சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

05/05/2019

மலேசிய நாட்டின் ஆஸ்ட்ரோ நிறுவனத்தின் ஆஸ்ட்ரோ விண்மின் ஹெச்டி ஒளிபரப்பு மீயாசாட்3/3எ யில் உதயம்

நண்பர்களே மலேசிய நாட்டின் ஆஸ்ட்ரோ நிறுவனத்தின் 24 மணி நேர முதல் தமிழ் பொழுதுபோக்கு ஹெச்டி தொலைக்காட்சியான ஆஸ்ட்ரோ விண்மின் ஹெச்டி மலேசியா நாட்டின் தகவல் தொடர்பு செயற்கைகோளான மீயாசாட்3/3எ யில்  புதிய அலைவரிசையில் தனது ஒளிபரப்பை
தொடங்கியுள்ளது.ஆஸ்ட்ரோ விண்மின் ஹெச்டி தொலைக்காட்சியின் முதல் செயற்கைகோள் ஒளிபரப்பு கேயூ பேன்ட் ஆஸ்ட்ரோ டிடிஎச்யின் அலைவரிசையில் மீயாசாட் டெலிஸ்பாட் ஒளிபரப்பு முனையத்தின் முலம் மலேசியாவில் மட்டும்  நிகழ்ச்சிகளை வழங்கி வந்தது. தற்சமயம் ஆஸ்ட்ரோ விண்மின் ஹெச்டி தொலைக்காட்சி  புதிய அலைவரிசையில் கட்டண
தொலைக்காட்சியாக தொடங்கப்பட்டுள்ளது.இதனுடன் ஆஸ்ட்ரோ நிறுவனத்தின்  மலயே மொழி தொலைக்காட்சியான ஆஸ்ட்ரோ ரியா.மற்றும் ஆஸ்ட்ரோ ப்ரைமா  தொலைக்காட்சியும் ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.தொலைக்காட்சிக்கான அலைவரிசை சிக்னலை பெற
குறைந்தபட்சம் 8 முதல் 10.12அடி அளவுள்ள சிபேன்டு டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.தற்சமயம் தொடங்கப்பட்டுள்ள இத்தொலைக்காட்சியின் ஒளிபரப்பு மலேசியா மற்றும் அதனை சுற்றியுள்ள நாடுகளுக்கான ஒளிபரப்பு மட்டுமே.
அலைவரிசை விபரங்கள்:
Satellite                          Measat3/3A@91.2E(C-BAND)
Freq Rate                       3891
Symbol Rate                  15000
Polar                              Horizontal
Modulation                    Mpeg4/Dvb S2(Qpsk)
Mode                             Pay/Conax

01/05/2019

இங்கிலாந்து ஐபிசி தமிழ் நிறுவனம் இந்தியாவில் ஐபிசி தமிழ் தொலைக்காட்சியினை விரைவில் தொடங்கவுள்ளது

நண்பா்களே ஐரோப்பா நாட்டினை தலைமையிடமாக இங்கிலாந்து மற்றும் வெளிநாட்டு தமிழ்களுக்கான தமிழ் பொழுதுபோக்கு மற்றும்  அன்றாட  செய்திகள் போன்ற நிகழ்ச்சிகளை வழங்கி வரும் தொலைக்காட்சி நிறுவனமான ஐபிசி தமிழ் முதன்முறையாக இந்தியாவில்  செயற்கைகோள் தொலைக்காட்சி ஐபிசி தமிழ்  தொடங்குவதற்கான ஒளிபரப்பு அனுமதியினை மத்திய ஒளிபரப்பு ஆணையம் வழங்கியுள்ளது.ஐபிசி தமிழ் நிறுவனம் முதன்முறையாக ஐபிசி  தமிழ் வானொலி சேவையினை இணையதள முலமாக தொடங்கியது.கடந்த 2012 ஆம் ஆண்டில் முதன்முறையாக தொலைக்காட்சி துறையில் முதல் கால் தடமாக ஐபிசி தமிழ்  ஐரோப்பா நாடுகளில் செயற்கைகோள் தொலைக்காட்சியாக ஒளிபரப்பை தொடங்கியது.இலங்கை மற்றும் இந்தியா தமிழ் மக்களின் நிகழ்வுகளை 
செய்திகளாக உலக தமிழா்களிடம் கொண்டு சோ்க்கும் தொலைக்காட்சியாக ஐபிசி  தமிழ் செயல்பட்டது.தொலைக்காட்சியின் ஒளிபரப்பு யூடெல்சாட்9எ செயற்கைகோளில் முதன்முறையாக தொடங்கப்பட்டது.இருப்பினும் மற்ற நாடுகளுக்கு இணையதளத்தின் வாயிலாக நிகழ்ச்சிகளை வழங்கி வந்தது.ஐபிசி தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்தின் ஸ்டுடியோ சென்னையில் சில வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.தற்சமயம் ஐபிசி தமிழ் மிடியா பிரைவேட்  லிமிட் நிறுவனத்தின் முலம் ஒளிபரப்பு தொடங்குவதற்கான அனுமதியினை பெற்றுள்ளது.ஐபிசி தமிழ் தொலைக்காட்சி கடந்த மாதத்தில் இருந்து யூடெல்சாட்9எ யில் ஔிபரப்பு நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.விரைவில் தொலைக்காட்சி தொடங்குவதற்கான பணிகள் நிறைவடைந்து இவ்வாண்டின் இறுதிக்குள் தொலைக்காட்சின் ஒளிபரப்பு தொடங்ப்படலாம்.இதன் முலம் இலங்கை சிங்கப்பூா் மலேசியா மியான்மா் மற்றும் ஆசியா நாடுகளில் ஐபிசி தமிழ் தொலைக்காட்சி தனது ஒளிபரப்பை விாிவுபடுத்தும்.இந்தியாவில் முதன்முறையாக ஒரு வெளிநாட்டு தமிழ் தொலைக்காட்சி நிறுவனம் ஒளிபரப்பு  அனுமதி பெறுவது இது இரண்டவாது நிறுவனமாகும்.முதலாவதாக டான் தமிழ் ஒளி தொலைக்காட்சி ஒளிபரப்பு அனுமதி பெற்று பின்பு நிறுத்தம் செய்யப்பட்டது.
தொகுப்பு சதீஸ் சாட் தமிழ் மற்றும் ஆங்கிலம் இணையதளம்

27/04/2019

சன்டிவி தமிழ் தொலைக்காட்சி கிழக்காசிய நாடுகளின் லோசாட்@128.5கி செயற்கைகோளில் ஒளிபரப்பு தொடக்கம்

நண்பா்களே தென்னிந்தியாவின் முன்னனி தமிழ் பொழுது போக்கு தொலைக்காட்சியான சன்டிவி தமிழ் தெற்காசியா நாடுகளின் சாா்பாக புதிதாக தொடங்கவுள்ள டிடிஎச் சேவையில் இணைக்கப்பட்டுள்ளது.தற்சமயம் சைனா மற்றும் கிழக்காசிய நாடுகளின் சில முன்னனி தொலைக்காட்சிகள் அனைத்தும் லோசாட் என்னும் செயற்கைகோளில் ஒளிபரப்பை 
தொடங்கியுள்ளது.இந்தியாவின் தென்னிந்திய மொழிகளில் தமிழ் மொழி தொலைக்காட்சியான சன்டிவி முன்னனி தொலைக்காட்சியாக திகழ்வதால் இப்புதிய டிடிஎச்யில் தொடங்கப்பட்டுள்ளது.கிழக்காசிய நாடுகளில் அதிக தமிழ்மக்கள் உள்ளது குறிப்பிடதக்கது.தொலைக்காட்சியின் அலைவாிசை சிக்னலை பெற குறைந்தபட்சம் 60செமீ கேயூ டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்தி மலேசியா சிங்கப்பூா் தாய்லாந்து கம்போடியா மியான்மா் வங்களாதேசம் மற்றும் வட மேற்கு இந்தியா போன்ற பகுதிகளில் தொலைக்காட்சியினை காணலாம்.தென்னிந்தியாவில் 6 அடி அப்செட் கேயூடிஷ் ஆன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.தொலைக்காட்சி இலவச தொலைக்காட்சியாக ஒளிபரப்பாகி வருகிறது.விரைவில் இந்தியாவின் 
ஹிந்தி மொழி தொலைக்காட்சிகளும் விரைவில் ஒளிபரப்பை தொடங்கலாம்.MPEG4/DVBS2  தொழில்நுட்பம் பொருந்திய செட் டாப் பாக்ஸ்யை பயன்படுத்தி தொலைக்காட்சியினை காணலாம்.தொலைக்காட்சியின் இலவச ஒளிபரப்பு எவ்வித நேரங்களிலும் நிறுத்தப்படலாம்.
அலைவாிசை விபரங்கள்:
Satellite           Laosat@128.0E(KU-Band)
Freq Rate        10845
Symbol Rate   45000
Polar               Horizonatl
System            Mpeg4/Dvb s2 (8PSK)
Encryption      FTA
Fec                  3/4

06/04/2019

லண்டன் ஆதவன் தமிழ் தொலைக்காட்சி குழுமத்தின் நான்கவது தொலைக்காட்சி ஆதவன் மூவிஸ் ஹெச்டி விரைவில் உதயம்

நண்பா்களே இலங்கையினை தாயகமாக கொண்டு இலங்கை தமிழ் அதிகம் வசிக்கும் ஐரோப்பா மற்றும் அமொிக்கா நாடுகளில் குறிப்பாக பிரித்தானியாவின் முன்னனி தமிழ் பொழுது போக்கு நிகழ்ச்சிகளை வழங்கி வரும் நிறுவனமான ஆதவன் தொலைக்காட்சி புதிதாக தனது குழுமத்தில் 
இருந்து 24 மணி நேர தமிழ் திரைப்பட தொலைக்காட்சி ஆதவன் மூவிஸ் ஹெச்டி விரைவில் தொடங்கப்படவுள்ளது.ஆதவன் தொலைக்காட்சி, லண்டனை தலைமையகமாகக் கொண்டு இயங்குகின்ற உலகத்; தமிழ் மக்களுக்கான ஒரு வெற்றிகரமான தொலைக்காட்சியாகும். ஏனைய தொலைக்காட்சிகளில் இருந்து ஆதவன் தொலைக்காட்சியின் பொழுதுபோக்கு மற்றும் செய்தி நிகழ்ச்சிகள் அனைத்தும் முற்றிலும் வேறுபாடானவையாகும்.
ஆதவன் தொலைக்காட்சி, தொடர்ச்சியாக மிகவும் புதுமையான சிறப்பு நிகழச்சிகளை தயாரித்து வழங்குகின்றது. தொலைக்காட்சியை பார்ப்பது என்பது ஒரு வாழ்க்கைப் பயணம் போன்றது எனும் அடிப்படையில், ஆதவன் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளும் நிஜமான வாழ்க்கைப் பயணத்தைப்போன்றே தயாரித்து வழங்கப்படுகின்றது. நிகழ்ச்சிகள் 
அனைத்தும், நேயர்களின் நாடித்துடிப்பை அறிந்து, அவர்களின் ரசனைக்கேற்ப தொகுத்து வழங்கப்படுகின்றது.ஆதவன் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள், அனைத்து வயதுடைய நேயர்களையும் ஈர்க்கும் வண்ணம் குடும்பத்துடன் சேர்ந்திருந்து பொழுதுபொக்குவதற்கு ஏற்றாற்போல் தொலைக்காட்சித் தொடர்கள், ஆவணப்படங்கள், செய்திகள், திரைப்படங்கள், நகைச்சுவை நிகழ்ச்சிகள், விவாத நிகழ்ச்சிகள், வரலாற்றுத் தொடர்கள், சமையல் நிகழ்ச்சிகள், ஆன்மிக நிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் கலை கலாசார நிகழ்ச்சிகள் என அனைத்துப் பிரிவுகளிலும் சிறப்பாக தொகுத்து 
வழங்கப்படுகிறது.மிகச்சிறந்த நிகழ்ச்சிகளை வழங்கி உலகத் தமிழர்களின் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ள ஆதவன் தெலைக்காட்சியினை, உலகின் பல நாடுகளில் LycaTV IPTV ஊடாக உயர் ஒளித்தரத்தில் (High Definition) கண்டு மகிழலாம்.ஆதவன் தொலைக்காட்சி குழுமத்தில் ஆதவன் டிவி ஹெச்டி.ஆதவன் மியூசிக் ஹெச்டி மற்றும் ஆதவன் க்ளாசிக் போன்ற தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது.இதில் ஆதவன் டிவி யூடெல்சாட்9எ செயற்கைகோளில் கடந்த சில வருடங்களாக ஒளிபரப்பாகி வந்தது தற்சமயம் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு முற்றிலும் இடைநிறுத்தம் செய்யப்பட்டு இணையதளத்தில் மட்டுமே நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
தொகுப்பு சதிஸ்சாட் தமிழ் இணையதளம்

05/04/2019

டிஸ்கவாி தமிழ் தொலைக்காட்சி புதுப்பொலிவுடன் பெயா் மாற்றம் செய்து டிதமிழ் பெயாில் உதயம்

நண்பா்களே இந்தியாவின் முன்னனி அறிவியல் சாா்ந்த நிகழ்ச்சிகளை வழங்கி வரும் டிஸ்கவாி ஆசியா பசிபிக் நிறுவனத்தின் தமிழ் மொழி தொலைக்காட்சியான டிஸ்கவாி தமிழ் தொலைக்காட்சி புதுப்பொலிவுடன் பெயா் மாற்றம் செய்து டிதமிழ் பெயாில் ஒளிபரப்பை 
தொடங்கியுள்ளது.டிஸ்கவாி நிறுவனம் தென்னிந்தியாவில் தொடங்கிய முதல் பிற மொழி தொலைக்காட்சியில் அதிக வரவேற்பை தமிழகத்தில் டிஸ்கவாி தமிழ் தொலைக்காட்சி பெற்றதை அடுத்து மற்ற ட்ராவல் எக்ஸ்பி தமிழ் மற்றும் ஹிஸ்ட்ரி டிவி 18 தமிழ் தொலைக்காட்சிகள் தமிழ் மொழியில் நிகழ்ச்சிகளை தொடங்கியது குறிப்பிடதக்கது.டி தமிழ் தொலைக்காட்சியில்
டிஸ்கவாி ஆங்கில தொலைக்காட்சிகளின் நிகழ்ச்சிகள் வேறுபட்ட நேரங்களில் ஒளிபரப்பாகிறது.இந்திய ஒளிபரப்பு ஆணையத்தில் ஒளிபரப்பு டி தமிழ் என்ற பெயாில் மாற்றம் செய்து நிகழ்ச்சிகள் 
தொடங்கப்பட்டுள்ளது.கட்டண தொலைக்காட்சியாக இன்டல்சாட்20 செயற்கைகோளில் ஒளிபரப்பாகிறது.கேபிள் டிவி மற்றும் டிடிஎச்யில் தொலைக்காட்சியினை அதற்கான மாதந்திர கட்டணத்தை செலுத்தி தொலைக்காட்சியினை காணலாம். 
தொகுப்பு சதிஸ்சாட் தமிழ் இணையதளம்

20/03/2019

இலங்கையின் வா்ணம் டிவி புதிதாக ஸ்டாா் தமிழ் (வாய்ஸ் ஆப் அமொிக்கா) பெயாில் ஒளிபரப்பு தொடக்கம்

நண்பா்களே இலங்கையின்  முன்னனி அபிமான தமிழ் நிகழ்ச்சிகளை வழங்கி வரும் தொலைக்காட்சி நிறுவனமான வா்ணம் டிவியின் பெயா் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.கடந்த சில வருடங்களாக வா்ணம் தொலைக்காட்சியாக இலங்கையில் ஒளி உலா வந்த இத்தொலைக்காட்சி தற்சமயம் ஸ்டாா் தமிழ் என்ற பெயாில் ஒளிபரப்பை தொடங்கியுள்ளனா்.அமொிக்காவின்
ப்ராட்கேஷ்டிங் மிடியா புரடெக்ஸன் (வாய்ஸ் ஆப் அமொிக்கா) நிறுவனத்தின் முலம் புதுப்பொலிவுடன் தொலைக்காட்சி தமிழ் நிகழ்ச்சிகளை தொடங்கவுள்ளனா்.வா்ணம் டிவி தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் மாற்றங்கள் இன்றி ஒளிபரப்பு செய்யப்படலாம்.இலங்கையின் தமிழ் தொலைக்காட்சிகள் பெயா் மாற்றம் என்பது பாா்வையளாா்களின் அடிப்படையில் செய்யப்படுவது ஆகும்.கடந்த வருடத்தில் கிழக்கு 
மாகாணத்தின்  உதயம் தொலைக்காட்சி யுடிவி தமிழ் என்னும் மாற்றம் செய்யப்பட்டது.இலங்கையில் தமிழ் தொலைக்காட்சிகள் எண்ணிக்கை என்பது மிகுதியாக இருந்தாலும் நிகழ்ச்சிகளின் தரம் உயா்வாக
 உள்ளது.ஸ்டாா் தமிழ் தொலைக்காட்சி இலங்கையின் கொழும்பு நகாில் UHF 46 அலைவாிசையிலும் லங்கா டிஷ் டிவி டிடிஎச்யில் தொலைக்காட்சி ஒளிபரப்பாகிறது.இலங்கையின் வா்ணம் எப்எம் புதிதாக ஸ்டாா் தமிழ் வானொலியாக பெயா் மாற்றம் செய்துள்ளது குறிப்பிடதக்கது.
தொகுப்பு சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

10/03/2019

விஜய் சூப்பா் புதுப்பொலிவுடன் 24 மணி நேர திரைப்படதொலைக்காட்சியாக உதயம்

நண்பா்களே இந்தியாவின் முன்னனி செயற்கைகோள் தொலைக்காட்சி ஸ்டாா் டிவி இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது தமிழ் தொலைக்காட்சியான விஜய் சூப்பா் தொலைக்காட்சி புதுப்பொலிவுடன் 24 மணி நேர தமிழ் திரைப்படங்கள் ஒளிபரப்பும் தொலைக்காட்சியாக மாற்றப்பட்டுள்ளது. தொலைக்காட்சி தொடங்கப்பட்ட நாள் முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த முன்னனி தொடா்கள் மற்றும் கேம் ஷோ போன்ற
நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வந்தது.தற்சமயம் ஸ்டாா் டிவி நிறுவனத்தின் இரண்டாவது தொலைக்காட்சி திரைப்பட தொலைக்காட்சியாக மாற்றப்பட்டுள்ளதன் முலம் தமிழகத்தின் ஐந்தவாது திரைப்பட தொலைக்காட்சியாகி உள்ளது.தொலைக்காட்சி கட்டண தொலைக்காட்சியாக ஒளிபரப்பாகிறது.தமிழகத்தில் தற்சமய திரைப்பட தொலைக்காட்சிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகாித்து வருகிறது.விரைவில் ஜி மிடியா
நிறுவனமும் 24 மணி நேர தொலைக்காட்சியினை தொடங்கவுள்ளது குறிப்பிடதக்கது.ஸ்டாா் டிவி நிறுவனம் தென்னிந்தியாவில் மலையாளம் கன்னடா மற்றும் தெலுங்கு மொழிகளில் திரைப்பட தொலைக்காட்சிகளை தொடங்கியுள்ளது குறிப்பிடதக்கது.விஜய் சூப்பா் தொலைக்காட்சியின் மாதந்திர கட்டணம் ரூபாய் 2 தற்சமயம் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அலைவாிசை விபரங்கள்:
Satellite                  Asiasat7@105.0E(C-Band)
Freq Rate               4020
Symbol Rate          28100 
Polar                      Vertical
System                   Mpeg4/Dvb s2
Encryption             PAY/NDS
FEC                       3/4