சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

17/05/2016

தமிழகத்தில் ஓம் டிவி புதிய பக்தி மற்றும் தமிழ் காலச்சார தொலைக்காட்சி ஒளிபரப்பு இன்டல்சாட்17யில் உதயம்

நண்பர்களே தமிழகத்தில் புதிய செயற்கைகோள் தமிழ் பக்தி மற்றும் தமிழ் பாரம்பாரியம் தொடா்புடைய கலாச்சார நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப கூடிய தொலைக்காட்சி ஓம் டிவி என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது.இப்புதிய தொலைக்காட்சியின் உலகளாவிய செயற்கைகோள் ஒளிபரப்பு தமிழ் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும் இன்டல்சாட்17 செயற்கைகோளில் பென்சி 
டிவியின் ஒளிபரப்பு உரிமத்தில் தொடங்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் தொடங்கப்படும் கலச்சார தொடா்புடைய நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் இரண்டாவது தமிழ் தொலைக்காட்சி இதுவாகும்.தொலைக்காட்சியின் தொடக்க நிகழ்ச்சிகளாக தமிழ் பக்தி பாடல்கள் ஒளிபரப்பாகி வருகிறது.கடந்த சில மாதங்களுக்கு முன்பு பென்சி டிவியின் நிகழ்ச்சிகள் அற்ற சோதனை 
ஒளிபரப்பு தொடங்கப்பட்டு வந்தது.ஓம் டிவியின் செயற்கைகோள் அலைவரிசையினை பெற குறைந்தபட்சம் 8 முதல் 16 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.மேலும் தொலைக்காட்சியினை காண Mpeg4/Dvb s2 தொழில்நுட்பம் பொருத்திய செட் டாப் பாக்ஸ்யை பயன்படுத்த வேண்டும்.ஓம் டிவி இலவச ஒளிபரப்பாக இன்டலசாட்17யில் ஒளி உலா வருகிறது. 
அலைவாிசை விபரங்கள்
Satellite                       Intelsat17@66.0E(C-Band)
Freq Rate                    3877
Symbol Rate               14300
Polar                            Horizontal
Modulation                  Mpeg4/Dvb s2(8psk)
Mode                           FTA

15/05/2016

சோனி வாக்,ஸ்டார் உத்சவ் மூவிஸ் புதிய ஹிந்தி திரைப்பட தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு ஆசியாசாட்7யில் தொடக்கம்

நண்பர்களே இந்தியாவின் முன்னனி தொலைக்காட்சி நிறுவனங்களான ஸ்டார் டிவி இந்தியா மற்றும் சோனி பிக்சர் டெலிவிஷன் நிறுனங்கள் இரண்டு புதிய ஹிந்தி திரைப்பட தொலைக்காட்சிகளை தொடங்கியுள்ளனர்.ஹிந்தியில் ஸ்டார் உத்சவ் எண்டெய்ன்மென்ட் தொலைக்காட்சி தொடங்கப்பட்டு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி 
வருகிறது.அவ்வரிசையில் ஸ்டார் உத்சவ் மூவிஸ் என்னும் புதிய தொலைக்காட்சி ஹிந்தியில் தொடங்கப்பட்டுள்ளது.வடந்தியாவை பொறுத்தமட்டிலும் ஹிந்தி திரைப்பட தொலைக்காட்சிகள் கடந்த வருடங்களாக வெகுவாக அதிகரித்து வருகிறது.இதே போன்று சோனி பிக்சர் டெலிவிஷன் நிறுவனமும் புதிய ஹிந்தி திரைப்பட தொலைக்காட்சியான 
சோனி வாக் என்னும் பெயரில் தொலைக்காட்சியினை தொடங்கியுன்னர்.கடந்த வருடத்தில் இப்புதிய தொலைக்காட்சிக்கான ஒளிபரப்பு அனுமதியை மத்திய ஒளிபரப்பு ஆணையம் அனுமதி வழங்கியிருந்தது.இவ்விரு புதிய தொலைக்காட்சிகளின் செயற்கைகோள் ஒளிபரப்பு ஆசியாசாட்7யில் தொடங்கப்பட்டுள்ளது.கடந்த வருடத்தில் 
வீயகாம்18 நிறுவனமும் ரிஸ்டி சினிபிளக்ஸ் ஹிந்தி திரைப்பட தொலைக்காட்சியினை தொடங்கியிருந்தது குறிப்பிடதக்கது.வட இந்தியாவில் ஸ்டார்.சோனி.யுடிவி.ஜி.சாகார.பி4யு  போன்ற நிறுவனங்களின் தொலைக்காட்சி அல்லாது புதிய நிறுவனங்களும் ஹிந்தி திரைப்பாட தொலைக்காட்சிகளை தொடங்கி வருகின்றன.
அலைவரிசை விபரங்கள்(STAR UTSAV MOVIES)
Satellite            Asiasat7@105.5E(C-Band)
Freq Rate         3800
Symbol rate     28100
Polar                Horizontal
Modulation      Mpeg4/Dvb s2
Mode               Fta

அலைவரிசை விபரங்கள்(SONY WAH TV )
Satellite            Asiasat7@105.5E(C-Band)
Freq Rate         4180
Symbol rate     30000
Polar                Vertical
Modulation      Mpeg4/Dvb s2
Mode               Pay

04/05/2016

வானவில் (VANAAVIL TV) தமிழ் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு இன்சாட்4எ செயற்கைகோளுக்கு மாற்றம்

நண்பர்களே தமிழகத்தில் கடந்த வருடத்தில் பெயர் மாற்றம் செய்த தமிழ் தொலைக்காட்சியான வானவில் டிவியின் உலகளாவிய செயற்கைகோள் ஒளிபரப்பு தற்சமயம் ஒளிபரப்பாகி வரும் இன்டல்சாட்20யில் இருந்து இன்சாட்4எ செயற்கைகோளில்  செயல்படும் நொய்டா என் எஸ் டி பி எல் டெலிஸ்பாட் நிறுவனத்தின் அலைவரைிசைக்கு மாற்றம் செய்யப்படவுள்ளது.
வானவில் டிவியின் 24 மணி நேர நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டு தமிழகம் முழுவதும் ஒளிபரப்பாகி வருகிறது.திரைப்படம்.நாடகம் மற்றும் பல வித்தியாசமான கலை நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றனர்.தற்சமயம் மாற்றம் செய்யப்பட்டுள்ள புதிய அலைவரைிசையின் சிக்னல் 6 முதல் 12 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவில் கிடைக்கிறது.
கிடைக்கிறது.முன்பு பயன்படுத்தி வந்த செட் டாப் பாக்ஸ்யில் அலைவரிசை யினை மாற்றம் செய்து வானவில் டிவியின் நிகழ்ச்சிகளை காணலாம்.இலவச ஒளிபரப்பாக இன்சாட்4எ செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது.கடந்த சில மாதங்களாக இன்டியா சிக்னல் டெலிஸ்பாட் ஒளிபரப்பு முனையத்தின் முலம் நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழகத்தில் ஒளிபரப்பாகி வந்தது.
அலைவரிசை விபரங்கள்:
Satellite              INSAT4A@83.0E(C-Band)
Freq Rate           3725
Symbol Rate      26666
Polar                  Horizontal
Modulation        Mpeg4/Dvb s
Mode                 FTA

23/04/2016

மாலை முரசு.மதிமுகம் இரண்டு புதிய தமிழ் தொலைக்காட்சிகள் தமிழகத்தில் விரைவில் உதயம்

நண்பர்களே தமிழகத்தில் மேலும் இரண்டு புதிய தமிழ் தொலைக்காட்சிகள் உதயமாகவுள்ளது.தமிழகத்தின் முன்னனி நாளிதழ் மாலை முரசு நிறுவனத்தின் சார்பாக மாலை முரசு டிவி தொடங்கப்படவுள்ளது.இப்புதிய தொலைக்காட்சிக்கான தொழில்நுட்ப மற்றும் நிருபர் தேர்வு நடைபெறுகிறது.விரைவில் மாலைமுரசு தொலைக்காட்சியின் செயற்கைகோள் ஒளிபரப்பு தொடங்கலாம்.தமிழகத்தில் நாளிதழ் மற்றும் செய்திப்பிரிவு நிறுவனத்தின் சார்பாக தமிழ் செய்திகள் தொலைக்காட்சி தற்சமய காலங்களில் தொடங்கப்படுகிறது.
மதிமுகம் புதிய தமிழ் தொலைக்காட்சி விரைவில் தமிழகத்தில் தொடங்கப்படவுள்ளது.தொலைக்காட்சிக்கான தொழில்நுட்ப பணிகள் நிறைவடைந்து வரும் மே முதல் வாரத்தில் தொலைக்காட்சியின் செயற்கைகோள் ஒளிபரப்பு தொடங்கப்படவுள்ளது.தமிழகத்தில் கடந்த மாதத்தில் மருதம் செய்திப்பிரிவு நிறுவனம் மற்றும் நீயூஸ் 18 நிறுவனங்களின் சார்பாக இரண்டு புதிய செய்திகள் தொலைக்காட்சி தொடங்கப்பட்டது குறிப்பிடதக்கது.இவற்றில் நீயூஸ்18 தமிழ் செய்திகள் தொலைக்காட்சி கட்டண தொலைக்காட்சியாக ஒளிபரப்பை தமிழகத்தில் தொடங்கியுள்ளது.மருதம் செய்தி நிறுவனத்தின் வெளிச்சம் டிவி இலவச ஒளிபரப்பாக தொடங்கப்பட்டுள்ளது.தொலைக்காட்சிகளின் செயற்கைகோள் அலைவரிசை தொடர்பான விபரங்கள் நமது தளத்தில் விரைவில் வெளியிடப்படும்.
தொகுப்பு: சதீஸ் சாட் தமிழ் இணையதளம்

17/04/2016

நியூஸ் எக்ஸ் ஹெச்டி(NEWS X HD) புதிய ஆங்கில ஹெச்டி தொலைக்காட்சி சோதனை ஒளிபரப்பு ஆசியாசாட்7 யில் தொடக்கம்

நண்பர்களே வடஇந்தியாவின் முன்னனி செயற்கைகோள் செய்தி தொலைக்காட்சி நிறுவனமான ஐ டிவி நெட்வொர்க் வடஇந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு இன்டியா நியூஸ் என்ற பெயரில் செய்திகள் தொலைக்காட்சியினை வழங்கி வருகிறது.கடந்த சில வருங்களுக்கு முன்பு இன்எக்ஸ் தொலைக்காட்சி நிறுவனத்தின் சார்பாக தொடங்கப்பட்ட ஆங்கில 
செய்திகள் தொலைக்காட்சியான நியூஸ் எக்ஸ் ஹிந்தி செய்திகள் தொலைக்காட்சியான இன்டியா நீயூஸ் தொலைக்காட்சி நிறுவனத்தின் செயற்கைகோள் அலைவரிசையின் முலம் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.தற்சமயம் நியூஸ் எக்ஸ் ஆங்கில தொலைக்காட்சி புதிய வடிவில் ஹெச்டி தொழில்நுட்பத்தில் இந்தியாவில் இரண்டாவது ஆங்கில செய்திகள் தொடங்கப்பட்டுள்ளது.தொலைக்காட்சியின் 
அலைவரிசை ஒளிபரப்பு ஏப்ரல் மாதம் முதல் இன்டல்சாட்20 செயற்கைகோளில் இருந்து ஆசியாசாட்7 க்கு மாற்றம் செய்யப்பட்டது.அலைவரிசை சிக்னலை பெற குறைந்தபட்சம் 6 முதல் 12 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவையும் HD.MPEG4/DVB S2 தொழில்நுட்ப செட்டாப் பாக்ஸ்யை பயன்படுத்தி இப்புதிய ஆங்கில ஹெச்டி தொலைக்காட்சியினை காணலாம்.தொலைக்காட்சி முற்றிலும் இலவச தொலைக்காட்சியாக ஒளிபரப்பாகிறது.இதே நிறுவனத்தின் சார்பாக கடந்த வருடத்தில் அறிவியல் மற்றும் விலங்கின பற்றிய ஹெச்டி தொலைக்காட்சி இன்சைடு என்ற பெயரில் தொடங்கப்பட்டு இருந்தது குறிப்பிடதக்கது.
அலைவரிசை விபரங்கள்:
Satellite                        Asiasat7@105.0E(C-Band)
Freq Rate                      3690
Symbol Rate                 15000
Polar                             Horizontal
Modulation                  HD.Mpeg4/Dvb s2(8psk)
Mode                           FTA

09/04/2016

கலைஞர் சிரிப்பொலி.ஜி தமிழ் இந்திய தமிழ் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு டயலாக் டிடிஎச்யில் தொடக்கம்

நண்பர்களே இலங்கையின் முன்னனி தொலைக்காட்சிகள் ஒளிபரப்பும் டிடிஎச் சேவையான டயலாக் டிடிஎச்யில் தமிழ் தொலைக்காட்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.இவற்றில் இலங்கை நாட்டு தமிழ் தொலைக்காட்சிகள் 
அல்லாது இந்திய தமிழ் தொலைக்காட்சிகளான சன்டிவி.கேடிவி.கலைஞர் டிவி.சன் மியூசிக்.ஸ்டார் விஜய் போன்ற தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகி வந்தது.அவ்வரிசையில் மேலும் இரண்டு புதிய தமிழ் தொலைக்காட்சிகள் கலைஞர் சிரிப்பொலி.ஜி தமிழ் தொடங்கப்பட்டுள்ளது.தற்சமயம் மொத்தம் 12 
தமிழ் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது.தொலைக்காட்சிகள் கட்டண தொலைக்காட்சிகளாக சோதனை ஒளிபரப்பை இன்டல்சாட்12 செயற்கைகோளில் தொடங்கியுள்ளனர்.இப்புதிய தொலைக்காட்சிகள் தமிழ் பேசிக் தொலைக்காட்சி தொகுப்புயில் இடம் பெறலாம்.

06/04/2016

தமிழகத்தில் ஸ்டார் விஜய்(STAR VIJAY HD) புதிய ஹெச்டி தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பு ஆசியாசாட்7யில் உதயம்

நண்பர்களே இந்தியாவின் முன்னனி தொலைக்காட்சிகளை ஒளிபரப்பும் நிறுவனமான ஸ்டார் டிவி நெட்வொா்க்யின் தமிழ் மொழி தொலைக்காட்சியும் மற்றும் தமிழகத்தின் மிக முன்னனி தமிழ் பொழுதுபோக்கு தொலைக்காட்சியான  ஸ்டார் விஜய் டிவி கடந்த பல வருடங்களாக மிக எளிய தொழில்நுட்பமான எஸ் டி விடியோ ஒளிபரப்பில் ஒளிபரப்பாகி வந்தது.ஸ்டார் டிவி நிறுவனத்தின் முன்னனி 
தொலைக்காட்சிகள் அதி நவின தொழில்நுட்பமான ஹெச்டியில் தற்சமயம் காலங்களில் தொடங்கப்பட்டு வருகிறது.அவ்வரிசையில் தமிழில் நான்கவாது பொழுது போக்கு தமிழ் ஹெச்டி தொலைக்காட்சியாக ஸ்டார் விஜய் டிவி ஹெச்டி தொடங்கப்பட்டுள்ளது.தொலைக்காட்சியின் செயற்கைகோள் ஒளிபரப்பு ஆசியாசாட்7 செயற்கைகோளில் கட்டண தொலைக்காட்சியாக தொடங்கப்பட்டுள்ளது.இதே அலைவரிசையில் ஸ்டார் ஜால்வா மற்றும் ஸ்டார் பிரவா போன்ற ஹெச்டி தொலைக்காட்சிகளும் ஒளிபரப்பை தொடங்கியுள்ளன.தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு டிடிஎச் மற்றும் கேபிள் ஒளிபரப்பில் விரைவில் இடம் பெறும்.
அலைவரிசை விபரங்கள்:
Satellite                    Asiasat7@105.0E(C-Band)
Freq Rate                 3800
Symbol Rate            28100
Polar                        Horizontal
Modulation              HD.Mpeg4/Dvb s2
Mode                       Pay/NDS