbol Rate 28500
Polar Vertical
Modulation Mpeg2/dvb s1
Mode Fta
No comments:
Post a Comment