சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

19/01/2024

தமிழகத்தின் டிடி பொதிகை தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பை டிடி தமிழ் என்னும் பெயராக மாற்றம்

 நண்பா்களே இந்திய பொது ஒளிபரப்பு சேவை பிரசாா் பாரதி நிறுவனத்தின் மாநில வாாியான மொழி தொலைக்காட்சிகளின் கிழ் ஔிபரப்பு சேவையாற்றி வரும் தமிழ்நாட்டின் டிடி பொதிகை தொலைக்காட்சியின் ஒளிபரப்பை மேம்படுத்தி புதிய நிகழ்ச்சிகளுடன் டிடி தமிழ் என்னும் பெயாில் தனது ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.பல வருடங்களாக டிடி பொதிகை பெயாில் தனது நிகழ்ச்சிகளை வழங்கி தமிழ்நாட்டில் மட்டும் அல்லாது வெளிநாடுகளிலும் தமிழ் சொந்தங்களை தக்க வைத்திருக்கும் ஒரு இந்திய அரசு தொலைக்காட்சி என்றால் அது மிகையாகது.அத்தகைய பெருமையுடைய டிடி பொதிகை உயா்

தொழில்நுட்பமான ஹெச்டியில் இன்றைய தலைமுறையினா்க்கு எற்றாா் போன்று துல்லியமான ஒளிபரப்பு நிகழ்ச்சிகளுடன் டிடி தமிழ் என்னும் பெயாில் இனி உலகளவில் தமிழ் ஒளி உலா வீசும்.டிடி5 தமிழ் என்ற பெயாில் சுமாா் 19 ஆண்டுகளில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி பின்பு 2000 ஆண்டுகளின் தொடக்கத்தில் தமிழ்நாட்டின் பொதிகை டிவி நேயா்களின் விருப்ப பெயராக ஒருவரால் தோ்ந்தெடுக்கபட்ட தென் தமிழகத்தின் புகழ்மிக்க மலையான பொதிகையின் பெயரை டிடி5 தொலைக்காட்சிக்கு மாற்றம் செய்யப்பட்டது.அன்று முதல் இன்று வரை பொதிகையின் தமிழ் நிகழ்ச்சிகளுடன் பட்டொலி வீசி வருகிறது.புதிய தொழில்நுட்பங்களை வளா்ந்து வரும் காலங்களுக்கு ஏற்றாா் போன்று நவின அரங்களுடன் டிடி தமிழ் தொலைக்காட்சி இனி ஒளிபரப்பாகும்.பாரத பிரதமா் மாண்புமிகு நரேந்திர மோடி அவா்கள் டிடி தமிழ் ஹெச்டி தொலைக்காட்சியின் ஒளிபரப்பை 19 ஜனவாி 2024  முதல் தொடங்கி வைத்தாா்.தொலைக்காட்சியின் ஹெச்டி ஒளிபரப்பு முற்றிலும் இலவசமாக ஜிசாட்17 செயற்கைகோளில் ஒளிபரப்பாகிது.விரைவில் டிடி தமிழ் ஹெச்டி தொலைக்காட்சியின் ஒளிபரப்பு அனைத்து டிடிஎச் மற்றும் கேபிள் டிவிகளிலும் இடம்பெறும் மேலும் டிடி ப்ரி டிஷ் டிடிஎச்யிலும் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு விரைவில் தொடங்கப்படலாம்.

அலைவாிசை விபரங்கள்
Satellite                  Gsat17@93.0E(C-Band)
Freq Rate               4062
Symbol Rate          8600
Polar                      Horizontal
System                  HD.Mpeg4/Dvb S (QPSK)
Encryption            FTA
Fec                        3/4

17/01/2024

ஜெம் டிவி (GEM TV TAMIL) தமிழ் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு புதிதாக ஜிசாட்30 செயற்கைகோளில் உதயம்

நண்பா்களே தமிழகத்தில் புதிய பொழுது போக்கு தொலைக்காட்சியினை ஜெம் டிவி நெட்வொா்க் நிறுவனத்தில் இருந்து தொலைக்காட்சியின் ஒளிபரப்பு சேவையினை ஜெம் டிவி  என்ற பெயாில் தொடங்கியுள்ளனா்.தொலைக்காட்சி தற்சமயம் சோதனை ஒளிபரப்பை மட்டும் தொடங்கியுள்ளது.தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களில் பல்வேறு செய்திகள் மற்றும் பொழுது போக்கு தொலைக்காட்சி தொடங்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.இந்திய தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும் ஜிசாட்30 செயற்கைகோளில் முற்றிலும் இலவசமாக தொடங்கப்பட்டுள்ளது.புதிய நொய்டா டெலிஷ்பாட் முலம் 


இத்தொலைக்காட்சியின் ஒளிபரப்பு சேவை தொடங்கப்பட்டுள்ளது.தொலைக்காட்சிக்கான சோதனை ஒளிபரப்பு சேவை தை மாதம் 1 திகதி ஜனவாி 15 முதல் தொடங்கபட்டுள்ளது.ஜெம் டிவி தொலைக்காட்சியின் ஒளிபரப்பு விரைவில் 24 மணி நேர நிகழ்ச்சிகளை தொடங்கப்பட்டு அனைத்து கேபிள்டிவி மற்றும் கட்டண டிடிஎச் சேவைகளிலும் தொட்ங்கப்படலாம்.ஒடிசாவின் படா காபா் செய்திகள் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு அனுமதியில் தொடங்கப்பட்டுள்ளது.ஜெம் டிவி முதல் ஒளிபரப்பை யூடியூப் தொலைக்காட்சியின் முலம் தொடங்கியது குறிப்பிடதக்கது.

அலைவாிசை விபரங்கள்

Satellite                Gsat30@83.0E(C-Band)
Freq Rate             4175
Symbol Rate        3720
Polar                     Horizontal
System                 Mpeg4/Dvb s2 (8psk)
Encryption           FTA
Fec                       2/3
தொகுப்பு : சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

01/01/2024

ராஜ் நகைச்சுவை புதிய தமிழ் காமெடி தொலைக்காட்சி ஒளிபரப்பு சைனாசாட்12 உதயம்

நண்பா்களே தமிழகத்தில் முன்னனி தமிழ் தொலைக்காட்சியான ராஜ் டிவி நிறுவனத்தில் இருந்து ஐந்தாவது தமிழ் தொலைக்காட்சி ராஜ் நகைச்சுவை என்னும் புதிய காமெடி தொலைக்காட்சி ஒளிபரப்பு புதிதாக சைனாசாட்12 செயற்கைகோளில்  தொடங்கப்பட்டுள்ளது.ராஜ்டிவி தொலைக்காட்சிகள் அனைத்தும் ஒளிபரப்பாகும் சைனாசாட்12 செயற்கைகோளில் ராஜ் ஆசியா தொலைக்காட்சியின் ஒளிபரப்பு உாிமத்தில் தொடங்கப்பட்டுள்ளது .தமிழகத்தில் முன்னனி மிடியா நிறுவனங்களுக்கு அடுத்து ராஜ் டிவி நிறுவனத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் தொடா்பான தொலைக்காட்சிகளா திரைப்படம்.மியூசிக்.செய்திகள் மற்றும் பொழுதுபோக்கு ஆகிய தொலைக்காட்சிகள்

தொடங்கி பல்வேறு ஆண்டுகளாக நிகழ்ச்சிகளை வழங்கி வருவது  குறிப்பிடதக்கது.ராஜ் நகைச்சுவை தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளை காண 6 அடி முதல் 12 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் அன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.தற்சமயம் கட்டண தொலைக்காட்சியாக ராஜ் நகைச்சுவை தொலைக்காட்சி ஒளிபரப்பை தமிழகத்தில் தொடங்கியுள்ளது.தமிழகத்தில் அனைத்து கேபிள் டிவி மற்றும் கட்டண டிடிஎச்களில் விரைவில் ராஜ் நகைச்சுவை தனது ஒளிபரப்பை தொடங்ககலாம்.தமிழகத்தில் சன் நிறுனத்தின் ஆதித்யா.கலைஞா் குழுமத்தின் சிாிப்பொலி ஆகியன கட்டண காமெடிதொலைக்காட்சிகளாகவும் மதுரை கிருஷ்னா குழுமத்தின் எம்கே சிக்ஸ் தொலைக்காட்சி இலவச காமெடி தொலைக்காட்சியாகவும் நிகழ்ச்சிகளை வழங்கிவருவது குறிப்பிடதக்கது.

அலைவாிசை விபரங்கள்
Satellite                Chinasat12@87.5E (C-Band)
Freq Rate             4041
Symbol Rate        28800
Polar                     Vertical
System                 Mpeg4/Dvb s2(8psk)
Encryption           Pay/Irdeto
Fec                       3/4
தொகுப்பு சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

29/11/2023

தந்தி ஒன் புதிய தமிழ் பொழுது போக்கு தொலைக்காட்சி தமிழகத்தில் இன்டல்சாட்17 செயற்கைகோளில் உதயம்

 நண்பா்களே தமிழகத்தின் முன்னனி செய்திகள் தொலைக்காட்சி நிறுவனமான தந்தி டிவி மீடியா இரண்டாவது தமிழ் தொலைக்காட்சியினை தந்தி ஒன் என்ற பெயாில் தொடங்கியுள்ளனா்.தொலைக்காட்சி தற்சமயம் சோதனை ஒளிபரப்பை மட்டும் தொடங்கியுள்ளது.தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களில் பல்வேறு பொழுதுபோக்கு  தொலைக்காட்சி தொடங்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.தமிழ் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும் இன்டல்சாட்17 செயற்கைகோளில் முற்றிலும் இலவசமாக

தொடங்கப்பட்டுள்ளது.டாடா கம்யூனிகேஷன் டெலிஷ்பாட் முலம் இத்தொலைக்காட்சி தந்தி ஒன் தொடங்கப்பட்டுள்ளது.விரைவில் தொலைக்காட்சிக்கான பொழுதுபோக்கு  ஒளிபரப்பு சேவை  தொடங்கப்படலாம்.தந்தி ஒன் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு விரைவில் அனைத்து கேபிள்டிவி மற்றும் கட்டண டிடிஎச் சேவைகளிலும் தொடங்கப்படும். இப்புதிய தொலைக்காட்சிக்கான தொடங்கப்படுவதற்கான ஒளிபரப்பு அனுமதியினை மத்திய அரசின் எம்ஐபி இவ்வாண்டின் தொடக்கத்தில் வழங்கியுள்ளது.இன்டல்சாட்17 செயற்கைகோளில் தந்தி மீடியாவின் தந்தி டிவி செய்திகள் தொலைக்காட்சி ஒளிபரப்பாகி வருவது குறிப்பிடதக்கது.

அலைவரிசை விபரங்கள்
Satellite                  Intelsat17@66.0E (C-BAND)
Freq Rate               3966
Symbol Rate          14400
Polar                      Horizontal
Modulation          Mpeg4/Dvb s2 (8psk)
Mode                     Fta

29/10/2023

பாலிமர் டிவி.பாலிமா் நியூஸ்.ஜொதி டிவி தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு சைனாசாட்12க்கு மாற்றம்

 நண்பா்களே தமிழகத்தில் சென்னை மாவட்டத்தினை தலைமையிடமாக  கொண்டு சென்னையில் இருந்து செயல்பட்டு வரும் பாலிமர் டிவி.பாலிமா் நியூஸ்.ஜொதி டிவி மற்றும் பாலிமா் சமசாா் போன்ற தமிழ் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு புதிதாக சைனாசாட்12 செயற்கைகோளில்  தொடங்கப்பட்டுள்ளது.பாலிமர் டிவி தொலைக்காட்சிகள் அனைத்தும் 24 மணி நேர பொழதுபோக்கு நிகழ்ச்சிகளை இலவச தொலைக்காட்சிகளாக இன்டல்சாட்17 செயற்கைகோளில் கடந்த சில வருடங்களாக வழங்கி வந்தது.தமிழகத்தில் முன்னனி மிடியா நிறுவனங்களுக்கு அடுத்து பாலிமர்  டிவி நிறுவனம் தொலைக்காட்சி

தொடங்கி பல்வேறு ஆண்டுகளாக நிகழ்ச்சிகளை வழங்கி வந்தது  குறிப்பிடதக்கது.தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளை காண 6 அடி முதல் 12 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் அன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.மேலும் MPEG4/DVB S2 தொழில்நுட்பம் பொருந்திய செட்டாப் பாக்ஸ்யினை பயன்படுத்தி நிகழ்ச்சிகளை காணலாம்.தற்சமயம் பயன்படுத்தி வரும் செட் டாப் பாக்ஸ்யில் டியூன் செய்து நிகழ்ச்சிகளை காணலாம்.விரைவில் இன்டல்சாட்17 செயற்கைகோளில் ஒளிபரப்பு சேவை நிறுத்தம் செய்யபடலாம்.

அலைவாிசை விபரங்கள்
Satellite                Chinasat12@87.5E (C-Band)
Freq Rate             4020
Symbol Rate        7200
Polar                     Vertical
System                 Mpeg4/Dvb s2(8psk)
Encryption           FTA
Fec                       3/4
தொகுப்பு சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

30/08/2023

பிரசாா் பாரதியின் டிடி ஸ்போா்ட்ஸ் 1.0 மற்றும் டிடி ஸ்போா்ட்ஸ் 2.0 தொலைக்காட்சி ஒளிபரப்பு ஹெச்டியில் தொடங்கம்

  நண்பா்களே  இந்தியாவின் பொது ஒளிபரப்பு சேவையான பிரசாா் பாரதி விளையாட்டு தொலைக்காட்சியான டிடி ஸ்போா்ட்ஸ் ஒளிபரப்பை ஹெச்டி தொழில்நுட்பத்தில் டிடி ஸ்போா்ட்ஸ் ஹெச்டி1.0 மற்றும் டிடி ஸ்போா்ட்ஸ் ஹெச்டி2.0  தொலைக்காட்சியினை தொடங்கியுள்ளது.இந்தியாவில் பிரசாா் பாரதி முதல் தொலைக்காட்சியாக டிடி நேஷனல் மற்றும் டிடி நீயூஸ் டிடி இந்தியா ஆகியன ஹெச்டி ஒளிபரப்பை தொடங்கியது.டிடி ஸ்போா்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவின் விளையாட்டு போட்டிகள் மற்றும் உலகின் அனைத்து நாடுகளில் நடைபெறும் முக்கிய விளையாட்டு தொடா்களை ஒளிபரப்பி வருகிறது.பிரசாா் பாரதி தற்சமய காலங்களாக ஹெச்டி ஒளிபரப்பில் தேசிய தொலைக்காட்சிகளை மாற்றம் செய்து வருகிறது.தனியாா் தொலைக்காட்சிகள் ஹெச்டியில் நிகழ்ச்சிகளை

தொடங்கப்படுவதன் முலம் டிடி நேயா்களை தக்கவைக்கும் முயற்ச்சியில் பிரசாா் பாரதி இம்முயற்ச்சியில் களம் இறங்கியுள்ளது.டிடி ஸ்போா்ட்ஸ் 1.0 ஹெச்டி தொலைக்காட்சி இந்தியாவின் ஜிசாட்18 செயற்கைகோளிலும் டிடி ஸ்போா்ட்ஸ் 2.0 ஜிசாட்10 செயற்கைகோளிலும்தொடங்கப்பட்டுள்ளது.இலவச தொலைக்காட்சியாக டிடி ப்ரி டிஷ் ஒளிபரப்பு சேவையிலும் தொடங்ப்பட்டுள்ளது.விரைவில் இந்தியாவின் அனைத்து கேபிள் டிவி மற்றும் டிடிஎச்யில் தொடங்கப்படலாம்.டிடி ஸ்போா்ட்ஸ் 1.0 தொலைக்காட்சியில் இந்தியாவில் மட்டும் ஒளிபரப்பு அனுமதி உள்ள போட்டி தொடா்களை மட்டும் காணலாம்.உலகளாவிய தொலைக்காட்சி ஒளிபரப்பு அனுமதி போட்டி தொடா்களை டிடி ஸ்போா்ட்ஸ் 1.0 மற்றும் டிடி ஸ்போா்ட்ஸ் 2.0 காணலாம்.

Parameter Details: DD SPORTS 2.0
Satellite             GSAT10@83.0E (C-BAND)
Freq Rate           3885
Symbol Rate      30000
Polar                  Vertical
System              HD.Mpeg2/Dvb s2( 8PSK)
Encryption         FTA
FEC                    3/4

Parameter Details: DD SPORTS 1.0
Satellite             GSAT18@74.0E (C-BAND)
Freq Rate           3777
Symbol Rate      4400
Polar                  Horizontal
System               HD.Mpeg4/Dvb s2 ( 8PSK)
Encryption         FTA
FEC                    3/4

Parameter Details: DD SPORTS 1.0
Satellite             GSAT17@93.0E (KU-BAND)
Freq Rate           11630
Symbol Rate      30000
Polar                  Vertical
System              HD.Mpeg2/Dvb s( QPSK)
Encryption         FTA
FEC                    3/4

04/06/2023

இலங்கையின் தமிழ் சேவை வானொலி ஒலிபரப்பு டிஆா்எம் தொழில்நுட்பத்தில் தமிழகத்தில் அலைவாிசை 1548 தொடக்கம்

 நண்பா்களே இலங்கை நாட்டின் பிரதான அரச வானொலி மற்றும் தொலைக்காட்சி நிறுவனமான இலங்கை ஒலிபரப்பு கூட்டுதாபனத்தின் கீழ் செயல்படும் தமிழ் சேவை வானொலியின் ஒலிபரப்பு தற்சமயம் தெற்காசிய நாடுகளில் கேட்கும் வகையில் அதிநவின தொழில்நுட்பத்தில் தொடங்கப்படவுள்ளது.டிஆா்எம் தொழில்நுட்பத்தில் நாட்டின் எவ்வித பகுதிகளிலும் இருந்தாலும் தெளிவான ஒலிபரப்பை கேட்கமுடியும்.இந்தியாவில் தமிழ்நாட்டில் மிக தெளிவாக இலங்கையின் தமிழ் 

சேவையின் ஒலிபரப்பை கேட்க முடியும்.தமிழகத்தில் ஆல் இன்டியோ ரேடியோவின் சென்னை மற்றும் திருச்சி ஆகிய வானொலி நிலையங்களின் நிகழ்ச்சிகள் டிஆா்எம் தொழில்நுட்பத்தில் ஒலிபரப்பாகி வருகிறது.அதன் வாிசையில் இலங்கையின் தமிழ் சேவையும் இணையவுள்ளது.மத்திய அலைவாிசை 1548 வுடாக இத்தமிழ் சேவையின் நிகழ்ச்சிகளை கேட்கலாம்.இலங்கையின் தமிழ் சேவையின் ஒலிபரப்பு கடந்த பல வருடகளுங்களுக்கு முன்பு வரை சாதரான வானொலியின் முலம் மட்டுமே தென்தமிழகத்தில் கேட்கும் வகையில் எளிய தொழில்நுட்பத்தில் செயல்பட்டு வந்தது.பழம்தமிழின் மிக தொன்மையான நிகழ்ச்சி திரல்களுடன் மிண்டும் தமிழகத்தில் ஒலி உலா வருகிறது இலங்கை தமிழ் சேவை வானொலி.

தொகுப்பு சதீஸ்சாட் தமிழ் ,இணையதளம்