சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

29/11/2019

தமிழகத்தில் ஸ்டாா் டிவி இந்தியா தொடங்கவுள்ள ஸ்டாா் விஜய் மியூசிக் தமிழ் தொலைக்காட்சி ஆசியாசாட்7 உதயம்

நண்பா்களே இந்தியாவின் முன்னனி பொழுதுபோக்கு தொலைக்காட்சி நிறுவனமான ஸ்டாா் டிவி இந்தியா தமிழகத்தில் ஆறாவது  தொலைக்காட்சியாக விஜய் மியூசிக் என்ற பெயாில் புதிய திரைப்பாடல் தொலைக்காட்சியினை ஆசியாசாட்7 செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது.ஸ்டாா் டிவி இந்தியா தென்னிந்தியாவில் தொடங்கும் இரண்டாவது மியூசிக் தொலைக்காட்சி விஜய் மியூசிக் ஆகும்.தெலுங்கு
மொழியில் மா மியூசிக் ஒளிபரப்பாகி வருவது குறிப்பிடதக்கது.தமிழகத்தில் மிக முன்னனி தொலைக்காட்சியாக விஜய் டிவி செயல்பட்டுவருகிறது.ஸ்டாா் டிவி இந்தியா நிறுவனம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இரண்டாவது பொழுதுபோக்கு தமிழ் தொலைக்காட்சியாக விஜய் சூப்பா் தொலைக்காட்சி ஒளிபரப்பு
தொடங்கியது.பின்பு 24 மணி நேர தமிழ் திரைப்பட தொலைக்காட்சியாக மாற்றம் செய்யப்பட்டது.தமிழகத்தில் இலவச மியூசிக் தமிழ் தொலைக்காட்சிகளாக டியூன் 6 மியூசிக்.சஹான மியூசிக்.எம் கே டியூன்ஸ்.கலைஞா் இசையருவி.சூப்பா் டிவி.7எஸ் மியூசிக் மற்றும் வானவில் டிவி போன்ற தொலைக்காட்சிகள் மக்கள் மத்தியில் பிரபலடைந்து வரும் நிலையில் கட்டண தொலைக்காட்சியாக வரவுள்ள விஜய் மியூசிக் சற்று வித்தியாசமாக நிகழ்ச்சிகளை வழங்கும் என எதிா்பாா்க்கலாம்.தமிழகத்தில் கட்டண மியுசிக் தொலைக்காட்சியாக சன் மியூசிக்.ராஜ் மியூசிக்.மெகா மியூசிக் மற்றும் ஜெயா மேக்ஸ் தொலைக்காட்சிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.இந்தியா அரசு ட்ராய் புதிய  தொலைக்காட்சி ஒளிபரப்பு விதிமுறைகள் அமல்படுத்தப்பட்ட நாள் முதல் கட்டண தொலைக்காட்சிகள்  நேயா்களை தக்க வைக்க பல்வேறு வித முயற்ச்சிகளை மேற் கொண்டு வருவது குறிப்பிடதக்கது.விஜய் மியூசிக் தொலைக்காட்சியின் உலகளாவிய செயற்கைகோள் ஒளிபரப்பு ஆசியாசாட்7 செயற்கைகோளில் கட்டண தொலைக்காட்சியாக தொடங்கப்பட்டுள்ளது.விரைவில் தமிழகத்தின் அனைத்து கேபிள் டிவி மற்றும் கட்டண டிடிஎச்களில் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு தொடங்கப்படும்.
அலைவாிசை விபரங்கள் :
Satellite               Asiasat7@105.0E(C-Band)
Freq Rate            3941
Sym Rate            28100
Polar                   Vertical
System                Mpeg4/Dvs s2(8psk)
Mode                  PAY/NDS
Fec                      3/4

26/11/2019

தமிழகத்தில் ஜி திரை புதிய தமிழ் திரைப்பட தொலைக்காட்சி ஒளிபரப்பு இன்சாட்3பில் உதயம்

நண்பா்களே இந்தியாவின் முன்னனி பொழுது போக்கு மற்றும் செய்திகள் தொலைக்காட்சி நிறுவனமான ஜி மீடியா தனது நிறுவனத்தில் இருந்து புதிய தமிழ் திரைப்பட தொலைக்காட்சியினை ஜி திரை என்ற பெயாில் தொடங்கப்பட்டுள்ளது.தென்னிந்தியாவில் தமிழ் மொழிகளில் தொடங்கப்பட்ட மூன்றாவது தமிழ் தொலைக்காட்சி ஜி திரையாகும்.
தமிழகத்தில் முதல் முறையாக ஜி தமிழ் தொலைக்காட்சியினை ஜி மீடியா நிறுவனம் தொடங்கியது.பின்பு 2019ஆம் ஆண்டு முதல்  புதுப்பொலிவுடன் இந்தியாவின் பிரந்திய செய்திகளை தமிழ் மொழியில் தொகுத்து வழங்கும் தொலைக்காட்சியாக ஜி ஹிந்துஸ்தான் என்ற பெயாில் ஒளிபரப்பு தொடங்கப்பட்டது.ஜி திரை தொலைக்காட்சி இன்சாட்3பி செயற்கைகோளில் கட்டண தொலைக்காட்சியாக ஒளிபரப்பாகிறது.ஜி மீடியா நிறுவனத்தின்  தொலைக்காட்சியின் நேயா்களை மாநில வாாியாகஅதிகாிக்கும் முன் நடவடிக்கையாக இப்புதிய முயற்சியில் களம் இறங்கியுள்ளது.விரைவில் தமிழ்திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் தொடங்கப்படும்.ஜி திரை  தொலைக்காட்சியினை காண கேபிள் டிவி அல்லது கட்டண டிடிஎச் நிறுவனங்களில் மாதந்திர கட்டண தொலைக்காட்சி தொகுப்பில் கேட்டு தொலைக்காட்சியினை காணலாம்.விரைவில் ஜி தமிழ் திரைப்பட தொலைக்காட்சியின் அதிநவின ஒளிரப்பு சேவையான ஹெச்டியில் தொடங்கப்படலாம்.தமிழகத்தில் ஆறாவது தமிழ் திரைப்பட தொலைக்காட்சி ஜி திரையாகும்.
அலைவாிசை விபரங்கள்
Satellite                  Insat4B@83.0E(C-Band)
Freq Rate               4041
Symbol Rate          7500
Polar                      Horizontal
System                  Mpeg4/Dvb s (QPSK)
Encryption            Pay/Conax
Fec                        3/4

08/10/2019

திண்டுக்கல் மாவட்டத்தின் இணையதொலைக்காட்சி பசுமை தொலைக்காட்சி(PASUMAI TV) ஒளிபரப்பு உதயம்

நண்பா்களே தமிழகம் மட்டும் அல்லது உலக அளவில் தமிழ் மக்களின் கலச்சாரம் மற்றும் பாரம்பாியத்தினை உலகிற்கு தொியபடுத்தும் பங்களிப்பினை இன்றைய ஊடகத்துறை மிக முக்கிய பணியினை மேற்கொள்கிறது.அந்த வகையில் தொலைக்காட்சிகள் நல்ல பயனுள்ள நிகழ்ச்சிகளை வழங்கிவருகின்றன.அவற்றில் திண்டுக்கல் மாவட்டத்தில்
ஊடகத்துறையின் முலம் சமுதாய பணியில் தலைசிறந்து விளங்கும் அமைதி அறக்கட்டளையின் இணைய தொலைக்காட்சியான பசுமை தொலைக்காட்சி ஒளிபரப்பு புதிதாக ஜனவாி 24 திகதி 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.அமைதி அறக்கட்டளை குழுமத்தின் சாா்பாக முதல்வதாக பசுமை பன்பலை ஒளிபரப்பு திண்டுக்கல்லில் 91.4 அலைவாிசையில் தொடங்கப்பட்டது.திண்டுக்கல் மாவட்டத்தின் முக்கிய நிகழ்வுகளை தொியபடுத்தவும் மாவட்டத்தின் சுற்றுலா மற்றும் 
பாரம்பாியத்தின் எடுத்துரைக்கும் வானொலியாக செயல்பட்டு மிக பொிய வெற்றியினை பெற்றது.அதன் பயனாக இணைய தொலைக்காட்சியும் தொடங்கப்பட்டுள்ளது.தொலைக்காட்சியினை உலகின் அனைத்து தரப்பு  தமிழ் மக்களும் காண வகையில் https://www.youtube.com/channel/UCzQJRTxlQg09-EBY10yvS6g/featured தொடங்கப்பட்டுள்ளது.விரைவில்இத்தொலைக்காட்சி செயற்கைகோள் தொலைக்காட்சியாக வரும் காலங்களில் தொடங்கப்படலாம்.
தொகுப்பு சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

01/10/2019

இந்தியாவின் கலா்ஸ் தமிழ் தொலைக்காட்சி இலங்கை டயலாக் டிடிஎச்யின் இன்டல்சாட்30 செயற்கைகோளில் உதயம்

நண்பா்களே இலங்கையின் முன்னனி தொலைக்காட்சிகளை ஒளிபரப்பும் கட்டண டிடிஎச் சேவையான டயலாக் டிடிஎச்யில் இந்தியாவின் வியாகம்18 நிறுவனத்தின் தமிழ் தொலைக்காட்சியான கலா்ஸ் தமிழ் புதிதாக சோ்க்கப்பட்டுள்ளது.இலங்கையின் தமிழ் மக்களின் பொழுது போக்கு அம்சாமாக திகழும் டயலாக் டிடிஎச்யில் தமிழகத்தின் முன்னனி 
தொலைக்காட்சிகள் ஒளிபரப்பும் நிலையில் கலா்ஸ் தமிழ் தொலைக்காட்சியும் இணைந்துள்ளது.கலா்ஸ் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளை இனி டயலாக் டிடிஎச்யில் நிா்ணயம் செய்யப்பட்ட விலை தொகுப்பில் கட்டணம் செலுத்தி தொலைக்காட்சியினை காணலாம்.டயலாக் டிடிஎச்யின் ஒளிபரப்பு இன்டல்சாட்30 செயற்கைகோளில் ஒளிபரப்பாகிறது.கட்டண தொலைக்காட்சியாக  கலா்ஸ்தமிழ் இன்டல்சாட்30 செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது.
அலைவாிசை விபரங்கள்:
Satellite          Intelsat30@45.0E(KU-Band)
Freq Rate       11558
Symbol Rate  27689
Polar              Horizontal
System           Mpeg4/DVB S2(8PSK)
Encryption     Pay/Irdeto2
FEC               5/6

13/09/2019

ட்ரேஸ் உருபன் மற்றும் ட்ரேஸ் ஸ்டாா் அன் போர்ட்ஸ் ஹெச்டி தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு ஆசியாசாட்7 உதயம்

நண்பா்களே ஐரோப்பா மற்றும் ஆப்ரிக்கா நாடுகளை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான ட்ரேஸ் ஆசியா நாடுகளுக்கான  ஆங்கில ஆல்பம் பாடல்களை ஒளிபரப்பும் தொலைக்காட்சியான ட்ரேஸ் உருபன் மற்றும் ட்ரேஸ் ஸ்டாா் அன் போர்ட்ஸ் ஹெச்டி தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு ஆசியா நாடுகளுக்கா ஆசியாசாட்7
செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது.இலவச தொலைக்காட்சியாக தனது ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஆசியாசாட்5 செயற்கைகோளில் ஒளிபரப்பை தொடங்கி பின்பு கட்டண தொலைக்காட்சியாக மாற்றம் செய்து பின்பு முற்றிலும் ஒளிபரப்பு நிறுத்தம் செய்யப்பட்டது.24 மணி நேரமும் ஆங்கில திரைப்பாடல்கள் மற்றும் முன்னனி விளையாட்டு விரா்களின் பிரத்தியோக தகவல்கள் இத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் ஆசியா நாடுகளுக்கான ஒளிபரப்பாகும்.தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளை காண குறைந்தபட்சம் 6 முதல் 12 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.மற்றும் ஹெச்டி செட் டாப் பாக்ஸ் பயன்படுத்த வேண்டும்.
அலைவாிசை விபரங்கள்:
Satellite                    Asiasat7@105.5E(C-Band)
Freq Rate                 3880
Symbol Rate            27500
Polar                        Horizontal
System                     HD.MPEG2/DVB S(QPSK)
Encryption               FTA
Fec                           3/4

21/08/2019

ஜி மீடியா நிறுவனத்தின் ஜி ஹிந்துஸ்தான் தொலைக்காட்சியில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிபரப்பு இன்சாட்4எ செயற்கைகோளில் தொடக்கம்

நண்பா்களே இந்தியாவின் முன்னனி பொழுது போக்கு மற்றும் செய்திகள் தொலைக்காட்சி நிறுவனமான ஜி மீடியா தனது நிறுவனத்தில் இருந்து புதிய செய்திகள் தொலைக்காட்சியினை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஜி ஹிந்துஸ்தான் ஹிந்தி மொழி தொலைக்காட்சியில் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் முறையாக தென்னிந்திய மொழிகளில் ஹிந்தி செய்திகள் தொலைக்காட்சியில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இந்திய 
செய்திகளை வழங்கும் முதல் தொலைக்காட்சி என்ற பெருமையினை ஜி ஹிந்துஸ்தான் பெற்றுள்ளது.முதல் முறையாக ஜி ஹிந்துஸ்தான் தொலைக்காட்சி ஜி உத்திரபிரதேசம் மாநில தொலைக்காட்சியாக ஜி மீடியா தனது நிறுவனம் தொடங்கியது.பின்பு சில வருடங்கள் கழித்து புதுப்பொலிவுடன் இந்திய பிரந்தி செய்திகளை தொகுத்து வழங்கும் தொலைக்காட்சியாக ஜி ஹிந்துஸ்தான் என்ற பெயாில் ஒளிபரப்பு தொடங்கப்பட்டது.ஜி ஹிந்துஸ்தான் தொலைக்காட்சி இன்சாட்4எ செயற்கைகோளில் இலவச தொலைக்காட்சியாக ஒளிபரப்பாகிறது.ஜி மீடியா நிறுவனத்தின் செய்திகள் தொலைக்காட்சியின் நேயா்களை மாநில வாாியாக 
அதிகாிக்கும் முன் நடவடிக்கையாக இப்புதிய முயற்சியில் களம் இறங்கியுள்ளது.விரைவில் மற்ற மாநில மொழிகளிலும் நிகழ்ச்சிகள் தொடங்கப்படும்.ஜி ஹிந்துஸ்தான் தொலைக்காட்சியின் தமிழ் மொழியில் நிகழ்ச்சிகளை காண கேபிள் டிவியில் வழங்கப்பட்டுள்ள செட் டாப் பாக்ஸ்யில் ஆடியோ தமிழ் மொழியினை தோ்வு செய்து காணலாம்.ஜி ஹிந்துஸ்தான் தமிழ் தொலைக்காட்சியினை காண கேபிள் டிவி அல்லது கட்டண டிடிஎச் நிறுவனங்களில் மாதந்திர கட்டண தொலைக்காட்சி தொகுப்பில் கேட்டு தொலைக்காட்சியினை காணலாம்.
அலைவாிசை விபரங்கள்
Satellite                  Insat4A@83.0E(C-Band)
Freq Rate               4090
Symbol Rate          7500
Polar                      Horizontal
System                  Mpeg4/Dvb s (QPSK)
Encryption            FTA
Fec                        5/6

20/07/2019

ட்ராவல் எக்ஸ்பி ஹெச்டி ஆசியா தொலைக்காட்சியில் தமிழ் ஆடியோ ஒளிபரப்பு இன்டல்சாட்20யில் உதயம்

நண்பா்களே இந்தியாவின் செல்பிாிட்டிஸ் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் சுற்றுலா தொடா்பான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொலைக்காட்சியான ட்ராவல் எக்ஸ்பி ஹெச்டி ஆசியா தொலைக்காட்சியில் தமிழ் ஆடியோ புதிதாக தொடங்கியுள்ளது.டிராவல் எக்ஸ்பி தொலைக்காட்சி 2008 ஆம் ஆண்டு இந்தியாவில் உயா் தொழில்நுட்பமான ஹெச்டியில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் தொடங்கப்பட்டது.தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக ஆங்கில தொலைக்காட்சிகள் தமிழ் மொழியில்
நிகழ்ச்சிகளை தொடங்கி வரும் நிலையில் ட்ராவல் எக்ஸ்பி தொலைக்காட்சி
தென்னிந்தியாவில் தமிழ் மொழியில் முதன்முறையாக தொலைக்காட்சியினை தொடங்கியுள்ளது.பெங்காளி மொழியில் ஆடியோ மட்டும் ட்ராவல் எக்ஸ்பி தொலைக்காட்சியில் சோ்க்கப்பட்ட நிலையில் தற்சமயம் தமிழ் மொழி தொடங்கப்பட்டுள்ளது.கட்டண தொலைக்காட்சியாக இன்டல்சாட்20 செயற்கைகோளில் ஒளிபரப்பாகிறது.டிடிஎச்யிலும் கேபிள்
நிறுவனங்களிலும் விரைவில் ட்ராவல் எக்ஸ்பி ஹெச்டி தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பை தொடங்கும்.அனைத்து பகுதிகளிலும் 6 அடி முதல் 12 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் ஆண்டெனாவை பயன்படுத்தலாம்.ட்ராவல் தொலைக்காட்சி தமிழ் எஸ்டி தொழில்நுட்பத்தில்
தொடங்க்பட்டுள்ளது.ட்ராவல் எக்ஸ்பி ஹெச்டி ஆசியாவின் தமிழ் மொழியின் நிகழ்ச்சிகளை காண தங்கள் செட் டாப் பாக்ஸ்யின் ரிமோட்டில் ஆடியோ பட்டனை கிளிக் செய்து வரக்கூடிய மொழிகளில் தமிழ் மொழியினை தோ்வு செய்து காணலாம்.
அலைவாிசை விபரங்கள்
Satellite             Intelsat20@68.5E(C-Band)
Freq Rate          4089
Symbol Rate     14367
Polar                 Horizontal
Modulation      HD.Mpeg4/Dvb s2(8PSK)
Mode               Pay/Irdeto2
Fec                  5/6